Wednesday, December 10, 2008

ஐ.நா. சபை - ஜெனீவா


3 வாரத்துக்குப் பிறகு மறுபடியும் ஜெனீவா பயணம். போன முறை வந்தபோது ஐ.நா சபையைப் பாக்க முடியல. இன்னிக்கு நமக்கு சிவராத்திரி ஆபீஸ்ல. அதனால காலைல ஒரு 10 மணிக்கு ஐ நா சபைக்கு போனேன். (சபைக்குன்னா..... சபை கட்டடத்துக்கு !! ) காலைல இருந்தே லேசா பனி பெஞ்சுக்கிட்டுருந்துது. ஸ்வெட்டர், ஜேக்கெட், குல்லா, க்ளவுஸ்னு எல்லாம் போட்டும் குளிர் பின்னுது. மெயின் கேட்டுக்குப் போனா "இந்த கேட்டு இல்ல, அந்தபக்கம் 400 மீட்டர் தூரத்துல இருக்கற இன்னொரு கேட்டுக்குப் போங்க"ன்னுட்டாங்க. சரின்னு பக்கத்துல இருக்கற பூங்கா வழியாப் போனா... அட.. நம்ம காந்தி புத்தகம் படிச்சுட்டு உக்காந்துருக்காரு. பார்ரா....ன்னு அவரை ரெண்டு போட்டோ எடுத்துக்கிட்டு மேல போனா "ஏரியனா"ன்னு ஒரு பெரிய ம்யூசியம். நாம சத்தரத்துக்குப் போனா, நமக்கு முன்னால தரித்திரம் போகுமாம். செவ்வாக்கிழமை மூடியிருக்குமாம். "உங்களையெல்லாம்...."னு பல்லக் கடிச்சிட்டு நேரா ஐ நா சபை விசிட்டர்ஸ் கேட்டுக்குப் போனேன்.பயங்கர செக்யூரிடி. கொண்டு போற பொருளெல்லாம் (பெல்ட் ஷூ உள்பட) x-ரே பண்ணி அனுப்பறாங்க. (பலபேருக்கு பேண்ட் இடுப்புல நிக்கறதே பெல்ட்னாலதான். அவுங்க பாடு திண்டாட்டந்தான்). பிறகு பாஸ்போர்ட் வாங்கி பாத்துட்டு, ஒரு போட்டொவும் புடிச்சு அட்டகாசமா ஒரு விசிட்டர் ID கார்ட் குடுக்கறாங்க. பேஸ்மெண்டுல 10 ஃப்ரான்க் குடுத்து ஒரு guided tour டிக்கட் வாங்கிட்டு போய் லைப்ரரி ரிசப்ஷன்ல உக்காந்துக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு டூர். நான் போனபோது ஒரு க்ரூப் அப்பத்தான் உள்ள போயிருந்தாங்க. நாங்க ஒரு 15 பேர் முக்காமணி நேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. தனியா உள்ள எங்கியும் சுத்த முடியாது. கைட் கூடத்தான் போகணும்.

முதல்ல போன குரூப் திரும்பி வந்ததும், 10 நிமிஷம் கழிச்சு எங்களை கூட்டிக்கிட்டுப் போனாங்க. லிங் சோ ங்கற சைனாக்காரப் பொண்ணுதான் கைட். முதல்ல ஐ நா அமைப்பப் பத்தி ஒரு பெரிய லெக்சர் குடுத்தாங்க. ஐ நா அமைப்போட அங்கங்கள் என்ன, திட்டங்கள் என்ன, அலுவலகங்கள் எங்கெல்லாம் இருக்குன்னு விவரமா சொன்னாங்க. பெரும்பாலான அலுவலகங்கள் அமெரிக்காவுலயும் ஐரோப்பாவுலயுந்தான் இருக்கு. ஆசியால டோக்யோல ஒண்ணும், ஆப்பிரிக்கால நைரோபில ஒண்ணும் இருக்கு.

