முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4
Code name GOD
Author : Mani Bhaumik
கண் பார்வைக் குறைபாட்டை நீக்க இப்ப "லசிக்"ங்கற லேசர் முறையை பயன்ப்டுத்தறாங்க இல்லயா? அந்த "லசிக்" முறையைக் கண்டுபுடிச்சவர் இவர்தான். சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்த கால கட்டத்துல மேற்கு வங்காளத்துல ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்துல பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு சாதாரண ஸ்கூல் வாத்தியார். அவரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மணியோட ஆரம்ப கால வாழ்க்கை கடும் வறுமையில. பல நாள் பட்டினி.அந்த சமயங்கள்ல அவரோட பாட்டி தன்னோட பங்கு உணவை இவருக்குக் கொடுத்து கூடவே காந்தியப் பத்தியும் மத்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பத்தியும் சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்களாம். புத்தகம் முழுவதுமே அங்கங்க தன்னோட அப்பா, பாட்டி, முக்கியமா காந்தி இவுங்கள்லாம் தன் வாழ்க்கைய் எந்த அளவு பாதிச்சுருக்காங்கன்னு சொல்லியிருக்காரு.
இந்தப் பின்னணியிலிருந்து வந்து ஒரு பெரிய விஞ்ஞானியாகவும்,பெரும் பணக்காரராகவும் ஆகியிருக்காரு. வாழ்க்கைல பணம் நிறைய வந்ததும் அத எந்த அளவுக்கு எஞ்சாய் பண்ணினார்னும் மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லியிருக்காரு. [ கொஞ்சம் அதிகமாவே :( ] தன்னோட அறிவியல் சார்ந்த ஆன்மீகப் பயணத்தின் மூலமா கடவுளை எப்படி உணர்ந்தாருங்கறதுதான் புத்தகத்தோட சாராம்சம். கடவுளை இயற்பியல் ரீதியா விளக்க முயற்சி பண்ணி அதுல வெற்றி அடைஞ்சிருக்காருன்னே சொல்லலாம். அதை எப்பிடி எளிமையா விளக்கறாருங்கறது புத்தகத்தைப் படிச்சா புரியும். முதல்ல தான் ஒரு விஞ்ஞானி அப்பறமாத்தான் ஆன்மீகவாதிங்கறதை தெளிவா சொல்லிடறாரு.
புத்தகத்துல இருந்து சில செய்திகள்:
- பெருவெடிப்பின்போது (Big Bang) பிரபஞ்சம் விரிவடைஞ்ச விகிதம் 1/1050 ங்கற அளவுல மாறுபட்டிருந்தா, உயிர் வாழ லாயக்கில்லாமப் போயிருக்கும்
- பிரபஞ்சத்தின் 'மொத்த' ஆற்றல் பூச்சியம் (net energy of the universe is zero)
- பிரபஞ்சத்தின் எந்த ஒரு இடத்திலும் ஒரே மாதிரி உணரக்கூடிய ஒரு க்வாண்டம் வெளி (quantam field) பிரபஞ்சம் பூரா பரவியிருக்கு
- பெருவெடிப்பின்போது பிரபஞ்சத்தின் அளவு ஒரு பில்லியனே 100 மில்லியனில் ஒரு பங்கு (இதையும் ஒரு 'அளவு'ன்னு நாம மதிப்புக் குடுத்து எடுத்துக்கறதா இருந்தா !!)
- ஒரு காஸ்மோலாஜிகல் சித்தாந்தத்தின்படி பார்வையாளனுக்கும் பிரபஞ்ச உருவாக்கத்தில் பங்கு உண்டு [ எதாச்சி பிரியுதா?? யோசனை /கற்பனை பண்ணிப் பாருங்க :) ]
- நம்மால ஒரு 'இணை ஃபோட்டான்'களை உருவாக்க முடிஞ்சா, இந்த பிரபஞ்சத்துல அதுக ரெண்டும் எவ்வளவு தூர இடைவெளியில இருந்தாலும், ஒண்ணோட நிலை (state) மாறினா இன்னொரு ஃபோட்டானும் அதே கணத்துல அதே நிலைக்கு மாறிடும் (க்வாண்டம்.... க்வாண்டம் !!)
