Wednesday, September 10, 2008

அவனோடெ ராவுகள்...3

முந்தைய பதிவுகள் ...1 ...2

நீங்க இதுவரைக்கும் போகவே போகாத இடத்துல நீங்க உங்க வாழ்க்கையோட ஒரு பகுதிய கழிச்ச மாதிரியா உணர்ந்திருக்கீங்களா? நீங்க இதுவரைக்கும் உணராத சில உணர்வுகளை அனுபவிச்சுருக்கீங்களா? ரெண்டுமே இந்த புத்தகத்தை படிச்சா கிடைக்கும்.


The Kite Runner
Author : Khaled Hosseini

இந்த புத்தகத்தைப் பத்தி யாரும் சொல்லாத ஒண்ணை நான் சொல்லிட முடியாது. அந்த அளவுக்கு நிறைய பேரு எழுதித் தீர்த்துட்டாங்க. இரண்டு சிறு வயது நண்பர்களுக்கிடையேயான உறவையும், உணர்வுகளையும் பத்தின கதை. காலீத் ஹொஸெய்னியோட முதல் கதைன்னு கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. மனித உணர்வுகள அவ்வளவு அற்புதமா எழுத்துல கொண்டு வந்திருக்காரு.

போர்னாலயும் தீவிரவாதத்துனாலயும் சீரழிஞ்சுக்கிட்டுருக்கற ஆப்கானிஸ்தான்ல நடக்கற கதை. அமீர் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹாஸன் அவுங்க வீட்டுல வேலைக்காரனோட பையன். கதைல பல அடுக்குகள் இருக்கற மாதிரி தோணலாம். ரெண்டு சிறுவர்களுக்கு நடுவுல இருக்கற நட்பு ஒரு பக்கம், உலகத்தால புறக்கணிக்கப்பட்ட, காலத்தின் கோலத்தால சின்னாபின்னமான ஒரு நாடு மறுபுறம். அப்பாவோட இருவேறு முகங்களை ஏத்துக்கமுடியாத, கோழைத்தனத்தோட போராடுற, குற்ற உணர்ச்சியால மருகுகிற அமீர்ங்கற பணக்கார சிறுவனோட போராட்டம் இன்னொரு பக்கம்.

ஆனா எனக்கென்னமோ, நம்ம எல்லாருக்கும் பொதுவான, சுலபமா நம்மளோட தொடர்பு படுத்திக்க கூடிய, ஆழமான 2 உணர்வுகளை பத்தின கதை மாதிரி தோணுது. கதை நடந்த இடத்துல இருந்து நேர்ல அனுபவிச்ச மாதிரி நம்ம உணர முடியறதுதான் இந்த கதையோட வெற்றின்னு நான் நினைக்கிறேன்.

ஓண்ணு, பழய நினைவுகள். அதுல எதுவுமே சரியாக இல்லாட்டாக் கூட. ஒரே ஆத்துல மறு முறை இறங்க முடியாதுன்னு சொல்லுவாங்க. (One cannot step into the same river) காலம்கற சக்தி பழச முழுசாவோ, பாதியாவோ அழிச்சுடுது. அதுனாலதானோ என்னவோ, நாம் படிச்ச பள்ளிக்கு இன்னிக்கு போனா, கட்டடங்கள் அதே மாதிரி அதே இடத்துல இருந்தாக் கூட, அந்த பழய நினைவுகளை அதே வீரியத்தோட திரும்ப அனுபவிக்க முடியாம போகுது. அதுனாலதான், அமீர் அமெரிக்காவுக்கு போனலும் தன் நண்பனோட பட்டம் விடுற சுகத்தை இழந்து தவிக்கறதை நாமும் உணர முடியுது. அதே மாதிரி, அமீர் காபூலுக்கு திரும்ப வந்து அதோட இன்றைய கோலத்த பாத்து சகிக்க முடியாம மருகறதையும் பார்க்கும்போது எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு தவிக்கிறோம்.

