Thursday, January 22, 2009

பிரபல பன்னாட்டுப் பதிவர்கள் திடீர் சந்திப்பு !!


..... மற்றும் பலர்

எச்சரிக்கை 1 :
இது எனக்கே. தர்ம அடி வாங்காம இருக்க அந்த தர்மசாஸ்தாதான் காப்பாத்தணும்.

எச்சரிக்கை 2 : இது உங்களுக்கு. இந்தப் பதிவு முழுக்க முழுக்க கற்பனையே. உங்கள்ல யாரையாவது குறிப்பிடுதோன்னு நீங்க நினைச்சா அதுவும் உங்களோட கற்பனையே.

சந்தித்த பிரபலங்கள் : பரிசல், நர்சிம், புதுகை அப்துல்லா, கோவி கண்ணன், பழமைபேசி, வெயிலான், ச்சின்னப்பையன், குடுகுடுப்பை, அணிமா, நைஜீரியா ராகவன்.

ராகவன் : வாங்க... வாங்க... உங்க எல்லாரையும் ஒண்ணா சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம்...

அணிமா : இருங்க...... நாங்க ஒண்ணா? பல பேரா?

பழமைபேசி : இஃகி !! இஃகி !!

குடுகுடுப்பை : அண்ணனுக்கு விக்குது.. ஒரு மினரல் வாட்டர் பார்சல்...

நர்சிம் : ஏடாகூடமா மாட்டிக்கிட்டோமோ... இந்த மீட்டிங்குக்கு டக்-இன் பண்ணிட்டு வந்துட்டோமே... வெறும் பனியனோடயே வந்திருக்கலாமோ...

ச்சின்னப்பையன் : (போனில்) ஆமா தங்ஸ்... இங்க ஒரு முக்கியமான மீட்டிங். பாஸுக்கு பதிலா நாந்தான் மினிட்ஸ் எடுக்கணும்... அவருக்கு ரெண்டு வெரல்லயும் நெகச்சுத்தி... என்னது கட் ஆயிடுச்சு...

பரிசல் : (போனில்) யெஸ் மேடம்... இட் ஈஸ் ஆன் தி வே... மே பி ட்ராஃபிக் ஜாம்... வில் பி தேர் இன் தர்டி மினிட்ஸ்... ஓகே மேடம்.... யெஸ் மேடம்...

கோவி கண்ணன் : கஷ்டகாலம்... இனிமே பதிவர் சந்திப்புக்கு வந்தா செல்ஃபோனை ஆஃப் பண்ணணும்னு ரூல் போடணும்.

அணிமா : ரூல்ஸ் காலத்தால் மாறும்....

பழமைபேசி : இஃகி !! இஃகி !! இப்பத்தான் காளமேகம் அப்பிச்சி வந்து என்ன சொல்லிச்சின்னா...

குடுகுடுப்பை : இங்க வந்தும் தூங்கறீங்களே....

அப்துல்லா : அண்ணே... சாரிண்ணே... கொஞ்சம் லேட்டாயிருச்சுண்ணே... டீ சொல்லிட்டிங்களாண்ணே... சரிண்ணே....

வெயிலான் : அடடா.. அவசரத்துல டீ ஷர்ட் கொண்டு வர மறந்துட்டேன்... எல்லாரும் அட்ரஸ் குடுங்க... கூரியர்ல அனுப்பிடறேன்.

அணிமா, கு.கு. : எங்களுக்கு ரெண்டு ரெண்டு...

ராகவன் : அடடா... எல்லாருக்கும் தாகசாந்திக்கு ஏற்பாடு பண்ணணும், நாமளும் கொஞ்சம் சாந்தி பண்ணிக்கலாம்னு நினைச்சு ஞாபகமா மறந்துட்டேன்...

கோவி.கண்ணன் : இது சிங்கை நாதன் குடுக்கற அல்வாவை விட பெரிய அல்வாவா இருக்கே...

