Thursday, December 11, 2008

இரண்டு இங்கிலிபீஸ் படங்கள்

இப்ப என்னவோ திடீர்னு பழைய இங்கிலிபீஸ் படங்கள் மேல ஆர்வம் மறுபடி வந்துருச்சு. க்ளிண்ட் ஈஸ்ட்வுட், க்ரெகொரி பெக், ஆண்டனி க்வின் இவுங்களோட படங்களா தேடிப் புடிச்சு கொஞ்சம் பாத்தேன். அதுல சில....


எஸ்கேப் ஃப்ரம் அல்கட்ராஸ் (1979)
க்ளிண்ட் ஈஸ்ட்வுட்


அல்கட்ராஸ் ஒரு சூப்பர் செக்யூரிடி ஜெயில். சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்கு பக்கத்துல கடலுக்கு நடுவுல இருக்கற ஒரு தீவுல இருக்கு. அதுலேருந்து தப்பிக்கறது குதிரைக் கொம்பு. இந்த ஜெயிலுக்கு ஃப்ராங்க் மோரிஸ் வரான். இவன் முன்னாடியே பல ஜெயில்கள்ல இருந்து தப்பிச்சு ட்ராக் ரெகார்ட் வெச்சுருக்கறவன். அதுக்காகத்தான் கடைசியா இங்க அனுப்பிச்சுருக்காங்க. ஜெயில் வார்டன் ஒரு முசுடு. யாரும் தப்பிக்க முடியாது அப்பிடியே தப்பிச்சாலும் கடல்ல நீந்திப் போறதுக்குள்ள குளிர்ல வெறச்சே செத்துப்போயிடுவாங்கன்னு உறுதியா நம்பறாரு.

மோரிஸ் உள்ள வந்ததுமே வார்டன் அவனைத் தனியாக் கூப்பிட்டு வார்ன் பண்றாரு. வெளிய வரும்போது நம்மாளு வார்ட்ன் ரூமுல இருந்து ஒரு நெய்ல் கட்டர சுட்டுட்டு வந்துடறாரு. வந்த மொத நாள்ல இருந்தே எப்பிடி தப்பிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடறான். சாப்பாட்டு கூடத்துல இன்னும் சில கைதிகளோட பேசும்போது இன்னொரு 3 பேருக்கு தப்பிக்கற ஆசை இருக்குன்னு தெரிஞ்சு 4 பேரும் ப்ளான் பண்றாங்க. அவுங்கவுங்க வேலை செய்யற இடத்துல இருந்து சில பொருட்களை செல்லுக்கு கடத்திக் கொண்டு வந்து சில டகாய்டி வேலையெல்லாம் பண்ணி தப்பிக்க முயற்சி பண்றாங்க. 4 பேருல ஒருத்தன் மட்டும் தப்பிக்க முடியாமப் போகுது. மத்த மூணு பேரும் தப்பிச்சுடறாங்க. இத தாங்கிக்க முடியாத வார்டன் அவங்க கடல்ல மூழ்கி இறந்துட்டாங்கன்னு ஃபைல க்ளோஸ் பண்ணிடறாரு.

ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டி 1979ல் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ்ல ஹிட். படத்துல கடைசில 3 பேரும் தப்பிச்சுட்ட மாதிரி காமிச்சாலும் உண்மைல அவங்க தப்பிச்சாங்களாங்கறது ஒரு மிஸ்ட்ரி. இந்த சம்பவத்துக்கப்பறம் அல்கட்ராஸ் சிறையை மூடீட்டாங்களாம்.

படத்துல பல சின்னச் சின்ன லாஜிக்கல் ஒட்டைகள் இருந்தாலும் படத்தோட grandeur அதயெல்லாம் மறைச்சுடுது. தமிழ் படங்கள்ல "இதோ இப்ப பாத்துருவாங்களோ"ங்கறபோது பூனையை காமிச்சு கதைய நகத்தி ஹீரோவை காப்பாத்தற மாதிரியான சில காட்சிகளும் உண்டு. ஆனா ஈஸ்ட்வுட் எப்பவும் போல நேர்த்தியான் நடிப்பு. ஒவ்வொரு நடிகரும் அவங்க பார்ட்டை சிறப்பா செஞ்சிருக்காங்க. கடைசி சீன் சூப்பர்.

