Saturday, January 3, 2009

புதிய ஆண்டு : புதிய பதிவு


புத்தாண்டே வருக புத்துணர்ச்சி தருக
பல்வளமும் பெருக நல்முயற்சி தருக !!
எத்திக்கும் சிறக்க அத்தனையும் கற்க
சொல்வளமும் பெருக நல்நினைவும் தருக !!

நீர்வளமும் பெருக நிலவளமும் சிறக்க
மண்மணமும் நிலைக்க நல்வரமும் தருக !!
போரெலாம் நிற்க பாரெலாம் வளர
நின் தாளை வணங்க நன்மனமும் தருக !!


புத்தாண்டுல புது முயற்சியா ஒரு பாட்டெழுதலாம்னு...ஹி ஹி ஹிஹி.. போன வருஷம் பதிய ஆரம்பிச்சு காதுகுத்துல மொய் எழுதுன மாதிரி 51 பதிவு. இந்த வருஷம் அதுமாதிரி உங்களையெல்லாம் சோதிக்கப்படாதுன்னு உறுதி எடுத்துக்கலாம்னா, புத்தாண்டு உறுதி எடுத்துக்கறதில்லைன்னு 1990ல உறுதி எடுத்தது ஞாபகம் வருது. அதனால இந்த வருஷம் தடாலடியா ஒரு பாட்டோட ஆரம்பிச்சாச்சு. பாட்டைப் படிச்சதுமே தோணியிருக்குமே... வருஷ ஆரம்பமே இந்தப்பாடுன்னா, வருஷம் பூரா படப்போற பாடு எப்பிடி இருக்குமோன்னு... அது எனக்கெப்பிடித் தெரியும்? இனிமே எழுதற எம்பாடு படிக்கற உங்கபாடு.

சரி... புத்தாண்டு எப்பிடி இருக்கப் போகுது, தலைவர்கள் எண்ணம் என்னன்னு ஒரு ரவுண்டு வந்தேன்.

ஒபாமா : மாறுங்க... நம்புங்க... நம்மால முடியும்... எல்லாம் மாறும். முதல்ல நான் வீட்டை சிக்காகோல இருந்து வாஷிங்டனுக்கு மாத்தணும். என் புள்ளைங்களோட பல்ளிக்கூடத்தை மாத்தணும். ப்ரெசிடெண்ட் ரூம் செவுரு பெயிண்டை மாத்தணும். பாத்துக்கிட்டே இருங்க... அம்புட்டும் மாறப் போகுது... பாருங்க பேட்டின்னதும், குளிச்சுட்டு துண்டோடவே வந்துட்டேன். முதல்ல போய் துணி மாத்தணும்.

டோனி ப்ளேய்ர் : ஓ... வருஷம் பொறந்துடுச்சா? புஷ் சொல்லவேயில்ல....

பான் கி மூன் : அட போங்க... ஏண்டா புது வருஷம் பொறக்குதுன்னு இருக்கு. உடனே வந்துடறாங்க... இந்தப் போர் நிக்குமா, அந்தப் போர் நின்னுடுமான்னு. ஒரே அக்கப்போரா இருக்கு. ஆஃப்டர் ஆல் நான் ஒரு சாதாரண ஐ.நா. சபைத் தலைவர். நான் என்ன பண்ண முடியும்?அட... என் பேச்சை விடுங்க... முதல்ல என் பேர் எத்தனை பேருக்கு தெரியும்?

மன் மோகன் சிங் : மேடம் கிட்டதான் கேக்கணும். என்னயும் ஒரு ஆளுன்னு நினைச்சு கேக்க வந்தீங்களே... ரொம்ப நன்றி.

சோனியா : இஸ் தேஷ் கோ சிர்ஃப் காங்ரஸ் பசா சக்தா ஹை... ராஹுல் ..... ப்ரியங்கா.... ஆங்... என்ன கேட்டிங்க?

கருணாநிதி : சென்ற வருடம் முழுதும் பொறுமல்களும் குமுறல்களும் நிலவினாலும், வருட இறுதியில் கண்கள் பனித்தன; இதயம் இனித்தது. கழகத்தின் கடைசி கண்மணி, என் கண்மணி கனிமொழி வரையிலும் ஏற்றம் கண்டனர். புத்தாண்டில் பல புது"வரவு"களை எதிர்நோக்கியிருக்கிறது கழகம். ஒ,,, நீங்கள் கேட்டது நாட்டைப் பற்றியா? அம்மையாரின் அவதூறு அறிக்கைகளிலும், அலட்டல் அரசியலிலும், ஆணவ அதிகாரத்திலும் சிக்குண்டு சீரழிந்து கிடக்கிறது. கனவில் வந்த காமராசரும், அண்ணாவும் அமைதி காத்திடும் பண்பையே வலியுறுத்தும்போது நான் என்ன செய்வேன்? வரியா.. வரியா... ரெண்டு பேரும் சேந்து சண்டை போடலாம்....

