Monday, May 4, 2009

புலியும் புலி சார்ந்த வனமும்...


"அலோக், ராகேஷ், வெங்கட்..... வாங்கடா போய் தூங்கலாம்... நாள் பூரா பஸ்ல வந்தது அலுப்பா இருக்கு.... காலைல சீக்கிரம் வேற கிளம்பணும்... எவ்வளவுதாண்டா குடிப்பீங்க? ஓசில கிடைச்சா ஒம்பது பாட்டிலாடா?"

"ஓயே... பப்பு.. ஜா.. ஜா... தூத் பீ கே சோ ஜா... ஜா மேரா முன்னா..."

"ஹா.... ஹா... ஹ்ஹோஹோ... ஹா"

"சிரிங்கடா... நல்லா சிரிங்க... குடிச்சு கொடல் வெந்து ஓஞ்சு போங்க... எவனாவது காட்டேஜுக்குள்ள வாந்தி கீந்தி பண்ணினீங்க... மவனுகளா... நாளைக்கு டெல்லிக்கு நாலு தந்திதான் போகும்..."

நான் வெறுப்புடன் அவர்களை சபித்துக் கொண்டே எங்கள் காட்டேஜுக்குத் திரும்பினேன்.

'மணி இப்பவே பத்தரை. இனி எப்ப வந்து எப்ப தூங்குவானுக? 7 மணிக்காவது கெளம்பினாத்தான் சரியா இருக்கும்... இவுனுகளை நம்பி ப்ரொகிராம் போட்டேனே... நம்ம புத்தியை எதால அடிச்சா தேவலாம்?'

எங்கள் டெல்லி அலுவலகத்தின் நிறுவன நாளை ஒட்டி எல்லாருமாக நைனிதால் டூர். ஒரு வாரத்துக்கு நைனிதால், பீம்தால், சாத்தால் எல்லாம் போவதாக திட்டம். இன்று காலை கிளம்பி மாலை 6 மணிக்கு ராம்நகர் வந்து க்ளாரிட்ஜஸ் ரிசார்ட்ஸ் வந்து சேர்ந்தோம். முதல் 3-4 மணி நேரங்கள் வ.வா.ச. மாதிரி பாட்டும் கூத்துமாக ஜாலியாகப் போனாலும், டேராடூன் தாண்டியதும் மலைப்பாதைப் பயணம் மிகவும் அலுப்பாக இருந்தது. வந்து இறங்கி எல்லோருக்கும் காட்டேஜ் கொடுத்து, குளித்து விட்டு வந்து சுவையான இரவு சாப்பாட்டிற்குப் பின் தூங்கலாம் என்றால் இந்தக் கழுதைகள் என்னவோ இனிமேல் உலகத்தில் குடிப்பதற்கு வெறும் தண்ணீரைத் தவிர எதுவும் கிடைக்காது என்பது போல மண்டுகிறார்கள்.

டிசம்பர் மாதம் என்பதால் நல்ல குளிர். ஸ்வெட்டர் போட்டு மேலே மூன்று அடுக்கு ஜேக்கெட்டையும் தாண்டி குளிர் உறைத்தது. நானும் வர்கீஸும் அசெம்பிளி ஹாலில் இருந்த விறகு அடுப்பிற்குப் பக்கத்தில் சிறிது நேரம் குளிர் காய்ந்து விட்டு எங்கள் காட்டேஜுக்குச் சென்றோம். நான் கொஞ்ச நேரத்தில் ரஜாய்க்குள்ளே சுகமாக உறங்கிப் போனேன்.

காலை 6:30 க்கு எழுந்தபோது ஒவ்வொருவனும் ஒவ்வொரு இடத்தில் கோணல் மாணலாய் படுத்திருந்தனர். நிலைமையைப் பார்த்தால் மட்டையால் அடித்து எழுப்பினால் ஒழிய இந்த மட்டைகள் எழுந்திருக்க மாட்டார்கள் போலத் தோன்றியது. காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தேன். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் காட்டேஜுக்கு பின்புறம் "கோசி" ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ரிசார்ட் மலையடிவாரத்தில் ஒடுங்கி இருந்ததிலும் ஒரு அழகு இருந்தது. அந்த அதிகாலைக் குளிரிலும் வர்கீஸ் ஆற்றில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அதெல்லாம் முதல்ல குதிக்கற பாரு... அப்பத்தான் விர்ர்ர்ர்ர்னு குளிர் ஏறர மாதிரி இருக்கும். நல்லா ரெண்டு முங்கல் போட்டுட்டேன்னு வெச்சுக்க... குளுராவது... கிளுராவது.... ஒண்ணும் தெரியாது.... என்னமா இருக்கு தெரியுமா?"

