போரைப் பற்றி சிலரின் கருத்துக்கள் :
உருவாக்கப்பட்ட ஒவ்வொரு துப்பாக்கியும், செலுத்தப்பட்ட ஒவ்வொரு போர்க்கப்பலும், எறியப்பட்ட ஒவ்வொரு ராக்கெட்டும், கடைசியில் பார்த்தால், பசிக்கு உணவில்லாத ஒருவனிடமும் குளிருக்கு துணி இல்லாத ஒருவனிடமும் திருடியதற்கு ஒப்பானது. - ஐஷனோவர்
போர் அல்லது மனிதன் : ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும் - பக்மின்ஸ்டர் ஃபுல்லர்
ஒரு நல்ல போர் அல்லது மோசமான அமைதி எபோதுமே இருந்ததில்லை - பெஞ்சமின் ஃப்ரான்க்ளின்
வக்கற்றவனின் முதல் அடைக்கலம் வன்முறை - ஐசக் அஸிமோவ்
போரை ஆரம்பிப்பது மட்டுமே கிழங்கள். போரிட்டு மாண்டு போவது இளைஞர்கள்தாம் - ஹெர்பெட் ஹூவர்
போரில் இரண்டாவதாக வருபவனுக்கு பரிசு கிடையவே கிடையாது - ஜெனரல் ஒமர் ப்ராட்லி
ஒருவனைப் போரிட்டு கொல்ல வேண்டும் என்ற நிலையில் அமைதியாக இருப்பதனால் ஒரு இழப்பும் இல்லை - வின்ஸ்டன் சர்ச்சில்
ராணுவ ஊழியத்துக்கு செல்ல மறுக்கும் இளைஞர்களே போர்களற்ற உலகத்திற்கு வித்திடுபவர்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
உலகில் அனைவரும் சகோதர சகோதரிகள், உலகத்தில் உள்ள சமுத்திரங்களைப் போல. பிறகு ஏன் காற்றும் அலைகளும் அவ்வளவு உக்கிரமாக மோதிக் கொள்கின்றன? - ஹிரோஹிடோ
எவ்வளவு தேவையென்றாலும், என்ன காரணமென்றாலும், போர் ஒரு கிரிமினல் குற்றம் இல்லை என்று சொல்ல முடியாது - எர்னெஸ்ட் ஹெமிங்வே
அடக்குமுறையின் விலை சல்லிசு என்று ஒரு அரசாங்கம் நினக்கும் அந்த நொடியில் போர் ஆரம்பமாகிறது என்று வரலாறு கூறுகிறது - ரொனால்ட் ரீகன்
டிஸ்கி : தமிழாக்கம் மட்டுமே அடியேனுடையது. இந்தப் பதிவுக்கும் இலங்கைல நடக்கற போருக்கும், ரா(ட்சச)ஜபக்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதயத்தை திருடாதே
2 days ago
18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
திண்ணை காலியா இருக்கும் போல.நான் முதல்ல துண்டு போட்டுக்கிறேன்:)
ஆமா!இம்புட்டு ஆளுக இப்படியெல்லாம் சொல்றாங்க.அப்பறம் ஏன் மனுசன் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிறான்.ஒருவேளை இதுக்குப் பேர்தான் ஏட்டுச் சுரைக்காய் என்பதா?
நுணுக்கமா பார்த்தா சிலபேர் சொல்றதெல்லாம் உண்மை.ஆனாலும் நடைமுறைக்கு???
நான் வேற என்னமோ நினைச்சேன்
நல்ல பதிவு...
காலத்துக்கேற்ற கருத்துகள்...
என்ன செய்யறது...
நிறைய பேர் எவ்வளவோ சொல்லியிருக்காங்க...
ஆனா போர் மட்டும் எங்கியாவது நடந்துடிக்கிட்டுதான் இருக்கு..
போர் அல்லது மனிதன் : ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும் - பக்மின்ஸ்டர் ஃபுல்லர் -- இதுதான் சரியா இருக்குமா?
எல்லாம் நல்லாத்தான் சொல்லியிருக்காங்க....
நன்றி ராஜ நடராஜன்.... ஆமா ஆமா ஏட்டுச் சுரைக்காய்தான்..
நன்றி நசரேயன்... வேற என்ன நெனச்சீங்க?
நன்றி வேத்தியன்... உங்களுக்கு நல்லாவே தெரியும் :(
நன்றி ச்சின்னப்பையன்...
நன்றி ராகவன்... சரிதான்... ஒண்ணுதான் மிச்சமாகும் :(
தலைப்பு அற்புதம்! (மற்றவை உங்கள் படைப்பல்ல. எடுத்தாக்கம் என்றாலும் ஆக்கிய விதம் அருமை!!)
நன்றி பரிசல்... தமிழாக்கம் மட்டுமே என்னுடையது :)))
'ஏங்க... நான் சரியாத்தானே சொல்லியிருக்கேன்?' :)
ம்...
”போர் என்றால் போர்
சமாதானம் என்றால் சமாதானம்”
கொக்கரித்தவர் முன்னால் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன...1983 கலவர நேரம்..
நல்லாயிருக்கு... போர்: என் மாற்றுப் பார்வையில்ன்னு ஒரு பதிவு போடலாம். தாவு தீரட்டும்...இஃகிஃகி!
//ராஜ நடராஜன் said...
ஆமா!இம்புட்டு ஆளுக இப்படியெல்லாம் சொல்றாங்க.அப்பறம் ஏன் மனுசன் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிறான்.ஒருவேளை இதுக்குப் பேர்தான் ஏட்டுச் சுரைக்காய் என்பதா?//
சரியாகச் சொல்லியிருக்கிறார்
@ டொன் லீ : ஆமாங்க... அந்தக் கொக்கரிப்பு விட்டுப் போச்சு !!!
@ பழமைபேசி : போடுங்க.. போடுங்க... உங்க மாற்றுப்பார்வைதான் இப்ப தமிழ் பதிவுலகத்துல பிரசித்தம் :)
@ வேலன் : சரியாச் சொன்னீங்க அண்ணாச்சி.... நீங்களும் ரிப்பீட்டு ஆரம்பிச்சுட்டீங்களா.. இஃகி ! இஃகி !!
எனக்கு கண்ணீர் தண்ணி வத்திப் போய் ரொம்ப நாளாச்சு...எனக்கே இப்படின்னா நேரடியா அனுபவிக்கிறவங்களுக்கு???
அருமையான தொகுப்பு.!
Mahesh said...
நன்றி பரிசல்... தமிழாக்கம் மட்டுமே என்னுடையது :)))
'ஏங்க... நான் சரியாத்தானே சொல்லியிருக்கேன்?' :)
//
கேப்பு விடாம பேசுங்க நாட்டாம.!
நன்றி தாமிரா....
நல்ல பதிவு...
Post a Comment