கெல்லீஸ் ஹீரோஸ் (1970)
க்ளிண்ட் ஈஸ்ட்வுட், டெல்லி சவலாஸ், டொனால்ட் சுதர்லேண்ட்

இது கொஞ்சம் காமெடி கலந்த ஆக்சன் படம். நாயகன் கெல்லி (வேற யாரு? ஈஸ்ட்வுட்தான்) எதோ ஒரு காரணத்துக்காக ஒரு லெவல் பதவி இறக்கிடறாங்க. அவரு கொஞ்சம் கோவத்துல இருக்காரு. ஒரு ஜெர்மன் கர்னலை சிறைப் புடிச்சு வந்து விசாரிச்சிட்டுருக்கும்போது, ஜெர்மன் ராணுவம் அமெரிக்க கேம்ப தாக்கறாங்க. அந்த கர்னல் கிட்ட ஒரு தங்கக்கட்டி இருக்கறதைப் பாக்கற கெல்லி அந்தாளுக்கு நல்லா ஊத்திக்குடுத்து ஜெர்மனில ஒரு பாங்குல 14000 தங்கக் கட்டிக இருக்கற விஷயத்த தெரிஞ்சுக்கறான். ஜெர்மன் தாக்குதல் , அந்தாளை அங்கியே விட்டுட்டு கேம்பை விட்டுப் போயிடறாங்க. கேம்போட அந்த கர்னலும் காலியாயிடறாரு.

இப்ப கெல்லி அந்தத் தங்கத்தை தானே அடையணும்னு திட்டம் போட்டு, அவனோட சார்ஜெண்ட் மேஜர் பிக் ஜோ (சவலாஸ்), ஆட்புல் (சுதர்லேண்ட்) இவுங்களையும் இன்னும் சில ஆசை புடிச்ச வீரர்களையும் சேத்துக்கிட்டு தங்க வேட்டைக்குக் கிளம்பறாங்க. 3 நாள் அவகாசம். அதுக்குள்ள தூக்கிடணும். ஒரு ஓட்டை பீரங்கிய வெச்சுக்கிட்டு அவங்க பண்ற அட்டகாசம், ஒரே காமெடிதான். போற வழில ரெண்டு வீரர்கள் கன்ணி வெடில இறந்துடறாங்க. படத்துல கொஞ்சம் சோகமான சீன் இதுதான்.

சில சாதுரியமான ஆக்சன் ப்ளான்களுக்கு அப்பறம் அந்த பேங்க் இருக்கற ஜெர்மன் ஊருக்குப் போய் சேந்துடறாங்க. அங்க இவுங்களோட பீரங்கிய விட ரொம்ப அட்வான்ஸ்டான 'டைகர்' பீரங்கிக 3 காவலுக்கு இருக்கு. சாமர்த்தியமா எல்லாத்தையும் அடிச்சு தூள் கிளப்பிட்டு தங்கத்தை எடுத்துட்டுப் போயிடறாங்க.

நடுவுல அமெரிக்க ஜெனெரல் இவுங்க முன்னேறிப் போறதை நாட்டுக்காக சண்டை போடறாங்கன்னு தப்பா அர்த்தம் பன்ணிக்கிட்டு அடிக்கிற கூத்து இன்னும் காமெடி.

வழக்கம்போல இதுலயும் சில லாஜிக் சறுக்கல்கள். இருந்தாலும் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு. இதுவும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம். ஈஸ்ட்வுட் நடிப்பு சொல்லவே வேணாம். சவலாஸ்... டாப் க்ளாஸ். சுதர்லேண்ட் எல்லாத்தையும் தூக்கி சாப்டுடறாடு. அவரோட வித்தியாசமான கெட்டப்பும், பேச்சும் ஓஹோ.

இப்பத்திக்கு இது போதும்னு நினைக்கிறேன். இன்னும் சில படங்களப் பத்தி பின்னால.....

36 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

சுரேகா.. said...

சூப்பரா சொல்லியிருக்கீங்க
பாக்க விட்டுப்போச்சு
உடனே வாங்கி பாத்துடறேன்..!

VIKNESHWARAN said...

அண்ணே எழுத்து ரொம்ப சிறுசா இருக்கு...

Mahesh said...

நன்றி சுரேகா.... பாருங்க பாருங்க... எஞ்சாய் பண்ணுங்க...

வாங்க விக்கி .... இல்லிங்களே எழுத்து எப்பவும் போலத்தானே இருக்கு... நான் எதயும் மாத்தலயே...

கும்க்கி said...

அண்ணே முதல்ல நாந்தா வந்தேன்..
ஆனா ஆற்காட்டார் டிஸ்டர்ப் பண்ணீட்டார்.
பதிவ படிச்சுட்டு சாயங்காலமா மீட் பண்ணலாம்..
(கோடாரி எடுத்துட்டு காட்டுக்கு கெளம்பிட்டேன்...)

Mahesh said...

வாங்க கும்க்கி... வெட்டி முறிக்கப்போறீங்கன்னு சொல்லுங்க :)

கும்க்கி said...

