பரிசல் அப்பயே சொன்னாரு... 'கிச்சடின்னு ஆரம்பிச்சுட்டீங்க... கொஞ்ச நாளைக்கப்பறம் மேட்டர் கிடைக்க கஷ்டமா இருக்கும்னு'. பெரியவங்க சொன்னா சரியாத்தானே இருக்கும் !! ச்சின்னப்பையனா இருந்தா தினம் தினம் விதவிதமா கிச்சடி பண்ணலாம்... நாமதான் க்குட்டிப்பையனாச்சே... அதனால இப்பிடித்தான் மாசம் ஒருக்காதான் போட முடியும்.
நேத்திக்கு தாமிரா அண்ணன் ஏடிஎம் பத்தி ஒரு பதிவு போட்டுருக்காரு. அதைப் படிச்சதும் ஒரு ஃப்ளாஷ்... ஆஹா... க்யூவுல நிக்கறதைப் பத்தி ஒரு கிச்சடி ரெடி பண்ணலாமேன்னு... ஓவர் டு கிச்சடி...
(அப்பாடா... இப்பிடி பில்டப் குடுத்து ரெண்டு பாரா ஓட்டியாச்சு...உஸ்...)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்கும் SBI ஏடிஎம்முக்கும் கெரகம் ஏதோ பழைய ஜென்மப் பகை இருக்கு. (ஏடிஎம் நம்பியாராமா, நான் கல்யாண்குமாராமா) எப்பப் பணம் எடுக்கப் போனாலும் 'கரண்ட் இல்ல சார்' , 'பணம் போட்டுக்கிட்டுருக்காங்க... 1/2 மணி நேரம் ஆகும் சார்'. ஒரு மினி ஸ்டேட்மென்ட் எடுக்கணும்னு போனா 'பேப்பர் ரோல் தீந்துடுச்சு...பிரிண்ட் பண்ணாது சார்'. அய்யா... பண்மே எடுக்கலை வெறும் பேலன்ஸ் மட்டுமாவது பாக்கலாம்னா 'கம்ப்யூட்டர் டௌன்' இல்ல 'நெட்வொர்க் டௌன்'. ஒரு ஏடிஎம்முக்கு என்னென்ன உபாதைக வரமுடியுமோ அவ்வளவும் வந்துரும். அப்பிடியே ஒரு முகூர்த்த நாள்ல எல்லாம் சரியா இருந்தாலும் வாசல்ல நிக்கற கூட்டத்தைப் பாத்ததுமே 'சரித்தான்..'னு தோணிடும்.
அப்பிடியே பொறும்மையா (?!) வரிசைல நின்னா, நமக்கு முன்னால நிக்கிற நாலு பேரு நண்பர்களாயிருப்பாங்க. நாலு பேருமா சேந்து உள்ள போவாங்க. நமக்கு சந்தேகம் வந்துரும். இவுங்க ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்க போறாங்களா, ஏடிஎம்மையே எடுத்துக்கிட்டு போகப் போறாங்களான்னு. முதல்ல ஒருத்தர் கார்டை எடுக்க, அதை எப்பிடி எங்க போடணும்னு மத்த 3 பேரும் மூணு இடத்தைக் காட்டுவாங்க. அப்பறம் எங்கயாவது ஒரு குட்டி பாக்கெட் டைரிலயோ, கார்டுக்குப் பின்னாலயேவோ எழுதி வெச்சுருக்கற பின் நம்பரைப் பொறுமையா 4 வாட்டி படிச்சு பாத்துட்டு ஒவ்வொரு நம்பரா அழுத்தி (அழுத்தற அழுத்துல ஏடிஎம்மே ஆடும்) குறைஞ்சது ரெண்டு தடவையாவது தப்பா அழுத்தி, 500க்கு பதிலா 5000ம்னு அழுத்தி அத கேன்சல் பண்ணி.... ஒரு பெரிய போராட்டத்துக்கு அப்பறம் ஒரு வழியா பணம் எடுத்துடுவாங்க. இதே மாதிரி மத்த மூணு பேரும்.... அதுக்கு அப்பறம் நாம போன உடனே ஏடிஎம்முக்கு மூக்குல வேர்த்துடும் "Sorry. This ATM is temporarily out of order. Pl try in another nearest ATM"
போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"மர்ஃபி'ஸ் லாஸ்" (Murphy's Laws) அப்பிடின்னு சில வேடிக்கையான விதிகளைப் பத்தி நீங்க படிச்சுருக்கலாம். அதுல க்யூவைப் பத்தி சொல்லியிருக்கறது:
1. எப்பவுமே பக்கத்துக் க்யூ வேகமா நகரும்
2. நீங்க பக்கத்து க்யூவுக்கு மாறி நின்னா, முதல்ல நின்ன க்யூ வேகமா நகரும்.