"அட போப்பா... தண்ணியைப் பாத்தாலே கண்ணு வெறைக்குது... குளிக்கிறதா? நன நல்லா சுடு தண்ணில குளிச்சுட்டு வந்துட்டேன்... சரி... சீக்கிரம் வா... பசிக்குது... சாப்ட்டுட்டு போவோம்..."

"இதோ வந்துட்டேன்... ரெண்டே நிமிஷம்..."

தொபீர் என்று அவன் நீரில் குதிக்கும் சத்தக் கேட்டது. நான் காலைக் குளிரையும் ரம்மியமான சுற்றுப்புறத்தையும் ரசித்தபடி மெள்ள நடந்து உணவுக்கூடத்துக்கு வந்தேன். எங்கள் அலுவலகத்தின் டைரக்டர்கள் இருவர் அங்கே பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர். நானும் கொஞ்சம் ரொட்டி, ஜாம், பழங்கள், தேனீர் எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வர்கீசும் இன்னும் சிலரும் வந்தனர்.

உணவுக்குப் பிறகு நான், வர்கீஸ், அலோக் மூவரும் ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். நாங்கள் தங்கியிருந்த ரிசார்டில் இருந்து 8 கி.மீ தூரத்தில் "ஜிம் கார்பெட் தேசிய பூங்கா ம்யூசியம்" இருப்பதாக மேப்பில் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது மலையின் மேலே ஏற வேண்டும் என்று. ஆனாலும் போயே தீர்வது என்ற முடிவு செய்யும்போது ராகேஷும் வந்து சேர்ந்தான்.

"முஜே சோட் கர் நிகல் கயே ந? கமீனே...."

"சாலே... தூ கூப் பீகர் சோ ரஹா தா... பதா நை கப் உடேகா.... பியகர் சாலா...."

"டீக் ஹை.. டீக் ஹை... சல்...சல்... ஸ்யாதா ஜபான் மத் சலாவ்..."

நால்வரும் மெதுவாக மேலே ஏற ஆரம்பித்தோம். வழியில் யாரோ ஒருவன் சொன்னதைக் கேட்டு தார்ச்சாலையில் வளைந்து வளைந்து போகாமல், சைக்கிளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஆற்றின் குறுக்கே நடந்து சென்று அக்கரையில் ஏறி காட்டுப் பாதை வழியாக சென்றோம். வழியில் ஆற்றின் நடுவே இருந்த உயரமான ஒரு மண் குன்றின் மேலே இருக்கும் ஒரு தேவி கோயிலையும் பார்த்து விட்டு கார்பெட் ம்யூசியம் சென்று சேர்ந்தோம்.

ம்யூசியத்தின் உள்ளே ப்ரிட்டிஷ் ராணுவ அதிகாரியும், சிறந்த வேட்டைக்காரரும், குமாவோன், தெராய் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த சில ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாடி அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றியவருமான "ஜிம்" கார்பெட் என்ற மனிதரின் வாழ்க்கை வரலாறு, அவர் எடுத்த புகைப்படங்கள், பாடம் செய்த அவரால் கொல்லப்பட்ட புலிகள் எல்லாம் பார்வைக்கு இருந்தன. அவர் எழுதிய "Maneaters of Kumaon" புத்தகமும் விற்பனைக்கு இருந்தது. அவர் நினைவாகவே 4000 அடி உயரத்தில் 500 சதுர கி.மி பரப்பில் "கார்பெட் தேசிய பூங்கா" அமைக்கப்பட்டு புலிகளின் சரணாலயமாக ஆக்கப்பட்டு, "பெங்கால் டைகர்" போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் புலி இனங்களை அரசு பாதுகாத்து வருகிறது.

