Tuesday, January 13, 2009

சாதிகள் உள்ளதடி பாப்பா...


வால்பையனின் "சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!" என்ற பதிவை ஒட்டிய பதிவு இது.

ஆமாங்க. சாதி தேவையில்ல, அது ஒழிக்கப்பட வேண்டிய ஒண்ணுதாங்கறதுல ரெண்டு கருத்துக்களுக்கு இடமேயில்லை. அதுனால நமக்கு இது வரைக்கும் கிடைச்ச நன்மை தீமைகளைப் பட்டியல் போட்டா தீமைப் பட்டியலுக்கு உலகத்துல உள்ள அத்தனை காய்தங்கள்ளயும் எழுதினாலும் தீராது. ஆனா நிதர்சனம் என்னன்னா அது ஒழியாது, அதை ஒழிக்கவும் முடியாது.

மனுசன் அங்கங்க குகைகளுக்குள்ள இருந்த காலத்துலயும், பெறகு சின்னச் சின்னக் கூட்டமா குழுக்களா வாழ்ந்தபோதும், கொஞ்சம் பெரிய கூட்டமா குடி(clan)களா வாழ்ந்தபோதும் தான் இன்ன இடத்தை, இன்ன குழுவை, இன்ன குடியைச் சேந்தவன், இன்ன குறியீட்டை(totem) கும்புடறவன்னு அடையாளப் படுத்திக்கறதுக்காக ஒரு பேர் வெச்சுக்கப் போக, அது சாதிங்கற தீமை(evil)யா மாறி மனுசன பாடாப் படுத்துது. அது வெறும் அடையாளமா மட்டுமே பார்க்கப் பட்ட வரைக்கும் அது பிரச்னையா இல்லை. அப்பறமா தொழில் சார்ந்து, இடம் சார்ந்து, மொழி சார்ந்துன்னு பல விதமா அடையாளங்கள் உருவாக உருவாக, ஒரளவு பொருளாதார சுதந்திரம் உள்ளவன்-இல்லாதவன், யார் யாரை சார்ந்து இருக்காங்க (உ.ம்: விக்கறவன் - வாங்கறவன்) அப்பிடிங்கற பேதங்கள் கொஞ்சம் கொஞ்சமா முத்தி உசந்தவன் - தாழ்ந்தவன்னு போய், அப்பிடியே அடையாளத்துக்காக அவன் இன்ன இனத்தவன், நான் இன்ன இனத்தவன்னு வளந்து, அவனவனோட தனித்துவத்தை நிலை நாட்டவோ அல்லது ஈகோவுக்காகவோ அடுத்தவனை மட்டந் தட்ட ஆரம்பிச்சு அது இரட்டைக்குவளை வரைக்கும் வந்துருக்கு.

நதிக்கரை நாகரீகம் ஆரம்பிச்சபோதே, காட்டுக்குள்ள இருந்தவனும், மலைமேல வாழ்ந்தவனும் மட்டமாப் போயிட்டாங்க. ஆனா அப்ப பொதுவுடைமை சித்தாந்தமெல்லாம் இல்லாததால, கொஞ்சம் லேட்டா நாகரீகத்துக்கு அறிமுகமானவன் முன்னாலயே அங்க இருந்தவனை விட தாழ்ந்தவன் ஆயிட்டான்.

அப்பறம் வர்ணாசிரமம்கற கட்டுக்கதைகள வேற உண்டாக்கி, எல்லாரும் அது என்னன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே அதுதான் நிலையான கோட்பாடுன்னு ஆக்கிட்டாங்க. பிரம்மனோட கால், தலை, இடுப்புன்னெல்லாம் கட்டம் போட்டு "இது எங்க ஏரியா... உள்ள வராத"ன்னு சொன்னது எப்பிடி? இதைச் சொன்னவன் கண்டிப்பா ஞானியா இருக்க முடியாது. ஏன்னா, "பிரம்மம்"ங்கறது அருவம். அது நம்முடைய அகம். ஞானம். புரிதல். உணர்வு. Conscience. அதுக்கு கால் ஏது தலை ஏது?

