Wednesday, May 13, 2009

"பாயசம் வித் பரிசல்"


பரிசலின் பிறந்தநாளை ஒட்டி "துக்ளக் டிவி"யில் ஒரு நேர்காணல்.


"தமிழ் வலையுலகம்கறது சுஜாதா சார் "விக்ரம்"க்கு கதை எழுத காலத்துல இருந்து இருக்கு. இருந்தாலும் தமிழ் வலைப்பூக்கள், அதாவது 'டமில் ப்ளாக்ஸ்', போன சில வருஷங்களாத்தான் இருக்கு. அதுவும் கடந்த 2 வருஷமா ரொம்ப பிரபலமா ஆகி பல பதிவர்கள் உலகத்தோட பல பகுதிகள்ல இருந்து வெரைட்டியா எழுதிக்கிட்டுருக்காங்க. வலைப்பூக்களை படிக்கறவங்கங்களும் நாளுக்கு நாள் அதிகமாயிட்டுருக்காங்க. இந்த நேரத்துல ஒரு வலைப்பூவுக்கு மக்களை கவர்வதுங்கறது ஒரு சின்ன சவாலாவே இருக்கு. அந்த சவாலை ஏத்துக்கிட்டு ஜனரஞ்சகமா எழுதி ஒரு குறுகிய காலத்துலயே பிரபலமாயிருக்கற ஒரு பதிவரை இப்ப சந்திக்கப் போறோம். இன்னிக்கி அவரோட பிறந்த நாள்ங்கறது கூடுதல் மகிழ்ச்சி. வாங்க பேசலாம் 'பரிசல்காரன்'கற க்ருஷ்ணகுமாரோட."


"வாங்க பரிசல்...சாரி க்ருஷ்ணா... முதல்ல எங்க எல்லார் சார்புலயும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"


"ரொம்ப நன்றிங்க.... "


"பரிசல்காரன்... பேரே ரொம்பப் புதுமையா இருக்கு... அந்தக் காரணத்தை நீங்க உங்க பதிவுல சொல்லியிருந்தாலும் நேயர்களுக்காக ஒருமுறை நீங்களே நேர்ல சொல்லிடுங்களேன்"


"நன்றிங்க. அது... நாங்க சில நண்பர்கள் சேந்து ஒரு குழுவா சின்னச் சின்ன சமூக சேவைகள் செஞ்சுக்கிட்டுருந்தோம். அந்த குழுவுக்கு "பரிசல்"னு பேர். அதாவது கஷ்டத்துல இருக்கறவங்களை கரையேத்த உதவற மாதிரி... பதிவு எழுத ஆரம்பிக்கும்போது அந்த குழுவைச் சேர்ந்தவன்கற அடையாளத்துக்காக 'பரிசல்காரன்'ன்னு பேர் வெச்சேன். சிலபேர் கேட்ட மாதிரி எனக்கும் ஹொகேனக்கல் ஃபால்ஸ்ல பரிசல் விடறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க"


"ரொம்ப தமாஷா பேசறீங்க.... பதிவு எழுத ஆரம்பிச்சு 1 வருஷத்துல இப்ப உங்களுக்கு 300 ஃபாலோயர்ஸ். ஜூனியர் விகடன்ல உங்க படைப்பு. பிறந்த நாள் பரிசு மாதிரி ஆனந்த விகடன்ல உங்க எழுத்து. கூடவே உங்க நண்பர்களோட படைப்புகளும். எப்பிடி உணரறீங்க?"


"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மனசுக்கு நிறைவா இருக்கு. எல்லாருக்கும் இந்த சந்தர்ப்பத்துல் நன்றி சொல்லணும்."


"பதிவு + பத்திரிக்கை.... இது உங்க தற்போதைய வேலைக்கோ ஃபேமிலி லைஃப்க்கோ எந்த விதத்துலையாவது பாத்ப்பை ஏற்படுத்துதா?"


