துக்ளக் ஆசிரியர் (அட நாந்தாங்க....) இடும் 50வது சூடான பதிவு இது. என்னது? என்னை யாரென்றே தெரியாதா? அதுவும் இது என்னுடைய 50வது சூடான பதிவு என்பதும் தெரியவே தெரியாதா உங்களுக்கு? உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இப்படியும் ஒரு அப்பாவி பதிவுலகத்தில் உண்டா என்று. அட... மறுபடியும்... என் பதிவுகளை 'சூடான இடுகைகள்' பட்டியலில் பார்த்ததே இல்லையே என்று சொல்கிறீர்களே? அய்யா... நான் அந்த பட்டியலைப் குறிப்பிடவே இல்லையே.. என் வரையில் என்னுடைய ஒவ்வொரு பதிவும் சூடான பதிவுதான். அந்த வகையில் இது 50வது. இதற்கு ஏன் நெற்றியில் அடித்துக் கொள்கிறீர்கள்? பாருங்கள்... உங்கள் நெற்றி எப்படி சிவந்து விட்டது!! சரி சரி... இனிமேலாவது கவனமாக இருங்கள். மேலே படியுங்கள்.
நிற்க. விளையாட்டாக ஆரம்பித்தது... வினையாகி விட்டது. உங்களின் ஆர்வக் கோளாறு காரணமாக நீங்கள் என் பதிவுகளைப் படித்து (அதோடு நிற்காமல்) பின்னூட்டமும் போட... இன்று இது 50வது பதிவில் - அதுவும் சூடான பதிவில் - வந்து நிற்கிறது. இதற்கு நானா காரணம்? இல்லவே இல்லை. முழுப் பொறுப்பும் உங்களுடையதுதான். இனிமேல் இந்த சங்கிலித் தொடர் வினையை தடுக்க என்னால் முடியாது. யாருக்குத் தெரியும்... இது ஐம்பதோடு நின்று விடுமா அல்லது 100, 1000 என்று சுடச் சுடப் போய் "பதிவுலக வெப்ப உயர்வு" (இதற்கு BLOGAL WARMING என்று நான் பெயர் சூட்டியிருக்கிறேன்) என்ற ஒரு புதிய, நாம் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழலை உருவாக்குமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு சூழல் ஏற்படுமானால் அதற்கும் நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.
ஆனாலும் அது ஒரு தவிர்க்க முடியாத, நாம் அனைவரும் சந்தித்தே தீர வேண்டிய ஒன்றுதான் எனபது நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், "நாளைய பலாக்காயை விட இன்றைய களாக்காயே மேல்" என்ற சொல்வழக்குக்கு ஏற்ப நான் தொடர்ந்து "சூடான" பதிவுகள் இட வாழ்த்தி விட்டு வழமை போல் (பற்களைக் கடித்துக்கொண்டேனும்) பின்னூட்டங்களை இட்டு வரவும். இதனால் உங்களது திரவியங்களுக்கு யாதொரு கேடும் வந்து விடாது என்பது திண்ணம்.
அம்மாடி... நானும் அப்பிடி இப்பிடி தட்டிக் கொட்டி லதானந்த் அங்கிளுக்கு பகிரங்கக் கடிதத்துல ஆரம்பிச்சு, புத்தகம், டமாரம், பொருளாதாரம், சினிமா, கதை, கட்டுக்கதை, புளுகு, புண்ணாக்குன்னு 50 பதிவு போட்டுட்டேன். ஆதரவு தந்து ஊக்குவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும்...
நன்றி... நன்னி... ஷுக்ரியா... தேங்ஸ்... ஷுக்ரன்... மெர்சி... டாங்கே...
36 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
வாழ்த்துகள்! பலாக்காய்களும் கலாக்காய்களும் காய்க்கட்டுங் காய்க்கட்டும்!!
இஃகிஃகி!!!
50வது சூடான இடுகைக்கு வாழ்த்துக்கள்...
ஓரிரு பகுப்புத்துளிகள் வித்தியாசத்துல நாந்தான் மொத! இஃகிஃகி!!
அட... சூடான இடுகைக்கு சூடான பின்னூட்டங்கள்....
நன்றி பழமைபேசி !
நன்றி ச்சின்னப்பையன்!