பிறகு மெயின் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குப் போனோம். மேல விசிட்டர்ஸ் கேலரிக்குதான் போகலாம். கீழ ஹால்ல அகர வரிசைல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாற்காலி போட்டுருக்கு. எல்லா நாற்காலிகள்லயும் (விசிட்டர்ஸ் உள்பட) ஒரு இண்டர்ப்ரெடர் கருவியும் இயர் போனும் இருக்கு. ஐ நா வோட 6 பொது மொழிகள்ல மொழிபெயர்க்கும். ஆங்கிலம், அராபிக், ஃப்ரென்ச், ஸ்பானிஷ், ரஷ்யன் மற்றும் சைனீஸ். நமக்கு எந்த மொழி வேணுமோ அந்த மொழிக்கு செட் பண்ணி வெச்சுட்டுக் கேட்டுக்கலாம். (பான் கி மூன் நம்ம பங்காளிதான்... இன்னிக்குப் பாத்து அவுருக்கு ஜலதோஷம்னு வரமுடில. இல்லாட்டி நாமுளும் ஒரு உரயாத்தீருக்கலாம்... ஹ்ம்ம்ம்ம்)பிறகு மெயின் அசெம்ப்ளி ஹால் இருக்கற கட்டடத்துக்குப் போனோம். கட்டடத்துக்குள்ள கிட்டத்தட்ட 200 கான்ஃப்ரன்ஸ் ஹால்கள் இருக்கு. ஒவ்வொண்ணுலயும் எதாவது மீட்டிங் நடந்துக்கிட்டே இருக்கு. இந்த வாரம் பூரா மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகள் பத்தி பல கூட்டங்கள். போன பத்து வருஷமா மெயின் அசெம்ப்ளி ஹாலுக்கு விசிட்டர்களுக்கு அனுமதி இல்லை. வெளிய ஒரு பெரிய பார்க் இருக்கு. அதுக்கும் அனுமதி இல்லை. (அய்யா தீவிரவாதிகளே... நல்லாயிருங்கடே...)கடைசியா கவுன்சில் ஹால். பல நாடுகளுக்கிடையேயான் அமைதி ஒப்பந்தங்கள் இங்கதான் கையெழுத்தாயிருக்கு. அந்தா ஹாலே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நாலு சுவர்கள் மற்றும் மேற்கூரை எல்லாத்திலயும் பெரிய பெரிய ஓவியங்கள். எல்லா ஓவியங்கள்லயும் இந்த ஐம்பெரும் நாடுகளும் உலகத்தை எப்பிடி 'காப்பாத்தறாங்க'ங்கறது சித்தரிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்னு தோணுச்சு. ஆனா அட்டகாசமான ஓவியங்கள். அந்த ஹாலுக்கே ஒரு தனிக் கலரையும் மூடையும் குடுக்குது.
பிறகு கைட் எங்களை பத்திரமா திரும்ப அந்த லைப்ரரிக்கே கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு "அம்புட்டுதான்... இன்னும் பத்து நிமிஷத்துல எடத்தக் காலி பண்ணிரணும்"னு சொல்லிட்டு போயிட்டாங்க. சின்ன வயசுதான்னாலும் 5-6 மொழிகள்ல அந்தப் பொண்ணு பொளந்து கட்டறதப் பார்க்க ஆச்சரியமா இருந்துது.

பொதுவா இந்தக் கட்டடமே எல்லா உலக நாடுகளிலிருந்து பெறப்பட்ட நன்கொடைகள்ல இருந்துதான் கட்டியிருக்காங்க. உள்ள எல்லா இடங்கள்லயும் பல நாடுகளிலிருந்து அளிக்கப்பட்ட பல ஓவியங்கள், சிலைகள், மத்த கலைப் பொருட்கள்னு எக்கச்சக்கமா இருக்கு.

வால் : இந்த ஜெனீவா ஐ நா மெயின் அசெம்ப்ளி ஹால் கட்டறதுக்கு இடம் குடுத்து உதவினவரு குஸ்தோ (Gusteau). அவர் கேட்டுக்கிட்டபடி உள்ள இருக்கற பார்க்குல அவரோட சமாதி இருக்கு. அதோட அவர் சாகும்போது 10 மயில்கள வளத்திக்கிட்டுருந்தாராம். அதனால இப்பவும் அங்க 10 மயில்களைப் பராமரிச்சுட்டு வராங்க. ஒண்ணே ஒண்ணுதான் எங்கண்ல பட்டுச்சு.

அப்பறம் இந்த ஐ நா லோகோவப் பத்தி ஒரு விஷயம் இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுல இருக்கற பூமி படம் வடதுருவத்துல இருந்து பூமியப் பாக்கற மாதிரி இருக்கு. ஏன்னா எந்த ஒரு நாட்டுக்கும் முக்கியத்துவம் குடுக்கற மாதிரி இருக்கக் கூடாதுங்கறதுக்காகவாம்.


ஐ நா ஜெனீவாவோட வலைத்தளம் http://www.unog.ch

9 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

//இப்பவும் அங்க 10 மயில்களைப் பராமரிச்சுட்டு//

அதே பத்து மயில்களா?

உருப்புடாதது_அணிமா said...

சொல்லுங்க நான் தானே மொதல் போனி ???

உருப்புடாதது_அணிமா said...

நம்ம அண்ணன் முந்திக்கிட்டாரே ??

உருப்புடாதது_அணிமா said...

பழமைபேசி அவர்களை இந்த பதிவின் மூலம் வன்மையாக கண்ணடிக்கிறேன்.. சாரி கண்டிக்கிறேன்

Mahesh said...

மணியண்ணே... நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?

//அதே பத்து மயில்களா?//

எப்பவும் பத்து மயில்கள் இருக்கற மாதிரி பாத்துக்கறாங்க.

Mahesh said...

அப்பாடா... அணிமா வந்தாத்தானே கலை கட்டுது....

பரிசல்காரன் said...

குடுத்து வெச்ச மனுஷய்யா நீர்! பொறாமையா இருக்கு.

ஆமா.. ஐ,நா. சபை கட்டடத்துலதானே யாதும் ஊரே யாவரும் கேளிர்-ஐ எழுதிருக்காங்கன்னு சொல்வாங்க? அதப் பார்த்தீங்களா?

Mahesh said...

வாங்க பரிசல்... நானும் கேள்விப் பட்டிருக்கேன்.. ஆனா இங்க நான் பார்த்த வரைக்கும் தெரியல... ஒருவேளை ந்யூயார்க் ஆபீஸ்ல இருக்குமோ என்னமோ...

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>