அண்ணே .,
கிளிண்ட் தான் என்னோட பேவரிட்டும்.
ஒரு டிவிடி கலெக்சன் பெங்களூரிலிருந்து வாங்கி வந்து பல மாதமாக தூங்கிக்கொண்டிருக்கிறது.
பதிவை படித்தவுடன் பார்க்கணும்போல் ஆவலாக இருக்குது.
(பல தடவை இப்படித்தான்...ஆர்வமாக வாங்கி வந்தாலும் மாத கணக்கில் பெட்டிக்குள் இருக்குது பல படங்கள்)

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

கும்க்கி said...

ஹி..ஹி.
எங்கண்ணே வெட்டி முறிக்க விடுறாய்ங்க...
மாசத்துக்கு 10 மீட்டிங்.
இரண்டு நாளைக்கொருக்கா என்னய்யா பண்ண..? அப்படின்னு கூப்ட்டு கேட்டுட்டே இருப்பாங்க..
வேளை செய்ய விட்டாத்தானே..
ரிப்போட்டுகளிலேயே எல்லாம் நடக்கும்.அம்புட்டுத்தேன்.

விஜய் ஆனந்த் said...

:-)))...

உங்க விமர்சனங்கள் சினிமா பாக்குற ஆவல தூண்டுது...நெறய சினிமா பாக்க வெச்சிடுவீங்க போலருக்கே!!!

விக்கி...இதுக்குப்பேர்தான் தூரப்பார்வை!!!

Mahesh said...

@ கும்க்கி : உங்களையெல்லாம் ரெண்டு நாளைக்கொருக்காத்தான் கேக்கறாங்களா? பரவால்லயே... இங்க ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை... இருக்கியா... செத்துப்பூட்டியான்னு !!

Mahesh said...

பாத்துங்க விஜய்... ரொம்ப தூரம் பாக்காதீங்க..... கன்ணு வலிக்கும்.

கும்க்கி said...

Mahesh said...
@ கும்க்கி : உங்களையெல்லாம் ரெண்டு நாளைக்கொருக்காத்தான் கேக்கறாங்களா? பரவால்லயே... இங்க ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை... இருக்கியா... செத்துப்பூட்டியான்னு !!

ஹா ஹா ஹா...

இந்த விஷயத்தில கவர்மிட்டு கொஞ்சம் பரவால்லீங்ணா..

கும்க்கி said...

விஜய் ஆனந்த் said...
:-)))...

உங்க விமர்சனங்கள் சினிமா பாக்குற ஆவல தூண்டுது...நெறய சினிமா பாக்க வெச்சிடுவீங்க போலருக்கே!!!

விக்கி...இதுக்குப்பேர்தான் தூரப்பார்வை!!!


எண்ணிப் பார்த்தேன் மொத்தமா ஆறு வரி.......அதிசயம் ஆனால் உண்மை.

ஸ்மைலி ...

Mahesh said...

கும்க்கி அண்ணே... இப்பல்லாம் விஜய் மாறிட்டாரு... இன்னும் கொஞ்ச நாள்ல கடை திறந்துடுவாரு பாத்துக்கிட்டே இருங்க....

புதுகை.அப்துல்லா said...

தொர இங்லிபீசு படமெல்லாம் பாக்குது :)

narsim said...

வாவ் கலக்கல் அறிமுகம் தல..வீக் எண்ட் இந்த படங்கள் தான் .. (தி டி வி)

narsim said...

//புதுகை.அப்துல்லா said...
தொர இங்லிபீசு படமெல்லாம் பாக்குது :)
//

இதை படித்தவுடன் அனிச்சையாக எழுந்த சிரிப்பு அடங்க வெகுநேரம் ஆனது..

கலக்கல் அப்துல்லா..

மங்களூர் சிவா said...

படிக்கிறப்பவே ஆவலா இருக்கு, கண்டிப்பா பாத்துடுவோம்.

Anonymous said...

மகேஷ்,
நமக்கு ஆங்கிலப் படம்னாலே சீன் படம்தான் +2 முடிக்கும்வரை. 1982-ல சென்னையில கேசினோ தியேட்டர்ல இந்தப் படம் பார்த்தேன். அதுக்கப்புறம்தான் இங்கிலிஸ் படம் மாதிரியும் இருக்குன்னும் புரிஞ்சுது.

ஈஸ்ட்வுட் நல்லாப் பண்ணியிருபாரு. எதுக்குடா தீக்குச்சியெல்லாம் சேகரிக்கிறாருன்னு பார்த்தா தூள் கிளப்புவாரு.

கலைவாணர் அரங்கத்திலயும் அப்பெல்லாம் நல்ல படம் போடுவாங்க.

தாமிரா said...

புதுகை.அப்துல்லா said...
தொர இங்லிபீசு படமெல்லாம் பாக்குது :)// ரிப்பீட்டேய்..

