சிங்கைப் பதிவர் அறிவிலி தடாலடியாக என் பதிவுக்கு இந்த விருதைக் கொடுத்து விட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சாதாரணமா இது மாதிரி விருதெல்லாம் அங்க இங்க சுத்தி அலுத்துப் போய் கடைசிலதான் நமக்கு வரும். என்னமோ இந்தத் தடவை சீக்கிரமே வந்துடுச்சு. ஆரம்பிச்சு வெச்ச செந்தழல் ரவிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
இந்த எம்.எல்.எம்.க்கு ஜெயலட்சுமி அக்கா (ஆண்ட்டி??) கிட்டயெல்லாம் ட்யூஷன் எடுக்க வேண்டியதில்லை. கிடைக்கிற கொஞ்சமே கொஞ்சம் நேரத்துல நாம நமக்குத் தெரிஞ்ச, ரெகுலராப் படிக்கற நாலு பேருக்கு தாராளமாக் குடுக்கலாம்.
கிரி. தீவிர ரஜினி ரசிகர். எந்த விஷயத்தைப் பத்தி எழுதினாலும் ஒரு தேர்ந்த நிருபருக்கு உண்டான மெனக்கெடல் இவர் எழுத்துல பாக்கலாம்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? பதிவு தலைப்பைப் போலவே இவர் எழுத்தும் தெள்ளிய நீரோடை மாதிரி. இப்ப சமீபமா அப்பப்ப கொஞ்சம் வெள்ளம் பெருக்கெடுக்குது.
வித்தியாசமான பேருக்காகவே படிக்க ஆரம்பிச்சேன். இவரோட விக்கிரமாதித்தன் கதைகள் அட்டகாசம். என்னவோ இப்பல்லாம் இவர் அதிகமா எழுதறதில்லை. இதுக்கப்பறமாவது எழுத ஆரம்பிங்க..
ரவிசங்கர். இவரும் ஒரு வித்தியாசமான பதிவர். தமிழ் / ஆங்கில ஹைக்கூக்கள் எழுதுவது மற்றும் படித்தவைகளை நல்ல அறிமுகம் செய்து வைப்பார். சமீபத்துல ராணி, தினத்தந்தி மாதிரி பத்திரிக்கைகளைப் பத்தி ஒரு நினைவோடை எழுதியது என்னை ரொம்பக் கவர்ந்தது.
சொல்லப் போனா எல்லாப் பதிவர்களும் வித்தியாசமான சிந்தனைகளோட வித விதமா எழுதறாங்க. எல்லாமே இண்டரெஸ்டிங்காத்தான் இருக்கு. இருந்தாலும் விருது விதிப்படி 4 பேருக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கணும். மனசுல டக்குனு தோணுன நாலு பேருக்கு இந்த விருதை பாஸ் செய்யறதுல ரொம்பவே சந்தோஷம்.
அண்ணாச்சிகளா.... இந்தத் தம்பி குடுக்கறதை வாங்கிக்கோங்க. அப்பிடியே நீங்களும் பாஸ் பண்ணி விடுங்க.
19 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
ப்ச்.... நெனப்புல மண் விழுந்துருச்சே... சொக்கா, அல்ல, அறிவிலீ, நான் இனி ஆட்களுக்கு எங்க போவேன்... எங்க போவேன்.... இப்படி தனியா புலம்ப வுட்டுட்டயே?
ரொம்ப ந்ன்றி நண்பரே.ஏற்கன்வே ரெண்டுபேர் கொடுத்து இப்பத்தான் கழட்டி வச்சேன்.
விருத விட படிச்சா பின்னே பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்துங்க.
ரொம்ப ந்ன்றி நண்பரே.ஏற்கன்வே ரெண்டுபேர் கொடுத்து இப்பத்தான் கழட்டி வச்சேன்.
விருத விட படிச்சா பின்னே பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்துங்க.
வாழ்த்துக்கள் !!!!!!!!
விருது பெற்ற உங்களுக்கும் கொடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் !
பழமைபேசி நிலை தான் எனக்கும்!
மகேஷ் உங்க (தொடர்) அன்பிற்கு நன்றி
//அண்ணாச்சிகளா.... இந்தத் தம்பி குடுக்கறதை வாங்கிக்கோங்க. அப்பிடியே நீங்களும் பாஸ் பண்ணி விடுங்க//
சைக்கிள் கேப்ல வயதை குறைத்துக்கொண்ட மகேஷ் ற்கு என் கடும் கண்டனங்கள் ;-)
கண்டிப்பாக
ஆலமரத்திற்கு வேர்கள்
விழுதுகளும்தான்
வாழ்த்துக்கள்
மகேஷ் அண்ணா,
விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...எனக்கு(ம்) விருது கொடுத்ததுக்கு நன்றி...இது பத்தி கொஞ்சம் சொல்லணும்னு தோணுது...நாளைக்கி டைம் கிடைச்சா, தனியா இடுகையில சொல்றேன் :0))
அப்புறம், எனக்கும் எழுதணும்னு தான் ஆசைங்னா...அவனவனுக்கு செவுத்துல ஆணியடிச்சி வைப்பாங்கன்னா, நமக்கு ஆணியிலேயே செவுரு கட்டி வச்சிருக்காங்க....என்ன பண்றது??
அதுக்காக, யாரையும் விட்ற மாதிரியில்ல...சீக்கிரம், வேதாளாத்தோட வந்துருவோமில்ல?? :0)))
எனக்கு விருது கிடைச்ச மேட்டரு நாலு பேருக்கு தெரியணும்னு நானே தமிழிஷ்லயும், தமிழ் மணத்திலயும் ஓட்டு போட்டுட்டேனுங்க...எதுக்கும் ஒரு வெளம்பரம் வேணும்ங்களே :0)))
பெற்றவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள்.
[[6 பேருக்கு குடுக்கனுங்ண்ணா ]]
வாங்க பழமைபேசி... அண்ணனையும் புலம்ப விட்டுட்டீங்களே... நல்லா இருப்பீங்களா?
நன்றி ரவிசங்கர்.... சரிங்க... கழட்டி வெக்கவா விருது குடுக்கறோம்? சும்மா போட்டுக்கிட்டு கெத்தா தௌலத்தா சுத்துங்க.... (என்னதிது ரெண்டு வாட்டி? போல்ட் அண்டர்லைன்டா? :))))
நன்றி செந்தழல் ரவி...
நன்றி கோவியாரே...
நன்றி வால்.... நீங்களுமா? அவ்வ்...
நன்றி கிரி... உண்மைக்கு கண்டனம் தெரிவிச்சா யாரும் ஒத்துக்க மாட்டாங்க :)))))))))
நன்றி jothi...
நன்றி அதுசரி... அது சரி !!!
நன்றி ஜமால் பாய்... 6 பேரா? ஆ.....
என் போன்ற சிறுவன் அளித்ததை ஏற்றுக் கொண்டதற்கும், பகிர்ந்ததற்கும் நன்றி.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி அறிவிலி... //என் போன்ற சிறுவன் அளித்ததை//
இந்த சின்னஞ்சிறுவனுக்கும் அளித்து மகிழ்ந்ததற்கு நன்றிகள் (எப்பூடி?)
பெற்றதற்கும்,குடுத்ததுக்கும் வாழ்த்துகள்
:)
தாங்கள் விருது பெற்றதற்கென் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். (ட்ரீட்டெல்லாம் கிடையாதுங்களா?)
enaying sethikunga attathuku
Post a Comment