காட்சி 1 :
மதியம் 2 மணி. அது ஒரு பெரிய எஃகு நிறுவனம். குளிரூட்டப்பட்ட ரிசப்ஷனில் சோஃபாவில் நான். கண்ணாடிக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
"இப்ப வந்துடுவார் சார்.... இன்னிக்கு வெள்ளிக்கிழமை... கொஞ்சம் லேட்டாகும்"
சர்...ரென்று ஒரு ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு அவர் வருகிறார். வண்டியை நிறுத்தி விட்டு வந்து "வாங்கண்ணே... வாங்கண்ணே... நல்லா இருக்கீங்களா? கிளம்புங்க. போய் லஞ்ச் முடிச்சுட்டு வந்துடுவோம்.... எங்க போலாம்? வெஜிடேரியன்தானே?"
மறுபடியும் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு போகிறோம். அங்கே ஒரே கூட்டம். ஒரு மூலையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் தன் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். "இப்போதைக்கு டேபிள் கிடைக்காது போல. வாங்க... வேற ஹோட்டலுக்குப் போலாம்.." மறுபடி ஸ்கூட்டி. இன்னொரு ஹோட்டல். அவ்வளவாகக் கூட்டம் இல்லை.
"இதுவும் நல்ல ரெஸ்டாரன்ட்ணே... நீல்கிரீஸ்காரங்களோடது...."
பல விஷயங்களிப் பற்றிப் பேசுகிறோம். ஸ்வாமி ஓம்கார் அகோரிகளைப் பற்றி எழுதியுள்ள பதிவுகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார். நான் அந்த வலைப்பூவைக் கண்டிப்பாக நுகர வேண்டும் என்கிறார். மேலும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டே ஒரு நல்ல உணவும் உண்ட திருப்தியுடன் திரும்ப அவருடைய அலுவலகத்திற்கு சென்று இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த நல்ல மனிதரிடமிருந்து விடைபெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு திரும்புகிறேன்.
காட்சி 2:
அடுத்த நாள் மதியம் 2 மணி. முழு வண்ணப்படங்களுக்குப் பெயர் போன பரங்கிமலை தியேட்டர். வெளியே மர நிழலில் காரை நிறுத்தி விட்டு காத்திருக்கிறேன். அருகே ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு ஹோண்டா சிட்டி கார் வந்து நிற்க டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இறங்குகிறார். "அட... எந்திரன் பட ஷூட்டிங் ரகசியமா நடக்குதுன்னு படிச்சோமே....இவ்வளவு ரகசியமாவா? அப்ப தலைவர் எங்க? ஐஸ் எங்க?"ன்னு யோசிச்சுக்கிட்டே பாத்தா... ஹை... நம்பாளு. "மீட் பண்ணலாம்... மீட் பண்ணலாம்னு 6 நாளா போன் பண்ணிப் பண்ணி கடைசில தியேட்டர் வாசல்ல ஜோதி ஏத்தியாச்சு.
மனுஷன் படு பிஸி. சனிக்கிழமை கூட சின்சியரா வேலை செய்யறவரை தெருவுக்கு இழுத்துட்டேன். வெய்யிலுக்கு கூல எளநி சாப்டுட்டே பேசிக்கிட்டுருக்கும்போது யாரோ ஒரு தாதா வந்து "எவண்டா இங்க ஸ்டாண்டுல காரை நிப்பாட்டுனது?"ங்கற ரேஞ்சுல சவுண்டு விட, நாங்க ரெண்டு பேரும் ஏண்டா வம்புன்னு கொஞ்சம் தள்ளிப் போய் நிறுத்தி பேசிக்கிட்டுருந்தோம். 10 நிமிஷம் பேசறதுக்குள்ள 5 போன். நடுவுல அனுஜன்யா கூட ஒரு போன். இப்பிடி பொளக்கிற வெயில்ல ஒரு 15 நிமிஷம் உலக (!!) விஷயங்களைப் பத்தி விவாதிச்சுட்டு கை குலுக்கி விடை பெற்று..... மற்றொரு நல்ல மனிதருடனான சந்திப்பும் ஷார்ட்-லிவ்ட் ஆகப் போன வருத்தத்துடன்....
அதுசரி.... யாரிந்த நட்சத்திரங்கள்?
முதலாமவர் அப்துல்லா அண்ணன். இரண்டாமவர் "புது யுக கம்பர்" நர்சிம்.
போன வாரம் சென்னைக்கு ஒரு அவசர வேலையாகப் போனபோது இடையில் கிடைத்த வாய்ப்பில் சிறு பதிவர் சந்திப்புகள்.

நர்சிம், நான்
30 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
முதல் நட்சத்திர படம் போடாததற்கு அண்ணனின் அமெரிக்க ரசிகர் படையின் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்!!!!
மீ த 1ஸ்ட்.... :-)))
சிறு பதிவர் சந்திப்பா இருந்தாலும், அருமையா சொல்லி இருக்கிங்க..
சந்திப்பு விமரிசையா நடந்திருக்கு
வாங்க ச்சின்னப்பையன்... அண்ணன் பெரிய நட்சத்திரம் இல்லயா... அதான் கேமராவுக்கே கண் கூசிடுச்சு... போட்டொவே எடுக்க முடியல.. :))
நன்றி நசரேயன்... ஆமாம் ரொம்ப விமரிசையா...