ஜெயலலிதா : போனவருடம் தமிழகத்தின் இருண்ட வருடம். இந்த வருடம் கற்காலத்துக்கே போய் விடும் போல உள்ளது. ஆளுங்கட்சியின் அராஜகம் அதிகமாகப் போகிறது. மக்கள் அல்லல் படப் போகிறார்கள். சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகப் போகிறார்கள். நான் கொடநாடுக்கு போகிறேன். நீங்க எல்லாரும் இப்ப வீட்டுக்குப் போங்க.

விஜயகாந்த் : ஏய்ய்... இங்க பாரு... போன வருசத்துக்கு மொத்தம் 366 நாள். இந்த வருஷத்துக்கு 365 நாள்தான். ஒரு நாளைக் குறைச்சது யாரு? உங்களுக்கே தெரியும். அதைப் போராடி வாங்கற வரைக்கும் ஓயமாட்டான் இந்த விஜயகாந்த். நான் ஆட்சிக்கு வந்தா ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தை அவங்கவங்க கைலயே கொண்டு வந்து குடுக்க ஏற்பாடு செய்வேன். இது புரட்சி தலைவர் மேல சத்தியம்.

சுப்பிரமணியம் சாமி : தோ... வந்துட்டேன். புது வருஷத்துல இந்தியாதான் வல்லரசு ஆகப் போறது. இட்லிக் கடையைத் தாக்கப் போறதா ஜர்தாரி ரகசியமாப் பேசின CD எங்கிட்ட இருக்கு. சோனியாவும், அத்வானியும் என்னோட கூட்டணி வெச்சுக்க ரகசியமா பேசிண்டுருக்கா. என்னையே பிரதமர் பதவிக்கும் சிபார்சு பண்றா. நான் பிரதமர்... இந்தியா வல்லரசு.... ஒபாமா கூட நேத்து பேசிட்டேன்... பின் லேடன் LIC பில்டிங்கை ப்ளேனை வெச்சு இடிக்க போறான்.... கர்சாய் கிட்ட பேசி லேடன் கிட்ட இடிக்க வேண்டாம்னு சொல்ல சொல்லீட்டேன். .....

ரஜினி காந்த் : போன வருஷம்...ம்ம்ம்... 2008.... இந்த வருஷம்...ஹஹ் ஹா ஹாஹ் ஹா... 2009... எப்டி..எப்டி..இருக்கும்? எந்திரன் வரட்டும்.... நாம ஒக்காந்து பேசுவோம்.

தமாசெல்லாம் (!!) கிடக்கட்டும். இந்த புது வருஷம் ஏகப் பட்ட படிப்பினைகளோட ஆரம்பிச்சுருக்கு. பொருளாதாரம், பொது வாழ்வு, சொந்த வாழ்வுன்னு ஆடாத ஆட்டம் ஆடி அடங்கியாச்சு. நிதானமா சிந்திச்சு நல்லபடியா முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு. கிடைச்ச படிப்பினைகளை சரியாப் புரிஞ்சுக்கிட்டு பயன்படுத்தி எல்லாரும் வாழ்க்கைல முன்னேற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக்கிறேன்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்
!!

55 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

ஆஃகா! ஆஃகா!! ஆஃகா! ஆஃகா!!
அருமை!அருமை!!அருமை!அருமை!!
வடிவு! வடிவு!! வடிவு! வடிவு!!
நன்று! நன்று!! நன்று! நன்று!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணே அப்படியே நம்ம பதிர்வகளைப் பத்தியும் சொல்லுங்கள்

இராகவன் நைஜிரியா said...

சூப்பர்.. மகேஷ்..

உங்கள் புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// SUREஷ் said...
அண்ணே அப்படியே நம்ம பதிர்வகளைப் பத்தியும் சொல்லுங்கள் //

ரிபீட்டேய்..

ஆயில்யன் said...

