Monday, June 8, 2009

கி.பி.2209ல் ஒரு நாள்...


கினோவா கிரகம். கிட்டத்தட்ட பூமியைப் போன்ற வளிமண்டலத்துடன் கூடிய ஆனால் ஈர்ப்பு சக்தி குறைவான கிரகம். கண்டுபிடிக்கப்பட்டு மனிதன் குடியேறி 20 பூமி ஆண்டுகள் ஆகியிருக்கும். அங்கங்கு சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் பெரிய பெரிய "ஆபோ" வகை பறக்கும் தட்டுகள். அவற்றில் ஒரு பறக்கும் தட்டில் அமைந்த "கினோவா செப்டகன்" என்ற ப்ளானடரி செக்யூரிடி சென்டரில் மிதந்தபடி வேலை செய்யும் டாப் க்ளாஸ் விஞ்ஞானிகள்.

மேலே இருந்த பெரிய திரையில் மூலையில் சில எண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. திரையின் நடுவில் இரண்டு புள்ளிகள் ஒன்றை ஒன்று நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. எல்லார் முகங்களிலும் பெரும் பதட்டம். பக்கத்து (ஒரு மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம்தான்) கிரகமான "ஹூரா"விலிருந்து சில தீவிரவாதிகள் லேசர் போன்ற கதிர்வீச்சுகள் மூலம் செலுத்திய 'ரே பாம்' வருவதை அறிந்து அதை எதிர் கொள்ள 'கௌண்டர் ரே பாம்' செலுத்திவிட்டு பதட்டத்துடன் திரையை கவனித்துக் கொண்டிருந்தனர். ரே பாம் தாக்குதலை சமாளிக்க வேண்டிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அதை முறியடிக்கும் முயற்சி இதுவே முதல் முறை.

பல விஞ்ஞானிகள் பரபரப்பாக தங்களது டேப்லட்டுகளிலிருந்து சில கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பூமி கிரகத்திற்கான அதிகார பூர்வ நிருபரான மேக்ஸ் செய்திகளை சேகரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தான்.

திரையில் புள்ளிகள் இரண்டும் நெருங்கிக் கொண்டிருந்தன. சூழ்நிலையின் இறுக்கம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாக பிரதிபலித்தது. புள்ளிகள் இன்னும்... இன்னும்... இன்னும்... நெருங்ங்ங்ங்கி...... ஒரு பெரிய வெளிச்சம் உண்டாகி பின் இரண்டு புள்ளிகளும் மறைந்து போயின.

"ஹூரே....ஹூரே.... வீ டிட் இட் ! வீ ஆர் சேவ்ட் !! ரிமார்க்கபில் !! "

மிதந்தபடியே ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேக்ஸ் செய்தியை பூமிக்கு அனுப்பி விட்டு திரும்பினான். அலுவலகத்தின் மறு மூலையில் இந்த அமளியிலிருந்தெல்லாம் விலகி இரண்டு விஞ்ஞானிகள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல கண்ணை மூடி மிதவைப் படுக்கையில் படுத்திருந்தனர். அருகே கினோவாவில் மிக மிக அரிதாகக் காணக் கிடைக்கும் கார்பைடு பென்சிலும், பாலிமர் தாள்களும். மேக்ஸ் அவர்கள் அருகே வந்தான்.

"இவ்வளவு பரபரப்பா இருக்கு... என்னவோ பயங்கர யோசனைல இருக்கீங்க ரெண்டு பேரும்? என்ன விஷயம்?"

நிமிர்ந்து பார்த்தனர் இருவரும். நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்த களைப்பு இருவர் முகத்திலும்.

"ஒண்ணுமில்லைப்பா.... பூமி கிரகத்துல "ஆனந்த விகடன்" பத்திரிகைக்கு "கி.பி. 2409ல் ஒரு நாள்..."னு சயன்ஸ் ஃபிக்சன் கதை ஒண்ணு கேட்டிருக்காங்க. அதான் யோசிச்சிட்டுருக்கோம்" என்றனர் ப்ரொஃபசர் N.R.Sam என்ற "நர்சிம்"மும் டாக்டர் V.N.Poh என்ற "வெண்பூ"வும்.