மனுசனாப் பொறந்த ஒவ்வொருத்தனும் அவன் பிறந்த இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு குழுவுல இருப்பான், ஏதாவது ஒரு தொழில் செய்வான். சிலர் வசதி வாய்ப்புனால படிக்கலாம், வித்தைக கத்துக்கலாம், வீரமா இருக்கலாம். இதுல பல விஷயங்கள் அறிவியல்பூர்வமாப் பாத்தா, இதெல்லாம் அவனவன் பிறக்கும்போதே ஜீன்கள்ல பதிவானது. ஒற்றை செல் அமீபாவுல இருந்து ஹோமோசேபியன் வரைக்குமான பரிணாம வளர்ச்சி இயற்கையும் ஜீன்களும் சேந்து நடத்தற சித்து விளையாட்டு. "வீரம் எங்க ரத்தத்துலயே இருக்கு, வியாபார நேக் எல்லாம் எனக்குள்ள ஊறியிருக்கு"ன்னா, ஆமா ஊறித்தான் இருக்கு. அதை முதலா வெச்சு பொழச்சுக்கலாம். இதுல நான் ஒசத்தி, நீ கீழன்னு சொல்றது எப்படின்னு புரியல.

எத வெச்சு இந்த சமுதாய அடுக்குகள (social strata) உருவாக்குனாங்க? மறுபடி வர்ணாசிரம முறைய வெச்சுன்னா, அத விட முட்டாள்தனமுங் கிடையாது, கயமைத்தனமுங் கிடையாது. மனுசனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் ஒரு அறிவுங்கறோம். அப்ப மனுசனுகளுக்குள்ளயே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

இன்னிக்கு சாதி சாதிங்கறவங்கள்லாம், உடம்புக்கு சொகமில்லாமப் போச்சுன்னா டாக்டர் என்ன சாதின்னு பாக்கறாங்களா? ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்தணும்னா ரத்த வங்கில இருந்து வர ரத்தம் தன் குரூப்பான்னு பாப்பாங்களா அல்லது தன் சாதி ரத்தமா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்களா? அப்பிடி ஒருவேளை தாழ்ந்த சாதின்னு அவங்க நினைக்கற ரத்தம் வந்துடுச்சுன்னா, அவங்க சாதி மாறிடுமா? சென்னைல இருக்கற வில்லிவாக்கம் ஒரு 20 வருஷம் முன்னாடி "கிட்னிவாக்கம்"ங்கற பேர்ல ரொம்ப ஃபேமஸ். அங்க இருக்கற குடிசைகள்ல இருந்த ஒவ்வொருத்தனும்/தியும் ஒரு கிட்னிய வித்துருப்பாங்க. அதெல்லாம் யார் யாருக்கு பொருத்தினாங்களோ அவங்கள்லாம் என்ன சாதி? அப்ப.... உயிர் பிழைக்க சாதி தேவையில்லை. ஆனா ஈகோவுக்கு தீனி போட சாதி தேவைன்னு ஆகுதா?

வால்பையன்.... நாம என்னதான் சொன்னாலும் "சாதிதான் என் அடையாளம்"ன்னு நினைக்கறவங்க இருக்கற வரைக்கும் அத ஒழிக்கவே முடியாது. சாதி கிடையாதுன்னு சொல்லிட்டு சாதிச் சங்கங்களுக்கு ஒப்புதல் குடுத்து பதிவும் பண்ற அரசாங்கங்களும், சுயநலம் புடிச்ச அரசியல்வாதிகளும், அவங்க சொல்றதைக் கேடுக்கிட்டு அடிச்சுக்க ரெடியா இருக்கற அடுத்த தலைமுறை இருக்கற வரைக்கும்..... அது ஒழியாது, அழியாதுங்கறது நிதர்சனமான வருத்தம். அது ஒழியற வரைக்கும் ஓய மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. உங்க கனவு நனவாக வாழ்த்துகள். அப்பிடி ஆச்சுன்னா, ராமானுசர், பாரதியார், பெரியார், அம்பேத்கர் வரிசைல நீங்களும் வரலாம்.


31 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வால்பையன் said...

ஓரளவு வசதியுள்ள தலித் தனது மகன் விரும்புகிறாள் என்ற காரணதிற்க்காக ஒரு உயர்சாதி பெண்ணை கேட்டு செல்கிறார்,

என்ன நடந்திருக்கும்!

நாலு காசு வந்துட்டா நீ எங்கூட சரிக்கு சமமா உட்கார்ந்து பேசுவியோ! இதுல என் வீடேறி வந்து பொண்ணு கேட்க அருவாள எடுத்து சீவறதுகுள்ள ஒழுங்க ஓடிப்போயிரு,

இது தானே நடக்கும், நடக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்க இடஒதுக்கீடு தேவையில்லை என்று நான் எங்கேயும் சொல்லவில்லை!

