Sunday, January 25, 2009

தன்பால் எனையீர்த்த வெண்பா !!


தேடுதலே வாழ்வாகிப் போனதன் விளைவு
வேடனமு தாவின்வலைப் பூவழியில் - மூடன்
என்போல் தமிழறியா தொருவனைக் கரம்நீட்டித்
தன்பால் ஈர்த்த வெண்பா !

இந்தப் பதிவு திரு.அகரம்.அமுதா அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக....

நண்பர் அகரம்.அமுதா அவர்களின் அழகாக வெண்பாக்கள் எழுதக் கற்றுக் கொடுக்கவென்றே ஒரு வலைப்பூ நடத்தி வருகிறார். அமுதாவை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தபோதும் பேருந்தில் விக்னேசுவரனுக்கு வெண்பாவின் அடிப்படைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டே வந்தார். அதன் பின் சில மாதங்களுக்குப் பிறகு சென்ற வாரம் அமுதாவின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து பதிவுகளைப் படித்தபின் நானும் வெண்பாக்கள் எழுத வேண்டுமென்ற உத்வேகம் புறப்பட்டது.

அதுவும் அவர் தன்னுடைய ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஈற்றடியைக் கொடுத்து அதற்கு வெண்பா எழுத ஊக்குவித்தது என்னை மிகவும் ஈர்த்தது. இது வரை கவிதை என்று இரண்டு வரிகள் எழுதியது கிடையாது. வெண்பாவின் இலக்கணம் தெரியாது. இருந்தாலும் முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று முயன்றதில் சற்று சுமாராகவே எழுத வந்தது. அமுதாவும் பொறுமையோடு தளை தட்டும் இடங்களை சிறிது சரி செய்து கொடுக்க போதை தலைக்கேறியது. நண்பர் பழமைபேசியும் பச்சைக்கொடி காட்ட மூன்று நாட்களில் 4 வெண்பாக்கள் எழுதினேன். அவை இங்கே உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும்....

விதி வலியது... என்னென்னெ ரூபத்துல எப்பிடியெல்லாம் வருது பாருங்க... தீந்தீங்க நீங்கள்லாம்... தப்பிக்கவே முடியாது. தமிழ்க்கடவுள், தமிழ்த்தாத்தா, தமிழ்ப்பாட்டி இப்பிடி யாரையாவது கும்புட்டு படையல் போடறேன்னு வேண்ணா வேண்டிப் பாருங்க. எதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம்.


புகைப்படத் தொகுப்பு

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து !


பெண்கள்

பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருதப்
பாரினில் பாவையர் உண்டாம் - வீரமிகு
மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
நங்கைக்கு நாணம் நயம் !

கோபம்

கோபம் எனும்தீ இறையெனக் கீந்த
சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திடத்
தண்ணென மாறும் தழல் !

ஈழம்

மண்ணை யிழந்து மக்களை யிழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமுந் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்?


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா ! - ஔவை.


பயப்படாதீங்க... கோவப்படாதீங்க... அடுத்த முயற்சியில இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணறேன்...

38 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

சி தயாளன் said...

நல்லாயிருக்கு மகேஷ்..நம் அணியில் அமுதா, முகவை ராம் இருவருக்கும் அடுத்ததாக நீங்கள்...வாழ்த்துகள்..

அடுத்ததாக அய்யங்கார் எழுதுவார் என்று எதிர் பார்க்கிறோம்..

சி தயாளன் said...

//ஈழம்

மண்ணை யிழந்து மக்களை யிழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமுந் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்?
//

அருமை...:-(

ஜோசப் பால்ராஜ் said...

கண்களில் ஆனந்த கண்ணீரோடு வாழ்த்துகிறேன்.
ஆகா மிக அருமை அண்ணா.

டொன் லீ என்னை வெண்பாவில் இழுத்துவிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஈழம் குறித்த வெண்பா ஆனந்த கண்ணீர் வடித்த கண்களில் வேதனை கண்ணீரையும் வரவழைத்துவிட்டது.