நர்சிம் / வெண்பூ : கோச்சுக்கலைதானே? இஃகி ! இஃகி !!

33 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஸ்வாமி ஓம்கார் said...

ரொம்ப நாள் கழிச்சு வந்து இப்படியா?

கதை சூப்பர்.

பழமைபேசி said...

பேருக வெகு நேர்த்தியா இருக்கு... அப்பிடியே மகேசு என்ன செய்துட்டு இருக்கார்னு? இஃகிஃகி...

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா (29)
பழமைபேசி (28) //

இதெப்படி? இதெப்படி?? வாக்கு எண்ணிகையில் முறைகேடு... ஆய், ஊய்...

Mahesh said...

அட... வாங்கோ ஸ்வாமி... நமஸ்காரம்... உங்க பதிவெல்லாம் படிச்சுட்டேன்.... பின்னூட்டம் போட முடியல... மன்னிக்கணும்.

பழமைபேசி said...

ஆனா நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே... தமிழ்மணத்துல உங்களுக்கு நீங்கதான் ஒப்பமுக்கணும்... தெரியும்ல?!

Mahesh said...

வாங்க மணியாரே.... இன்னிகுதான் ரெம்ப நாளைக்கப்பறம் வலைப்பக்கம் வர முடிஞ்சது.... வெண்பூவும் நர்சிமும் இந்த தலைப்புல அடுத்தடுத்து எழுதினதுமே இதை ஒரு ஓரமா எழுதி வெச்சேன்... இன்னுக்குதான் வெளியிட நேரம் கிடைச்சுது.

Mahesh said...

//# பழமைபேசி (31)
# எம்.எம்.அப்துல்லா (28) //

வாக்கு எண்ணிக்கை சரியாப் போச்சா? :)))))))))))

பிரபலப் பதிவர் said...

சான்ஸே இல்ல, அருமையான கதை.

சென்ஷி said...

:)))))

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
நீங்களும் கிளம்பிட்டீங்களா?
இன்னும் என்னென்ன கிரகமெல்லாம் உருவாகப் போவுதோ?
கதை நல்லாருக்குன்ணே.

வெண்பூ said...

ஆஹா... ஆஹா... வெண்பூவையும் நர்சிமையும் பாத்திரமா வெச்சு ஒரு கதையா? கதை நல்லாயிருக்குன்னு சொல்லாமக்கூட யாராவது போயிடுவாங்களா...

கதை அருமை.

Mahesh said...

நன்றி பிரபலபதிவர்... போங்க ரொம்பத்தான் புகழறீங்க...:)

நன்றி சென்ஷி,....

நன்றி யூசுப் ஐயங்கார்... எல்லாம் ஒரு இதுக்குதான்... ஹி ஹி ஹி...

நன்றி வெண்பூ... ஐ... வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி...

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))

கதை சூப்பர்.

இராகவன் நைஜிரியா said...

சூப்பரோ சூப்பர்... ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் கலக்கிட்டீங்க...

அதிலும் நர்சிம் பெயரும், வெண்பூ பெயரும் கலக்கல்..

இராகவன் நைஜிரியா said...

இன்னும் 100 வருஷம் போனாலும், அடுத்த 100 வருஷம் பற்றி அறிவியல் புனைக் கதைகள் வந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கு...

நசரேயன் said...

கதை களகெட்டுது

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்...

நன்றி ராகவன் சார்... சயன்ஸ் ஃபிக்சனுக்கு காலம் நேரம் எல்லாம் கிடையாது :)

நன்றி தளபதியாரே... என்ன இருந்தாலும் உங்க கனவுக மாதிரி வருமா?

’டொன்’ லீ said...

haahaa...:-) நீங்களும் கிளம்பியாச்சா...

யோசப் அண்ணர் தான் பாவம். தன் கதைக்கு போட்டி யாருமே இல்லை என்று நேத்து வரை நம்பிட்டு இருந்தாரு..:-))

எம்.எம்.அப்துல்லா said...