ம்யூசியத்தை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நல்ல மேகமூட்டம். வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்தது. வரும்போதுதான் ஏற்றம் என்று குறுக்கு வழியில் வந்தோம். இறங்குபோது சாலை வழியாகவே போகலாம், சும்மா உட்கார்ந்திருந்தால் போதும் என்று முடிவு செய்தோம். இரண்டு சைக்கிள்களின் சக்கரங்கள் பஞ்சர் ஆகியிருந்ததை அப்போதுதான் கவனித்தோம். அந்த இடத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடைகள் எதுவும் கிடையாது என்றும் ராம்நகர்தான் போகவேண்டும் என்று ம்யூசியம் கீப்பர் சொன்னார். எல்லாமே ஸ்போர்ட்ஸ் வகை சைக்கிள்களாக இருந்ததால் கேரியர் கிடையாது. இருந்தால் கேரியரில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு மற்ற சைக்கிளை கையால் பிடித்துக் கொண்டு ஓட்டி வந்து விடலாம். அதற்கும் வழியில்லை. பிறகு எல்லாருமே சைக்கிள்களைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். சாலையின் இரு புறமும் உயர்ந்த அடர்ந்த மரங்கள் இருந்ததால் வெளிச்சம் ரொம்பவே குறைவாக இருந்தது. மறைந்த தேவன் அவர்கள் எழுதுவது போல "கையெழுத்து மறையும் நேரம்" போல இருந்தது. அவ்வப்போது தாண்டிச் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குடன் சென்றன.

ராகேஷ் கொஞ்ச நேரத்திலேயே சோர்ந்து விட்டான். நடுவில் அலோக் வேறு அந்த இடத்தில் அந்த நேரத்தில் புலி வந்து விட்டால் என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தான். அந்த ம்யூசியம் கீப்பர் வேறு எங்களிடம் பேசுகையில், குளிர் காலங்களில் பகல் நேரத்தில் புலிகள் வெயிலுக்காக சுதந்திரமாகச் சுற்றி வரும் என்றும், அந்த 500 சது கி.மீ மொத்தப் பரப்பும் சரணாலயம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்க முடியும் என்றும் சொல்லியிருந்தார். எல்லோருக்குமே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

பயத்தை விரட்ட சத்தமாகப் பேசிக் கொண்டும் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டும் நடந்தோம். பசி வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒருவனும் ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொண்டு வரவில்லை. ஒரே ஒரு கேமிரா மட்டும்தான் இருந்தது. அது கூட ம்யூசியம் வருவதற்குள்ளாகவே 36 படமும் எடுத்து முடிந்திருந்தது.

சாலையோரத்தில் அத்தி பூத்தாற் போல இருந்த அந்த டீக்கடையைப் பார்த்தோம். காணாது கண்டவர்கள் போல சைக்கிளைப் போட்டு விட்டு போய் டீ குடித்து, பிஸ்கட் தின்று விட்டு, கொறித்துக் கொண்டே போக சமோசா, ப்ரெட் பகோடா எல்லாம் சேகரித்துக் கொண்டு மறுபடி நடக்க ஆரம்பித்தோம். இன்னும் இருட்டு. அப்போது சாலையின் ஒரு பக்கத்திலிருந்து யாரோ ஒரு பெரியவர் வந்து எங்களோடு நடக்க ஆரம்பித்தார். பார்வைக்கு நன்கு படித்தவர் போல இருந்தார். 75 வயது இருக்கும். ஏதோ ஒரு பாட்டை முனகிக் கொண்டே வந்தார். நாங்கள் அவரை கவனித்ததும் பேசுவதை நிறுத்தி விட்டோம்.

அவரே எங்களோடு பேச ஆரம்பித்தார். நாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம், என்ன செய்கிறோம் என்றெல்லாம் கேட்டு விட்டு, அலோக்கின் புலி பற்றிய பயங்களையும் புலம்பல்களையும் கேட்டவுடன் சிரிக்க ஆரம்பித்தார். அவர் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருப்பதாகவும், பலமுறை புலிகளை நேரில் பார்த்திருப்பதாகவும் சொன்னார். பிறகு புலிகளின் சில விசித்திரமான பழக்கங்கள், குணங்கள் போன்றவற்றை விவரித்துக் கொண்டு வந்தார். நாங்கள்தான் சோர்ந்து போய் நடை தளர்ந்ததே தவிர அவர் களைப்படைந்ததாகவே தெரியவில்லை. அவர் ராம்நகர் மார்கெட்டுக்கு போக வேண்டும். அது நாங்கள் தங்கியிருந்த ரிசார்டையும் தாண்டி 5 கி.மீ. தூரத்தில் இருந்தது. எங்களுக்கோ ஆச்சரியம். அதுவும் அவர் தினமும் மார்கெட்டுக்கு போய்வருவதாக சொன்னதும் ஆச்சரியம் அதிகமானது.