நர்சிம் : இதைத்தான் நம்ம தல கம்பர் கூட எப்பிடி சொல்லுவார்னா...

ச்சின்னப்பையன், அப்துல்லா : அட்டகாசம், சூப்பர் தல....

ராகவன் : ரிப்பீட்டேய்...

நர்சிம் : ஹலோ.... நான் இன்னும் சொல்லவே இல்லயே...

அப்துல்லா : இல்லண்ணே... நீங்க சொன்னா சரியா இருக்கும்ணே...

நர்சிம் : சரி.... நான் சொல்லவே இல்ல...

பரிசல் : அது விஷயம் என்னன்னா... மிஸ்டர் ஃபோர் ஹெட்ஸ் போய் மிஸ்டர் த்ரீ ஐஸ் கிட்ட "எக்ஸ்க்யூஸ் மீ... உங்க ட்ரங்க் ஹெட்டெட் பையனோட ப்ரான்க்ஸும், வேல் பையனோட வாலும் தாங்க முடியலன்னாராம்... அது மாதிரி...

கு.கு. : வால்பையன் எங்க இங்க வந்தாரு?

அணிமா : அதானே...

பரிசல் : இவுங்க எதயுமே சொல்ல விடமாட்டாங்க போல இருக்கே... படுக்கற வசதியோட அடுத்த பஸ் எப்பன்னு நர்சிம் கிட்ட கேக்கணும்...

வெயிலான் : இது எந்த ஸ்தல புராணம்? சமீபத்துல நீங்க போனது திருச்செங்கோடு... அதுவா?

பழமைபேசி : பேச்சு ஒரு திட்டமில்லாமப் போகுதே... சார்லோட்டுல எங்க குழுவுல நாங்க ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்ப எடுத்துக்கிட்டு பேசுவோம்... அது மாதிரி இந்த சந்திப்பையும்....

அணிமா : இந்த சந்திப்பே திடீர் சந்திப்பு... எப்பிடி திட்டம் போடறது?

ச்சின்னப்பையன் : ஆமாங்க... நம்ம துக்ளக் மகேஷ் திடீர்னு வெண்பா எழுதற மாதிரி....

கு.கு. : நம்ம சந்திப்பு அவ்வளவு மோசமில்லீங்க....

பழமைபேசி : இஃகி !! இஃகி !!

பரிசல் : சரி சரி... ரொம்ப நேரமா மொக்கை போட்டாச்சு... இந்த வருஷம் நம்ம மாதிரி பதிவர்களுக்கு எப்பிடி இருக்கும்னு எல்லாரும் ஒரு கருத்து சொல்லீட்டு கடையைக் கட்டலாம்... ஓக்கேவா? கோவியாரே... நீங்க ஆரம்பிங்க....

கோவி கண்ணன் : இந்த வருஷம் நமக்கெல்லாம் நல்ல காலம்தான். போன 6 மாசத்துல மட்டுமே தமிழ் பதிவர்கள் 2 மடங்கு ஆகியிருக்கலாம்... தினசரி போடற பதிவுகள் 4 மடங்கு... தமிழ்மணத்தை கவனிச்சு சொல்றேன்...

கு.கு. : கேப்டன் கண்ணன் வாழ்க...

ராகவன் : அடாடா.. பேச விடுங்கப்பா....

கோவி கண்ணன் : பதிவுகளோட தரமும் நல்லா இருக்கு. ஆனா சில கருப்பு ஆடுகளும் இடைல பூந்து வேண்டாத வேலைக பண்றதுதான் கோவம் வருது...

பரிசல் : ஆமாங்க... அது வருத்தமான விஷயம். கண்டிக்கத்தக்கது. மோதி மிதித்து விட்டு முகத்தில் உமிழ்ந்து விடலாம்னா... எல்லாம் அனானியா இருக்குக...