வெண்பாவை கூட வா நண்பா என அழைத்து வந்து உங்கள் வலைப்பூவில் தந்துள்ளீர்கள் . மீண்டும் கரம் கூப்பி வாழ்த்துகிறேன். வாழ்க உம் தமிழ் ஆர்வம்.

இப்னு ஹம்துன் said...

//புகைப்படத் தொகுப்பு

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து !///

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்திட - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சி கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து!


பெண்கள்

//பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருதப்
பாரினில் பாவையர் உண்டாம் - வீரமிகு
மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
நங்கைக்கு நாணம் நயம் !//

பேரிடர் வந்தாலும் நேர்கொண்டு மோதிட
பாரினில் பாவையர் பார்த்தோமே - வீரமிகு மங்கையர் வென்றிடும் மங்கா சிரிப்பிலும்
நங்கைக்கு நாணம் நயம்.

கோபம்

//கோபம் எனும்தீ இறையெனக் கீந்த
சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திடத்
தண்ணென மாறும் தழல் !//

கோப மெனுந்தீ இறையெனக் கீந்த
சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திட
தண்ணென மாறும் தழல்.

ஈழம்

மண்ணை யிழந்து மக்களை யிழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமுந் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்?

மண்ணை யிழந்துமே மக்கள் அழிந்துமே
தன்னையும் தந்திட்ட சோதரர்காள் - இன்னமும்
நம்பிக்கை கொண்டுமே நாமே துடைத்திடுவோம்
ஈழத் தமிழர் இடர்.

(எனக்குத் தெரிந்த சில தளை தட்டல்களை நீக்கி, சில கருத்துப்பிழைகளையும் களைந்திருக்கிறேன்:-)) )

வெண்பா முயன்றுமே வெற்றி அடைந்திடும்
நண்ப ருமக்கு நலம்.

வாழ்த்துகள்.

நசரேயன் said...

கலகிட்டீங்க மகேஷ், நானும் முயற்சி பண்ணுறேன்

பழமைபேசி said...

//பழமைபேசி said...

எவன் சொன்னது தமிழுக்கு எதிர்காலம் இல்லைனு.....?! நெறைய மகேசுக புறப்பட்டுட்டாங்க அப்பு.....
August 29, 2008 9:54 AM //

எனக்கு இது முன்னாடியே தெரியும். நேத்து ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு கிடையாது, அதே பேச்சுத்தான்! இஃகிஃகி!! வாழ்க, மேன்மேலும் வளர்க!!

சின்னப் பையன் said...

போட்டு தாக்குங்க. சூப்பரா இருக்கு.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்...

Mahesh said...

பின்னூட்டங்களுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால படிச்சுட்டு பாராட்டும் ஊக்கமும் குடுத்த/குடுக்கற உங்க அனைவருக்கும் நன்றி... நன்றி...

Mahesh said...

நன்றி டொன் லீ... என்னங்க நீங்க என்னப் போய் அமுதா முகவை ராம் வரிசைல சேக்கறீங்க... இப்பதன் நான் நடை பழகறேன்..

அய்யங்கார் எழுத ஆரம்பிச்சா நானெல்லாம் அம்பேலாயிடுவேன்...

Mahesh said...

நன்றி ஜோசஃப் அய்யங்கார்... ரொம்ப நன்றி... உங்களை அழ வெச்சுட்டேனே :(

கோத்து விட்ட டொன்லீக்கு இன்னொரு நன்றி..

Mahesh said...

மிக்க நன்றி இப்னு ஹம்துன்...

திருத்தங்கள் செய்ததற்கு நன்றி... உங்களைப் போன்றோரின் ஊக்கம் அவசியமானது...

Mahesh said...

நன்றி நசரேயன்... நானே எழுதும்போது நீங்கள்லாம் கலக்கலாம்....

Mahesh said...