புலிகள் தொடர்பான சுவையான பல நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் எங்கள் ரிசார்டுக்கு அருகில் வந்து விட்டோம். மற்ற சில நண்பர்களும் அங்கே சாலையோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் எங்கள் அருகே வந்து விசாரித்தனர். அவர்களுக்கும் அந்த பெரியவரை அறிமுகம் செய்து வைக்க விரும்பியும், முடிந்தால் புலிகளைப் பற்றி அவரை நிறையப் பேசவைக்க வேண்டும் என்று கேட்கலாம் என்றும் நினைத்து அவரை அழைக்கத் திரும்பினோம்.

அங்கே..... யாரும் இல்லை !!

சாலையின் மறுபக்கம் அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சிறிய அறிவிப்புப் பலகை இருந்தது. அதில் காணப்பட்டது :

"The great hunter, saviour of Kumaon, Jim Corbett ,was fatally attacked by a tiger here in April 1955"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் ஜீப்பிலும், யானை மீதும் அமர்ந்து பூங்காவினுள் புலிகளைப் பார்க்க காடு முழுவதும் சுற்றியதும், ஒரு புலியைக் கூட பார்க்க முடியாததும், புலிகளின் கால்தடங்களை மட்டுமே பார்த்ததும், பீம்தால், சாத்தால் எல்லாம் பார்த்து டில்லி திரும்பும் வரை அலோக்கின் ஜுரம் குறையாமல் இருந்ததும் அவ்வளவு முக்கியமில்லாத விஷயங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


டிஸ்கி : இது 99% உண்மைக் கதை. எந்த 1% கற்பனை என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Edward James "Jim" Corbett (25 July 1875 – 19 April 1955)


படங்களுக்கு நன்றி : விக்கிபீடியா

25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

நல்ல அனுபவம்... அலோக்தான் பாவம்... இஃகிஃகி!

எம்.எம்.அப்துல்லா said...

புலிப் பத்தியா எழுதுறீங்க??? புடுச்சு உள்ள வைக்கப் போறாங்கடி..

இஃகிஃகி!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
புலிப் பத்தியா எழுதுறீங்க??? புடுச்சு உள்ள வைக்கப் போறாங்கடி..

இஃகிஃகி!
//

இஃகிஃகி!!!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said... //

அண்ணே, ஒன்னு தெரிஞ்சுகோங்க... மாசா மாசம் நீங்க எங்கூட போட்டி போடுறீங்க... ஆனாலும் நாந்தான் வெல்லுவேன்....

Mahesh said...

வாங்க மணீயாரே... என்னாச்சு நீங்களும் அப்துல்லா அண்ணனும் என்னமோ வெளாண்டுக்கிறீங்க? நல்லாத்தான் இருக்கு :))))

கொஞ்ச நா கடையச் சாத்தி வெச்சரலாம்னு பாக்கறேன்.... நெம்ப காத்தாடுது... வேற எதாச்சி பண்ணோணும் !!

பழமைபேசி said...

இதைப் பாருங்க.... ரொம்ப ஆர்வமா இருக்கு... தினமும் தொடர்ந்துட்டு வர்றேன்...

http://www.xbhp.com/talkies/tourer/7016-destination-unknown.html

பழமைபேசி said...

//கொஞ்ச நா கடையச் சாத்தி வெச்சரலாம்னு பாக்கறேன்.... நெம்ப காத்தாடுது... வேற எதாச்சி பண்ணோணும் !!//

இல்லண்ணே, எங்கயுந்தான்.... பொட்டிதட்டிகளோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சி போல...

சி தயாளன் said...

//டிஸ்கி : இது 99% உண்மைக் கதை. எந்த 1% கற்பனை என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
//

haha...i like it..:-)

அறிவிலி said...

வாவ்... சூப்பர்.

ஏதோ நெஜமான அனுபவத்த சொல்றீங்கன்னு பாத்தா, 1 சத கலப்படத்தால அமானுஷ்ய கதையா மாத்திட்டீங்களே..

ராஜ நடராஜன் said...

நானும் 1% கற்பனையை தேடுகிறேன்.கற்பனை தேற மாட்டேங்குதே!

சின்னப் பையன் said...

அண்ணே.. கற்பனை என்னன்னு தெரியலியே....