"கண்டிப்பா இல்லைங்க. என் எல்லைகளை உணர்ந்தே இருக்கேன். தெளிவா இருக்கேன். எதுவும் அடுத்ததை பாதிக்க விடாம பாத்துக்கறேன். ஆனா இப்ப கொஞ்சம் பொறுப்பு கூடியிருக்கறதால இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்."


"குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருக்கா? அட்லீஸ்ட் உங்களை அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் அன்னியப்படுத்தறதா நினைக்கிறாங்களா?"


"இல்லைங்க. இதைப் பத்தி ஒரு பதிவே போட்டுருக்கேன். அவங்களையும் கூட அழைச்சுக்கிட்டேதான் இந்த பயணம்...."


"நண்பர்கள்....?"


"அவங்களோட ஊக்கமும், ஒத்துழைப்பும், அன்பும்தான் என்னை இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்துருக்குன்னு சொல்றதுல எனக்கு ஒரு தனி பெருமை... மகிழ்ச்சி...."


"அடுத்தது...?"


"இன்னி தேதிக்கு எழுத்துத் துறைல வளர்ச்சிங்கறது எந்த திசைலயும் சாத்தியம்.... புதுசு புதுசா பாதைகள் நிறைய இருக்கு... எதைப் பத்தி எழுதறதுன்னு அசந்து போகாம எழுத விஷயங்கள் நிறைய இருக்கு.... அதனால எந்த விதத்துல எல்லாம் என் எண்ணங்களை எழுத்துகளால வெளிப்படுத்த முடியுமோ அதுல எல்லாத்துலயும் சாதிக்கணும்... உயரங்களை அடையணும்....."


"ரொம்ப மகிழ்ச்சி க்ருஷ்ணகுமார்.... உங்களோட இந்த நேர்காணல் ரொம்ப ஃப்ரீஃபா இருந்தாலும் நிறைவா இருந்தது.... "


"ரொம்ப நன்றிங்க...."


"விடை பெறுவதற்கு முன்னால.... மறுபடி ஒருமுறை எல்லாருடைய சார்பாவும் பிறந்த நாள் வாழ்த்துகள் !!"


"நன்றி... நன்றி..."


"ஒரு நிமிஷம்... இந்த பாயசத்தை சாப்டுட்டு... பாயச கப்புல உங்க ஆட்டோக்ராஃப் போட்டுடுங்க.... உங்க சார்பா அதை ஏலம் விட்டு வர தொகையை "உதவும் கரங்க"ளுக்கு குடுத்துடறோம்....."

"அட... பாயசமும் நல்லா இருக்கு... உங்களோட இந்த பாசமும் நல்லா இருக்கு"


டிஸ்கி: பரிசல், உங்களைக் கேக்காமயே உங்களோட alter ego-வா உங்க பேட்டியை வெளியிட்டதுக்கு "ரைட்... விடு"ன்னு சொல்வீங்கன்னு நினைக்கிறேன். :)

22 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

கோவி.கண்ணன் said...

//டிஸ்கி: பரிசல், உங்களைக் கேக்காமயே உங்களோட alter ego-வா உங்க பேட்டியை வெளியிட்டதுக்கு "ரைட்... விடு"ன்னு சொல்வீங்கன்னு நினைக்கிறேன். :)//

உண்மையான பேட்டி என்றே நினைத்தேன். நல்ல நேர்த்தியாக இருக்கு மகேஷ் !

வாழ்த்துகள் இருவருக்கும் !

Mahesh said...

நன்றி கோவியாரே....

ஐ ! நெஜமாவா?? !!!

அறிவிலி said...

அருமையான பேட்டி(கற்பனை)

பாயாச கப்பு ஏலத்த ஆரம்பிக்கலாமா?

ஸ்வாமி ஓம்கார் said...

பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


திரு மகேஷ். அருமையான வடிவமைப்பு.

ஒரு சந்தேகம்...

பாயசம் சாப்பிட்டதும் ஏன் ஏலம் விடனும்? அதையும் சாப்பிடலாம் இல்ல தூர வீசலாம். சின்ன ஏலக்காய்ல வர பணத்தை கொண்டு போய் உதவும் கரங்களுக்கு கொடுக்கலாமா ? ;) :)

Anonymous said...

