Saturday, May 9, 2009

நலம்... நலமறிய ஆவல்...


போன 3 மாசமா அமெரிக்காவுல இருக்கற பேங்குகளையெல்லாம் டாக்டர் ஒபாமா "மாஸ்டர் செக்கப்" பண்ணி இந்த வாரம் ஒரு வழியா ரிபோர்ட் குடுத்துட்டாரு. "இப்பத்திக்கு யாரும் நட்டுக்கவோ புட்டுக்கவோ மாட்டாங்க... தெகிரியமா இருங்க... கொஞ்சம் சவலையா இருக்கப்பட்டவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏத்தறோம்"னு சொல்லிட்டாரு. என்னமோ "ஸ்ட்ரெஸ் டெஸ்ட்" அது இதுன்னு ரொம்ப அலப்பறையா இருக்குதேன்னு என்னதான் நடக்குது / நடந்துதுன்னு நாலு பேர் கிட்ட கேட்டுப்பாத்து நமக்குப் புரிஞ்சதைச் சொல்லி உங்களையும் தெளிவா கொழப்பி விட்டாத்தானே தின்ன சோறு ஜீரணமாகும்.

அதாகப்பட்டது, அடுத்தது எந்த பேங்க் திவாலாகப் போகுதோன்னு பேங்குலயோ, பேங்கோட பங்குகள்லயோ பணம் போட்டவங்க எல்லாம் அரண்டு போய் இருக்க, ஒபாமா அரசாங்கம் பேங்குகளுக்கு ட்ரில்லியன் கணக்குல பணத்தைக் குடுத்து கீழ விழாம முட்டுக்குடுக்கறதுக்கு முன்னால, சம்பந்தப்பட்ட பேங்குகளோட நிலைமை என்ன, எவ்வளவு ஆழத்துல இருக்காங்க, எந்த அளவு பணம் குடுக்க வேண்டியது இருக்கும்னு பாக்கறதுக்காக ஃபெடரல் ரிசர்வைக் கேட்டுக்கிட்டாங்க. ஏன்னா அரசாங்கம் முதலீடு பண்ணப்போறது மக்களோட வரிப்பணத்தை. ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமில்லையா?

சரி... ஒரு பேங்க் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கும்கறதை எப்பிடிப் பாக்கறது? அது என்ன "ஸ்ட்ரெஸ் டெஸ்ட்"? இதை ரொம்ப விலாவாரியா விளக்க முடியாட்டாலும் (நமக்கு அவ்வளவுதானே தெரியும்? :)) மேலோட்டமாப் பாத்தா, சில மோசமான எதிர்பார்ப்புகளை முன்வெச்சு, அந்த நெருக்கடியை பேங்குக எப்படி சமாளிக்கும், அப்படி சமாளிக்க எவ்வளவு நிதி தேவையா இருக்கும்னு அனுமானிக்கறதுதான் இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட். அடிப்படையான சில எதிர்பார்ப்புகள் என்னன்னா:



  • இந்த வருஷம் பொருளாதார சுருக்கம் 3.3% அளவுல இருக்கும்

  • 2010லயும் எந்த மாற்றமும் இருக்கப் போறதில்லை

  • வீட்டு விலைகள் இன்னும் 22% அளவுக்கு சரியும்

  • வேலையில்லாத் திண்டாட்டம் இந்த வருஷம் சுமாரா 9% அளவுக்கும் அடுத்த வருஷம் 10%க்கு மேலயும் இருக்கும்

இந்த மாதிரி நெருக்கடியான நிலைமைல பேங்கோட சொத்துக எந்த அளவுக்கு தேஞ்சு போகும், மஞ்சக்காய்தம் குடுக்கற அளவுக்குப் போயிடுமா, அப்பிடி மோசமாச்சுன்னா எவ்வளவு பணம் புரட்ட வேண்டியிருக்கும்னு பாக்கறாங்க. அப்படி அசாங்கம் நிதி குடுத்து காப்பாத்த வேண்டி வந்தா, சம்பந்தப்பட்ட பேங்கோட பங்குகளை எப்பிடி மாத்தணும், எந்த விலைக்கு வாங்கணும்னெல்லாம் - பிப்.9 ந் தேதி என்ன சந்தை விலையோ அதை விட கொஞ்சம் கம்மியா - திட்டம் போட்டுருக்காங்க.

டிமொதி கீத்னர் தலைமைல நடந்த இந்த டெஸ்டோட வழிமுறைகளை விவரமா வெளியிட மறுத்துட்டாங்க. அதனாலயே இந்த டெஸ்டோட நம்பகத்தன்மை கொஞ்சம் கேள்விக்குறியதாயிடுச்சு. அதுமட்டுமில்லாம பொருளாதார நிபுணர்களோட சில விமர்சனங்கள் கடுமையா இருக்கு.