நர்சிம் : கோவியார் சொன்னது 100% சரி. ப்ளாக் ரன் பண்ற அளவுக்கு படித்த, விஷயம் தெரிந்தவர்கள் தாழ்ந்தது தனி ஒருவரை அல்லது சிலரை குறிப்பிட்டு தாக்கற மாதிரி எழுதறது, கீழ்த்தரமான பின்னூட்டம் போடறதெல்லாம் ஆரோக்கியமா இல்ல. இதுல யாரும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. சுய கட்டுப்பாடுதான் வழி.

கு.கு. : அப்ப அது பின்னூட்டமா இருக்காது... 'பீ'ன்னூட்டமா இருக்கும்....

பழமைபேசி : இஃகி !! இஃகி !!

பரிசல் : ஜூப்பரா ஜொன்னீங்க தல.... நான் எழுத ஆரம்பிச்ச பிறகுதான் கவனிச்சேன்... பதிவுலக அரசியல் ரொம்பவே இருக்கு....

அப்துல்லா : அரசியல உடுங்கண்ணே... அதுகூட சமாளிச்சுக்கிடலாம்ணே... என் ப்ளாக்கையே கடத்திட்டாங்கண்ணே.... ப்ளாகக் கடத்தறது ஆளக் கடத்தற மாதிரிங்கண்ணே...

பழமைபேசி : ஆமுங்க... உப்பல்லாம் வலைத்திருட்டு நெம்ப சாஸ்தி ஆயிருச்சுங்... இனிமே நம்ம உயில்ல நம்ம வலைத்தளத்தயுமு சேத்துக்கணுமுங்.... அடிக்கடி கடவுச்சொல்ல மாத்தி வெச்சுக்கணும்... அப்பப்ப பதிவுகளை சேமிச்சு வெச்சுக்கணுமுங்... இல்லாட்டி சல்லடங் கிழிஞ்சுருங்...

அணிமா : சல்லடை ஏன் கிழியுது? ஓ... லங்கோடா?

கு.கு. : ஆமா... அமெரிக்க டவுசர் கிழிஞ்ச மாதிரி....

ராகவன் : இது தேறாது.....

ச்சின்னப்பையன் : என் அடுத்த பதிவு "பரிசல்காரன் மென்பொருள் நிபுணரானால்..."

கு.கு. : ஆரம்பிச்சுட்டாருய்யா....

கோவி கண்ணன் : லேட்டாயிருச்சோ?

பரிசல் : (போனில்) யெஸ் மேடம்... இட் ஈஸ் ஆன் தி வே... வில் பி தேர் சூன் மேடம்.. ஐ வில் ஃபாலோ மேடம்... ஓகே மேடம்.... யெஸ் மேடம்...

நர்சிம் : பரிசலுக்கு அடுத்த பஸ் எப்பன்னு பாக்கணும்... மனுசன் இப்பிடி பரபரப்பா இருக்காரே..

ராகவன் : நானும் கிளம்பணும்... வீட்டுல தங்கமணி...

ச்சின்னப்பையன் : தங்ஸா..... ஜூட்.....

பழமைபேசி : நானும் பொட்டி கட்டி, பொட்டி தூக்கி, பொட்டி அடிக்கணும்...

கு.கு. : அப்பீட்ட்டேய்ய்....

அணிமா : என்ன யாரு எப்ப கடத்துனாங்க.... நான் எப்பிடி காங்கோ காட்டுக்குள்ள வந்தேன்?

வெயிலான் : சரி வேலையை கவனிப்போம்...

அப்துல்லா : வரேண்ணே... பிறகு சந்திப்போம்ணே...

பரிசல் : (போனில்) எஸ்... கமிங் மேடம்.....

.....................................................................

யாருக்காவது எதாவது புரிஞ்சுதா? புரிஞ்சா சொல்லுங்க... அவ்வ்வ்வ்வ்... மொக்கைன்னா இதுதாண்டா மொக்கை...

35 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

இஃகிஃகி!