அரசே அவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்வதை தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை,

உயர்சாதியினரால் புறந்தள்ளப்படவர்கள் மீண்டும் சக மனிதனாக் அனைவராலும் மதிக்கபட வேண்டும், அதற்கு சாதி ஒழிய வேண்டும்

//ராமானுசர், பாரதியார், பெரியார், அம்பேத்கர் வரிசைல நீங்களும் வரலாம்.//

அண்ணே இதெல்லாம் பேராசை!
எனக்கு முன்னரே நிறைய பேர் சாதியை ஒழிக்க பாடுபட்டிருக்கிறார்கள்.

Mahesh said...

நன்றி வால்பையன்...

//
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்க இடஒதுக்கீடு தேவையில்லை என்று நான் எங்கேயும் சொல்லவில்லை!

அரசே அவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்வதை தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை,//

ரொம்ப சரி.... வழிமொழிகிறேன்.

Mahesh said...

அரசாங்கங்களோட ஓட்டு வங்கி - சாதி. ஒரு காரணம் போதும் அது அழியாம இருக்கறதுக்கு.

சி தயாளன் said...

பொங்கல் அன்று பொருத்தமான தலைப்பு...

மக்கள் மனத்தில் மாற்றங்கள் தொடஙகவேண்டும்

Mahesh said...

நன்றி டொன் லீ.... சாதி இந்தியாவின் சாபக்கேடு :(

ஜோசப் பால்ராஜ் said...

சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பதிவிட்ட விதம் மிக அருமை.

வாழ்த்துக்கள்.

RAMASUBRAMANIA SHARMA said...

"Nalla Pathivu"....

Mahesh said...

நன்றி RAMASUBRAMANIA SHARMA...

நசரேயன் said...

நல்ல அழுத்தமான பதிவு, சிந்திக்க படவேண்டிய விஷயம்.
பொங்கல் வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

குடுகுடுப்பை said...

அரசே அவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்வதை தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை,//

அரசு அவர்களை உயர்ந்தவர்கள் இன்னைக்கு சட்டம் போட்டாச்சு. எல்லாம் சரியா போயிடுமா?
சவலைப்பிள்ளைக்கி தேவை ஊட்டம், அதுக்கான காரணத்த சொல்லிதான் ஊட்டம் கொடுக்க முடியும்.

சாதிகள் ஒழிய முதலில் அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும். அதற்கு ஒரு பல முனை திட்டம் வேண்டும்.

குடுகுடுப்பை said...

நல்லா எழுதி இருக்கீங்க மகேஷ், நானும் விரைவில் ஒரு பதிவு போடறேன்.

Anonymous said...

Migavum nidharsanamana padhivu...oru point kooda ennal marukkamudiyavillai...

Mahesh said...

நன்றி ஜோசஃப், நசரேயன், sg....

Mahesh said...

நன்றி பழமைபேசி... என்னாச்சு வாழ்த்துகளோட போயிட்டிங்க... மேலுக்கு சொகமில்லையா?

நன்றி குடுகுடுப்பை... உங்க கருத்தை வழிமொழிகிறேன்....

ஷாஜி said...

//பிரம்மனோட கால், தலை, இடுப்புன்னெல்லாம் கட்டம் போட்டு "இது எங்க ஏரியா... உள்ள வராத"ன்னு சொன்னது எப்பிடி?//

//அப்ப.... உயிர் பிழைக்க சாதி தேவையில்லை. ஆனா ஈகோவுக்கு தீனி போட சாதி தேவைன்னு ஆகுதா?//

---செம நச்சு சாரே !!!

வெண்பூ said...

உங்கள் கருத்துகளுடன் 100% ஒத்துப் போகிறேன் மஹேஷ்...

www.narsim.in said...

மிக ஆழ்ந்த அலசல் மகேஷ்.. நல்ல பதிவு.. பொங்கல் வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையா எழுதியிருக்கீங்க மகேஷ்.. ஆனால் என்று தான் இந்த சாதி ஒழியுமோ தெரியவில்லை..

சாதி சங்கங்கள், சாதியை சார்ந்த அரசியில் உள்ளவரை இது ஒழியுமா என்றும் புரியவில்லை..

Anonymous said...

//மனுசனாப் பொறந்த ஒவ்வொருத்தனும் அவன் பிறந்த இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு குழுவுல இருப்பான், ஏதாவது ஒரு தொழில் செய்வான். சிலர் வசதி வாய்ப்புனால படிக்கலாம், வித்தைக கத்துக்கலாம், வீரமா இருக்கலாம். இதுல பல விஷயங்கள் அறிவியல்பூர்வமாப் பாத்தா, இதெல்லாம் அவனவன் பிறக்கும்போதே ஜீன்கள்ல பதிவானது. ஒற்றை செல் அமீபாவுல இருந்து ஹோமோசேபியன் வரைக்குமான பரிணாம வளர்ச்சி இயற்கையும் ஜீன்களும் சேந்து நடத்தற சித்து விளையாட்டு. "வீரம் எங்க ரத்தத்துலயே இருக்கு, வியாபார நேக் எல்லாம் எனக்குள்ள ஊறியிருக்கு"ன்னா, ஆமா ஊறித்தான் இருக்கு. அதை முதலா வெச்சு பொழச்சுக்கலாம். இதுல நான் ஒசத்தி, நீ கீழன்னு சொல்றது எப்படின்னு புரியல.//

This is also an old fashioned, and outmoded talk.