//வருஷ ஆரம்பமே இந்தப்பாடுன்னா, வருஷம் பூரா படப்போற பாடு எப்பிடி இருக்குமோன்னு... அது எனக்கெப்பிடித் தெரியும்? இனிமே எழுதற எம்பாடு படிக்கற உங்கபாடு.
//

குட் நல்ல முடிவு !

இப்பத்தான் நீங்க அட்டாக்கர்ஸ் லிஸ்ட்ல சேர்ந்திருக்கீங்க!

யாரை பத்தியும் கவலைப்படக்கூடாது நம்மோள டார்கெட் மொத்தமும் அப்பாவி பிளாக்கர்ஸ் மேலத்தான் இருக்கணும்

ஒவ்வொரு பதிவும் இனி செம டெரரா இருக்கணும்!

ஒ.கேய்ய்ய்!

:)))))

சின்னப் பையன் said...

//அண்ணே அப்படியே நம்ம பதிர்வகளைப் பத்தியும் சொல்லுங்கள்//

ரிப்பீட்டே.....

Mahesh said...

நன்றி பழமைபேசி.... நீங்க நெம்ப நல்லவருங்கோ.... பாருங்க.. பருங்க.. நானும் ஒரு கவிஞன்... கவிஞர் புதுயுக காளமேகமே சொல்லீட்டாரு. இனிமே நேரா எம்.பி. ஆகி மந்திரி ஆகி பிரதமர் ஆக வேண்டியதுதான்.

Mahesh said...

நன்றி SUREஷ்.... சொல்லிடுவோம்...

நன்றி ராகவன் சார்...
நன்றி ச்சின்னப்பையன்...

என்னாது ரெண்டு பேரும் மங்களூர் சிவா கிட்ட ட்யூஷன் படிக்கிறீங்களா?

Mahesh said...

நன்றி ஆயில்யன்.... ஆரம்பிச்சுட்டம்ல :))

சி தயாளன் said...

அருமை...:-)

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
நன்றி SUREஷ்.... சொல்லிடுவோம்...

நன்றி ராகவன் சார்...
நன்றி ச்சின்னப்பையன்...

என்னாது ரெண்டு பேரும் மங்களூர் சிவா கிட்ட ட்யூஷன் படிக்கிறீங்களா?//

நான் வளர்கின்றேனே மம்மி விளம்பரம் மாதிரி..

நான் இப்போதுதான் வளரும் பதிவர்.அதனால் எல்லோரிடமும் டியூசன் எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்

நட்புடன் ஜமால் said...

\\வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் !!\\

அழகாதானிருக்கு.

ஏட்டில் உள்ளவரை

ஆனால்

ஏட்டில் உல்லவர்கள்

செய்வார்களா ...

http://urupudaathathu.blogspot.com/ said...

புதிய பதிவுக்கு வாழ்த்துக்கள் ( புது வருசத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணே )

http://urupudaathathu.blogspot.com/ said...

ரொம்ப நாளா உங்க பதிவுல கும்மி அடிக்காம கை பர பர என்று இருக்கிறது..
அதனால ,
இனி
ஸ்டார்ட்
மூஜிக்

நட்புடன் ஜமால் said...

\\Blogger இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
நன்றி SUREஷ்.... சொல்லிடுவோம்...

நன்றி ராகவன் சார்...
நன்றி ச்சின்னப்பையன்...

என்னாது ரெண்டு பேரும் மங்களூர் சிவா கிட்ட ட்யூஷன் படிக்கிறீங்களா?//

நான் வளர்கின்றேனே மம்மி விளம்பரம் மாதிரி..

நான் இப்போதுதான் வளரும் பதிவர்.அதனால் எல்லோரிடமும் டியூசன் எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்\\

நீங்க காம்ப்ளேன் குடிக்காம வளர்ந்தவர் அண்ணே ...

அதனால நீங்க முன்னமே வளர்ந்தவர்

எங்க கண்ணுக்கு தெரியரது இப்பதான்

http://urupudaathathu.blogspot.com/ said...

//புத்தாண்டே வருக புத்துணர்ச்சி தருக
பல்வளமும் பெருக நல்முயற்சி தருக !!
எத்திக்கும் சிறக்க அத்தனையும் கற்க
சொல்வளமும் பெருக நல்நினைவும் தருக ///


ரொம்ப நன்றி அண்ணே ....
( பாசம் நெஞ்சை அடிக்குது )
( நெஞ்சை என்பதை சரியாக படிக்கவும் )

http://urupudaathathu.blogspot.com/ said...