நன்றி பழமைபேசி... உங்களுக்கு ரொம்பப் பரந்த மனசு...

நன்றி ச்சின்னப்பையன்.. நீங்க எழுதுனா கவிகாளமேகம் மாதிரி காமெடியா எழுதலாமே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

Mahesh said...

நன்றி T.V.Radhakrishnan....

குடுகுடுப்பை said...

இது போன்ற முயற்சிகளை நான் செய்யாமல் இருந்து உதவுகிறேன்

குடுகுடுப்பை said...

பாராட்டுக்கள்

Anonymous said...

அண்ணா தொடரட்டும் இதுபோல் உங்கள் தமிழ் தொண்டு. நானும் ஒதுங்கி இருந்து தொண்டு செய்கிறேன் :))

Mahesh said...

நன்றி குடுகுடுப்பை, அப்துல்லா.. நீங்க ரெண்டு பேரும் சொல்றது புரியுது... இந்த மாதிரி பயங்கர முயற்சி பண்ணி தமிழை சேதாரம் பண்ணாதெங்கறீங்க... புரியுது...

கபீஷ் said...

/////பழமைபேசி said...

எவன் சொன்னது தமிழுக்கு எதிர்காலம் இல்லைனு.....?! நெறைய மகேசுக புறப்பட்டுட்டாங்க அப்பு.....
August 29, 2008 9:54 AM //

எனக்கு இது முன்னாடியே தெரியும். நேத்து ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு கிடையாது, அதே பேச்சுத்தான்! இஃகிஃகி!! வாழ்க, மேன்மேலும் வளர்க!!//

மஹேஷ் மன்னிக்கவும், இது பழமைபேசிக்கு மட்டும்,

பழமைபேசி,
இது எனக்குப் பயந்து போட்ட பின்னூட்டமாட்டமிருக்குது. அது ....

சவுக்கடி said...

உங்கள் முயற்சியும் ஆர்வமும் பாராட்டிற் குரியன.

முதன்முதலில் எழுதும் முயற்சி என்பதால் கீழ்க்காணும் குறைபாடுகளைச் சுட்டுகிறேன்.
குறை கூறும் எண்ணம் இல்லை.

தலைப்புப் பாடலில் தளை சரிசெய்ய வேண்டிய இடங்கள்:

போனதன் விளைவு
மூடன் என்போல்
தமிழறியா தொருவனைக் கரம்நீட்டி
தன்பால் ஈர்த்த வெண்பா.

தாவின்வலை - வெண்பாவில் வரக்கூடாத கனிச்சீர்.

ஈற்றுச்சீர் ஓரசைச்சீராக இல்லை (வெண்பா )

புகைப்படத்தொகுப்பு

றுணர்ந்தே - ஊரெங்கும்

பெண்கள்

பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருதப் பாரினில்
உண்டாம் - வீரமிகு
சீறினும் சிரிப்பினும்

கோபம்

கீந்த சாப

ஈழம்

யிழந்து மக்களை யிழந்து தன்னையு மிழந்த சோதரர்காள்
ஏழேழ் சென்மமுந் தொடர்ந்

தொடர்ந் - இது ஓரசைச்சீராக உள்ளது

jeevagv said...

முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

தமிழ்ப் பாலருந்தி தன்மெய் மறந்ததனால்
வெண்பா யியற்றி அன்னியரையும் மெய்
மறக்கச் செய்து அனைவரையும் தன்பால்
ஈர்த்த...'பண்பான' மகேசுக்கு நன்றி.

இதுதாங்க பிரச்சினை! நானும் முயற்சி பண்ணலாம்னு பார்த்தா, புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை ஆயிடும். நமக்கெல்லாம் வெண்பொங்கல்தான் சரி. யாராவது பண்ணினா சரி...நல்லா அனுபவிப்போம்.

Mahesh said...

நன்றி கபீஷ்... நம்மூட்டுத் திண்ணைல பழமைபேசியண்ணனுக்கு போஸ்டர் ஒட்டிக்கலாம்...

