Wednesday, July 15, 2009

இப்ப என்னதான் பண்றது?


இந்த இடுகை எழுதின நேரமே சரியில்லை போல...

முதல்ல யாரையெல்லாம் வம்புக்கு இழுக்கலாம்னு ஒரு லிஸ்ட் போட்டா, நமக்குன்னு வந்து மெனக்கெட்டு பின்னூட்டம் போடறவங்க நாலு பேரு... அவங்களுக்கும் கரச்சலைக் குடுத்தா எப்பிடின்னு அந்த லிஸ்டைத் எடுத்துட்டேன்.

யாருக்காவது எதிர்பதிவு எழுதலாம்னா முழுசா படிக்கக் கூட விடாம நாம படிச்சுக்கிட்டிருக்கும்போதே பிடுங்கி இடுகையைக் கிழிச்சுப் போட்டுடறாங்க.... சரின்னு ரீடர்ல ஓடிப் போய்ப் பாத்தா ரீடர்ல படம் தெரியறதில்ல... என்ன சொல்லியிருப்பாங்கன்னு யோசிக்கறதுக்குள்ள டைம் ஆயிடுது..

அட.. பின்னூட்டத்துக்காவது எதாவது எடக்கு மடக்கா பதில் சொல்லலாம்னா எல்லா பின்னூட்டமும் டிலீட் பண்ணி வெச்சுருக்காங்க...

ஒவ்வொரு ப்ளாகாப் போய் அவங்க எழுதினதுல எதாவது நுண்ணரசியல் கண்டுபிடிச்சு சாம்பிராணி போடலாம்னா, இடுகை எழுதி முடிச்சவுடனே அதையும் அவங்களே அனானி பேர்ல போட்டுக்கறாங்க....

நம்மளோட அல்லது நண்பர்களோட பழைய பதிவுகள்லயே எதையாவது புடிச்சு எப்பிடியாவது சிண்டு முடியலாம்னு முயற்சி பண்ணினா.... கற்பனை பயங்கரமா ஓடி மொத்த ப்ளாக்கர் சைட்டையே தூக்கணும் போல ஆயிடுமோன்னு தோணுது.

எங்கிட்ட ஈ-மெய்ல் பேக்கப்பும் எதுவும் இல்லை....

சரி.. நமக்கு நாமளே எதிர்பதிவு போட்டுக்கலாம்னு உக்காந்தா இடுகை ரொம்ப ஆபாசமா வருது... தலைப்பு எழுதறதுக்குள்ளயே எரிச்சலாகி எஸ்கேப்....

இப்ப என்னதான் பண்றது?

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது....

19 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

சென்ஷி said...

//நமக்கு நாமளே எதிர்பதிவு போட்டுக்கலாம்னு உக்காந்தா இடுகை ரொம்ப ஆபாசமா வருது... தலைப்பு எழுதறதுக்குள்ளயே எரிச்சலாகி எஸ்கேப்....//

LOL :))

கண்ணு கலங்கிடுச்சு உங்க இடுகையை படிச்சு. தனியொருவனுக்கு கலாய்க்க பதிவர் கிடைக்கலைன்னா குசும்பனை கூப்பிட்டு கலாய்ங்க :))))

நட்புடன் ஜமால் said...

நீத்து போன டீயை ஏன் ஐயா சுட வைக்கிறியள் ...

RAMYA said...

அய்யய்யோ இப்படி எல்லாம் யோசிக்கரீங்களே!

ROFL சரி இப்போ யாரு சிக்கினாங்க:))

இராகவன் நைஜிரியா said...

ம்.. நடக்கட்டும்...

சட்டையை கிழிக்காத வரைக்கும் ரொம்ப சந்தோஷம்

இராகவன் நைஜிரியா said...

// "இப்ப என்னதான் பண்றது?" //

சும்மா இருத்தலே சுகம்..

செந்தழல் ரவி said...

வேற எதாவது மொக்கையா ட்ரை பண்ணுங்க.

நாங்க ரொம்பநாளா அதான் பண்றோம்...

குடுகுடுப்பை said...

இதெல்லாம் விட்டுட்டு அவளோட ராவுகள் பதிவு போடுங்க

மணிகண்டன் said...

***
ஒவ்வொரு ப்ளாகாப் போய் அவங்க எழுதினதுல எதாவது நுண்ணரசியல் கண்டுபிடிச்சு சாம்பிராணி போடலாம்னா, இடுகை எழுதி முடிச்சவுடனே அதையும் அவங்களே அனானி பேர்ல போட்டுக்கறாங்க....
****

ha ha ha ha

நாமக்கல் சிபி said...

:))

Mahesh said...

நன்றி ஆப்பு... நானெல்லாம் பிரபலம் இல்லீங்க.... அதனால உங்க ஆப்புக்கு இங்க வேலை இருக்காது :)

நன்றி சென்ஷி.... ஐடியா நல்லா இருக்கே... குசும்பன்... இந்தா வாரேன்!!

நன்றி ஜமால்பாய்... அத கேக்கறீங்களா? நாம ஜாலியா ஸ்விஸ் சுத்திப் பாத்துக்கிட்டு இருந்தமா... வந்து பாத்தா இந்த வெளாட்டு புரியவே நாலு நாளாச்சு.... நாமள்லாம் பழய சோத்துக்கே தண்ணி ஊத்தி சாப்படறா ஆளு... டீயை சுடப்பண்றதெல்லாம் ஜுஜுபி :)

நன்றி ரம்யா (அக்கா?)....

நன்றி ராகவன் சார்... லீவு முடிஞ்சுதா? இந்திய பயணம் நல்லபடியா இருந்ததா?

நன்றி செந்தழல் ரவி... மொக்கையா? அப்பிடின்னா என்ன?

நன்றி கு.கு.. எவளோட ராவுகள்??
நன்றி மணிகண்டன்...

நன்றி நாமக்கல்சிபி....

வால்பையன் said...

//தனியொருவனுக்கு கலாய்க்க பதிவர் கிடைக்கலைன்னா குசும்பனை கூப்பிட்டு கலாய்ங்க :))))//

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்!

அறிவிலி said...

ரொம்ப போரடிக்குதோ?

வெங்கிராஜா said...

ஹஹஹாஹா! க்க்குயும்பூ!
இதுல தொழில் ரகசியம் என்னன்னா...!?

வெங்கிராஜா said...

ஹஹஹாஹா! க்க்குயும்பூ!
இதுல தொழில் ரகசியம் என்னன்னா?

நர்சிம் said...

லேபிள்...!

பழமைபேசி said...

அண்ணே, காத்து சிங்கப்பூருக்கும் அடிச்சிடுச்சு போலிருக்கு? இஃகி!

மங்களூர் சிவா said...

/
சரி.. நமக்கு நாமளே எதிர்பதிவு போட்டுக்கலாம்னு உக்காந்தா இடுகை ரொம்ப ஆபாசமா வருது...
/

:)))))))

அகரம்.அமுதா said...

தேவுடா))))))-