3. நீங்க மாறி மாறி நின்னு ரெண்டு க்யூவுலயும் பின்னால பின்னால போய், செய்ய வேண்டிய வேலை கோவிந்தாவாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருமுறை துபாய்ல நடு ராத்திரி இறங்கி On-Arrival Visa எடுக்க அங்க இங்க தேடி அலையும்போது ஒரு பெரிய க்யூவைப் பாத்துட்டு, இதுவா இருக்குமோன்னு க்யூவுல நிக்கற ஒருத்தர் கிட்ட விசாவுக்கான க்யூவான்னு கேட்டேன். அவரு மொத்தமா தலைய ஆட்ட, சரி இதுதான் போலன்னு நானும் நின்னுட்டேன். கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன கௌண்டர்ல ஒரு பொண்ணு உக்காந்து கம்ப்யூட்டர்ல சாலிடேர் விளையாடிக்கிட்டுருந்துது. "இவ்வளவு பேர் நிக்கறோம்... இன்னொரு கௌண்டர் போடாம இப்பிடி வெட்டியா இருக்காங்களே"ன்னு புலம்பிக்கிட்டு நின்னேன். இந்த க்யூ நகரற மாதிரியே தெரியல. 1/2 மணி நேரம் ஆச்சு ஒருத்தர் கூட நகரலை. என்னாடான்னு யோசிக்கும்போதே யாரோ ஒரு ஆள் வர, முன்னாடி நின்ன மொத்தக் கூட்டமும் மூட்டை முடிச்சத் தூக்கிக்கிட்டு அவன் கூட போயிடுச்சு. நான் மட்டுந்தான் நிக்கிறேன். அப்பறந்தான் தெரிஞ்சுது அது ஏதோ ஒரு டூரிஸ்ட் கூட்டம். வந்தவன் ஒரு ஆர்கனைசர். பக்கத்துல காத்தாடிக்கிட்டு இருந்த கௌண்டர்தான் விசா கௌண்டர். மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படிக்கிற காலத்துல மண்ணெண்ணை, பாமாயில் இதெல்லாம் ரேஷன் கடைல போடறாங்கன்னு தமுக்கு அடிச்சாச்சுன்னா, உடனே எதாவது ஒரு டின், பாட்டிலோட போய் ரேஷன் கடை வாசல்ல நின்னுடணும். அங்க நமக்கு முன்னாலயே 100 பேர் நிப்பாங்க. டின், பாட்டில், குடை, கல்லு, கூடை, குச்சி, சீமாறு, தென்ன மட்ட, டயர் இதெல்லாம் கூட க்யூவுல இருக்கும். 'என்னாதிது சின்னப்புள்ளத்தனமா'ன்னு கேட்டுற முடியாது. ஒவ்வொண்ணும் ஒரு ஆளுக்கு சமம். கடைக்காரன் வந்ததுமே சொல்லிடுவான் "ஒரு டிரம் எண்ணைதான் இருக்கு... சண்டை போடக்கூடாது"ன்னு. ஆனா அந்த ஒரு டிரம்ல (100 லிட்டர்) இருந்து என்னவோ காமதேனு கிட்ட கரக்கற மாதிரி கரந்து 200 லிட்டர் பில் போடுவாங்க. அளக்கிற சீசா ஓட்டையா, பாதி அடைச்சிருக்குமா, அதுல பாதி நுரையா, ஊத்தும்போது சிந்துதா...ம்ஹூம்... எதையும் பாக்கக்கூடாது. நாமளும் 3 மணி நேரம் க்யூவுல நின்னு பில் போட்டுக்கிட்டு எண்ணை ஊத்தறவன் கிட்ட இன்னொரு க்யூவுல நின்னு நம்ம முறை வரும்போது டிரம்ம்மையே கவுத்து ஒரு முக்கா லிட்டர் எடுத்து நம்ம டின்ல ஊத்திட்டு 'அவ்வளவுதான் தம்பி... உள்ள போய் சொல்லி மீதிப் பணத்தை வாங்கிக்கங்க"ன்னு சொல்லி பில்லுக்கு பின்னால எழுதிக் குடுத்துடுவாரு. சரின்னு பின்னால திரும்பிப் பாத்தா நமக்கு ஆனதைப் பாத்தபிறகு நமக்கப்பறம் பில் போட்டவங்க எல்லாம் ரீஃப்ண்ட் க்யூவுல நின்னுக்கிட்டிருப்பாங்க. மறுபடி க்யூவுல நின்னு.....