பரிசல் உங்க நண்பர்ங்றதால, இது உண்மையா இருக்குமோன்னு நினைச்சேன். :-))
பரிசலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சித்ரா

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பதிவில் ஒரு வித்தியாசமான முயற்சி

கலக்கிட்டீங்க அண்ணாச்சி :))

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரிசல்!

ஆயில்யன் said...

//உங்களோட இந்த நேர்காணல் ரொம்ப ஃப்ரீஃபா இருந்தாலும் நிறைவா இருந்தது.... ///


இது என்ன ரன்னிங்க் ஓடுறமாதிரியா...? :)))

வால்பையன் said...

பரிசலா இருந்தாலும் இதையே தான் சொல்லியிருப்பான்னு என்னோடு நம்பிக்கை!

நல்லா வந்துருக்கு!

கார்க்கிபவா said...

பாயசம் வித் பாய்சன் கூட சொல்லலாம்.. ஏன்னா அவரு ஒரு ஸ்லோ பாய்சன் தாங்க..

வாழ்த்துகள் சகா

anujanya said...

உண்மையிலேயே பரிசலோட பேட்டி மாதிரி தான் இருக்கு. Good idea and well executed.

அனுஜன்யா

Ramanna said...

அருமையான வலை பதிவு. கடைசில தான் தெரிஞ்சுது இது ஒரு கற்பனைனு.

கிரி said...

நல்லா இருக்கு (பேட்டியும் பாயாசமும்) :-)

Anonymous said...

ரைட் விடு.

சின்னப் பையன் said...

பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

sakthi said...

பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thamira said...

பரிசலின் நிஜ பேட்டியும் இதுபோலத்தான் இருந்திருக்கும். இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். காமெடிக்கு நல்ல ஸ்கோப்.. மிஸ் பண்ணிட்டீங்க..

வாழ்த்துகள் பரிசல்.

பை தி வே, உங்க காமெடி சானல் சார்பா, அடுத்து என் பேட்டிக்கு டேட் கேட்டிருந்தீங்கல்ல.. ஹிஹி.. நா ரெடி.!

Mahesh said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் வாழ்த்துகள் !!

@ ஆதி : காமெடியாத்தான் ஆரம்பிச்சேன்... ஆனா நடுவுல என்னமோ சீரீசாவே சொல்லலாம்னு திடீர்னு தோணுச்சு... அதான் மாத்திட்டேன். ஆக்சுவலா வேலன் அண்ணாச்சி பதிவுக்கப்பறம்தான் பரிசலுக்கு பிறந்தநாள்னு தெரிஞ்சுது. உடனே ஒரு 15 நிமிஷத்துல இதை எழுதி முடிச்சுட்டேன்.

நசரேயன் said...

கற்பனை மாதிரி தெரியலை

நர்சிம் said...

கலக்கல் தல.. பின்றீங்க..

நர்சிம் said...

//@ ஆதி : காமெடியாத்தான் ஆரம்பிச்சேன்... ஆனா நடுவுல என்னமோ சீரீசாவே சொல்லலாம்னு திடீர்னு தோணுச்சு... //

நினைச்சேன் படிக்கும்போது

பரிசல்காரன் said...

மகேஷ்...

நிறைவாய் உணர்கிறேன்.

என் பெயரைப் பற்றிய விளக்கம் கேட்கும் புதிய வாசகர்களுக்கும் (ஐயோ.. இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலடா-ன்னு தோணுதா...?) விளக்கம் அளிக்கும் விதமாயும் இது அமைந்தது மகிழ்வாயிருக்கிறாது!

நன்றி - எல்லாம் சொல்ல மாட்டேனே....

மங்களூர் சிவா said...

பிறந்த நாள் வாழ்த்து பல பதிவுகளில் சொல்லியிருந்தாலும் இங்கும் சொல்லிக்கொள்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரிசல்.

கற்பனை பேட்டியா? நெசமானது மாதிரியே இல்ல இருந்தது!