  • இன்னுங் கூட மோசமான எதிர்பார்ப்புகளை வெச்சுருக்கணும்

  • இந்த முடிவுகள் கேக்க நல்லா இருக்கலாம், ஆனா நாம இன்னும் நெருக்கடியான ஒரு நிலைமைக்குதான் திட்டம் போட்டிருக்கணும்

  • பிப்.9ந் தேதி சந்தை விலையை விட பேங்குகளோட பங்கு விலை இன்னும் மோசமாகலாம் ; அப்ப அரசு அதிக விலை குடுக்குதா?

  • அரசு எவ்வளவு நிதி குடுக்கும்கறதுக்கு ஒரு உச்ச வரம்பு வெச்சுருக்கணும்

  • இதை சாக்கா வெச்சு எந்த பேங்கோ, காப்பீட்டுக் கம்பெனியோ சும்மாவாச்சும் நிதி கேட்டு மனுக் குடுக்கறதைத் தடுக்க அரசு திட்டம் / வழிமுறைகள் வெச்சுருக்கணும்

  • ஒவ்வொரு பேங்கோட வியாபார முறையும் (Business Model) ஒவ்வொரு விதமா இருக்கும்போது, அதையும் இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்ல ஒரு காரணியா (factor) வெச்சுருக்கணும்.

இப்பிடி பல கேள்விகள். இப்போதைக்கு நிதி குடுத்து வங்கிகளைக் காப்பாத்தி முதலீட்டாளர்களோட ந்ம்பிக்கையைக் காப்பாத்திடலாம். ஆனா தொலை நோக்கோட பாத்து, இன்னும் கடுமையான வழிமுறைகளை வெச்சு, பேங்குகளோட நடவடிக்கைகளை இன்னும் அணுக்கமா கண்காணிக்கணும். எந்த ஒரு வங்கிக்கும் - அது எவ்வளவு பெரிய வங்கியா இருந்தாலும் - தனிச் சலுகைகள் இருக்கக்கூடாது.


மொத்தம் டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டது 19 நிறுவனங்கள். பேங்குகளும் சில காப்பீட்டு நிறுவனங்களும். டெஸ்டெல்லாம் முடிஞ்சு பேங்க் ஆஃப் அமெரிக்காவுக்குதான் ஆக அதிகமா 34 பில்லியன் டாலர் வேண்டியிருக்குனு சொல்லியிருக்காங்க. ஆச்சரியமா, எல்லாரும் படுமோசமா இருக்கும்னு எதிர்பார்த்த சிடி பேங்குக்கு 5 பில்லியன் டாலர் போதும்னு சொல்லியிருக்காங்க.

"இதெல்லாம் வெறும் அரசியல் சார். இந்த ஸ்ட்ரெஸ் டெஸ்டோட ரிசல்ட் என்னன்னு இவங்களுக்கு முன்னாலயே தெரியாதா? சும்மா சார்... பணத்தை கொட்டறதுன்னு முடிவாயாச்சு... இதுனாலதான் குடுக்கறோம்னு ஒரு காரணத்தை கிண்டி நமக்கெல்லாம் அல்வா குடுக்கறாங்க சார்...."னு அலுத்துக்கறவங்க ரொம்பப் பேர்.

இருக்கலாம். ஆனா இப்ப உலகம் சந்திச்சுக்கிட்டு இருக்கற இந்த சரிவு இதுவரைக்கும் நாம பாக்காதது. இப்ப இருக்கற உலகளாவிய பின்னிப் பிணைஞ்ச பொருளாதாரம், சிக்கலான சந்தை முறைகள், பேங்குகளோட பணிகள், காப்பீடு வழிமுறைகள், பணமாற்று எல்லாமே முன்னாடி இருந்ததை விட ரொம்பவே வித்தியாசமானவை. இப்பிடி ஒரு நிலைமல பேங்க் மாதிரி ஒரு முக்கியமான துறைல ஒரு சரிவை அனுமதிச்சோம்னா அது எங்க எப்பிடி வெடிக்கும், என்ன மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்கறது நினைச்சுக்கூடப் பாக்க முடியாது.

தவறு நடந்துடுச்சு. திருத்த முயற்சி பண்ணணும். மனிதனுடைய தனிப்பட்ட குணமே தவறுகளிலிருந்து பாடம் கத்துக்கிட்டு அதிலிருந்து மீண்டு வந்து, மறுபடி நடக்காமப் பாத்துக்கறதுதான். பார்ப்போம்... இது சரின்னு சொல்றதுக்கு 1000 காரணங்கள் இருந்தா தப்புன்னு சொல்றதுக்கு 1000 காரணங்கள் இருக்கு. ஆனா இப்போதைய தேவை banking system சரிஞ்சுடாம பாத்துக்கறதுதான்.

