Wednesday, May 6, 2009

அலர் மலர்ந்த நாள் !! அகம் மகிழ்ந்த நாள் !!மே 9. செல்ல மகள் சஹானாவின் 4 வது பிறந்த நாள். ப்ராஜெக்ட் வேலைக்காக இன்று மறுபடி ஜெனீவா போக வேண்டி இருப்பதால, 2 வாரம் கழிச்சு திரும்பி வந்த பிறகுதான் கொண்டாட்டம் எல்லாம் வெச்சுக்க முடியும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எதாவது போஸ்டர் வரைவேன். இந்த முறையும் ஒண்ணு வரைஞ்சாச்சு. அதுவும், கூடவே அவள் வரைஞ்ச சில போஸ்டர்களும் உங்கள் பார்வைக்கு.


ஹி.. ஹி... அப்பிடியே ஒரு வெண்பா... ரொம்ப நாளாச்சுல்ல... அதான்...


எனக்கும் துணைக்கும் யாண்டும் இன்பம்
தனக்குள் கொண்ட கலைமகள் - மனத்துள
காயங்கள் மாறிடவே மழையெனப் பொழிந்திட்ட
நீயெங்கள் வாழ்வின் வளம்.


இதெல்லாம் பாப்பா வரைஞ்சது...

இது அப்பா வரைஞ்சது.....

31 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

அறிவிலி said...

சஹானாவுக்கு வாழ்த்துகள சொல்லிடுங்க.

அப்பறம் அந்த படமெல்லாம் சூப்பர்.

என்னதான் சொல்லுங்க, நமக்கு அடுத்த தலைமுறை நம்மளவிட திறமையா இருக்கறத ஒத்துக்கிட்டுதான் ஆவணும்.

:-)))))

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க வளமுடன் நூறாண்டு.

Anonymous said...

சஹானாவுக்கு நிறைய அன்பும் அதைவிட நிறைய வாழ்த்துக்களும் சொல்லிடுங்க மகேஷ்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சஹானாவுக்கு வாழ்த்துகள் மகேஷ்.. குழந்தை கொள்ளை அழகு.!

அப்புறம் இவ்வளவு அழகான லாலிபாப் மாதிரியான மரங்கள், பயங்கரமான சிங்கம், தவளை, மீன்கள், குருவிகள் இதெல்லாம் கொள்ளை அழகு.. ரசனை.!

சிங்கத்தைப்பார்த்து எனக்குச் சிரிப்பு தாளலை..

Vijay said...

படங்கள் மிக அருமை. வாழ்துக்கள்

விஜய்

விஜய் said...

படங்கள் மிக அருமை. வாழ்துக்கள்

விஜய்

கிரி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

குழந்தைக வரைந்த படம் என்றாலே அது அழகு தான் (உங்களை இதுல சேர்த்துக்காதீங்க :-D)

ச்சின்னப் பையன் said...

நீங்க எழுதின(!!) படம், சஹானா வரைஞ்ச படங்கள், சஹானா எல்லாமே அருமை...

சஹானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

வெண்பா... ஓஓஓஹோ.....

:-))

☼ வெயிலான் said...

சஹானா பாப்பாவுக்கு என் வாழ்த்துக்களும், அன்பும்!

பழமைபேசி said...

வாழ்த்துகள் சொல்லிடுங்க!

படங்கள் நெம்ப நல்லா இருக்கு!!

நசரேயன் said...

என்னோட வாழ்த்துகளையும் சொல்லணும், படங்கள் அருமை

வால்பையன் said...

4 வயசுல அருமையான ஓவிய திறமை!
விட்றாதிங்கண்ணே! ஊக்கப்படுத்துங்க!

பிறந்தநாள் வாழ்த்தையும் சொல்லிருங்க!

உருப்புடாதது_அணிமா said...

சஹானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

உருப்புடாதது_அணிமா said...

படமெல்லாம் சூப்பர்.

Mahesh said...

நன்றி அறிவிலி... ஆமாம்... ஒத்துகிடணும்...

நன்றி அப்துல்லா..

நன்றி வேலன் அண்ணாச்சி...

நன்றி ஆதி... நீங்க ரசிப்பதை நான் ரசித்தேன்...

நன்றி விஜய்...

நன்றி கிரி... ஏங்க நானும் குழந்தைதாங்க... :))))

நன்றி ச்சின்னப்பையன்... நீங்களாவது வெண்பாவைப் படிச்சீங்களே...அதுக்கு ஸ்பெஷல் நன்றி..:)))

நன்றி வெயிலான்...

நன்றி மணியாரே....