குப்பன்.யாஹூ said...

i THINK U HAVE BECOME BLOG ADDICT. PLEASE TAKE REST OTHERWISE BLOG ADDICTION WILL AFFECT YOUR REAL LIFE RELATIONS, WORK, JOB ETC.


PLEASE TAKE CARE.

pLEASE LEAVE 3 DAYS BLOG AND GO FOR A TRIP (BY TRAIN OR BUS) DO NOT SWITHC ON YOUR LAPTOP FOR 3 DAYS.

KUPPAN_YAHOO

Mahesh said...

நன்றி பழமைபேசி...

நன்றி குப்பன்_யாஹு... நான் அடிக்ட் என்று நினைக்கவில்லை... 3 அல்லது 4 நாளைக்கு ஒருமுறையே பதிவிடுகிறேன்.... இருப்பினும் கருத்துக்கு நன்றி.... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை !!

குடுகுடுப்பை said...

i THINK U HAVE BECOME BLOG ADDICT. PLEASE TAKE REST OTHERWISE BLOG ADDICTION WILL AFFECT YOUR REAL LIFE RELATIONS, WORK, JOB ETC.


PLEASE TAKE CARE.

pLEASE LEAVE 3 DAYS BLOG AND GO FOR A TRIP (BY TRAIN OR BUS) DO NOT SWITHC ON YOUR LAPTOP FOR 3 DAYS.

KUPPAN_YAHOO//

அப்படியே உண்மை.நான் நிறைய கேப் விடப்பழகனும் இனி.ஒரு ஸ்டாக் அடிக்ஸன்லேந்து தப்பிச்சு இதுல மாட்டிக்கிட்டேன்

குடுகுடுப்பை said...

உரையாடல் சூப்பர்.
அப்துல்லாவ கடத்துனாலாவது பரவாயில்லை அவரு பிளாக் கடத்தி என்னாத்துக்கு ஆகப்போகுது.

பழமைபேசி said...

மகேசு அண்ணன் பதிவு போட்டதின் விளைவு, இதுதான் கடைசிப் பின்னூட்டம் அடுத்த பின்னூட்டம் போடும் வரை. கண்டிப்பா, இனி ஒரு வாரத்துக்கு பதிவு கிடையாது, போதுமா? போதுமா??!

கோவி.கண்ணன் said...

:)))

படிக்க படிக்க கண்ணுல தண்ணீர்

//அப்துல்லா : அரசியல உடுங்கண்ணே... அதுகூட சமாளிச்சுக்கிடலாம்ணே... என் ப்ளாக்கையே கடத்திட்டாங்கண்ணே.... ப்ளாகக் கடத்தறது ஆளக் கடத்தற மாதிரிங்கண்ணே...//

அவரு சீரியஸாக ஒவ்வொருவருக்காக போன் போட்டு பொலம்புறார், உங்களுக்கு ஜோக்கா போய்விட்டதா ?

பழமை பேசி பஞ்ச் டயலாக்கெல்லாம் சூப்பர்.

இஃகி இஃகி

நசரேயன் said...

கலக்கல் மகேஷ், சிரிச்சி முடியலை, இன்னும் நெறைய அவுத்து விடுங்க, இந்த மாதிரி பதிவுகளை தான்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... சூப்பர்...

நல்லா எழுதியிருக்கீஙக...

அடுத்த வாரம் தான் இனி எல்லா பதிவுக்கும் போய், பின்னூட்டம் போட ஆரம்பிக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

// Blogger பழமைபேசி said...

மகேசு அண்ணன் பதிவு போட்டதின் விளைவு, இதுதான் கடைசிப் பின்னூட்டம் அடுத்த பின்னூட்டம் போடும் வரை. கண்டிப்பா, இனி ஒரு வாரத்துக்கு பதிவு கிடையாது, போதுமா? போதுமா??! //

அவசரத்தில...(இல்ல கோபத்தில) இந்த பின்னூட்டத்தை என்னுடைய பதிவில் போட்டு விட்டீர்கள்..