///நீர்வளமும் பெருக நிலவளமும் சிறக்க
மண்மணமும் நிலைக்க நல்வரமும் தருக !!
போரெலாம் நிற்க பாரெலாம் வளர
நின் தாளை வணங்க நன்மனமும் தருக !!////

எதுக்கு இந்த மாதிரி??
புது வருசத்துல யாராச்சும் பில்லி சூனியம் வைச்சுட்டாங்களா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//புத்தாண்டுல புது முயற்சியா ஒரு பாட்டெழுதலாம்னு...ஹி ஹி ஹிஹி.. ///


முயற்சி திருவினையாக்கும்..

இன்னொரு கவிஞர் ரெடி...

இனி கவுஜைகள் பறக்கட்டும்..

பலரின் டவுசர்கள் கிழியட்டும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//போன வருஷம் பதிய ஆரம்பிச்சு காதுகுத்துல மொய் எழுதுன மாதிரி 51 பதி///


காத்து குத்துக்கு 51மொய்னா? அப்போ கல்யாண வீட்டுக்கு எவ்ளோ மொய் வைப்பீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

///இந்த வருஷம் அதுமாதிரி உங்களையெல்லாம் சோதிக்கப்படாதுன்னு உறுதி எடுத்துக்கலாம்னா, புத்தாண்டு உறுதி எடுத்துக்கறதில்லைன்னு 1990ல உறுதி எடுத்தது ஞாபகம் வருது///

அப்போ இந்த வருஷமும் எங்க கதி அவ்ளோ தான்னு சொல்றீங்க..

நல்லா இருங்க

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

//போன வருஷம் பதிய ஆரம்பிச்சு காதுகுத்துல மொய் எழுதுன மாதிரி 51 பதி///


காத்து குத்துக்கு 51மொய்னா? அப்போ கல்யாண வீட்டுக்கு எவ்ளோ மொய் வைப்பீங்க??\\

நெம்ப ச்சீப்பா இருக்கே ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger உருப்புடாதது_அணிமா said...

///இந்த வருஷம் அதுமாதிரி உங்களையெல்லாம் சோதிக்கப்படாதுன்னு உறுதி எடுத்துக்கலாம்னா, புத்தாண்டு உறுதி எடுத்துக்கறதில்லைன்னு 1990ல உறுதி எடுத்தது ஞாபகம் வருது///

அப்போ இந்த வருஷமும் எங்க கதி அவ்ளோ தான்னு சொல்றீங்க..

நல்லா இருங்க\\


அதோ ...

கதின்னு சொல்லுவாங்க

ஆனா இங்க அதோகதி தான் போல

http://urupudaathathu.blogspot.com/ said...

//அதனால இந்த வருஷம் தடாலடியா ஒரு பாட்டோட ஆரம்பிச்சாச்சு. பாட்டைப் படிச்சதுமே தோணியிருக்குமே.///


தோணிச்சி தோணிச்சி..

அதை எல்லாம் வார்த்தையால வடிக்கனும்னா
இந்த இடம் சரி படாதுங்க . .

http://urupudaathathu.blogspot.com/ said...

//ருஷ ஆரம்பமே இந்தப்பாடுன்னா, வருஷம் பூரா படப்போற பாடு எப்பிடி இருக்குமோன்னு... அது எனக்கெப்பிடித் தெரியும்? இனிமே எழுதற எம்பாடு படிக்கற உங்கபாடு.///

இப்படி ஓபன் பண்ணி பேசுற விதம் தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு..

( அண்ணே அப்படியே உங்க அட்ரஸ் குடுத்தா அப்போ அப்போ ஆட்டோ அனுப்ப வசிதியா இருக்கும் )

http://urupudaathathu.blogspot.com/ said...

25

http://urupudaathathu.blogspot.com/ said...

//சரி... புத்தாண்டு எப்பிடி இருக்கப் போகுது, தலைவர்கள் எண்ணம் என்னன்னு ஒரு ரவுண்டு வந்தேன்.///

ஒரு ரவுண்டுக்கே இப்படின்னா, அண்ணன் இன்னும் ரெண்டு மூணு ரவுண்டு அடிச்சிருந்தாருனா எப்படி இருந்திருக்கும் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//குளிச்சுட்டு துண்டோடவே வந்துட்டேன். முதல்ல போய் துணி மாத்தணும்.///