Mahesh said...

நன்றி savuccu... கருத்துக்களுக்கு நன்றி... இவற்றை கவனத்தில் கொள்கிறேன்....

Mahesh said...

நன்றி ஜீவா...

நன்றி chitravini... வாங்க வாங்க யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... எழுதித் தள்ளுவோம் வாங்க.

பரிசல்காரன் said...

அடடே! அருமைங்க..

ஒண்ணு தெரியாட்டியும் தெரிஞ்சுக்கணும்கற உங்க ஆர்வமும், உழைப்பும் பிரமிக்கவைக்குது.

வெண்பாக்களைப் பத்தி ஒண்ணும் தெரியாத(என்னைப் போன்ற)வர்களுக்கு இதைப் படித்துப் பார்த்தால் எந்தக் குறையும் தெரியவில்லை! பின்னூட்டங்களைப் படித்துப் பார்க்கும்போது என்னமோ கனிச்சீர், ஈற்றுச் சீர், தளை தட்டல்ன்னு என்னென்னமோ சொல்லியிருக்காங்க..

தளை தட்டுதான்னு தெரியல மகேஷ்... நிச்சயமா நான் கைதட்டுவேன் இந்த முயற்சிக்கு!!!

Mahesh said...

நன்றி பரிசல்.... ஆமாங்க... எதையாவது கத்துக்கற ஆர்வம் ஒண்ணுதாங்க நம்மளை உயிர்ப்புடன் வைக்கும்கறது என்னோட எண்ணம். தளை தட்டுனாலும் களை கட்டுவோம் :)))))

narsim said...

//இது வரை கவிதை என்று இரண்டு வரிகள் எழுதியது கிடையாது//

இப்பிடி சொல்லிட்டு முதல் கவிதையே வெண்பா வடிவில் எழுதிய முதல் ஆள் நீங்க தான் மகேஷ்.. கலக்கல்.. நான் நீண்ட நாள் தேடிக்கொண்டிருக்கும் மேட்டர் இது..அகரம் அறிமுகத்திற்கு(எனக்கு..) நன்றி

Mahesh said...

ஆஹா... நன்றி நர்சிம்... வெண்பா எழுத நீங்கதான் சரியான ஆள்... எவ்ளோ மேட்டர் வெச்சுருக்கீங்க...

Thamira said...

பரிசல்காரன் said...
அடடே! அருமைங்க..
ஒண்ணு தெரியாட்டியும் தெரிஞ்சுக்கணும்கற உங்க ஆர்வமும், உழைப்பும் பிரமிக்கவைக்குது.
வெண்பாக்களைப் பத்தி ஒண்ணும் தெரியாத(என்னைப் போன்ற)வர்களுக்கு இதைப் படித்துப் பார்த்தால் எந்தக் குறையும் தெரியவில்லை! பின்னூட்டங்களைப் படித்துப் பார்க்கும்போது என்னமோ கனிச்சீர், ஈற்றுச் சீர், தளை தட்டல்ன்னு என்னென்னமோ சொல்லியிருக்காங்க..
தளை தட்டுதான்னு தெரியல மகேஷ்... நிச்சயமா நான் கைதட்டுவேன் இந்த முயற்சிக்கு!!!
///

ப‌டிச்சுட்டு என்ன‌ எழுதுற‌துன்னு கொள‌ம்பிக்கினுருந்த‌ப்போ அண்ணே போட்டாரா பின்னூட்ட‌ம்.. வ‌ரிக்கு வ‌ரி ரிப்பீட்டு போட்டு அப்பீட்டாகிக்கிறேன்.

வேத்தியன் said...

ஐயா வெண்பா ரொம்ப நன்னா இருக்குதுங்கோ...
வாழ்த்துகள் !!!

Mahesh said...

வாங்க தாமிரா... அவ்வ்வ்... படிச்சுட்டு என்ன எழுறதுன்னு கொழம்பற அளவுக்கு உங்களை கொழப்பீருக்கேனே... வெற்றிதான் :))

Mahesh said...

