Sunday, October 28, 2012

ச்ச்ச்ச்ச்சும்ம்ம்மா ஒரு கதை.....

வேலை என்று எதுவுமே இல்லாமல் வெறுமனே உத்திரத்தைப் பார்த்தபடி படுத்தபடியே ஒரு நாளின் பெரும்பகுதியை நீங்கள் கழித்ததுண்டா? கோ பம் என்ற வார்த்தையை படித்ததும் கேட்டதும் மட்டுமேயன்றி அதை நீங்கள் வெளிக்காட்ட முற்பட்டு அது விரக்தியில் முடிந்ததுண்டா? டீக்கடைகளின் அருகில் எவனேனும் ஒரு நண் பனாவது கண்ணில் படமாட்டானா என்று அலைபாய்ந்ததுண்டா? இல்லையா? இவற்றை புளி போட்டு விளக்க என்னை விட சரியான ஆள் வேறு யார்? வாருங்கள் என்னோடு என் அறைக்கு. என் அறைக்கு என்றால்.... இங்கே திருவல்லிக்கேணியின் மேன்ஷன்களில் உள்ள சோப்பு டப்பாவை விட சற்றுப் பெரிதான பல நூறு அறைகளில் நண்பன் பாலகுரு இருக்கும் அறை. பகல் நேரங்களில் அவன் வேலைக்குப் போன பிறகு நான் இருக்குமிடம்.

கூட ப் படித்தவன், அதிலும் நன்றாக ப் படித்தவன், என்கிற ஒரே காரணத்திற்காகவே என்னை சகித்துக்கொண்டிரு ப் பவன். அதை ப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்கு தலைக்கு மேலே ஒரு கூரை. அது எங்கு கிடைத்தாலும் சரி. சா ப் பாடு என்ற பெயரில் ஏதாவது (நான் வெஜிடேரியனாக்கும்) தொண்டைக்குக் கீழே இறங்கினால் போதும். அட.... அ ப் படி நீங்கள் மூக்கை மூடிக்கொண்டே இருந்தால் ப்ராணவாயு கிடைக்காமல் உங்கள் ப்ராணன் போய்விடும். மேன்ஷன் என்றால் அ ப் படித்தான்.... ஒன்றும் ஆகாது.... பழகி விடும்....

உள்ளே வாருங்கள். அந்தக் கட்டிலில் உட்காரலாம். ம்ம்ம்... வேட்டியை அ ப் படி தூக்கி ப் போடாதீர்கள்... உடைந்து விடும். புருவத்தை உயர்த்தாதீர்கள். அழுக்கு ஏறி களிம் பாக ப் பற்றிக்கொண்டால் அது உடையாதா? என்னுடைய இரண்டு துணிகளில் அதுதான் புதியது. அட... நன்றாக சாய்ந்து உட்காருங்கள். டீ சா ப் பிட்ட படியே பேசுவோமா?

"டேய் ட ப் பாஸு, ரெண்டு டீ.... ரெண்டு கீர வட.... சட்டினி கூடக் கேட்டு வாங்கிட்டு வா... சார் அவன் கைல ஒரு 10 ருவா குடுங்க சார்"

ஆங்... அந்த ப் புத்தகங்கள்தான் என் உலகம்.... ஒரு எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள்....அவருடைய ஒரு புத்தகமாவது என்னிடம் இல்லையென்றால் ஒரு விரலை வெட்டிக் கொள்கிறேன். எனக்கு என்னதான் வேலை என்கிறீர்களா? அட.... என் திறமைக்கும், தமிழார்வத்துக்கும், கனவுகளுக்கும், அ பிலாஷைகளுக்கும்.... ஒரு இடத்திலும் வேலை இல்லையே... என்னை மதி ப் பார் யாரும் இல்லையே.... நண் பன் பாலகுருவுக்கும் கூட இ ப் போதெல்லாம் என்மேல் மிகவும் கோ பம் வருகிறது. அதையெல்லாம் பார்த்தால் பிறகு எனக்குக் கூரை? நான் எழுதும் கதை, கவிதைகளை எந்த ப் பத்திரிக்கையும் ஏற் பதில்லை. பாரதிக்கு ப் பிறகு நான்தான் என் பதை இந்த உலகம் எ ப் போது புரிந்துகொள்ள ப் போகிறதோ? ஏன்?இ ப் போது நீங்கள் இ ப் படி சிரிக்கும் படியாக நான் என்ன சொல்லிவிட்டேன்?

பாருங்கள்.... என் கவிதைகளை.... படியுங்கள்... உணருங்கள்.... நான் தொடாத விஷயம் இல்லை.... என்னுடன் உட்கார்ந்து எனக்கு சரியாக விவாதம் செய்ய எவரும் இல்லை. என்னை ப் பார்த்தாலே ஓடி ஒளிகிறார்கள். பாலகுரு கூட என்கவிதைகளையோ கட்டுரைகளையோ மதி ப் பதில்லை. போகட்டும். அன்று கூட அ ப் படித்தான் ஆனது. அந்த பதி ப் பாளனை... அவனுக்கு என்ன மரியாதை.... அவன் என் கவிதைத் தாளில் வடையை நசுக்கி எண்ணையை..... ச்சே... ஓங்கி ஒரே அறை..... ம்ம்ம்... அரசாங்க விருந்தினனாக ஒரு வாரம் இருந்துவிட்டு நேற்றுதான் வந்தேன்.

பாலகுருவும் என்னை இந்த வாரத்துடன் வேறு இடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டான். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களுடன் நான் தங்கிக் கொள்ள முடியுமா? பய ப் படாதீர்கள். என்றேனும் ஒரு நாள் இந்த உலகம் என்னைக் கொண்டாடத்தான் போகிறது. ஒவ்வொரு பைசாவையும் ஒவ்வொருவருக்கும் தீர்க்கத்தான் போகிறேன். எதற்கெடுத்தாலும் ஏன் சிரிக்கிறீர்கள்?

இதோ பாலகுருவே வந்து விட்டான்.... பிறகு பேசுவோம்.

"யாருங்க நீங்க? என் ரூம்ல என்ன பண்றீங்க? எதுக்கு சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?"

"........."

"என்னது.... என் நண் பனா? அய்யா..... அவன் போய் ரயில்ல தலயக் குடுத்து மாசம் ஒண்ணாச்சு.... பொழுது போய் பொழுது வந்தா போலீஸ்..... ச்சே.... இனிமே சாவியை ஜன்னல்ல வெக்காம கையோட கொண்டு போயிடணும்...."

".........."