அடேங்கப்பா... ஸ்ப்லிட் செகண்டுக்கு தமிழ் "பகுப்புத் துளிகள்"-ஆ?
Appadiya ? Sari pona poguthu . En muthal pinnoottam. Vazthukal
anputan
Singai Nathan
வாழ்த்துக்கள் !!!
வாழ்த்துக்கள் மகேஷ். சூடான இடுகையில் நம் பதிவு வரும் நிறைவை விட நல்ல பதிவுகளை கொடுத்து இருக்கிறோம் என்ற மனநிறைவு அதிகம் இப்போது இல்லை என்றாலும் பின்னால் கண்டிப்பாக திருப்தியே அடைவீர்கள்.
தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள், வ.மு ல ஒரு கலக்கல் பதிவு போட்டிருக்கீங்க அதையும் சேத்தா 51.00
ஹி..ஹி...ஜமாய்ங்க...
ஜுப்பர்.
50வது சூடான இடுகைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்..
என்னைக் கவர்ந்தவை உங்கள் உலக சினிமாப் படங்கள் பற்றிய விமர்சனம். & என் அவள் கதை
வாழ்த்துக்கள்
Blogal Warmingது பேரு நல்லா தான் இருக்கு ..
(எப்படி தான் இப்படி எல்லாம் யோசிகிராங்களோ??)
ஆஹா கிளம்பிட்டாங்கப்பா
//
இது ஐம்பதோடு நின்று விடுமா அல்லது 100, 1000 என்று சுடச் சுடப் போய் "பதிவுலக வெப்ப உயர்வு" (இதற்கு BLOGAL WARMING என்று நான் பெயர் சூட்டியிருக்கிறேன்)
//
நல்ல வார்த்தை கண்டுபிடிப்பு...இங்கிலிபீசுக்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா!
//
வழமை போல் (பற்களைக் கடித்துக்கொண்டேனும்) பின்னூட்டங்களை இட்டு வரவும்
//
செஞ்சிட்டேன் :0))
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அடுத்தடுத்து வெகு விரைவில் 100 அடிக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள் :)
நன்றி சிங்கைநாதன்....
நன்றி gulf-tamilan... முதல் வருகை..
நன்றி கிரி... நீங்கள் சொன்னது மெத்தச் சரி...
நன்றி நசரேயன்...
நன்றி குடுகுடுப்பை...
நன்றி கும்க்கி...
நன்றி டொன் லீ...
நன்றி அணிமா...
நன்றி அது சரி...
நன்றி ஆயில்யன்... எல்லாம் உங்க கட(க) ராசிதான் :)
வாழ்த்துகள் மகேஷ் அண்ணன்.!
where is abdulla, your regular visitor???
நன்றி தாமிரா அண்ணண் !!! :))))
நன்றி அனானி... அப்துல்லா அண்ணன் வருவாருங்க... அவரு கொஞ்சம் பிசியா இருக்காரு...
இவ்வளவு கவனிச்சு எழுதுனவரு உங்க பேரையும் சொல்லலாமே !!
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அடுத்தடுத்து வெகு விரைவில் 100 அடிக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள் :)
///நான் தொடர்ந்து "சூடான" பதிவுகள் இட வாழ்த்தி விட்டு வழமை போல் (பற்களைக் கடித்துக்கொண்டேனும்) பின்னூட்டங்களை இட்டு வரவும். இதனால் உங்களது திரவியங்களுக்கு யாதொரு கேடும் வந்து விடாது என்பது திண்ணம்.///
நல்லெண்ணம் நிறைய இருக்கு உங்களுக்கு!!
எல்லோரும் இதை செய்யலாமே!!!
தேவா...
சூடான இடுகையில் வந்துவிட்டது வாழ்த்துகள் !
50க்கு வாழ்த்துக்கள்..துக்ளக் ஆசிரியரே.. ச்சோ சுவீட்..
வலை உலக இண்டலெக்சுவல் அண்ணன் மகேஷ் வாழ்க!
கொங்குத் தமிழ் சிங்கம்
அண்ணன் மகேஷ் வாழ்க!
கும்மிக் குல திலகம்
அண்ணன் மகேஷ் வாழ்க!
அம்பது கண்ட அதிசயம்
அண்ணன் மகேஷ் வாழ்க!