" தவறு என்பது தவறிச் செய்வது ; தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தியாகணும் ; தப்பு செய்தவன் வருந்தியாகணும் "


இதை "குட் ப்ளாக்ஸ்"-ல் சேர்த்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

26 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நசரேயன் said...

யம்மா.. எம்புட்டு தகவல் இருக்கு.. தலையே சுத்துது

Ramanna said...

சூப்பர் அப்பு. அட்டகாசமா எழுதி இருக்க.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே மகேஷ் அண்ணே சரி அலசல்.

// இது சரின்னு சொல்றதுக்கு 1000 காரணங்கள் இருந்தா தப்புன்னு சொல்றதுக்கு 1000 காரணங்கள் இருக்கு. //

எந்த ஒரு விசய்த்திற்கு இரண்டு பக்கம் இருக்கின்ற மாதிரி இதுக்கு இரண்டு பக்கம் இருக்கத்தான் செய்யுங்க.

பழமைபேசி said...

அலசி ஆராய்ஞ்சிட்டீங்க போல இருக்கு....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிண்ணிப் பெடல் எடுத்திருக்கீங்க தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு தல

முரளிகண்ணன் said...

அட்டகாசமான அனைவருக்கும் புரியும்படியான, தகவல் நிறைந்த பதிவு.


இதுபோல் இன்னும் எதிர்பார்க்கிறோம்

Anonymous said...

மகேஷ்,

இது நம்ம தங்கமணிக டெக்னிக். உப்புமாதான் செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டு நம்ம கிட்ட உங்களுக்கு என்ன வேணும்னு கேப்பாங்க. நாம பொங்கல்னா மிளகு இல்லிங்க, பூரின்ன உருளக் கிழங்கு இல்லிங்கன்னு சொல்லீட்டு கடைசியில உப்புமா செஞ்சு தருவாங்க. அது போலத்தான். முதலிலேயே முடிவு செஞ்ச விஷயத்த ஏதோ புரஃபஸனலாச் செய்றாப் போல பவ்லா.

நல்லா எழுதியிருகீங்க.

Mahesh said...

வாங்க நசரேயன்.... தலை சுத்துதா? எழுதினதோட பயன் எனக்கு கிடைச்சாச்சு :))

வாய்யா ராமண்ணா... நன்னி !!

நன்றி ராகவன் சார்... உங்களுக்கு இன்னுங் கூஉட மேலதிகமா தெரிஞ்சுருக்க வாய்ப்பு இருக்கே...

நன்றி மணியாரே... நேத்து உங்க பதிவு சுத்தமா புரியலயே :(

நன்றி சுரேஷ்...

நன்றி முரளிகண்ணன்... இன்னும் அதிகமாவா? நான் எங்க போவேன்? அவ்வ்வ்வ்...

நன்றி வேலன் அண்ணாச்சி... சொன்னீங்களே...அது... பாருங்க்க இப்பிடி சிம்பிளா எனக்குத் தோணலயே...

anujanya said...

மகேஷ்,

நல்ல பதிவு. அந்தத் துறை என்பதால் சில எண்ணங்கள்:

சிடி பேங்க் ஏற்கெனவே நிறைய அரசிடம் வாங்கி விட்டது. அதனால் இப்போது குறைவாகத் தோன்றுகிறது.

Bank of America முதலில் பரவாயில்லையாக இருந்தாலும், Meryll Lynch take over இக்குப் பிறகு, நிலைமை சுமாராகி விட்டது.

நீங்க சொன்னது போல், இன்னும் சில காரணிகளைச் சேர்க்கலாம். அப்போது, இன்னும் சிலர் 'இன்னும் சில காரணிகள்' சேர்க்கப்பட வேண்டும் என்பார்கள்.

இந்த Stress Test என்பது ஒரு 'ஏறக்குறைய' உடற்பயிற்சி என்பது மட்டுமே. இதையும் மீறி, வங்கிகள் கஷ்டப்பட்டால், பொருளாதார நிபுணர்கள் புதிய உடற்பயிற்சிகளை அறிமுகப் படுத்துவார்கள். We have enough 'con'sultants who thrive on most occasions.

இவ்வளவு சொன்னாலும், இது எதோ match fixing என்னும் பாணியில் சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்ன செய்வது? Economics is an imprecise Science. Solutions are never static, rather dynamic.

