Friday, January 30, 2009

மனிதாபிமானம்


அந்தக் கிழவி அழுது கொண்டிருந்தாள்...
பிள்ளைகளால் துரத்திவிடப்பட்டதைச்
சொல்லி அழுதாள்....
பெண்களும் கண்டுகொள்ளாததைச்
சொல்லி அழுதாள்..
'சே... இப்படியும் மக்கள் இருப்பார்களா?'
நான் பொறுமினேன்...

அந்தக் கிழவி அரற்றிக் கொண்டிருந்தாள்....
நாலு நாளாகக் காய்ச்சலாம்...
மருந்து வாங்கக் காசில்லையாம்..
ஒரு மாத்திரையோ மருந்தோ கேட்டு
உடல் வலியால் அரற்றினாள்...
'இவ்வளவு பேர் கடந்து போகிறார்களே..
யாராவது ஒருவர் உதவுங்களேன்..'
நான் மனதுக்குள் கூவினேன்....

அந்தக் கிழவி இறைஞ்சிக் கொண்டிருந்தாள்...
பசிக்கிறது போலும்...
ஒரு இட்டிலியாவது கிடைக்குமா என்று
போவோர் வருவோரை
ஏக்கக் கண்களுடன் பார்த்தாள்...
'இரக்கமேயில்லாத உலகம்..மக்கள்..'
நான் சற்று உரக்கவே சொன்னேன்...

'சீக்கிரம்... சீக்கிரம் பேக் பண்ணிக் குடுங்க..'
நான் கடைக்காரனை அவசரப்படுத்தினேன்...
ஒரு கண்ணால் அந்தக் கிழவியைப் பார்த்தபடி
பார்சலை வாங்கிக் கொண்டு கடைக்கு வெளியே வந்தேன்..

அந்தக் கிழவி தொய்ந்து போயிருந்தாள்..
இருந்த சக்தியெல்லாம் அழுது, அரற்றி, இறைஞ்சியதில்
வடிந்து போக கண்கள் சொருக
சுவற்றில் சாய்ந்திருந்தாள்....

'என்ன உலகம்.. ஒரு ஏழைக் கிழவிக்கு உதவ
யாருமே இல்லையா?'
பார்சலுடன் விரைந்தேன்..
'சீக்கிரம் போகவேண்டும்...
முதல் டேட்... அவள் எனக்காக காத்திருப்பாள்...
ஏற்கெனவே கடைக்காரன் லேட் பண்ணியதில் 10 நிமிஷம் போச்சு...'

25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

narsim said...

//முதல் டேட்... அவள் எனக்காக காத்திருப்பாள்...
//

!!!!!பளார் பளீர்!!!!!

பரிசல்காரன் said...

கடைசி வரிகள்... ப்பா! கலக்கீட்டீங்க. நிதர்சனம்ங்கறது இதுதான்!

நண்பர்களே.. பாருங்கப்பா.. இவருக்குத்தான் எத்தனை எத்தனை ஸ்ப்ளிட் பெர்சனாலிடி! வெர்சடைலா கலக்கறாரே! இஃகி! இஃகி!!

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

பழமைபேசி said...

நேர்த்தியான கலக்கல்.... கலக்கிகிட்டே இருங்க!

கலக்கினதுல மனசு வலிக்குது... இஃகிஃகி!

ராஜ நடராஜன் said...

படமும் தலைப்புமே பதிவினை நிறைவு செய்துவிட்டது.

இராகவன் நைஜிரியா said...

கலக்கிட்டீங்க மகேசு...

கண்கள் பார்க்கின்றன, காதுகள் கேட்கின்றன ஆனால் கைகள் உதவ மறுக்கின்றன...

இதை எவ்வளவு அழகாக செல்லியுள்ளீர்கள் ... வாவ்..

உண்மை வலிக்கும்!!

’டொன்’ லீ said...

//முதல் டேட்... அவள் எனக்காக காத்திருப்பாள்...
ஏற்கெனவே கடைக்காரன் லேட் பண்ணியதில் 10 நிமிஷம் போச்சு...'//

சாட்டையடி...