33 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
சொன்னா நம்பமாட்டீங்க.. இன்னிக்குத்தான் நினைச்சேன்... அண்ணன் கிச்சடி போட்டு ரொம்ப நாளாச்சேன்னு.... :-))
கிச்சடி சூப்பர்... உங்க விசா க்யூ மேட்டரை படிச்சி நல்லா சிரிச்சேன்.... :-))))
Present Sir!
-from my cell
நன்றி ச்சின்னப்பையன்... அவ்வ்வ்... நம்பறேன்... இப்பிடி புல்லரிக்க வெச்சுட்டீங்களே !!
நன்றி பழமைபேசி... ஆமா நீங்க என்ன தப்பு செஞ்சீங்கன்னு 'செல்'லுல இருக்கீங்க? :)))
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
visa & ATM super. keresene matter supero super
:-)))))))
நன்றி முரளிகண்ணன்....
// "மர்ஃபி'ஸ் லாஸ்" (Murphy's Laws) //
இது ரொம்ப நல்லா இருக்கு... நிசமாவே இது இருக்குங்களா?
விசா மேட்டர படிச்சு, சிரிச்சு, சிரிச்சு வயறு வலிக்க ஆரம்பிச்சுடுச்சுங்க...
பாமாயில், கெரசின் மேட்டர் நானும் அனுபவிச்சு இருக்கேங்க...
ATM ன்னாலே எனி டைம் மண்டையடிதானுங்களே மகேசு அதான்.
ஒருத்தர் இப்படித்தான் 2500 எடுக்கிறேன்னு எங்கிட்ட உதவி கேட்டாரு. நான் எல்லாம் சொல்லிக் குடுத்து அவரியே டைப் செய்ய வைச்சேன். அவரு 25000 ந்னு டைப் பண்ணி நான் சொல்லுமுன்னே yes ன்னுட்டாரு.
அப்புறமென்ன 25000 வந்தது. ஏதோ நாந்தான் தப்பு பண்ணின மாதிரி என்னைத் திட்டிகிட்டே இருந்தாரு. அவரு கூடவே போயி SBI 22500 டெபாசிட் பண்ணினப்புறம்தான் அமைதியானாரு. கொடுமை.
நன்றி ராகவன் சார்... ஆமாம் அந்த மாதிரி லாஸ் இருக்கு. ரொம்பக் காமெடியா இருக்கும். ஆனா அத்தனையும் உண்மை.
@ வடகரை வேலன் :
//ATM ன்னாலே எனி டைம் மண்டையடிதானுங்களே //
ஆஹா... இது சூப்பர்...
ஹஹஹ...
ஆகா, கிளப்பிட்டீங்க மகேசு...கூடவே கிளறியும் விட்டுட்டீங்க....இஃகிஃகி!
நன்றி டொன்லீ....
நன்றி பழமைபேசி....கிளறி விட்டுட்டனா? அதான் வேணும்....
இந்த மாதிரி ஒரு பதிவுக்கு என் பதிவு ஒரு தூண்டுதலா இருந்திருக்குன்னு நெனைக்கிறப்போ ஒரே அழுவாச்சியா வருதுண்ணே..!
***
ROTFL.., நகைச்சுவையில பின்னுறீங்கண்ணே.. வரிக்கு வரி சிரித்து மகிழ்ந்தேன். அட்டகாசம், வாழ்த்துகள்.!
நல்ல இருக்கு கிச்சடி
மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.
முடியல சார் :))))))))))))))))
நன்றி தாமிரா... அவ்வ்வ்வ்... எனக்கும் அழுகாச்சியா வருது...
நன்றி நசரேயன்..
நன்றி ஸ்ரீதர்கண்ணன்...
கிச்சடி நெம்ப நல்லாருந்ததுங்ண்ணா!
நன்றி வெயிலான்.... அப்பப்ப காணாமப் போயிடறாங்க...
//மூஞ்சில வழிஞ்ச வெளக்கெண்ணைல ரெண்டு நாள் வெளக்கெரிக்கலாம்.//
//. இவுங்க ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்க போறாங்களா, ஏடிஎம்மையே எடுத்துக்கிட்டு போகப் போறாங்களான்னு. //
இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண்ணா!
//இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண்ணா!//
//இதுபோல பல இடங்கள்ல சிரிப்போ சிரிப்பு, பின்றீங்கண்ணா!//
athe thaan..reptteeaaa
நன்றி பரிசல்....
நன்றி நர்சிம்....