ஏம்ப்பா....யாராவது சோடா குடுங்கப்பா :)))
நான் தொடர்ந்து "சூடான" பதிவுகள் இட வாழ்த்தி விட்டு வழமை போல் (பற்களைக் கடித்துக்கொண்டேனும்) பின்னூட்டங்களை இட்டு வரவும்.
//
அண்ணே இதுவரைக்கும் உங்க பதிவுகள்ல அதிக பின்னூட்டம் என்னோடதுதான்னு நினைக்கிறேன். கடைசியா உங்க வலைப்பூவுக்கு நம்ப மார்க்கெட்டிங்கால வந்தவரு நர்சிம்.
(பலபேர நான் அனுப்பி வச்சாலும் இன்னும் ஒரு ஆளு கமிஷன் கூட உருப்படியா வந்து சேரல)
//50-ஆவது 'சூடான பதிவு' !! 'சோ' வாட்? //
50-ஆவது 'சூடான பதிவு' !! So Hot !!!
:)
நன்றி கோவி.கண்ணன்....
நன்றி நிஜமா நல்லவன்...
நன்றி அப்துல்லா அண்ணே... நம்ம கச்சியோட கொ ப சே நீங்கதானேண்ணே... சோடா ஒரு க்ரேட் குடுத்து அனுப்பிச்சேனே வந்துச்சா?
நன்றி நர்சிம்... ச்சொ க்யூட்...
நன்றி தேவா......
கோவி சார்... so nice of you !!
அய்யாமார்களே வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையத்தில் உட்காரும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பு எப்போது உட்கார்ந்தாலும் அக்கப்போர் ஆகி எழுதறதெல்லாம் பின்னூட்டம் ஆகறதே இல்லை. எல்லாப் பதிவும் படிச்சுட்டேன். முதலில் 'என் அவன்' = தலைப்பு கொஞ்சம் 'அன்னியமாய்' இருந்தது. 'என்னவன்' என்றிருந்தால் 'அன்னியோன்னியமாய்' இருந்திருக்கும். கதை அருமை. உலக அரசு என்பது எதிர் காலத்தில் மிக சாத்தியம். It is an idea whose time has come...and it cant be stopped. இதற்கு முன்னோடியாகத்தான் நமது பிரதமர்...பயங்கரவாதத்திற்கு ஆளான நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு ராணுவத்தை உருவாக்க வேண்டும். அது அந்த அமைப்பு நாடுகளில் எந்த வித தடையும் இல்லாமல் பயங்கரவாதத்தை ஒடுக்க எந்தவித அடக்கு முறையும் உபயோகிக்கலாம்...என்றெல்லாம் பலவித யோசனைகள். இதை ஐ.நா. வரவேற்றுள்ளது. பரீசீலனைக்கு எடுத்துள்ளது. பார்ப்போம்..என்ன ஆகிறதென்று! விமரிசிக்கப்பட்ட படங்கள் எல்லாம்...காலத்தால் அழிக்கபட முடியாத காவியங்கள். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதவை. மற்ற நண்பர்கள் எல்லாம் நலமா? புதுவை அண்ணன் அப்துல்லா, பழமைபேசி.... என்ன உங்கள் பின்னூட்டங்கள் அளவில் சிறியதாகி விட்டன? (மற்றவர்கள் கோபிக்க வேண்டாம்). மறுபடி அக்கப்போர் ஆவதற்கு முன்...யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ம்ம்ம்ம்... அண்ணன் வெகு நாட்களுக்குப் பிறகு குகையை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
எல்லா நண்பர்களும் நலம். பல புதிய நண்பர்களும் வருகை தந்துள்ளனர். அப்துல்லாவுக்கு தலைக்கு மேலே வேலை. பழமைபேசியாருக்கு ஒர் நாளைக்கு 200 பின்னூட்டங்கள் போட வேண்டியுள்ளது. எனவே அளவில் சிறுத்து விட்டன.
50க்கு வாழ்த்துக்கள் மகேஷ் சார் :)
//நிற்க.//
முடியாது.. நின்னுட்டு எல்லாம் கமெண்ட் போட முடியாது.. அதனால நீங்க சொல்லாமலே உக்கார்ந்துட்டேன்.. போங்க.. :))
அஞ்சு மாசத்தில அசராம அம்பது போட்ட அண்ணன் வாழ்க..
அன்பின் மகேஷ்,
வாழ்த்துக்கள் நண்பரே :)
Post a Comment