அதகளம்

:)

எம்.எம்.அப்துல்லா said...

//# பழமைபேசி (31)
# எம்.எம்.அப்துல்லா (28) //(துண்டை உதறியபடி)ச்சேய்ய்ய்...எனக்கு இந்த பஞ்சாயத்துல மரியாதயே இல்லை. நான் கிளம்புறேன்.

:)))

எம்.எம்.அப்துல்லா said...

மிஸ்டர் மணியார்,

நான் இப்ப கிளம்புறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்

:))

நர்சிம் said...

குத்துங்க எஜமான் குத்துங்க.. ஹஹஹா.. அருமை தலைவா..

விஜய் ஆனந்த் said...

:-)))...

நல்ல கதைங்க!!!

கோவி.கண்ணன் said...

புனைவு நல்லா வந்திருக்கிறது.

போட்டியில் வெல்ல வாழ்த்துகள். என்னது போட்டிக்கு அனுப்பலையா ?
அவ்வ்வ்வ்வ்வ்

Mahesh said...

நன்றி டொன்லீ..

நன்றி அப்துல்லா அண்ணே...

நன்றி நர்சிம்... கோச்சுக்க மாட்டிங்கன்னு தெரியும் :)

நன்றி விஜயானந்த்...

நன்றி கோவி கண்ணன்... நான் போட்டிக்கு கதை எழுதி அனுப்பிச்சா ஒருத்தருக்கு பயங்கர கோவம் வரும்... எனக்கே பரிசு வேற கிடைச்சுடும்... அதனால போட்டிக்கு போகலை :)))))))))))

அனுஜன்யா said...

நல்லா இருக்கு மஹேஷ். Very timely and topical :)

ஆன் சென் யா

வால்பையன் said...

200 வருசம் ஆனாலும் அவுங்க அடங்க மாட்டாங்களா?

ராஜ நடராஜன் said...

புதுசா சினிமாப் படக் கதை சொல்றீங்களோன்ன்னு வந்தேன்.ஆனா விகடனுக்கு ஒத்திகையா இருக்கே!

Mahesh said...

நன்றி ஆங் சூ சீ.. சாரி சாரி... ஆன் சென் யா...

நன்றி வால்பையன்... பின்ன ரெண்டு பேரும் இன்னும் 200 வருஷம் இருந்து நிறைய கதைக எழுதணும்....

நன்றி ராஜநடராஜன்....

கிரி said...

மகேஷ் நல்லா எழுதி இருந்தீங்க.... :-)

கடைசில என்ன "கெரகம்டா" இதுன்னு ஆகிடுச்சு ஹி ஹி

மங்களூர் சிவா said...

:)))))))))))
haa haa

/

"ஒண்ணுமில்லைப்பா.... பூமி கிரகத்துல "ஆனந்த விகடன்" பத்திரிகைக்கு "கி.பி. 2409ல் ஒரு நாள்..."னு சயன்ஸ் ஃபிக்சன் கதை ஒண்ணு கேட்டிருக்காங்க. அதான் யோசிச்சிட்டுருக்கோம்" என்றனர் ப்ரொஃபசர் N.R.Sam என்ற "நர்சிம்"மும் டாக்டர் V.N.Poh என்ற "வெண்பூ"வும்.
/

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அட்டகாசம் தல.. பின்னிட்டீங்க.. ரே பாம், டேப்லட் (லேப்டாப்).. உம்ம அழிச்சாட்டியத்துக்கு அளவேயில்லையா?

அப்புற்றம் ரெண்டு ரேபாம் மோதிக்கொள்ளும்போது டிவி ராமாயணத்தில் ரெண்டு அம்புகள் சொய்ய்ய்ங்கென மோதிக்கொள்ளும் எஃபெக்ட்.!

Mahesh said...

நன்றி கிரி... அதே கெரகந்தான் !!

நன்றி மங்களூர் சிவா... :))

நன்றி ஆதி..... இன்னும் அந்த ராமாயணத்தையெல்லாம் மறக்கலையா நீங்க????