Friday, September 12, 2008

!!! இடைவேளை !!!

"இடைல" வேலை எல்லாம் இல்லீங்க, இடை இடையே வேலை, வேலைக்கு இடையே விடுமுறை.

இந்தியா பயணம். திரும்பி வர வரைக்கும் கடை லீவு. சந்தோசமா இருங்க. மூணே வாரந்தான். மறுபடி தொந்தரவு குடுக்க ஆரம்பிச்சுடுவேன். சொல்ல முடியாது. அப்பப்ப ஜன்னல் மட்டும் தொறந்து யாவாரம் நடந்தாலும் நடக்கும்.

எல்லாரும் வருத்தப்படற மாதிரியே அப்புராணியா மூஞ்சிய வெச்சுக்கிட்டிருக்கீங்களே... எப்பிடிங்க அது? செரி செரி அங்கிட்டு போனதும் மூஞ்சிய செரி பண்ணிக்கிடலாம்.

இப்பத்திக்கி திட்டம் முதல்ல ஸ்ரீநகர். [அண்ணன் விமானப் படைல விங் கமாண்டரா இருக்காரு] பொறவு டெல்லி, சென்னை, மைசூர், கோவை, உடுமலை, திருப்பூர் எல்லாம் போகறதா இருக்கு. "திருப்பூரா? இது வேறயா... ஊரு விட்டு ஊரு வந்து... விட மாட்டாங்களே"ன்னு பரிசலார் சொல்றது கேக்குது. விடறதாயில்ல. சிங்கை பதிவர்களுக்கு விசேஷமா எதாவது பரிசு குடுத்து அனுப்புவாரு. பொறுப்பா கொண்டாந்து சேக்கோணும். வெயிலான் வேற 1 டசன் T-ஷர்ட் குடுப்பாரு. அதை வேற வாங்கிகிடணும். எவ்வளவு பொறுப்புக....

திரும்பி வந்ததும் "இப்பொ நான் என்ன செய்ய?"ன்னு யாரையும் கேக்கவே வேணாம். "பயணப்பதிவு"ன்னு ஒரு தொடர் போடலாம். "திருப்பூரில் ஒரு திடீர் பதிவர் சந்திப்பு"ன்னு ஃபோட்டோவெல்லாம் [முதுகு மட்டும் இல்லாம முழுசாவே] போட்டு ஒரு பதிவு போடலாம். "சென்னையில் அப்துல்லாவுடன் ஒரு கலந்துரையாடல்" போடலாம். [இரவுல பீர் குடிக்கிறாரு. பகல்ல லேட்டா எழுந்திருக்கறாரு. இதுக்கு நடுவுல ஸ்டெடியா இருக்கிற ஒரு சில நிமிசங்களுக்குள்ள சந்திச்சு பேட்டிய முடிக்கணும்] அப்துல்லா அய்யா மூலமா மற்ற பதிவர்களையும் சந்திக்க முடிஞ்சா அது ஒரு பதிவா போடலாம். [அடடா... ஐடியாவெல்லாம் அவுட் பண்ணிட்டோமோ...] பரவால்ல... ஒரு மாசம் ஜாலியா [நமக்கு ஜாலி... மத்தவங்க காலி] பதிவு போட்டுட்டே இருக்கலாம். அதுக்குள்ள அடுத்த சிங்கை பதிவர் மாநாடு வந்துரும். மொத முறையா போறோம்கிறதால நாந்தான் Minutes of Meeting போடுவேன்னு போட்டுடலாம். [இடைவேளைன்னு சொல்லீட்டு ஒரு முழு நீள ('ள'கரம் ... நன்றி: narsim) படம் ஓட்டுரானே இவனெல்லாம் பதிவு போடலன்னு யார் அழுதது?]

இதுக்கெல்லாம் நடுவுல சென்னைல ஒரு பரிச்ச வேற எழுதி பாஸ் பண்ணியாகணும். எல்லாரும் அதுக்கு ஒரு நிமிசம் பிரார்த்தனை பண்ணுங்க. பண்ணீட்டீங்களா... ரொம்ப நன்றி...

செரி... வரட்டுமா? உடம்ப பாத்துக்கிடுங்க... வேளா வேளக்கி பதிவு போட்டுருங்க... நான் பின்னூட்டம் போடலியேன்னு வருத்தப்படாதீங்க... [ஐயோ... தாங்கலடா சாமி....]

டாட்டா...

[ Chorus : " BON VOYAGE " ]

நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... [ ஃப்ளைட்டு டேக் ஆஃப் ஆயிருச்சாமா :) ]

20 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

விஜய் ஆனந்த் said...

happy journey!!

BON VOYAGE!!!

Mahesh said...

நன்றி விஜய்_ஆனந்த் !!

narsim said...

பார்த்து சூதானமா நல்லபடியா.. நல்ல பிள்ளையா..

நர்சிம்

Mahesh said...

மிக்க நன்றி நர்சிம் !!

பழமைபேசி said...

ஒரு திட்டத்தோடதான் கிளம்புறீங்க போல.... நல்ல படியாப் போய்ட்டு வாங்க.....

பரிசல்காரன் said...

பறக்கும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

எப்போ திருப்பூர் வர்றேன்னு சொல்லீருந்தீங்கன்னா..
.
.


.
.
.
.
.
எஸ்கேப் ஆகியிருப்பேனே...!

பரிசல்காரன் said...

