Saturday, May 23, 2009

முன்னும்....பின்னும்

முன்னும்.....

உதிர்ந்த இலைகள்
உதிக்கத் தயங்கும் சூரியன்

வண்டு குடைந்த அழுகிய மாம்பழம்
ஆணி இல்லாத பம்பரம்

பஞ்சரான சைக்கிள்
குஷ்டம் பீடித்த கை

சாணை பிடிக்காத அருவாள்
ஒளியற்ற நட்சத்திரம்

தோல் கிழிந்த முரசு
பேட்டரி இல்லாத டார்ச் லைட்

பூர்வாசிரமத்தில் ஓட்டைப் பிரித்தவர்கள்
இன்று(ம்) வோட்டைப் பிரிக்கிறார்கள்

முன்னேற்றம் முள்முனையளவும் இல்லை
பிரச்சனைகள் மட்டும் நிரந்தரம்.

அதனால் என்ன?
2 வருடங்களுக்கு ஒருமுறையாவது
ஏதாவது ஒரு தேர்தலை சாக்கிட்டு
சிவகாசியில் அச்சடித்த காந்தி படம் போட்ட தாள்களும்
காக்கா பிரியாணியும் கிடைக்கிறதே !!

தமிழகம் ஒளிர்கிறது !!

...... பின்னும்

பிச்சையெடுக்கும் கரங்கள்
பேப்பர் பொறுக்கும் சிறுவர்கள்

தீக்குளிக்கும் இளைஞர்கள்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்

நலிவடையும் நெசவாளிகள்
கும்பி குறுகிய குடிசைத்தொழிலாளிகள்

குடிநீரில்லா கிராமங்கள்
பள்ளிக்கூடமில்லாத பட்டிதொட்டிகள்

பேருந்து போகாத பேரூராட்சிகள்
மருத்துவ வசதியற்ற மலைவாழ் மக்கள்

முன்னேற்றம் முள்முனையளவும் இல்லை
பிரச்சனைகள் மட்டும் நிரந்தரம்.

அதனால் என்ன?
மகனுக்கும் மகளுக்கும் மருமகனுக்கும் மைத்துனனுக்கும்
மத்திய அரசை ஆட்டிவைத்து
மந்திரி பதவியைக் கேட்டுப் பெற
எங்களால் முடிகிறதே !!

தமிழகம் ஒளிர்கிறது !!

20 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

நல்லா இருக்கு...

//சிவகாசியில் அச்சடித்த காந்தி//

நாசிக்? அல்லது, உள்ளூர்த் தயாரிப்பு இதுலயுமா?? கோயப்பத்தூர்காரவுங்க சிவகாசிக்கு போயிட்டாங்களா??

அறிவிலி said...

//மகனுக்கும் மகளுக்கும் மருமகனுக்கும் மைத்துனனுக்கும்
மத்திய அரசை ஆட்டிவைத்து
மந்திரி பதவியைக் கேட்டுப் பெற
எங்களால் முடிகிறதே !!//

சிக்கல் தீந்துருச்சா?

ஆயில்யன் said...

//மகனுக்கும் மகளுக்கும் மருமகனுக்கும் மைத்துனனுக்கும்மத்திய அரசை ஆட்டிவைத்துமஏந்திரி பதவியைக் கேட்டுப் பெறஎங்களால் முடிகிறதே !!
தமிழகம் ஒளிர்கிறது !!
///

எதிர்த்துப்பேச யாருமில்லா சனநாயக நாட்டில்...!

சனநாயகமும் ஒளிர்கிறது கட்சியிலும் காட்சியிலும் :-(

Mahesh said...

வாங்க மணியாரே.... சிவகாசி சீப்புண்ணே..

நன்றி அறிவிலி... அதெல்லாம் தீத்துப்புடுவாய்ங்கண்ணே...

நன்றி ஆயில்யன்.... என்னமா ஜொலிக்குது!!

மங்களூர் சிவா said...

:)))))))))))
நல்லா இருக்கு

sakthi said...

superb

கிரி said...

அசத்தல் மகேஷ்

Mahesh said...

நன்றி மங்களூர் சிவா...

நன்றி sakthi...

நன்றி கிரி....

நர்சிம் said...

நச்.. வார்த்தைகள்...அத்தனையும் தேர்ந்தெடுக்கப்பட்டவை.

Thamira said...

மோசமான கவிதை முயற்சி.! உள்ளீடு, வடிவம், வார்த்தைகள் ஒன்றிலுமே திருப்தியில்லை.

Mahesh said...

//ஆதிமூலகிருஷ்ணன் said... மோசமான கவிதை முயற்சி.! உள்ளீடு, வடிவம், வார்த்தைகள் ஒன்றிலுமே திருப்தியில்லை.//

மரபுக்கவிஞ்சர்களோட இதான் ப்ரச்னை.... புதுக்கவிதையே புடிக்காது... (வயசாயிடுச்சில்லே...!!) இருங்க இருங்க... இன்னும் புதுப் புது மாதிரியா கவுஜைக எளுதி உங்களை பாடாப்படுத்துனாத்தான் புத்தி வரும்...
:)))))))))))))))))))))))))))

Mahesh said...

//நர்சிம் said...
நச்.. வார்த்தைகள்...அத்தனையும் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
//

நீங்க ரொம்ப நல்லவரு...... இதான் வஞ்சப் புகழ்ச்சியா? யார் என்ன சொன்னாலும் கவுஜ எளுதியே தீருவேன்...

@ ஆதி: பாருங்க... நர்சிம் அண்ணன் கிட்ட இது மாதிரி ஒரு நல்ல(!!) கவிதையை எப்பிடி ரசிக்கறதுன்னு ட்யூஷன் எடுத்துக்குங்க..
:)))))))))))))))))))))))))))))))

Anonymous said...

தமிழர்ஸ் ஓட்டு பட்டையை நிறுவியதற்க்கு நன்றி

Suresh said...

அருமையான பதிவு நண்பா

பழமைபேசி said...

புதுகையார் முன்னணியில இருக்குறதை கண்டிச்சி, இந்த அடையாள உண்ணாவிரதம்... அடச் சே.. அடையாள மறுமொழிய இட்டுகிறேன்!

தமிழ் said...

அருமை நண்பரே

Ramanna said...

அருமை அருமை

வால்பையன் said...

ஆமாமா

நல்லாவே ஒளிருது!

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

பழமைபேசி said...

//நாம எளுதற(!)தையும் படிக்கறவங்க....//

எழுதற(!)தையும்