Monday, July 6, 2009

இங்கிட்டு மஹேஷ்.... அங்கிட்டு ?



....நீங்கதான்..... நீங்களேதான். பின்ன என்னங்க? நீங்க இல்லாம இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்னதான் மொக்கை போட்டாலும், கவிதை (!!) வடிச்சு இம்சை பண்ணினாலும், வெண்பா படைச்சு துன்புறுத்தினாலும், சிறுகதை எழுதி சிலிர்க்க வெச்சாலும், நெடுங்கதை எழுதி நடுங்க வெச்சாலும், போட்டிக் கதை அனுப்பி பயமுறுத்தினாலும், அறிவியல் புனைவு படைச்சு அலட்டிக்கிட்டாலும், பயணக் கட்டுரைகள் போட்டு பந்தா பண்ணினாலும், கிச்சடி பண்ணி உங்களை பச்சிடி பண்ணினாலும், கடவுளைப் பத்தி எழுதி கல்லா கட்டுனாலும், கடவுள் இருக்கான்னு கேள்வி கேட்டாலும், எதிர்பதிவுல எசப்பாட்டு பாடினாலும், துணைப்பதிவுல திகைக்க வெச்சாலும், சொந்த ஊரைப்பத்தி கொஞ்சம் பெருமை பேசினாலும், பேட்டி எடுத்தாலும், சினிமா விமர்சனம் பண்ணினாலும், படிச்ச புத்தகங்களை உங்களுக்கு பிரிச்சுக் காட்டினாலும், சுயவிமர்சனம் பண்ணிக்கிட்டாலும், சின்ன வயசு அனுபவங்களை அசை போட்டாலும், கற்பனைல பதிவர் சந்திப்புகள் நடத்தினாலும், பகிரங்கக் கடிதம் எழுதினாலும், இவ்வளவு ஏன்..... வலைப்பூவுக்கு "துக்ளக்"னு பேர் வெச்சாக் கூட.... இப்பிடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும், பல வேலைகளுக்கு நடுவுலயும் வந்து பொறுமையாப் படிச்சுட்டு 'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...' ன்னெல்லாம் வஞ்சனையில்லாம தாராளமா கமெண்ட் போடற உங்களை மாதிரி பதிவர்கள், வாசகர்கள் (சரி...சரி... மேல... மேல...) மற்றும் நண்பர்களோட ஊக்குவிப்பு இல்லைன்னா இப்ப நானெல்லாம் இதை 100வது பதிவுன்னு போட முடியுமா?


யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.



25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நர்சிம் said...

வாழ்த்துக்கள் தலைவா.. வாழ்த்துக்கள்.மைல்கல்லுக்கு... ஸ்மைல்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மஹேஷ் அண்ணா!

Venkatesh Kumaravel said...

ஜூப்பரோ ஜூப்பர்!
தொடர்ந்து எழுதுங்க தல... வாழ்த்துக்கள்!

ஜெகதீசன் said...

:))
வாழ்த்துகள்!

ஜோசப் பால்ராஜ் said...

100க்கு வாழ்த்துக்கள்.

பெருமையா இருக்குங்ணா. தொடர்ந்து கலக்கல் பதிவுகளாக வெளியிட வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.

அறிவிலி said...

வாழ்த்துகள்..

மங்களூர் சிவா said...

'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...

மங்களூர் சிவா said...

100க்கு வாழ்த்துக்கள்.

Thamira said...

மகிழ்வாய் இருக்கிறது. நூறு வாத்துகள்.!

Thamira said...

இப்பிடில்லாம் கண்டமேனிக்கு லிங்க் குடுத்தா அதைக்கிளிக் பண்ணி படிப்பாங்கன்னு நெனப்பா.. ஊஹூம் சான்ஸே இல்ல.. நானும் டிரை பண்ணியிருக்கேன். ஒண்ணும் பெயரலை.. ஹிஹி..

☼ வெயிலான் said...

இங்கிட்டு ரமேசு.... அங்கிட்டு மகேசு...

வாழ்த்துக்கள்!!!!!!!!

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

நூறு விரைவில் பல சைபர்களை பின்னால் போட்டு கொள்ளட்டும்!

ஸ்வாமி ஓம்கார் said...

பத்தாயிரம் பதிவு எழுதிய மகேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நீங்க ஒரு பதிவு எழுதினா நூறுபதிவு எழுதுன மாதிரினு பேசிக்கிட்டாங்க.. அத்தான்...:)

வாழ்த்துக்கள்.

நாஞ்சில் நாதம் said...

100க்கு வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா...வரலாற்று சிறப்புமிக்க இந்த இடுகைக்கு நான் மிகவும் தாமதமா வந்துட்டேனே...வரலாறு மன்னிக்குமா என்னை???

இன்பினிட்டி முறை வாழ்த்துகிறேன்

:))

Mr(s) G :-)) said...

அன்புள்ள மகேசு,
சதம் அடித்த சச்சினுக்கு வாழ்த்துக்கள்...
மேலும் பலப்பல பதிவுகளுக்கு ஜெனிவா ட்ரிப்புகள் வாய்க்காமல் இருக்க என் சாபங்கள் :-)
என்சாய்... என்சமாய்...
சிரிபீஸ்

Mahesh said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி !!

Anonymous said...

நூறுக்கு (நூருக்கு இல்லை) வாழ்த்தினேன்.

Xavier said...

வாழ்த்துக்கள் மஹேஷ்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சதம் அடித்த எங்க ஊர்க்காரருக்கு (உடுமலை ) வாழ்த்துகள்!

பழமைபேசி said...

வாழ்த்துகள் அண்ணே!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தொடர்ந்து இன்னும் வலிமையாக எழுதுங்கள் மஹேஷ். வாழ்த்துக்கள்

கிரி said...

//'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...//

ஹி ஹி ஹி

மகேஷ் வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் மஹேஷ்