Tuesday, September 2, 2008

அமைதியா ஆர்ப்பாட்டம் பண்ணுங்க பாக்கலாம்

போன வாரம் சிங்கை பிரதமர் ஒரு அறிக்கைல இனிமே சிங்கை மக்களும் தங்கள் கருத்துக்களை வெளி உலகத்துக்கு உரத்துச் சொல்லவும், ஆர்ப்பாட்ட்ங்கள் நடத்தவும் ஒரு எடத்தை ஒதுக்கி குடுக்கும்னு சொன்னாரு. அதுக்காக ஹொம் லிங் பூங்காவுல 'ஸ்பீக்கர்ஸ் கார்னர்'னு ஒரு இடத்தயும் தேர்வு செஞ்சு இருக்காங்க. ஆனா ஆர்ப்பாட்டம் பண்றவங்க முதல்ல பூங்காக்கள் பரமரிப்பு ஆணையத்து கிட்ட விண்ணப்பிச்சு, முன் அனுமதி வாங்கி, அமைதியான் முறையில நடத்தணும். போஸ்டர் ஒட்டிக்கலாம், ஒலி பெருக்கி உபயோகிச்சுக்கலாம் (கட்டுபடுத்தப்பட்ட ஒலி அளவுல), சிறிய அளவுல டெமான்ஸ்ட்ரஷன் பண்ணலாம் அப்பிடியெல்லாம் சில கட்டுப்பாடுகளும் உண்டு.

இது நேத்துலேருந்து அமலுக்கு வந்தது. ஒடனே இங்க இருக்கற நிருபர்களெல்லாம் வாரிச் சுருட்டிக்கிட்டு அந்த எடத்துக்கு பக்கத்துல இருக்கற சாப்பட்டுக் கூடத்துல (food court) ஒரு நல்ல டீக்கடையாப் பாத்து எடம் புடிச்சு ஒக்காந்துட்டாங்க. காலையிலேருந்து ஈ காக்கா வரல. சாயங்காலம் ஒரு 6:30 மணி சுமாருக்கு யாரோ ஒரு பெரியவர் வந்து எதோ ஒரு துண்டு பிரசுரத்தை ஒரு 20 பேருக்கு வினியோகம் பண்ணீட்டு அப்பீட்டு ஆயிட்டாரு. அப்பறம் ஒரு 7 மணிக்கு ஒரு சிறு கூட்டம். வீட்டு வேலை செய்யற பணிப்பெண்களுக்கு எதிரான முறைகேடுகள எதிர்த்து 'அழுகைகளைக் கேட்போர்' (Hearer of Cries) அமைப்புலேருந்து சிலர் வந்து ரெண்டு மூணு போஸ்டர்களை நிறுத்தி வெச்சு, ஒரு பெண்ணுக்கு அடிபட்டு கெடக்கற மாதிரி மேக்-அப் போட்டு ஒக்கார வெச்சு, வரவங்க போறவங்க கிட்ட துண்டு பிரசுரங்களைக் குடுத்துட்டு ஒரு 10 நிமிஷத்துல மூட்டயக் கட்டீட்டு போயிட்டாங்க. பத்திரிக்கையாளர்களுக்கெல்லம் ஏமாற்றம்தான்னாலும், இன்னிக்கு பேப்பர்லயெல்லாம் இதுக்கு நல்ல பப்ளிசிட்டி.

சிங்கப்பூர் மாதிரியான கட்டுப்பாடான நாட்டுல இந்த அளவு மக்களுக்கு ஒரு மேடை அமைச்சு குடுத்து, பேச்சு சுதந்திரம் குடுக்கறது ஒரு நல்ல ஆரம்பம். ஆனாலும் மக்களுக்கு உள்ள ஊறிப்போன கட்டுப்பாடுகள (பயம்??) தளர்த்தி வெளிய கொண்டு வரது ஒரு பெரிய சவால்தான்.

18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

விஜய் ஆனந்த் said...

இது நல்லா இருக்கே!!!

பாக்கலாம்...போகப் போக எப்படி இருக்குன்னு...

ஜோசப் பால்ராஜ் said...

பொழைக்க வந்த இடம் சாமீ, நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துக்கிட்டு போயிடுறேன். வேற எதுவும் சொல்ல மாட்டேன்

கிரி said...

