Thursday, July 2, 2009

என் பாக்களா? வெண்பாக்களா?

நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் வெண்பா முயற்சி. வழக்கம்போல நண்பர் திரு.அகரம்.அமுதாவின் உதவியுடன். ஈற்றடிகளை அவர் கொடுக்க, பாக்களை நான் இயற்ற (சரி.. சரி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) சிலவற்றிற்கு அவர் தளை தட்டும் இடங்களை சரி செய்து கொடுக்க, அவற்றை நான் இங்கு படைக்க, அவற்றை நீங்கள் படிக்க..... அவரது/உங்களது பொறுமைக்கும், நன்றிகள் பல.


உலகம் சூடாகுதல்மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்

கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்

கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட

வெப்பம் உயரும் உலகு !கூட்டணி


கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்

சேருவோர் யாரெனக் கேட்டேன் - பெருமைமிகு

நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்

கூட்டணி யாருடனோ கூறு !ஊருக்கு உழைத்தல்


கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்

துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்

(ச்)சேரிலே இருந்தபடி நாட்டாமை செய்வதினும்

ஊருக்(கு) உழைத்தல் உயர்வு.டாஸ்மாக்கும் படிப்பும்


டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு

ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு

வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு

தேங்கியே போனதே படிப்பு.

சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?

என்னோட முதல் முயற்சி உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம்... மறுபடி இங்க ஒரு தடவை ஞாபகப்படுத்திடறேன்.

24 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஜோசப் பால்ராஜ் said...

//சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா //

இது டாப்பு டக்கரு.

ஜோசப் பால்ராஜ் said...

உலக வெப்பமயாதல் குறித்த வெண்பா ரொம்ப அருமை.

ஜோசப் பால்ராஜ் said...

ஆக ஒரு ஏரியாவையும் விட்டு வைக்கிறதில்லன்னு முடிவு செஞ்சு இறங்கிட்டிங்க..
கலக்குங்க அண்ணே.

SP.VR. SUBBIAH said...

///டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு

ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு

வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு

தேங்கியே போனதே படிப்பு.///

தேங்கிப் போனது படிப்பு’ என்றிருந்தால் நன்ராக இருக்கும் நண்பரே

SP.VR. SUBBIAH said...

தட்டச்சுப் பிழை - நன்றாக இருந்தது என்று அன்புடன் திருத்திக்கொள்ளவும்!

ஸ்வாமி ஓம்கார் said...

அடங்கப்பா...

Mahesh said...

நன்றி ஜோசப்...

நன்றி SP.VR. SUBBIAH.. திருத்தத்திற்கு நன்றி..

நன்றி ஸ்வாமி ஓம்கார்...

அட்டேங்கப்பா... 12 மணிக்கு பப்ளிஷ் பண்ண டைம் போட்டதே மறந்து போச்சு. 15 நிமிஷத்துல 6 பின்னூட்டமா? ஒருவேளை நானும் "பிரபல" பதிவர் ஆயிட்டேனா?

நட்புடன் ஜமால் said...

டீ. ராஜேந்தரோடு எதுனா சந்திப்பா ‘தல’


\\சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா\\


ஆனாலும் இரசிக்கும்ப்டியாக

நட்புடன் ஜமால் said...

அட்டேங்கப்பா... 12 மணிக்கு பப்ளிஷ் பண்ண டைம் போட்டதே மறந்து போச்சு. 15 நிமிஷத்துல 6 பின்னூட்டமா? ஒருவேளை நானும் "பிரபல" பதிவர் ஆயிட்டேனா?\\


15 நிமிடத்தில் 1000 மெல்லாம் தாண்டினவங்க இருக்காங்க பாஸ்

அவங்க என்ன பிரபலமா ...

குடுகுடுப்பை said...

நண்பா , வெண்பா என்றால் என்ன?
வெண்பூ என்ற பதிவருக்கும் வெண்பாவிற்கும் எதாவது தொடர்பு உண்டா?

குடுகுடுப்பை said...

பாட்டெல்லாம் நல்லா இருக்குப்பா, கடைசிப்பாட்டுதான் ரொம்ப தள்ளாடிப்போச்சு

நர்சிம் said...

மிக நல்ல முயற்சி அதில் வெற்றியும் கூட.. கலக்குங்க மகேஷ்

அறிவிலி said...

//டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு


ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு


வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு


தேங்கியே போனதே படிப்பு.//

அறிவிலிக்கு கூட புரியும்பபடி வெண்பா எழுதிய உங்களுக்கு ஒரு "ஓ" போட்டுக்கறேன்.

(ஒரு வேளை ஃபெமிலியரான சப்ஜெக்ட்டுங்கறதனால புரிஞ்சுருச்சோ?)

வால்பையன் said...

//டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு
ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு
வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு
தேங்கியே போனதே படிப்பு.//


அண்ணே, கலக்கிபுட்டிங்க!

Mahesh said...

நன்றி ஜமால்பாய்... டி.ஆர்.. யாரவரு?

நன்றி கு,கு...

நன்றி நர்சிம்.... டச் பன்ணிட்டீங்க..

நன்றி வால்பையன்... கலக்கிப்புட்டமில்ல?

Mahesh said...

நன்றி அறிவிலி... புரிஞ்சுடுச்சா? அடடா.. நான் பின்நவீனத்துவ கவிஞ்சரு இல்லயா? வட போச்சே...

Ramanna said...

கலக்கிபுட்ட தல.

மங்களூர் சிவா said...

/
Mahesh said...

நன்றி அறிவிலி... புரிஞ்சுடுச்சா? அடடா.. நான் பின்நவீனத்துவ கவிஞ்சரு இல்லயா?
/

ஓ இப்படி ஒரு கொலவெறி ஆசைவேற இருக்கா???
:))))


வெண்பாவா சும்மாவா
பகுத்தறியும் திறன் இல்லை
எனினும்
சொல்லவந்த பொருள்
அறிந்தேன் மகிழ்ந்தேன்.

’டொன்’ லீ said...

//சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?
//
டண்டணக்கா, டணக்குணக்கா...

வெண்பாவோ என் பாவோ எதுவோ, ஆனா சொல்ல வந்த விசயத்தை சரியா சொல்லிட்டீங்க...:-)))

ஸ்ரீதர் said...

கலக்குங்க.... SOOOPAR.

Mahesh said...

நன்றி ராமண்ணா...

நன்றி மங்களூர் சிவா.... கொலைவெறி?? :))

நன்றி டொன் லீ...

நன்றி ஸ்ரீதர்...

நசரேயன் said...

//சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?//

ம்ஹும் .. தப்பே இல்லை

Mahesh said...

நன்றி நசரேயன்... அதானே !

கிரி said...

மரங்கள் வளர்ப்பதின் அவசியத்தை எவரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை :-(