பெரியவங்க சொல்லுவாங்க, நம்ம எண்ணங்கள் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதுதான் உலகம்னு. இந்த மாதிரி விஞ்ஞானிகளைப் பத்தியும் அவங்களோட எண்ணங்களைப் பத்தியும் படிக்கும்போது அவங்களோட உலகம் எவ்வளவு பெரியதா இருந்திருக்குன்னு ஆச்சரியமா இருக்கு.
அடிமட்ட வறுமைல இருந்து பெரும் புகழும் செல்வமும் அடைஞ்ச ஒரு விஞ்ஞானியோட இந்தப் புத்தகம் ரொம்பவே இன்ஸ்பயரிங்கா (இதுக்கு தமிழ்ல என்ன? ) இருக்கு. தன்னோட வெற்றியோட எல்லைகளைத் தெரிஞ்சு இருக்கறது இவரோட ப்ளஸ் பாயிண்ட். தன்னைப் பத்தி சொல்லும்போது, பணம் கிடைச்சப்பறம் தான் வாழ்க்கைல அனுபவிச்சதை கொஞ்சம் கர்வத்தோடயும் அலட்சியத்தோடயும் சொல்லும்போது "கொஞ்சம் ஓவராத்தான் அல்டிக்கிறாருப்பா"ன்னுதான் தோணுது. ஆனா கூடவே தன்னோட ஆரம்ப நாட்களை மறக்காம உண்மையா சொல்றதை படிக்கும்போதும்,அவருடைய ஒரு உன்னதமான கண்டுபிடிப்பு இன்னிக்கு உலகத்துல பார்வைக் குறைவுள்ள பலபேருக்கு நம்பிக்கையும் புதுவாழ்வும் குடுத்திருக்கறதை பாக்கும்போது "ரைட்..வுடு..கண்டுக்காத"ன்னு போயிடலாம்.
இன்னும் இந்தப் புத்தகத்தைப் பத்தி நிறைய எழுதலாம். ஆனா பல ஃபிஸிக்ஸ் டெர்ம்ஸ்க்கு சரியான தமிழ் சொற்களும் தெரியல, எப்பிடி எளிமையா எழுததறதுன்னும் தெரியல. நான் எதயாவது எழுதப் போய் ஏடாகூடமா அர்த்தமாகி புத்தகத்தோட மதிப்பைக் குறச்சிடக்கூடாதில்ல? அதுக்காக,புரியவே புரியாதோனு தப்பா நினைச்சுடாதீங்க. புத்தகம் கிடைச்சா கண்டிப்பா படிங்க. ரொம்ப ரெஃப்ரெஷிங்கா இருக்கும்.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
10 hours ago
10 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
//இன்ஸ்பயரிங்கா //
ஊக்கமூட்டுவதா இருந்துச்சு.
////இன்ஸ்பயரிங்கா //
ஊக்கமூட்டுவதா இருந்துச்சு.
மொழி மாற்றியதற்கு நன்றிகள்
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
@ பழமைபேசி :
"என்கரேஜிங்" தான் ஊக்கமுட்டுவதுன்னு வரும்.... 'இன்ஸ்பைரிங்'கு இணையா வேற இருக்கோன்னு பாத்தேன்...
ஊக்கமூட்டுவதா இருந்துச்சு.
உற்சாகமூட்டுவதா இருந்துச்சு
கிளர்ச்சியூட்டுவதா இருந்துச்சு
இடத்துக்கு தகுந்தவாறு இதுல எதோ ஒன்னைப் பாவிக்கலாம். நீங்க சொன்ன இடம், ஊக்கத்துக்கு வரும்ன்னு நினைச்சேன்.
விழிப்பூட்டுவதா இருந்துச்சுன்னும் வரும்.
அடுத்து, மொழி பெயர்ப்புல பல நேரங்கள்ல இந்த வார்த்தைக்கு இந்த வார்த்தை, அதாவது ஒன்னுக்கு ஒன்னுங்ற மாதிரியும் வராதுங்கோய்.
லசிக் சிகிட்சையை கண்டுபிடிச்சவர் இவர்தான் சொன்னது நல்ல information. பிரபஞ்சம் உருவானது big bang மூலமாகன்னு இவர் சொல்றாருன்னு தோணுது.
நன்றி பழமைபேசி...
நன்றி கபீஷ்... big bang பல தியரிகள்ல இதுவும் ஒரு தியரி... ரொம்ப கன்வின்சிங் தியரி... அவ்வளவுதான்...
//இன்ஸ்பயரிங்கா // = க்ரியா ஊக்கி ??!!
Post a Comment