//சிங்கப்பூர் மாதிரியான கட்டுப்பாடான நாட்டுல இந்த அளவு மக்களுக்கு ஒரு மேடை அமைச்சு குடுத்து, பேச்சு சுதந்திரம் குடுக்கறது ஒரு நல்ல ஆரம்பம்.//

நல்ல ஆரம்பம் தான் ஆனா அதுல நம்ம ஆளுங்கள மட்டும் விடக்கூடாது....இது தான் சாக்குன்னு நம்ம ஊர்ல பண்ணுற மாதிரி போராட்டம் நடத்தி கட்சி எல்லாம் ஆரம்பிச்சுடுவானுக....அப்புறம் நம்ம தொல்லை தாங்காம இந்த திட்டத்தையே கை விட்டுடுவானுக ஹி ஹி ஹி

Mahesh said...

@ விஜய் ஆனந் :

வங்கண்ணே... மொத வாட்டி வரீங்க... நன்றி

Mahesh said...

@ ஜோசெப் :

அய்யய்யோ... இப்பிடி பயந்து எங்களயும் பயமுறுத்தறீங்க..:)))

Mahesh said...

@ கிரி :

அதென்னமோ வாஸ்தவந்தான்.... வருகைக்கு நன்றி

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

"யாரு வேணா வந்து திருடிட்டுப் போகலாம், இந்தாங்க வீட்டு சாவி!
ஆனா, யாரு வந்து போறாங்கன்னு நாங்க பாப்போம்!"

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................இதென்ன வித்தியாசமான ஆப்பா இருக்கே:):):)

rapp said...

//"யாரு வேணா வந்து திருடிட்டுப் போகலாம், இந்தாங்க வீட்டு சாவி!
ஆனா, யாரு வந்து போறாங்கன்னு நாங்க பாப்போம்!"

//

ஹா ஹா ஹா

பரிசல்காரன் said...

நல்ல யோசனை!

இங்கயும் இப்படி பண்ண முடியுமா?

ஏதாச்சும் செய்யணும் பாஸ்!
(ஆரம்பிச்சுட்டாங்கப்பா!)

Mahesh said...

@ பழமைபேசி :

எப்பிடித்தான் தோணுதோ உங்களுக்கு இப்பிடியெல்லாம்? ஆனா இது நெஜமாவே நல்ல விஷயம்..

Mahesh said...

@ rapp:

வாங்க... வாங்க... முதல் முறையா வரீங்க... வருகைக்கு நன்றி...

ஆப்பா? நான் அப்பிடி நெனக்கல... ஏன்னா போன 2 வருஷமா நான் பல மாற்றங்கள பாத்துட்டு வரேன்...

Mahesh said...

@ பரிசல்காரன் :

பாஸ்... நீங்க கரெக்டா பாயிண்ட்ட புடிச்சுட்டீங்க.... உண்மைல நான் இத "ஏதாவது பண்ணணும் பாஸ்"க்கு ஒரு முன்னுரை மாதிரி லின்க் பண்ணணும்னு நெனச்சுக்கிடிருந்தேன்...

உடுமல உடுமலதான் !!பழமைபேசியும், கிரியுங் கூட நம்மூருதான் தெரியுமில்ல ??

பழமைபேசி said...

இது மாதிரி நம்ப ஊர்ல நடந்தா, கண்டிப்பா அது ரொம்ப நல்ல விசயம்! இப்ப எல்லாம், நிரந்தரமா பந்தல் போட்டுட்டுடானுவ கோயமுத்தூர் ஆட்சித் தலைவர்
அலுவலக சாலைல. சனங்க பாடு இம்சை. ஏற்கனவே குறுகலான பாதை அது. போயி சிதம்பரம் பூங்கால ஒக்காந்தா சனங்களுக்கு இடைஞ்சல் இருக்காது.

ஆனா, சிங்கப்பூர்ல...... வேணாம்! பாவம். சிங்கப்பூர் குடிமகனுங்க, அரிசி எந்த மரத்துல காய்க்குதுன்னு இப்பவாச்சும் கண்டு புடிச்சாங்களா, இல்லையா?

Mahesh said...

@ பழமைபேசி :

// அரிசி எந்த மரத்துல காய்க்குதுன்னு இப்பவாச்சும் கண்டு புடிச்சாங்களா, இல்லையா? //

ஆனாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்... திருமூர்த்தி மல தண்ணி பண்ற வேல.... ஆட்டுக்குட்டி முட்டையில இருந்து கோழிக்குஞ்சு வரும்போது நாங்களும் கண்டு புடிச்சுருவோம்..பாத்துக்கிட்டே இருங்க... அப்பறம் பேசுங்க

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

மகேசு, நீங்க தப்பா நினைக்கக் கூடாது..... ஒரு சிலதை இந்த இடத்துல பேச முடியாத சூழ்நிலை.... பொதுவா ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன்....
எங்க எல்லாம் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கோ, அங்க நிறய விசயம் இருக்கும். "தாழம்பூக் கொண்டையாம்! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!!"

(எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டது)