Genes get commuted through generations of getting married outside their blood line, but within caste group. Lets leave aside the intercaste marriages for a moment.

Take for e.g., the Tamil Brahmins. One cant say that the blood running through all members of this caste, carries the same genes.

In the ancient past, caste divisions were strictly enforced. There was only an endogamous marriage - within the same group.

Population increased and centuries and even millennia passed. The small group of people has expanded. The TB living in a far south, say, a village in Tirunelveli district does not have the same blood line with his counterpart living in a vilage in Villupuram district. Even if one says they married within the group, the blood line is not kept tightly as in the hoary past.

In simple words, the so-called caste group today, among TBs, as an example, is just their inclination to come together politically.

Therefore, all sharing the same genes and same inclination to book-reading is an idle fantasy. This is demonstarated in their different ways of life: in clerical, viatheegam, military, or any job, except the menail jobs taken by the dalits.

Same story gets repeated in almost all caste groups in TN.

So, the theory that people are endowed with genes as caste groups is false today. But, genes do exist and do give certain inclination, but indivially, or in a family line; not in caste groups.

This is amply demonstrated also. For e.g even in a Brahmin family of TN, of five siblings, one becomes a doctor, another an engineer, another a literateur, a journalist, an employee in Addision or TVS etc. However, if you find similarity in choices among them, they are brainwashed to believe that they are fit for certain vocations only, not out of genes.

Lets therefore, avoid the word, genes, in the context of Caste groups.

Anonymous said...

What you wrote does not make a ripple in religion.

Much as you may cavil at the religious conclusion that people of the four varnas have descended from the four parts of the God, and the fifth, the dalits, not at all, and much as you call it a pathetic fallacy, or a social and political conspiracy, yet, it still stands there.

It is independent of any political act of any politician today. Politicians or you or your vaalpayan, cant do anything about it.

Since dalits are born not out of God, they dont deserve to enter any place associated with God, like Temples. Only the four varnas, and there, too, the fourth, Sudras excepting, can have the religious sanction to worship God by seeing Him direct in a temple.

A dalit by virtue of his illegitimate birth on earth loses the right to live beside others. He is a being or a development between the Human and Animal. He may have all features of a human, yet he cant be fully human. All humans are noble creations of God, except the dalits, who are mere creations but in a different way, that is, they have to accept the left-overs and do all jobs to make the place clean and better for others.

Thus, he is a beast of burden on earth. He is tolerated still because he can be useful to make the place clean and dispose of carcasses or dead bodies of animals and other things.

Dear Mahesh, you are almost brimming with anger over the above paras and will censor it.

But stop. You wont censor me if you come to know that this is believed even today in India in States like Orissa, Rajasthan, UP and Bihar.

If you dont accept me, all that you need to do is cut the following url and read it and come out of your sleep:

http://timesofindia.indiatimes.com/India/Priests_purify_Orissa_temple_after_Dalit_ministers_visit/rssarticleshow/3980845.cms

From today TOI

Mahesh said...

Dear Mr Anonymous,

There is absolutely no need for me to censor your comments. On the contrary, it only gives me an opportunity to show the world how "still" some refuse to look a fellow human being as a human with a falsified thinking him/herself is much different than him by birth. I can only pity them.

And to say this, I am wondering why one has to remain "anonymous".

Caste, like god, every one has the right either to deny it or cling to it.

கோவி.கண்ணன் said...

//அங்க இருக்கற குடிசைகள்ல இருந்த ஒவ்வொருத்தனும்/தியும் ஒரு கிட்னிய வித்துருப்பாங்க. அதெல்லாம் யார் யாருக்கு பொருத்தினாங்களோ அவங்கள்லாம் என்ன சாதி? அப்ப.... உயிர் பிழைக்க சாதி தேவையில்லை. ஆனா ஈகோவுக்கு தீனி போட சாதி தேவைன்னு ஆகுதா?//

கலக்கலோ...கலக்கல் !

Mahesh said...

நன்றி ராகவன்...