ரெண்டாவது குற்ற உணர்ச்சி. நம்மள்ல யாருக்கு இல்லை? தன்னோட உயிர் நண்பனை செய்யாத ஒரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வெச்சதுக்கக அமீர் வாழ்க்கை பூராவும், அதை விட்டு வெளிய வர போராடுறான். அது முடியுமா? அமீரோட அப்பா பிறகு ஏதோ காரணத்துனால அமெரிக்கவுக்கு குடும்பத்தோட இடம் பெயர்ந்தாலும், அமீருக்கு நல்ல கல்வியும், நல்ல வாழ்க்கையும் அமைஞ்சாலும், கண் முன்னால நண்பனை எல்லாரும் திருடன்னு ஏசுரதப் பாத்தப்பறமும் தான் ஒண்ணும் செய்ய முடியாம இருந்தத நினைச்சு வருந்தாத நாளே இல்லை. இத்தனைக்கும் அமீர் வேற ஒருத்தனால பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுக்கறான். ஒரு ஆப்கானிக்கு, இது ஒரு உயர்ந்த தியாகம். அப்பாவோட மறு புறத்தையும் அவர் செய்த, செய்யற கூடாத செயல்களையும் பார்த்து ரொம்பவே வெறுத்துப் போறான்.

பின்னால, தன் நண்பன் ஹாஸனின் மகனோட காபூலுக்கு திரும்ப வரும்போது, அமீருக்கு கிடைச்ச ஒரு சுதந்திரத்தை நாமும் கூடவே முழுமையா உணரலாம். சுமையில்லாத, லேசான ஒரு மனச விட சுதந்திரம் வேற என்ன இருக்க முடியும்னு கேக்கத் தோணுது. அமீர், அந்த சின்னப் பையனோட பட்டத்தை துரத்திக்கிட்டு ஓடும்போது, தொலைந்து போன எல்லாத்தையும் மீட்டுக்க ஒரு வழி கிடைச்சுட்ட மாதிரி தெரியுது.

இதை திரைப்படமாப் பாத்தபோது இன்னும் அழுத்தமா என்னை பாதிச்சுது. முடிஞ்சா இந்த கதைய புத்தகமாகவோ, படமாகவோ பார்க்க முயற்சி பண்ணுங்க. இது மாதிரி நம்ம உணர்வுகளை முழுமையா ஆளுகிற கதைகள் ரொம்ப குறைவு.

10 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

இந்த மாதிரி அந்த ஊர்ல இனி எத்தினி பேரோ? அறிமுகத்துக்கு நன்றிங்க....

Mahesh said...

@ பழமைபேசி :

ஆமாங்க.... ஆப்கானிஸ்தானப் பத்தி 3 ஆவணப் படங்கள் பாத்திருக்கேன்... அந்த வலிகளயெல்லாம் எழுதி புரிய வெக்க முடியாதுங்க... படம் பாத்த எனெக்கே அப்பிடின்னா, அத வாழ்ந்த்தவங்களோட உணர்வுகள நினைச்சுக்கூட பாக்க முடியாதுங்க... சில விசயங்கள் 'மனசோட மண்ணோட'ம்பாங்க... அதுமாதிரி சில என்னோட...

புதுகை.அப்துல்லா said...

இன்னைக்கே சாய்ந்தரம் லேண்ட்மார்க்ல போய் தேடி வாங்கிடுறேன்.

narsim said...

its a great one!.. "Friendship" line shown superbly..

narsim

(sorry for english)

Mahesh said...

@ அப்துல்லா :

நன்றி.... படிங்க.... படிச்சுட்டு எழுதுங்க....

Mahesh said...

@ narsim :

rrrrrrrrrrrrrrrrrrrepeattttttt

பரிசல்காரன் said...

நல்ல மதிப்புரை!

Mahesh said...

நன்றி பரிசலாரே !!

Anonymous said...

naan maheshin annan. inda valayum valai sarndha idamum enakku pudusu. enna inga srinagarla, valayil mattikaradhu....appidingara vishayam koncham kashtam. mahesh kitta ketta solvaru. mudinchappa naanum ulla vandhu ennoda karuthaiyum solren. makkal, neenga yaarum indha pakkam varadha irundha sollunga...sandhippom...ellorukkum vazhthukkal.

Anonymous said...

I would recommend his next book "A thousand splendid suns", gives insight into life in general and life of women in particular un these war torn country.
Navin