நல்ல பதிவுக்கு வாழ்த்துகள் Mugs.

அனுஜன்யா

Mahesh said...

மிக்க நன்றி அனுஜன்யா... மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி இருக்குனு சொல்றதுல எனக்கும் உடன்பாடு கிடையாதுதான்... ஆனாஅப்படி ஒரு பேச்சும் இருக்குங்கறதைத்தான் கோடி காட்டினேன்.

மத்தபடி... this exercise was a much needed one.... sort of soul searching :)

KRICONS said...

வாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது

Sanjai Gandhi said...

இப்போல்லாம் செய்தி இதழ்கள்ல படிக்கிறதை விட வலைப்பூக்கள் படிச்சி தெரிஞ்சிக்கிறது அதிகமா இருக்கு. நண்பர்கள் கிட்ட பேசிட்டே தகவல் தெரிஞ்சிக்கிற மாதிரி ஒரு உணர்வு. ரொம்ப உபயோகமன தகவல்கள் சார்ந்த பதிவு. பாராட்டுகள் மற்றும் படிக்கத் தந்ததற்கு நன்ரிகள். :)

பழமைபேசி said...

//நன்றி மணியாரே... நேத்து உங்க பதிவு சுத்தமா புரியலயே :(//

இடுகை..இடுகை..இடுகை...இஃகிஃகி!!

சின்னப் பையன் said...

நல்ல பதிவு அண்ணே...

ஆனா இன்னும் விரிவா எதிர்பார்த்தேன்.....

Mahesh said...

நன்றி KRICONS.. . நீங்க சொன்ன பிறகுதான் பாத்தேன் :) இதுதான் முதல் தடவையா யூத்விகடன்ல வருது..

நன்றி சஞ்சய் அண்ணே....

நன்றி ச்சின்னப்பையன்... இன்னும் விரிவா எழுதலாம்... ரொம்ப டெக்னிகலா போயிடும்....

எம்.எம்.அப்துல்லா said...

நமக்கெல்லாம் கடன் குடுத்தவைய்ங்க கடனாளி ஆயிட்டாய்ங்களா??

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் :)

Mahesh said...

வான்ங்க அப்துல்லா... ரொம்ப சரி !!

வால்பையன் said...

இஷ்டத்துக்கு பணத்தை பிரிண்ட் பண்றதும் தப்பு தானே!

இந்தியாவும் அந்த லிஸ்டுல இருக்கா?

Thamira said...

தொர.. என்ன அளகா இங்க்லீஸெல்லாம் பேசுது..

Mahesh said...

நன்றி வால்பையன்... பின்ன நோட்டு அடிக்காம எப்பிடி தேர்தல் நடத்தறது? அவ்வ்வ்வ்வ்வ்.வ்....


நன்றி ஆதி... வீ டோண்ட் ஸீ டேமில் ஃபிலிம்ஸ்... ஒன்லி இன்கிலிபீச் ஃபிலிம்ஸ்.... :)))))

Anonymous said...

மகேஷ்,

'யாவரும் நலம்' ன்னு சொல்ற காலம் எப்போ வருமோ? முதல்ல சிட்டி பேங்க். இப்போ பேங்க் ஆஃப் அமெரிக்கா. இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சி, என்ன அறிக்கை விடப் போறாங்களோன்னு பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு. :-(

சித்ரா

Mahesh said...

வாங்க சித்ரா.... ஒண்ணும் பயப்படாதீங்க.... எவ்வளவோ பாத்துட்டோம்... இதைப் பாக்க மாட்டோமா? :)))))))

மார்கெட்ல எல்லாத்துக்குமே ஒரு கரெக்ஷன் சைகிள் இருக்கு... என்னெ இந்த கரெக்ஷன் கொஞ்சம் திடும்னு இருக்கு....

sakthi said...

போன 3 மாசமா அமெரிக்காவுல இருக்கற பேங்குகளையெல்லாம் டாக்டர் ஒபாமா "மாஸ்டர் செக்கப்" பண்ணி இந்த வாரம் ஒரு வழியா ரிபோர்ட் குடுத்துட்டாரு. "இப்பத்திக்கு யாரும் நட்டுக்கவோ புட்டுக்கவோ மாட்டாங்க... தெகிரியமா இருங்க... கொஞ்சம் சவலையா இருக்கப்பட்டவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏத்தறோம்"னு சொல்லிட்டாரு.

தப்பிச்சிட்டாங்கன்னு சொல்லுங்க

chaks said...

Nice and very informative post. Good work.

மங்களூர் சிவா said...

எதோ நல்லது நடந்தா சரிதான்.