Thursday, July 2, 2009

புத்திரசோகம் :(


நான் வேலை தேடி டெல்லியில் என் தமக்கையின் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம். அவனுக்கு அப்போது 7 வயது இருக்கும். அவனுடைய தந்தையின் அலுவலகத்திலேயே எனக்கும் ஒரு வேலை கிடைத்தது. போய் வர சௌகரியமாக இருக்குமென்று அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். பெரும்பாலான நாட்கள் இரவு உணவு அவர்கள் வீட்டில்தான். அவனும் அவன் அண்ணனும் (11 வயது) பிகுந்த பாசத்துடன் பழகினார்கள். வார இறுதிகளின் மாலைப்பொழுதுகளில் அவர்களோடுதான் விளையாட்டு. சில நாட்கள் சினிமா, சர்க்கஸ், பார்க் என பொழுது போகும்.


என்னைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்வான். பிறகு என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு மரம் ஏறுவது போல் உடம்பின் மீது ஏறி தலையில் அமர்ந்து கொள்வான். அவனுக்கு அது ஒரு பிடித்தமான விளையாட்டு. சிரிக்க சிரிக்க பேசுவான். அவன் அண்ணன் நன்றாக கீ போர்ட் வாசிப்பான். தபேலாவும் கற்றுக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியான குடும்பம். எந்த விதமான உள்/வெளித் தொந்திரவுகளும் இல்லாத அழகான குடும்பம். பெரியவன் பெங்களூரில் இஞ்சினியரிங் முடித்து, பிறகு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்து அங்கேயே நல்ல வேலையில். சின்னவனுக்கு சிறுவயது முதலே ட்ரம்ஸ் போன்ற கருவிகளில் ஆர்வம் அதிகம். ப்ளஸ்2விற்கு பிறகு மும்பையில் ஒரு பெரிய கல்லூரியில் சவுண்ட் இஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்து போன மாதம் 3 வருட படிப்பையும் முடித்து விட்டான்.


போன வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசியில் வந்த அதிர்ச்சி செய்தி. சின்னவன் மும்பையில் தான் வசித்து வந்த அபார்ட்மெண்ட்டில் 5 வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டானென்று. ஏன் எதற்கு எப்படி என்பதெல்லாம் இந்த நிமிடம் வரை புரியாத புதிர். வீட்டாரைத் தேற்ற வார்த்தைகளில்லை. 4 நாட்கள் அழுது பின் வற்றிய கண்களுடன் அந்த அழகான குடும்பம் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. என் மனவேதனை சொல்லி மாளாது.


அந்த 20 வயது இளைஞனது ஆன்மா சாந்தியடையவும், அந்த குடும்பத்தார் இந்த துயரிலிருந்து மீண்டு வரவும் நம்மை விட உயர்நததொரு சக்தியைப் பிரார்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


11 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நட்புடன் ஜமால் said...

அவர்கள் குடும்ப்த்தினருக்காக எனது அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் ...

கார்க்கிபவா said...

:((

☼ வெயிலான் said...

என்னுடைய வருத்தங்களும், அனுதாபங்களும்.

நர்சிம் said...

வருத்தங்கள்.

சின்னப் பையன் said...

:-(((

அறிவிலி said...

:-((

வால்பையன் said...

ஒரு மரணம்
பலரை உயிறுள்ள
பிணமாக்குகிறது!

மங்களூர் சிவா said...

:((((((((

ஜோசப் பால்ராஜ் said...

சிறுவயதில் இறப்பு மிகக் கொடுமை,
அதிலும் இப்படி என்ன காரணத்தால் மரணம் என்றே தெரியாமலிருப்பது அதைவிட கொடுமை.

ஜோசப் பால்ராஜ் said...

// வால்பையன் said...
ஒரு மரணம்
பலரை உயிறுள்ள
பிணமாக்குகிறது!

//

100% உண்மையான வார்த்தைகள்.

Ramanna said...

அவர்களது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். உண்மையில் மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம் இது.