நன்றி ராகவன்... சந்திப்பு சிறுத்துப் போனதுல வருத்தம்தான்...
//முழு வண்ணப்படங்களுக்குப் பெயர் போன பரங்கிமலை தியேட்டர்//
:-))))
சத்தம் இல்லாம போயிட்டு வந்துட்டீங்க(ஊருக்கு போனதை தான் சொல்றேங்க:-D).. நான் இந்த வாரம் ஊருக்கு போகிறேன்
//முழு வண்ணப்படங்களுக்குப் //
நீல கலர்-ல போட்டு எங்க ஏரியா theatre மானத்தை வாங்கியிருக்கீங்களே, நியாயமா?
@ கிரி : ஹா..ஹா... போயிட்டு வாங்க... நண்பர்களை சந்திச்சுட்டு வாங்க....
@ பாபு : அது சும்மா உலுலாக்காட்டிக்கிண்ணே... கோச்சுகிடாதீங்க.... நானும் அதே ஏரியாதான்... இப்ப் தியேட்டரோட மூஞ்சியே மாறிப் போச்சு.. முன்ன மாதிரி ச்ச்ச்ச்சின்ன போஸ்டரெல்லாம் ஒட்டாம... ப்ப்பெரிய போஸ்டரா போடறாங்க... இப்பக் கூட "நான் கடவுள்" ஓடுது போல....
அந்த தியேட்டர் "ஓஷோ' சொன்னமாதிரி சிற்றின்பத்துல இருந்து பேரின்பத்தை அடைஞ்சுடுச்சு :)))
படங்கள் அவ்வளவுதானா?
முதல் நட்சத்திர படம் போடாததற்கு அண்ணனின் மங்களூர் ரசிகர் படையின் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்!!!!
மீ தி 13
சிறு பதிவர் சந்திப்பா இருந்தாலும், அருமையா சொல்லி இருக்கிங்க..
சந்திப்பு விமரிசையா நடந்திருக்கு
@ கார்க்கி : அம்புட்டுதாண்ணே :))
@ சிவா : உங்களுக்கு "மறுகூவல் மங்களூரார்" என்று பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறேன் :)))
கலக்கல் தல.. இன்னும் கொஞ்சம் நேரம் உங்களுடன் இருக்க முடியாமல் போனதிற்காக வருந்துகிறேன்.. நல்லா எழுதி இருக்கீங்க தல
@ நர்சிம் : அட... ஒரு பெரிய பிரபல பதிவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாததுக்கு நான் வருத்தப் படலாம். நம்மள மாதிரி ஆளு கிட்ட இருந்து சீக்கிரமே தப்பிச்சு ஓடுனதுக்கு நீங்க சந்தோஷமில்ல படணும் :))))))))))
அதான் ஆள் காணோமா?
@பழமைபேசி : ஆமண்ணே.... அவசர வேலையாப் போச்சு.
முதல் பதிவர் அப்துல்லாதான் என்பது அண்ணே” வில் தெரிந்தது.
இரண்டாமவர் நர்சிம்தான் என்பது கே.எஸ்.ஆர் என்ற வர்ணணையில் தெரியவில்லை.
எங்க பாஸ் அதவிட யூத்து, அழகு என்று சொல்லிக் கொள்கிறேன்!
நன்றி பரிசல்.... கரெக்டு.... கே.எஸ்.ஆர் தம்பின்னு சொல்லியிருக்கலாமோ?
இரும்புக்கடைகாரர் என்ன சொல்றார்.
// குடுகுடுப்பை said...
இரும்புக்கடைகாரர் என்ன சொல்றார்.
//
என்ன சொல்றாரு? எல்லாம் நல்லா இருக்கணும்.... நெறய பதிவு போடணும்.... நல்ல காலம் பொறக்கற சேதி சொல்றவரு நெறய பின்னூட்டம் போடணும்... அபைடின்னாரு :)))
அஹா... இப்படி எல்லாம் சந்திப்பு நடக்கிறதா..?
எனது வலைப்பூவை அறிமுகம் செய்த அப்துல்லாவிற்கு நான்றிகள்.
(உங்க மேல அவருக்கு என்ன பகையோ :)) ).
நர்சிம் கூட சினிமா ஹீரோ போல அழக இருக்காறே அவர் யாரு?
:)
வாங்க ஸ்வாமி....
//நர்சிம் கூட சினிமா ஹீரோ போல அழக இருக்காறே அவர் யாரு?
:)//
இஃகி !! இஃகி !! ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் :)
மின்னல் வேக சந்திப்பு. :)
மஹேஷ்... சனிக்கிழமை அழைக்கவேண்டும் என்று நினைத்திருந்து சுத்தமாக மறந்தே போய்விட்டேன்.. :( அடுத்த முறை வரும்போது தெரிவிக்கவும், கண்டிப்பாக சந்திக்கலாம்.
நன்றி sk....
நன்றி வெண்பூ.... நீங்க மெயிலுக்கு பதில் போடாததால நீங்க ஊர்ல இல்லன்னு நினைச்சேன்...
சை.. நான் ஜஸ்ட்டுல மிஸ் பண்ணிட்டேன்.. ஜாரிங்க..
Post a Comment