சி தயாளன் said...

//அப்ப அது பின்னூட்டமா இருக்காது... 'பீ'ன்னூட்டமா இருக்கும்..//

அசத்தல் மகேஷ்....கலக்கோ கலக்கல்....

:-)))))

பழமைபேசி said...

அய்ய, உங்க மேல எனக்கு என்ன இருக்கு? அந்த பதிவு போதை பத்தின கருத்து....நானும் அத மாதிரியோன்னு, நெஞ்சுல ஒரு கீறல்...அதான்...இஃகிஃகி!!

Mahesh said...

மணியாரே... அவ்வளவுதானே சரி சரி.. ராகவன் சார் வேற அங்க போடறது இங்கன்னு சொல்ல எதோ கொழம்பிட்டேன்....

ஆனா குப்பன் சொல்ற மாதிரி நான் உங்களைப் பத்தி நினைச்சதுண்டு... எப்பிடி இவருக்கு மட்டும் இவ்வளவு நேரம் கிடைக்குதுன்னு... தமிழ்மணம் போனா நீங்க வாரத்துக்கு 150+ பின்னூட்டம் போடறது தெரிஞ்சுது... அசந்துட்டேன்... நிஜமாவே ரொம்ப நேரம் செலவிடுறீங்கன்னா... குறைச்சுக்கங்க.

Mahesh said...

நன்றி கோவி.கண்ணன்... (ஒண்ணும் தப்ப நினைச்சுக்கிடலையே...)

நன்றி கு.கு.....

நன்றி நசரேயன்... அவுத்து உட்ருவோம்.. பதிவுகளைத்தான்...

நன்றி ராகவன்... வேலைப்பளு கொறஞ்சதும் ஆரம்பிங்க...

நன்றி டொன் லீ...

எம்.எம்.அப்துல்லா said...

//யாருக்காவது எதாவது புரிஞ்சுதா? புரிஞ்சா சொல்லுங்க... அவ்வ்வ்வ்வ்... மொக்கைன்னா இதுதாண்டா மொக்கை...
//

அண்ணே நாங்க சொல்லவேண்டியதையும் நீங்களே சொல்லிப்புட்டீங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

இருங்க முதல்ல இநதப் பதிவுக்கு மார்க்கெட்டிங் ஸ்டார்ட் பண்ணிட்டு அப்புறமா வந்து மிச்ச பின்னூட்டத்த போடுறேன் :)

ஆயில்யன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
இருங்க முதல்ல இநதப் பதிவுக்கு மார்க்கெட்டிங் ஸ்டார்ட் பண்ணிட்டு அப்புறமா வந்து மிச்ச பின்னூட்டத்த போடுறேன் :)
//

உள்ளேன் அய்யா!

ச்சே

வந்தேன் அய்யா! :)))

ஆயில்யன் said...

//நர்சிம் : ஹலோ.... நான் இன்னும் சொல்லவே இல்லயே...

அப்துல்லா : இல்லண்ணே... நீங்க சொன்னா சரியா இருக்கும்ணே...//

:))))))))))))

narsim said...

குசும்பன் லீவுல போய்ட்டாரேனு கொஞ்சம் நிம்மதியா இருந்தா.. இப்பிடி ஆளாளுக்கு கிளம்பிறீங்களேயா.. என்னத்த சொல்ல..
அலுவலக டென்ஷன் மறக்கடிக்கச்செய்த பதிவு தல..

ஒரு வேண்டுகோள்: மாதக் கடைசில இப்பிடி ரெண்டு பதிவு போட்டீங்கன்ன..டென்ஷன் போயேபோச்.. கலக்கல் மகேஷ்..

கிரி said...

ஹா ஹா ஹா நடத்துங்க :-))

Mahesh said...

நன்றி அப்துல்லா அண்ணே...