நன்றி வேத்தியன்..... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

அகரம் அமுதா said...

வணக்கம் உயர்திரு மகேஸ் அவர்களே! என் கணினி ஓரிரு வாரமாகப் பழதாகி விட்டதால் என்னால் தொடர்ந்து வளையைப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்க முடிந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். அருமை. தங்கள் பதிவைக்க ண்டு சுவைத்தேன். அடுத்த வலைப்பதிவர் சந்திப்பிற்குக் கண்டிப்பாக வாருங்கள். சந்தித்து நிறைய பேசுவோம். சற்றேறக் குறைய எல்லாகவிதைகளையுமே என் வலையின் பின்னூட்டத்திலேயே தளைதட்டாமல் சரிசெய்து தந்திருக்கிறேனே! இங்கு சிலதளைதட்டும் பிழைகளோடு வெளியிட்டிருக்கிறீர்கள். இப்னு கண்டுபிடித்துவிட்டார் பார்த்தீர்களா? ஆயினும் தங்களின் முதல்முயற்சியே வெகுசிறப்பு. இன்னும் ஓராண்டுகளில் நீங்கள் நினைத்தால் நிறையபேருக்கு வெண்பா இலக்கணம் கற்றுத்தரும் அளவிற்கு திறமை அடைந்து விடலாம். வாழ்த்துகள். தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்.

ஆதவா said...

ம்ம்ம்.... வெண்பா எழுதி ரொம்ப நாளாச்சு.....

உங்கள் வெண்பா முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. பல பிழைகள்

இருக்கின்றன.


பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருதப்
பாரினில் பாவையர் உண்டாம் - வீரமிகு
மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
நங்கைக்கு நாணம் நயம் !


பேரிடர் - கூவிளம்... விளமுன் நேர் வரவேண்டும்.. ஆனால் வந்ததோ

நிரை (வரினும்)

வரினும் - புளிமா ... மா முன் நிரை வரவேண்டும்... வந்ததோ நேர்

(நேர்கொண்டு)

நேர்கொண்டு (தேமாங்காய்) காய் முன் நேர் வரணும்... ஆனால்...

நிரை வந்துவிட்டது.. (பொருத-புளிமா)

முதல் வரியே பாருங்கள் முழுக்க பிழையாக உள்ளது...

வெண்பா எழுதியதும் முதலில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

பிரதானமாக,

மா முன் நிரை
காய் முன் நேர்
விள முன் நேர்


இது முக்கியம்.. அப்பறமா கொஞ்சம் மாறுதல் செய்ய முனையலாம்...


ரொம்ப நாளைக்கு முன்ன, குறும்பாக ஒரு வெண்பா எழுதினேன்... (ஆஃப் கோர்ஸ் வெண்பாவே ஒரு குறும்பா தானே!)

கண்படலம் விண்மீனாய் மாறுமே விண்மதியால்
விண்மதியாள் கண்ணிசைத்தால் நில்லாமல் நீர்வீழும்
நீர்வீழ மண்ணோ இனிப்பாக உண்ணுமே
உண்ணாது போமோ எறும்பு ?


தொடர்ந்து முயற்சி பண்ணுங்க சார்.

Mahesh said...

நன்றி அமுதா... சரிதான்... நாந்தான் நீங்க திருத்தியதை விட்டு மற்றதை பதிவிட்டு விட்டேன்.

நான் இன்னும் கற்றுக் கொண்டு திருத்தமாக எழுத நிறைய பயிற்சி எடுக்க வேண்டும்.

Mahesh said...

நன்றி ஆதவா... இது என் முதல் முயற்சி... இன்னும் கற்றுக் கொண்டு திருத்தமாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

இது வெண்பாவின் எந்த வகையிலும் சேரலைன்னா, இதை நான் "என்பா"னு சொல்லிகிறேன். இஃகி ! இஃகி !!