சமீபத்தில் தான் இந்தப் பேட்டியைப் படித்தேன். கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை டுபுக்கு. நீங்கள் இன்னும் பதிவைப் படிக்கவில்லை என்றால் 'நீயே சொல்லேன்' என்று கேட்டுவிடாதீர்கள். நானே மெத்தையில் உட்கார்ந்து கொண்டு படித்ததால் உருண்டு விழுந்து சிரிக்கும்போது அடிபடாமல் தப்பித்தேன். பேட்டியில் பூராவும் உண்மை இருந்தாலும் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்.
கல்யாணமாகி இருந்தால் நீங்கள் மட்டும் மதியம் தூங்கி, மனைவி மற்றும் குழந்தைகளை சாயங்காலமாக வெளியே ஹோட்டலுக்கு கூட்டிப் போய் சாப்பிட்டு விட்டு ராத்திரி பத்து மணி வாக்குக்கு வீட்டுக்கு வந்தீர்களானால் அவர்கள் எல்லோரும் சீக்கிரம் தூங்கப் போய்விடுவார்கள். பர்சுக்கும் பாதகம். அதனால எல்லாத்தையும் நடு வீட்ல உட்கார வெச்சு, ஆளுக்கு 4 தலகாணி நாலு பக்கமும் வெச்சுட்டு, இந்த பேட்டியை சத்தமா எல்லாருக்கும் படிச்சுக் காமிச்சா எல்லாரு சிரிக்கிற சிரிப்பு "மெட்ராசுக்கு அடுத்த 48 மணி நேரம் கழிச்சுதானே மழை வரும்னு ரமணன் சொன்னாரு, இப்பவே இடி இடிக்குதே"ன்னு பக்கத்து வீட்டுக்காரங்களை பயமுறுத்தலாம். எல்லாரும் சிரிச்சுக்கிட்டுருக்ககும்போது படித்தீர்களானால் சூப்பரான சில ஜோக்குகள் மிஸ் ஆகிடலாம். அதனால பொறுமையாப் படிச்சு, அப்பப்ப இடைவேளை விட்டு கண்ணுல வழியற தண்ணியத் தொடச்சுட்டு மீதியப் படிக்கவும்.
"உங்க வாழ்க்கைக் கதையச் சொல்லுங்க, இன்றைய இளைஞர்களுக்கு உங்க அறிவுறை என்னா" என்ற ரீதியில் பேட்டி எடுக்காமல் இப்பிடிப் பட்ட தமாஷான பேட்டியை திறமையாக எடுக்க முடியும் என்று அழகாக எடுத்திருக்கிறார். கேள்விகள் கேட்ட விதம் அருமை. ஒரு நிறைவான பேடியை 'லைவ்' ஆகப் பார்த்த திருப்தி எனக்கு. சம்பிரதாயமாக எல்லோரும் கேட்கும் கேள்விகளைக் கேட்காமல் நாம் (மனதுக்குள்) கேட்க நினைக்கும் கேள்விகளை அனாயாசமாகக் கேட்டு அதற்கு பதிலும் வாங்கிய திறமைக்கு ஒரு சபாஷ்.
பேட்டி எடுப்பது, குபீர் சிரிப்புப் பதிவு போடுவது மட்டுமல்லாது, இவரே ஒரு பெரிய டைரடக்கர். இவரின் முதல் குறும்படமான "The Door" படம் பார்த்தேன். இவ்வளவு தூரம் செய்தவர் இவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
எனக்கு மனோஜ் நைட் ஷ்யாமளனைத் தெரியாது. ஆனால் அவரை மாதிரி படம் எடுத்து கூடிய சீக்கிரம் ஜொலிப்பார் என்று டுபுக்கு மேல் அசாத்தியமான, அசைக்க முடியாத, உறுதியான இன்னபிற ...ன நம்பிக்கை இருக்கிறது. டுபுக்கைத் தெரியாதவர்களுக்கு - இங்கே சென்று அவரது குபீர் சிரிப்புப் பதிவுகளைப் படிக்கலாம்.
PS- டுபுக்கு..அம்மா தாயே.... சார் போஸ்ட் இது மாதிரி ரோலெல்லாம் நானும் பின்னிப் பிரிச்சுருவேன் ஹீ ஹீ ஒரு சான்ஸூ.....:P உங்களுக்குக்காக் பதிவெல்லாம் போட்டு துண்டு போட்டுருக்கேன். ஹி ஹி ஹி...
பி.கு: இது டுபுக்கு சாரின் இந்தப் பதிவுக்கு ஒரு துணைப் பதிவு. எதிர் பதிவு அல்ல.
இதயத்தை திருடாதே
1 day ago
14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
இவ்ளோ சொல்றிங்க போய் பாக்காமலா இருப்போம்.. நான் கூட இப்போ ஒரு கடுப்புல இருக்கேன். நிச்சயம் அந்த பதிவு எனக்கு தேவைப்படும்.. :)
சும்மாவா!
நகைச்சுவை பதிவர்களின் முன்னோடியாக திகழ்பவராச்சே :)))
சிர்ச்சு சிர்ச்சு வயர்லாம் வலிக்குது பா...
சிர்ச்சு சிர்ச்சு வயர்லாம் வலிக்குது பா...
நன்றி பொடியன் sanjai....
நன்றி ஆயில்யன்...
நன்றி நர்சிம்....
:)உண்மையா அந்த படம் இயக்கினவர் முன்னாள் பதிவரா..?
டுபுக்கு பதிவு ரெகுலரா படிக்கிற ஒன்னாச்சே!!
செம கலக்கலா இருக்கும்.
டுபுக்கு பதிவு ரெகுலரா படிக்கிற ஒன்னாச்சே!!
செம கலக்கலா இருக்கும்.
தமிழ் பதிவு உலகின் பீஷ்ம பிதா மகர் ஆச்சே டுபுக்கு.
குப்பன்_யாஹூ
நன்றி மகேஷ்
நன்றி குப்பன் யாஹூ
நன்றி டொன் லீ... ஆமாங்க... ஆனா "முன்னாள்" இல்ல.. இந்நாள்லயும் எழுதறாரு..
நன்றி வேலன் சார்...
நன்றி! நன்றி!! நன்றி!!!
மகேஷ் ரொம்ப நன்றி. ஆனா உங்களுடைய இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனான்னு எனக்கு தெரியலை...ஆனா உங்க நம்பிக்கை..எனக்கும் ரொம்ப நம்பிக்கை அளிக்குது.
இங்கு என்னை பாராட்டி கமெண்டியவர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி.
உங்க எல்லாருக்கும் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன்...ஒரு நாள் வெள்ளித் திரையில படமெடுக்கும் போது கண்டிப்பா ஸ்லைடு போடறேன்...அத்தோட அந்த சார் போஸ்ட் ரோலும் நியாபகம் வைச்சுக்கறேன் :))))))))))
வாங்க டுபுக்கு சார்... தன்னடக்கம்... நெறகொடம் தளும்பாதாமில்ல...
மகாஜங்களே... பாத்துக்கோங்க... அண்ணனோட மொதப் படத்துல நாந்தான் ஈரோ... ஆமாம்... அடாடாடா... இந்த ப்ரொட்யூசருக தொந்தரவு தாங்க முடீல.... :)
Post a Comment