நன்றி நசரேயன்...

நன்றி வால்பையன்...

Ramanna said...

சகானாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவள் வரைந்த படங்கள் அருமை. உங்கள் வெண்பா மிகவும் அருமை.

Mahesh said...

நன்றி ராமண்ணா... அப்பாடி உன்னை தமிழ்ல எழுத வெக்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடு ஆயிடுத்தே...

வாழ்த்துகள்... தொடர்ந்து தமிழில் கலக்குப்பா !!

அகரம்.அமுதா said...

சகானாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

குடுகுடுப்பை said...

சஹானாவுக்கு வாழ்த்துக்கள்.

படங்கள் எல்லாம் அருமை.

பரவாயில்லை நீங்களும் என்னை மாதிரி குடும்பப்பதிவரா மாறிட்டு வறீங்க.

Mahesh said...

நன்றி அமுதா....

நன்றி கு.கு... .எல்லாம் உங்க கிட்ட இருந்து லிஃப்ட் பண்ண ஐடியாதான் ஹி ஹிஹ்ஹி....

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் சஹானாக்குட்டி!!!

அனுஜன்யா said...

சஹானாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் (சற்று தாமதமாக ஹி ஹி).

வெண்பா அட்டகாசம் . படங்களும் தான். நம்ம நண்பர் கென் 'சஹானா' பற்றி எழுதிய கவிதை விகடனில் வெளிவந்தது. நல்ல கவிதை.

"பதங்கமாதலின் விரிவைப் படித்துக்
கொண்டிருந்தாள் சஹானா
வீட்டில் சஹானா என்றும்
பள்ளியில் மெர்லின் என்றும் அழைக்கிறார்களாம்
யாரைப்பிடிக்கும் என்கையில் மெட்ராஸ் அப்பா என்கிறாள்
சென்னையிலே குப்பைக்கொட்டும் நான்
சிரித்த‌ப‌டியிருக்கிறேன்
திடம்
திர‌வ‌மாகாம‌ல் வாயு நிலை மாற்ற‌மாம்
ப‌த‌ங்க‌மாத‌ல்.
சூட‌ம் எரித‌ல் எ.கா. என்கிறாள்
ம‌ழலைப்பேச்சில் ம‌றுபடியும் ம‌றுப‌டியும்
ப‌த‌ங்க‌மாக்கிடுகிறாள்
அப்பாவுக்கு முத்த‌ம் கொடு
என்கையில்
ச‌ஹானாவாகி உயிர்ப்பிக்கிறாள்
எஸ்.ச‌ஹானா மெர்லின் 4ஆம் வகுப்பு , ஆ பிரிவு."

திரும்பி வரும்போது நல்ல பரிசுடன் வரவும். பரிசுக்கான பில்லை பரிசலிடம் அனுப்பவும் :)

அனுஜன்யா

Mahesh said...

வாவ்... அனு !!! பதங்கமாதல் உண்மைதான்... தினம் தினம்...
மிக்க நன்றி...

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

குட்டிப் பாப்பா சஹானாவுக்கு என் அன்பான வாழ்த்துகள். :)

sakthi said...

வாழ்த்துகள்

Anonymous said...

தாமதமானாலும் பரவாயில்ல, சஹானாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அவங்க வரைஞ்ச படங்கள் அழகோ அழகு.

சித்ரா மனோ

Mahesh said...

நன்றி திகழ்மிளிர்...

நன்றி Sanjay...

நன்றி sakthi...

நன்றி சித்ரா மனோ... என்னங்க ரொம்ப நாளாக் காணோம்? ஊரில இல்லயா? உடல்நிலை சரியில்லையா? :(

ஆகாய நதி said...

வாழ்த்துகள்! பாப்பா அழகாக படம் வரைகிறாள்! :) சிங்கம் சூப்பர்!

Anonymous said...

மகேஷ்,

நலமா? பின்னூட்டம் போடலைன்னாலும், உங்க இடுகைகள தொடர்ந்து படிச்சிட்டுத்தான் இருக்கேன். கொஞ்சம் மனச்சோர்வு. கணவரோட வேலை ஒப்பந்தம் முடியப் போகுது. நீட்டிப்பாங்களான்னு தெரியாது. என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்துதான் பாக்கணும். மீண்டும் சந்திப்போம்.

சித்ரா

மங்களூர் சிவா said...

சஹானாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

படமெல்லாம் சூப்பர்!

உங்க பொண்ணு பேரும் சஹானாவா??? ப்ளாகர் ச்சின்னபையன் பொண்ணு பேரும் சஹானா இல்ல??