சின்னப் பையன் said...

அட.. அங்கேயும் அப்படிதானா??? என் கடையிலேயும் நிலமை அப்படிதான்... :-((

Mahesh said...

அந்த சுட்டிக்கு நன்றி மணியாரே....

நன்றி டொன்லீ...

நன்றி அறிவிலி....

நன்றி ராஜநடராஜன்...

நன்றீ ச்சின்னப்பையன்.. .இப்ப காத்துகாலமா? இப்பவே இப்பிடி.. இன்னும் ஆடி மாசக் காத்து???

Mahesh said...

@ அறிவிலி :

அந்த அமானுஷ்யம் 100% உண்மை... கற்பனை வேற இடத்துல...

எம்.எம்.அப்துல்லா said...

////எம்.எம்.அப்துல்லா said... //

அண்ணே, ஒன்னு தெரிஞ்சுகோங்க... மாசா மாசம் நீங்க எங்கூட போட்டி போடுறீங்க... ஆனாலும் நாந்தான் வெல்லுவேன்....

//

மணியண்ணே முயற்சிகள் தவறலாம்...முயற்சிக்கத் தவறலாமா??

நான் போட்டி போடுவேன் :)

வால்பையன் said...

நல்லாயிருக்குங்க உங்க அனுபவம்!

Thamira said...

நல்ல துவக்கம், தொடர்ந்த விவரிப்புகள், இறுதியில் சுவாரசியம்.. ஒரு தேர்ந்த எழுத்தாளரோட நடை உங்களோடது. சப்ஜெக்ட்தான் கொஞ்சம்.. ஹிஹி..

அப்புறம் கடையைச் சாத்தப்போறீங்களா? ஏன்ங்க.. இப்படி ரசனையான ஆளுங்க சோர்ந்துபோயிட்டா எப்பிடி? இப்ப நானெல்லாம் இல்ல.?

அப்புறம் அந்த கிளைமாக்ஸ்.. என்ன நீங்க திரும்பி பார்க்கிறதுக்குள்ள திருப்பத்துல திரும்பி போயிருப்பாரு.. விடுவீங்களா.?

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

அறிவிலி said...
@ Adhi
//இப்ப நானெல்லாம் இல்ல.?//

Check todays hits 1450+

Smoke comes out from all holes
(just for joke)

Thamira said...

அறிவிலி said...
அறிவிலி said...
@ Adhi
//இப்ப நானெல்லாம் இல்ல.?//

Check todays hits 1450+

Smoke comes out from all holes
(just for joke)
//

உண்மையில் என் பதிவுக்கு சராசரியா 250 ஹிட்ஸ்தான் வரும். பல பதிவுகளுக்கு 50 திலிருந்து 80க்குள் வாங்கியிருக்கிறேன். மகேஷ் அண்ணன், எனக்கெல்லாம் இது ரொம்ப சாதாரணம். இன்னிக்கு என்னவோ அதிசயம். ஹிட்ஸ் பொழியுது. அதுவும் பொறுக்கலையா உங்களுக்கு? நல்லாருங்க சாமி.!

அப்பப்ப பரிசல், கார்க்கியெல்லாம் பார்த்து நானும் இப்படித்தான் காதுல புகை விட்டுப்பேன்.!

நசரேயன் said...

ம்ம்.. அனுபவம் நல்லா இருக்கு

Mahesh said...

நன்றி வால்பையன்....

நன்றி ஆதி.... அ? அப்பிடியெல்லாம் கடையச் சாத்தி வெச்சு உங்களையெல்லாம் தப்பிக்க உட்ருவமா? சும்மா... உலுலாய்க்கு... (அப்பிடின்னு சொல்லத்தான் ஆசை :()

நன்றி அறிவிலி.....

நன்றி நசரேயன்....

நன்றி அப்துல்லா... மணியாரே... எதோ உங்க புண்னியத்துலதான் ரெண்டு டீயாச்சும் விக்குது !!

Ramanna said...

ரொம்ப நல்லா இருக்கு இந்த ப்லொக்.

மங்களூர் சிவா said...

/
எம்.எம்.அப்துல்லா said...

புலிப் பத்தியா எழுதுறீங்க??? புடுச்சு உள்ள வைக்கப் போறாங்கடி..
/

:))))))))
ROTFL

மங்களூர் சிவா said...

நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க! வாழ்த்துக்கள்.