அதுக்கு முதல்ல அவரு துண்ட தானே மாத்தனும், எதுக்கு துணிய மாத்துராறு ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///தமாசெல்லாம் (!!) கிடக்கட்டும். இந்த புது வருஷம் ஏகப் பட்ட படிப்பினைகளோட ஆரம்பிச்சுருக்கு. பொருளாதாரம், பொது வாழ்வு, சொந்த வாழ்வுன்னு ஆடாத ஆட்டம் ஆடி அடங்கியாச்சு. நிதானமா சிந்திச்சு நல்லபடியா முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு. கிடைச்ச படிப்பினைகளை சரியாப் புரிஞ்சுக்கிட்டு பயன்படுத்தி எல்லாரும் வாழ்க்கைல முன்னேற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக்கிறேன்.///


நான் கிளம்புறேன்..

இந்த ஆட்டைக்கு வரல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mahesh said...

நன்றி டொன் லீ...

நன்றி அணிமா & அதிரை ஜமால்... என்னாதிது கும்மி கம்மியா இருக்கே !!

ers said...

நெல்லைத்தமிழ் இணையத்தின் சோதனை திரட்டியில் இணைந்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் தங்களது இடுகையினை பதிவு செய்யுங்கள். நன்றி.

http://india.nellaitamil.com

குடுகுடுப்பை said...

மன் மோகன் சிங் : மேடம் கிட்டதான் கேக்கணும். என்னயும் ஒரு ஆளுன்னு நினைச்சு கேக்க வந்தீங்களே... ரொம்ப நன்றி.//

சூப்பரப்பு.

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

ஆஃகா! ஆஃகா!! ஆஃகா! ஆஃகா!!
அருமை!அருமை!!அருமை!அருமை!!
வடிவு! வடிவு!! வடிவு! வடிவு!!
நன்று! நன்று!! நன்று! நன்று!!//

திஸ் பின்னூட்டம் has been forwarded to mrs பழமைபேசி.

நட்புடன் ஜமால் said...

\\Blogger Mahesh said...

நன்றி டொன் லீ...

நன்றி அணிமா & அதிரை ஜமால்... என்னாதிது கும்மி கம்மியா இருக்கே !!\\

கவலைப்படாதீங்க ...

மீண்டும் மீண்டும் வருவோம் மீண்டு

நட்புடன் ஜமால் said...

நீங்க தானே சொன்னீங்க

இது புதிய ஆண்டு

Anonymous said...

நான் எப்பவுமே ரெண்டு மூணு பதிவுகளுக்கு சேத்துத்தான் வழக்கம் (இங்கே இணைய வசதி...கொஞ்சம் இணையா வசதி). 50வது பதிவா, பாரதியாரைப் போட்டு தாக்கினீங்க. கரெக்ட். ஆனா, அப்படியே ஒரு உல்டா பல்டி அடிச்சு, புது வருஷத்துல, புது முயற்சியா, புதுயுக பாரதியா உடனடியா ஒரு கவிதை போட்டு தாக்கப் போறீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. என்ன இருந்தாலும்...கவி காளமேகத்துக்கு குரு தட்சிணை வைக்க மறந்துடாதீங்க!அப்பறம், நம்ம தலைவர்கள்ல, அத்வானியை மற்ந்துட்டீங்களே. கோச்சுக்கப் போறாரு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க....மகாகவி மாதிரி...அவுரு பாட்டுக்கு எழுதிகினே இருந்தாரு. அப்ப யாரும் படிக்கலை...புரிஞ்சுக்கலை. இப்பத்தான் எல்லாரும் படிச்சு, புல்லரிச்சு, மெய்மறந்து, கண்ணீர் விட்டு நிக்கறோம். உங்க முயற்சியும் அது மாதிரி பெரீஈஈஈஈஈஈஈஈசா வளர்ந்து...நாங்க எல்லாரும் கண்ணீரோட படிக்கறமாதிரி எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டே இருங்க. வாழ்த்துக்கள். நண்பர்கள் எல்லாம் நலமா? பழமைபேசியையே காணோமே? உடம்பு சரியில்லையா?

Anonymous said...

ம்...... இந்தப் பதிவு தான், துக்ளக் என்ற பெயருக்கு பொருத்தமா இருக்கு.

Mahesh said...

அப்பிடிப் போடுங்க குடுகுடுப்பை & அதிரை ஜமால்... சும்மா அதிருதில்ல?

நன்றி நன்றி

Mahesh said...

நன்றி chitravini... பழமைபேசிதான் முதல் பின்னூட்டம் போட்டுடறாரே...

நன்றி வெயிலான்...