திரும்ப வரேன் :-)
//போங்கடா... நீங்களும் உங்க ஏடிஎம்மும் !!//
ஹா ஹா பலமான அனுபவம் இருக்கும் போல இருக்கே
//1. எப்பவுமே பக்கத்துக் க்யூ வேகமா நகரும்
2. நீங்க பக்கத்து க்யூவுக்கு மாறி நின்னா, முதல்ல நின்ன க்யூ வேகமா நகரும்.
3. நீங்க மாறி மாறி நின்னு ரெண்டு க்யூவுலயும் பின்னால பின்னால போய், செய்ய வேண்டிய வேலை கோவிந்தாவாகும்.//
இதை பற்றி நான் ஒரு பதிவே போடலாம்னு இருக்கேன்.. அந்த அளவிற்கு அனுபவம் இருக்கு
என்னோட அதிர்ஷ்டம் பற்றி ஒரு பதிவு விரைவில் :-))))
நல்ல டேஸ்ட்டியான கிச்சடி மஹேஷ்.. ம்ம்ம்.. யம்மி.. :)))
அய்யய்யோ என் பின்னூட்டம் கியூவுல முன்னாடி வராம கடைசியா நிக்குதே!!!!
கொஞ்சம் லேட்டா வந்தா நம்ப சொல்ல நினைக்கிறதெல்லாம் எல்லாரும் சொல்லி முடுச்சுடுறாங்க...
பதிவுதான் போட முடியலனாலும் வரவர பின்னூட்டமும் போட முடியிரது இல்ல....
கிச்சடி கிச்சுன்னு இருக்கு
:)))
மகேஷ், கிச்சடி நன்றாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு ஏ.டி.எம். அனுபவம் இருக்கும். நான் இருக்கும் இடத்தில், ஒரே ஒரு ஏ.டி.எம் தான் உள்ளது. அதில் எப்பொழுதும் கூட்டம். கூட்டம் இல்லை என்றால், அதில் பணம் இல்லை என்று அர்த்தம். ஒரு நாள் இன்று பணம் எடுத்தே தீருவது என்ற முடிவில், க்யூவில் நின்றிருந்தேன். உள்ளே இரண்டு, மூன்று பேர் நின்று கொண்டு இருந்தார்கள். ஆர்வ மிகுதியால், என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒருவன் பணம் எடுப்பவன், இரண்டு பேர் அவருக்கு 'கைடு'. பணம் எடுப்பவன், கார்டு போட்டவுடன், அடுத்தவன் 'என்னடா, 'பின் நம்பர்' என்றான். பணம் எடுப்பவன், என் ஒய்ஃப் வயசும், என்னோட வயசும் என்றான். உடனே அடுத்தவர், 'நம்பரை சீக்கிரம் அமுத்து' என்றார். அடுத்தவன், 'டேய், மெதுவா அமுத்தாதே, போன தடவை, நான் அப்படித்தான் அமுத்தப் போய், அது தப்புன்னு சொல்லி, கார்டு மாட்டிக்கிச்சு. அதுனால, நல்லா அழுத்தி அமுக்குன்னு' சொன்னான். பணம் எடுப்பவன், 'நல்லாவே' அமுக்க, பட்டனே உள்ளே போய், உடைந்து சிக்கிக் கொண்டது. அவ்வளவுதான், க்யூவில் ஏற்கெனவே 100 பேர் நிற்கிறார்கள். நான், நமக்கும் ஏ.டி.எம்மிற்கும் ராசியே இல்லை என்று பல்லைக் கடித்துக் கொண்டு நகர, பின்னாடி தர்ம அடி விழும் சத்தம் கேட்டது. இதுமாதிரி இன்னும் நிறைய அனுபவம்....ஒருமுறை ஒருவர்க்கு எடுத்த பணத்தில், நூறு ரூபாய் கம்மியாக வர, அவர் சட்டென்று ஏ.டி.எம்மிற்கு வெளீயே வந்து நின்று கொண்டு, யாரையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் கூத்தடித்தது தனிக் கதை.
வாங்க அப்துல்லா.... ஆணி நெறய சேந்துடுச்சோ?
நன்றி chitravini அண்ணாச்சி...
காலையில் அருமையான பதிவைப் படி்த்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு நகைச்சுவை அப்படியே வருது (michael madhana kamarajan kamal style-ல் படிக்கவும்), பதிவு + பின்னூட்டம் (பழமைபேசிக்குப் பதில் -செல்)...
நன்றி.
-அரசு
நன்றி அரசு... //உங்களுக்கு நகைச்சுவை அப்படியே வருது// அவ்வ்வ்வ்வ்வ்.....
விசா க்யூ மேட்டரை படிச்சி நல்லா சிரிச்சேன்.... :-))))
நல்லா சுவாரஸ்யமா எழுதுறீங்க..
அன்புடன் அருணா
Post a Comment