நன்றி ஜோசஃப்....

நன்றி வெண்பூ...

நன்றி நர்சிம்....

நன்றி ஷாஜி...

நன்றி கோவி கண்ணன்...

Thamira said...

தரமான கட்டுரை மகேஷ்.! வாழ்த்துகள்.!

Mahesh said...

நன்றி தாமிரா.... லீவு முடிஞ்சு வந்து எல்லாத்தையும் பொறுமையாப் படிச்சு பின்னூட்டம் போடறதுக்கு நன்றி....

புதுகை.அப்துல்லா said...

அண்ணே அன்று பறை அறைந்து மக்களுக்கு சேதி சொன்னோர் பறையர் என்று அழைக்கப்பட்டனர். அப்படி பார்த்தா இன்னைக்கு ஷோபனா ரவி, ஃபாத்திமா பாபு இவங்கல்லாம் பறையர். காலணி செய்த இனம் சக்கிலியர் என்று அழைக்கப்பட்டனர். அப்படின்னா இன்னைக்கு பாட்டா செருப்பு கம்பெனி முதலாளி, அடிடாஸ் ஷீ கம்பெனி முதலாளி இவங்கல்லாம் சக்கிலியர். குமாஸ்தா வேலை, கணக்கு பிள்ளை வேலை பார்த்தவங்க பிள்ளைமார். அப்பிடின்னா நீங்களும்,நானும் பிள்ளைமார். அன்னைக்கு படைவீரர்களா இருந்தவங்க முக்குலத்தோர்.அப்படின்னா விமானப்படை வீரரா வேலை பாக்குற உங்க அண்ணன் தேவர்(அட உங்க வீட்லயே இன்னைக்கு 2 சாதி வந்துருச்சே). யாரவது சாதியப் பத்தி பேசுனா எனக்கு பெரிய காமெடியா இருக்குண்ணே.

Mahesh said...

நன்றி அப்துல்லா அண்ணே... பாருங்க 'சாதி வேண்டாம்'னு நாம தைரியமா சொல்றோம்... அன்ன சாதி இருக்குன் சொல்றவங்க தன்னோட மூஞ்சிய வேண்டாம்.. பேரைக் கூட சொல்ல பயப்படுறாங்க. இதுவே வெற்றிதான்ணே,.

Anonymous said...

கொஞ்சம் சென்சிட்டிவான விசயம்ங்கிறதாலதான் வால் பதிவுல நான் ஒன்னும் சொல்லல.

நம்ம உள்மனசுல அது நல்லாப் பதிஞ்சுருச்சு. உதாரணத்துக்கு தேவர்னு பெருமையாப் பேசுரவங்க கூட இட ஒடுக்கீடுக்காக மறவர்னு MBC சான்றிதழ் வாங்குறாங்க.

இது மாதிரித்தான் எல்லா ஜாதியிலயும் நடக்குது.

20 வருடங்களுக்கு முன் நான் பர்த்ததைவிட அதிகம் ஜாதிச் சங்கங்கள் இப்போ இருக்கு. இதுதான் வளர்ச்சியா? ஜாதித்தலைவர்னு ஒருத்தர் 80கள்ல இவ்வளவு பிரபலமா இருந்ததில்லை. எல்லாத் தன்னலமற்ற தலைவர்களையும் ஏதோ ஒரு ஜாதியில அடையாளப் படுத்த ஆரம்பிச்சாச்சு (காமராஜ் நாடார், வ உ சி பிள்ளை இப்படி)

படிச்சவங்க அதிகமில்லத காலத்துல ஒரு குழுவா தன்னை அடையாளப் படுத்த உதவுன ஜாதி, இப்ப அதிகம் படித்தவர்கள் மத்தியில பெருமையாப் பேசுற விசயமா அகியிருச்சு.

Mahesh said...

நன்றி வேலன் அண்ணாச்சி... சாதிங்கறது ஒரு கொடுமைன்னு மனசாட்சிக்கு தெரிஞ்சாலும் இன்னும் கூட படிச்சவங்க (இந்தப் பதிவுலயே அனானி மாதிரி) அதைக் கட்டிக்கிடு அழறாங்க... அதுக்கு நியாயமும் சொல்றாங்கங்கறபோது ... என்னத்தைச் சொல்ல?

கிரி said...

சாதியை இந்த காலத்துல ஒழிக்க முடியாது ..

அரசியல் கட்சிங்க தங்கள் சுயநலத்திற்க்காக இதை வளர்த்து கொண்டே இருப்பாங்க..

கசப்பான உண்மை தான்.. ஆனா என்ன பண்ணுறது..