புதுகை.அப்துல்லா said...

//போரெலாம் நிற்க பாரெலாம் வளர//

பாரெல்லாம் வளருறதுனாலதான்ணே போதையில போரே நடக்குது :)))

புதுகை.அப்துல்லா said...

பழமைபேசி said...
ஆஃகா! ஆஃகா!! ஆஃகா! ஆஃகா!!
அருமை!அருமை!!அருமை!அருமை!!
வடிவு! வடிவு!! வடிவு! வடிவு!!
நன்று! நன்று!! நன்று! நன்று!!

//

அது!அது!அது!அது! :))

புதுகை.அப்துல்லா said...

// இராகவன் நைஜிரியா said...
சூப்பர்.. மகேஷ்..

உங்கள் புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

//

கொல முயற்சியா???

Mahesh said...

அப்பாடா...

"பாரெலாம்னு" எழுதும்போதே அதை அணிமாவோ குடுகுடுப்பையோ கலாய்ப்பங்கன்னு நினைச்சேன். அண்ணன் அப்துல்லா சொல்லிட்டாரு.

"கொல முயற்சியா?"ன்னு கேட்டிங்க பாருங்க... நீங்கதான் நம்மளை கரெக்டா புரிஞ்சுருக்கீங்க :)))))

நசரேயன் said...

புத்தாண்டு கவிதையும் தலைவர்கள் பேட்டியும் நல்லா இருக்கு

Mahesh said...

நன்றி நசரேயன்...

Thamira said...

அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க மகேஷ். விஐபிக்கள் பேசுவதை விட நீங்க முதல் பாராவில் விட்ட ஸ்டேட்மென்ட்டும், பாடலும் கலக்கல்.. வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

ஆஹ்ஹா.. ஆஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆ! குபீர் குபீர்னு சிரிச்சேன் போங்கோ!

அதுவும் கடைசில தலைவர் சொன்னது கலக்கல்!

இதே மாதிரி நம்ம வலையுலக பிரபலங்கள் பொங்கலுக்கு என்ன சொல்வாங்கன்னு ஒரு பதிவு போடுங்களேன்!

Mahesh said...

நன்றி தாமிரா... பரிசல்....

ரொம்ப நாளைக்கப்பறம் வரீங்க.... ரொம்ப நன்றி.

Mahesh said...

நன்றி தாமிரா... பரிசல்....

ரொம்ப நாளைக்கப்பறம் வரீங்க.... ரொம்ப நன்றி.

Thamira said...

Mahesh said...
நன்றி தாமிரா... பரிசல்....
ரொம்ப நாளைக்கப்பறம் வரீங்க....//

யோவ் ..ன்னா நக்கல் பண்றியா? ஒரு பதிவு உடாம வந்துக்கினுதான்கீறோம்.. ன்ன ஒண்ணு.. படா இங்கிலீஸ் படம் பத்தின கதயெல்லாம் பட்ச்சுக்கினுருக்கும்போதே பாதில தூங்கிப்புடறனா? அதான் பின்னூட்டறதில்ல.. எனுக்கு படத்தப்பத்தி எதுனா எழுதுனா புடிக்கும்தான், ஆனா அது நா எழுதுனாத்தான்.!‌

Thamira said...

மீ த‌ 50.!

Zephyr Girl said...

Vanakkam Nanba,
unga post romba nalla iriku...
I would like to share my blog with u. www.cycadelia.blogspot.com
innum nariya eludhunga...valga valamudan......

பழமைபேசி said...

//chitravini said...

நண்பர்கள் எல்லாம் நலமா? பழமைபேசியையே காணோமே? உடம்பு சரியில்லையா?
//

அண்ணே, நீங்க நல்லா இருக்கீங்ளா? புது வருசம் ஆரம்பிச்சு, வேலை சுறுசுறுப்பா ஆரம்பிச்சிட்டாங்க....வெளியூர் வேற வந்து இருக்கேன்... அதானுங்க, வலைல மேயுறது குறைஞ்சி போயிடுச்சுங்க....

பழமைபேசி said...

அண்ணே உங்களுக்கு விருது காத்திருக்கு... நம்ம பக்கம் வந்து வாங்கிக்கிடுங்க!

Thamira said...

பொங்கல் பரிசாக பட்டாம்பூச்சி விருதைப்பெற்றுக்கொள்ள நமது கடைக்கு வரவும்.

கட்டபொம்மன் said...

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


கட்டபொம்மன் kattapomman@gmail.com