நன்றி ஆயில்யன்...

நன்றி நர்சிம்...

நன்றி கிரி... ஹி ஹிஹி ..

வால்பையன் said...

//வால்பையன் எங்க இங்க வந்தாரு?//

அதானே!
சரக்கே இல்லாம ஒரு கூட்டம் அதுக்கு நான் வேற வரணுமா?

சின்னபசங்க கூடெல்லாம் சேரக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க!

Anonymous said...

// யெஸ் மேடம்... இட் ஈஸ் ஆன் தி வே... வில் பி தேர் சூன் மேடம்.. ஐ வில் ஃபாலோ மேடம்... ஓகே மேடம்.... யெஸ் மேடம்... //

இது சூப்பர் :)))))))

தேவன் மாயம் said...

உரையாடல்
சூப்பர்...

தேவா......

Kumky said...

என் வழி தனி வழி ந்னு போய்க்கிட்டிருந்தீங்க...இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டா மாதிரி இருக்கே....ஜூப்பரு...

Mahesh said...

நன்றி வால்பையன்... அதுதான்... கரெக்டா புடிச்சுட்டீங்க... சரக்கில்லாத சந்திப்புன்னுதான் உங்களை இழுக்கல...

நன்றி தேவன்மயம்...

நன்றி வெயிலான்... உங்களை வலுக்கட்டாயமா இழுக்க வேன்டியிருக்கு பாருங்க...

நன்றி கும்க்கி... இது ஒரு மாதிரி நேயர் விருப்பம்னு வெச்சுக்கங்களேன்... பரிசல்தான் இதுமாதிரி ஒண்ணு டிரை பண்ணுங்களேன்னு தூபம் போட்டாரு.. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பரிசலுக்கே !! :))))

சென்ஷி said...

kalakkal :-))

சின்னப் பையன் said...

அண்ணே.. லேட்டா வந்ததுக்கு மன்னிச்சிடுங்க.. நான் என் கடையிலேயே யாருக்கும் பதில் சொல்லமுடியாமே பிஸியா இருக்கேன்... :-(((

சின்னப் பையன் said...

'பிரபல' பதிவர்கள்லே என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி... :-)))

சின்னப் பையன் said...

//வெயிலான் : அடடா.. அவசரத்துல டீ ஷர்ட் கொண்டு வர மறந்துட்டேன்... எல்லாரும் அட்ரஸ் குடுங்க... கூரியர்ல அனுப்பிடறேன்.//

அவ்வ். இன்னும் எனக்கு டீ ஷர்ட் வந்து சேரலை... :-(((

சின்னப் பையன் said...

// பழமைபேசி said...
மகேசு அண்ணன் பதிவு போட்டதின் விளைவு, இதுதான் கடைசிப் பின்னூட்டம் அடுத்த பின்னூட்டம் போடும் வரை. கண்டிப்பா, இனி ஒரு வாரத்துக்கு பதிவு கிடையாது, போதுமா? போதுமா??!
//

அப்பாடா...

அவ்வ்வ்.....

:-)))))

Mahesh said...

வாங்க ச்சின்னப்பையன்... நீங்க பிரபலந்தாண்ணே... அனுமார் பலம் அவருக்கே தெரியாதாம்.. பெரியவங்க சொல்றாங்க. :)

Thamira said...

narsim said...
குசும்பன் லீவுல போய்ட்டாரேனு கொஞ்சம் நிம்மதியா இருந்தா.. இப்பிடி ஆளாளுக்கு கிளம்பிறீங்களேயா.. என்னத்த சொல்ல..//

ரிப்பீட்டேய்..

ர‌சித்துச்சிரித்தேன். தொட‌ர்க‌..

வெண்பூ said...

செம நக்கல் மஹேஷ்.. நல்லா சிரிச்சேன்..

Mahesh said...

நன்றி வெண்பூ... அப்பப்ப காணாமப் போயிடறீங்க :))