சும்மாவே இந்த‌ மாதிரி ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ ஆர்வ‌மே வ‌ராது. அதுல‌யும் இப்ப‌ இருக்குற‌ பிஸியில‌ சான்சேயில்ல‌.. ப‌டிக்காம‌லே பின்னூட்டம் எண் 108.! கோச்சுக்காதீங்க‌ பாஸ்.!

தாமிரா said...

1982-ல சென்னையில கேசினோ தியேட்டர்ல... ஹிஹி..கெக்கேபிக்கே.. பெ..ர்..சு..!

Mahesh said...

நன்றி அப்துல்லா அண்ணே... ஆமண்ணே... ஹிஹ் ஹி

நீங்க இப்ப இருக்கற பிசியில நம்ம கடைப் பக்கமும் வந்து போயிருக்கீங்க...

நன்றி நர்சிம்....

நன்றி வேலன்...ஈஸ்ட்வுட் ஈஸ்ட்வுட்தான்

நன்றி தாமிரா... புடிக்குதோ புடிக்கலயோ வந்து போயிட்டுருங்க... என்னிக்காச்சும் ஒரு நல்ல பதிவு நாங்களும் போட்ருவமுல்ல....

பரிசல்காரன் said...

சந்திரமுகி படத்துல அந்த அறைக்குள்ள போய்ட்டு அதை பார்த்ததும் ரஜினி சொல்ற டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது..

”ரசிகன்யா நீர்!”

பிரமிக்க வைக்குது உங்க சகலகலாதிறன்!

பயணம், புத்தகம், சினிமா என்று நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் ஒவ்வொன்றும் பின்னாளில் உங்களுக்கு பொக்கிஷமாய் இருக்கப்போகிறது!

பழமைபேசி said...

பதிவுக படு வேகமா வருது....இனிதான் படிக்கணும்!

Mahesh said...

நன்றி பரிசல்.... உங்களோட ரசனைகள விடவா?

மணியண்ணே... வர வர அட்டெண்டன்ஸ் மட்டுந்தான் போடறீங்க... ???? !!!

வருங்கால முதல்வர் said...

தமிழ் சப்டைட்டில் போடுவாங்களா?

உருப்புடாதது_அணிமா said...

தொரை இங்கிலீசு படம் எல்லாம் பாக்குது ??

உருப்புடாதது_அணிமா said...

//////////
புதுகை.அப்துல்லா said...

தொர இங்லிபீசு படமெல்லாம் பாக்குது :)
////////////


ஐயோ எனக்கு முன்னாடி அப்துல்லா அண்ணன் முந்திக்கிடாரே??

Mahesh said...

@ வருங்கால முதல்வர்... சப் டைட்டில்தான் "ஜுனூன்" முர்த்தி ரெடியா இருக்காரு :))

@ அணிமா : என்னா சாமி... அப்பப்ப எனிமா குடிச்ச மாதிரி அப்பீட்ட் ஆயிடறீங்க.... என்ன சங்கிதி? ஆமாங்க... தொர இப்ப் இங்லிபீஸ் படல் தவிர வேற பாக்கறதில்ல...

யு ஸீ... வீ ஸீ ஒன்லி இங்லிபீஸ் படம்ஸ்...

பழமைபேசி said...

நல்லா சொல்லியிருக்கீங்க!

Anonymous said...

Can you see "Guns of Navron"?.
One of best East wood movie.

Mahesh said...

நன்றி மணியாரே...

நன்றி அனானி... மன்னிக்கணும்.. Guns of Navarone ஈஸ்ட்வுட் கிடையாதுங்க... அதுல க்ரெகொரி பெக், டெனிஸ் நெவிஸ் மற்றும் ஆன்டனி க்வின். சூப்பர் படம். அதப் பத்தியும் எழுதறேன்.

SanJai காந்தி said...

அப்டியே ஆன்லைன் லின்க் குடுத்திருந்தா புண்ணியமா போயிருக்குமே சாமி.. :)

பரிசல்காரன் said...

பின்றீங்களே...

நாங்க ஏதோ உள்ளூர்ப்படத்தை அலசி ஆராய்ஞ்சா நீங்க கலக்கலான படத்தையெல்லாம் பார்த்து, பிரிச்சு மேயறீங்க.

இப்படி பின்னூட்டம் போட்டுட்டு பார்த்தா.. ஏற்கனவே என் பின்னூட்டம் இருக்கு.

ஏங்க.. மீள்பதிவுன்னு சொல்றதில்லையா...

Mahesh said...

@ பரிசல் :

மீளும் இல்ல பதிவும் இல்ல...
இந்த அரதப்பழைய பதிவு திடீர்னு எப்பிடி தமிழ்மணத்துல வந்துதுன்னு புரியல !! தடார்னு சஞ்சய்யும் நீங்களும் பின்னூட்டம் போடறீங்க?

L.Kitts said...

Narrated in easy language. good.