அங்கிருந்து இங்க வந்து என்னோட மொக்கையை கேட்டுட்டு வேற போகத்தயாரா இருக்கீங்க..

என்னத்த சொல்ல!

லொடுக்குபாண்டி said...
This comment has been removed by the author.
Mahesh said...

@ பரிசல் :

வாழ்த்துக்களுக்கு நன்றி...

நீங்க எஸ்கேப்பு ஆகிருவீங்கன்னு தெரிஞ்சுதான் ஒரு நாள் நோட்டீஸ்ல வரலாம்னு இருக்கேன் :)

வெக்கையக் கூட பாக்காம ரெக்க கட்டி வரதே மக்களை பாக்கத்தான்... இதுல மொக்கயென்ன பொக்கயென்ன? :))))))))))) (அட... டீ.ஆர். இங்க எங்க வந்தாரு??!!)

Mahesh said...

@ பழமைபேசி :

ஆமாமா பெரிய திட்டந்தான்...... எல்லாம் சரியா வரணும்... கொலசாமி கருப்பராயந்தான் பாத்துகிடணும்...

புதுகை.அப்துல்லா said...

அய்யா நான் மோர் குடிக்கிற ஆளுங்க......

Anonymous said...

நான் மகேஷின் அண்ணன். நான் விமானப் படையில் ஒரு விமானி. ஹெலிகாப்டர் விமானி. மஹேஷ் ஸ்ரினகர் வந்து இருந்த போது இந்த வலை தளத்தை அறிமுகப்படுத்தினார். எனக்கு இது கொஞ்ச்ம் புதுசு. ஆதலால் மக்கள் மன்னிக்கவும். ரொம்ப நாளைக்கு அப்புறம் தம்பியை சந்தித்ததில் ஒரு குஷி. நகர் கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது. வெளியே போவதா வேண்டாமா என்ற குழப்பம். இருந்தாலும் ஒரு குண்டு தைரியத்தில் கிளம்பினோம். மிக ரம்மியமாக இருந்தது சூழ்நிலையும் வான்நிலையும். மலையும் மலை சார்ந்த இடத்துக்கென்றே ஒரு சோம்பேறித்தனமான புதுமை....சொல்லிக்கொண்டே போகலாம். மகேஷ் நிறைய புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். நான் அவரை மாதிரி நிறைய விஷயங்கள் தெரிந்தவன் அல்ல. கிணற்றுத் தவளை. உங்கள் எல்லோரிடமிருந்து நான் நிறய விஷயங்கள் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். சந்திப்போம். பேசுவோம்.

பழமைபேசி said...

//
chitravini said...
நான் மகேஷின் அண்ணன். நான் விமானப் படையில் ஒரு விமானி.
//
வாங்க அண்ணே, வாங்க! உங்களை வலையகத்துல சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

அணிலன் said...

கொஞ்ச நாளா வராமே கஷ்டப்பட்டு இன்டர்நெட் கெடைச்சதும் "ராவுகள" பார்த்துட்டு ஆவலா வந்தா அல்வா குடுத்துடீங்களே...சரி .....பயணம் நல்ல படியா முடிச்சிட்டு வாங்க.....வந்ததும் வச்சிக்குறேன் ( தொடர் பதிவை சொதப்பிட்டேன்....மறைக்க இந்த அட்டாக்)

பழமைபேசி said...

ஒரே வேலைங்க..... அதான்.... இந்த வார இறுதியிலாவது எதையாவது படைக்கணும்.

anantha-krishnan said...

உங்க பிளாகின் ரொம்ப பிடித்திருந்தது ..
பிளாக் லோகத்தில் நீண்டநாள் கழித்து பிரவேசிக்கும் நான்
நம்ம ஏரியா பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்

www.jega-pethal.blogspot.com

Anonymous said...

பழமைபேசிக்கு மிக்க நன்றி. மகேஷ் தற்போது பரீட்சை எழுதுவதில் மிக மும்முரமாக இருக்கிறார். மனைவியையும் குழந்தையையும் மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மிக சிரத்தையோடு படித்துக்கொண்டு இருக்கிறார், பாஸாகியே தீருவேன் என்ற பிரக்ஞையோடு. இங்கு ஸ்ரினகரில் நாளொரு கல்லடியும் பொழுதொரு கலவரமுமாக இருக்கிறது. மற்றபடி ஒரு பிரச்சினையும் இல்லை. சிங்கையில் ஃபார்முலா 1 எப்படி நடக்கிறது? (ஃபார்முலாவுக்கு தமிழாக்கம் என்ன?)

பழமைபேசி said...

////
chitravini said...
//

அண்ணே வணக்கம்! மகேசு அவர்களின் நடப்புத் தகவலுக்கு நன்றி!! நான் சிங்கப்பூரில் 1995 ல் இருந்தேன். இப்போது சார்லட், U.S.A வாசம்.

//(ஃபார்முலா-1 க்கு தமிழாக்கம் என்ன?)//

போட்டிமுறை ஒன்று

பழமைபேசி said...

வாங்க! ஊர்ப் பிரயாணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா? அண்ணா, ஸ்ரீநகர்னு நாலும் எங்களுக்கு எடுத்து சொல்லுங்க பாப்போம். நம்ம பக்கம் கொஞ்சம் பாத்துப் போங்க.... ஒரு மார்க்கமா இருக்கும். அதான்!