சிங்கப்பூரிலும் நிலமை அப்படித்தான்..கிழவியின் நிலையில் மட்டுமல்ல..வேற ஏதாவது ஒன்று நடந்தாலும் சிங்கைக்காரர் (சகல இனத்தவரும் தான்) கண்டும் காணாமல். போவினம்...இப்போதெல்லாம் கர்ப்பிணி பெண்களுக்கு, வயோதிபர்களுக்கு யாரும் பேருந்திலோ, தொடரூந்துகளிலோ இருக்கைகளை அளிக்கின்றார்கள் இல்லை,...இது வழமை என்றால்..வர வர மோசமாவதாக எனக்கு தெரிகின்றது

ஆதவா said...

முகத்தில் அறைந்ததைப் போன்று இருக்கிறது மகேஸ்.. மனிதாபிமானம், தன் அபிமானங்களுக்குள் தொலைந்து போன மானத்தைப் போன்று இருக்கிறது..

எளிய, வலிய கவிதை இது.. வாழ்த்துக்கள்.

Mahesh said...

நன்றி நர்சிம்... இந்த வருடம் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினத்தவைகளில் கவிதை எழுதுவது ஒன்று. உங்களுடைய, அப்துல்லா, தாமிரா எல்லாரும்தான் இன்ஸ்பிரேஷன்

(யாரங்க நற நறன்னு பல்லைக் கடிக்கிறது? பாவம் அவுங்களைத் திட்டாதிங்க... ;)

Mahesh said...

அடடா சொல்லாம விட்டுட்டனே... நர்சிம் சார் மொத பின்னூட்டம் போட்டுருக்காரு... அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி,.,.,,

Mahesh said...

நன்றியோ நன்றி பரிசல்...

பாருங்களேன்... எனக்குள்ளயும் எதோ இருந்துருக்கு... இஃகி...இஃகி !

Mahesh said...

நன்றியோ நன்றி பரிசல்...

பாருங்களேன்... எனக்குள்ளயும் எதோ இருந்துருக்கு... இஃகி...இஃகி !

Mahesh said...

நன்றி பழமைபேசி... மனசு வலிக்குதா? மருந்து தடவறாப்ல இன்னொரு கவித படிச்சுருவோம்...

Mahesh said...

நன்றி ராஜ நடராஜன்...

நன்றி ராகவன் சார்... சுகமாயிட்டீங்களா?

நன்றி டொன் லீ... உங்களின் தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி..

நன்றி ஆதவா... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Mahesh said...

@ டொன் லீ :

நீங்க சொல்றது சரிதான்.. அரசாங்கம் மறுபடியும் இது போல பொதுவிடப் பண்புகளை விளம்பரப்படுத்தி ஊக்கமளிக்க இருப்பதாக செய்தி படித்தபோது சங்கடமாக இருந்தது :(

அடிப்படைப் பண்புகளைக் கூட அரசாங்கம் வந்து நிர்ப்பந்திக்க வேண்டிய அளவுக்கு தாழ்ந்து விட்டோம் :(

ச்சின்னப் பையன் said...

அருமை!!! நச்!!!

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்....

நசரேயன் said...

நல்லா இருக்கு மகேஷ், உங்க கவிதை எல்லாம் பார்த்து விட்டு நான் கவுஜ எழுதக் ௬டாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன்

Mahesh said...

அட... என்னங்க நசரேயன்... என்னப் பாத்தெல்லாம் ஓடறீங்க... சும்மா எழுதுங்க...

(அப்பாடா... ஒரு ஆளை வெரட்டி உட்டாச்சு... இஃகி... இஃகி..)
:))))))))))))))

chitravini said...

மற்ற மனிதர்கள் மேல் அபிமானம் வைத்தால்தான் அது மனிதாபிமானமாக முடியும். ஆனால் இன்று எல்லோரும் 'தன்மேல்' மட்டுமே அபிமானம் வைத்திருப்பதால்தான் பல கிழவிகளும், கிழவர்களும் (அம்மா, அப்பாக்கள் உட்பட)யாரிடமாவது மனிதாபிமானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மகேஷ்...ஒரு நல்ல கவனிப்பும், பதிவும். வாழ்த்துக்கள்.

தாமிரா said...

பதிவு மன‌வேதனையை உண்டு உருவாகிய‌து.

Mahesh said...

நன்றி chitravini, தாமிரா....

வேத்தியன் said...

அருமை அருமை...
ரொம்ப நல்லா இருக்கு...

Mahesh said...

நன்றி வேத்தியன்....

மங்களூர் சிவா said...

கலக்கீட்டீங்க. நிதர்சனம்ங்கறது இதுதான்!