Friday, September 5, 2008

அவனோடெ ராவுகள்...2

முந்தய பதிவு ...1

இப்பொ இங்க அறிமுகப்படுத்தப் போற புத்தகம் ரொம்பவே பிரபலமான புத்தகம். உங்கள்ல நிறய பேரு படிச்சுருப்பீங்கன்னு நெனக்கறேன். பெஸ்ட் செல்லர்ஸ் பட்டியல்ல மொதப் பத்துக்குள்ள எடம் புடிச்ச புத்தகம்.

Jonathan Livingston Seagull
Author : Richard Bach






ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஒரு கடல் நாரை. ஸீ கல் -க்கு தமிழ் இதுதான்னு நினைக்கறேன். தன் கூட்டத்துல இருக்கற மத்த பறவைகள விட ரொம்ப வித்தியாசமானது. மத்ததுகள்லாம் மீன்பிடி படகுக கரைக்கு வந்தொடனே பறந்தடிச்சுக்கிட்டுப் போய் சிந்துனது செதறுனதெல்லம் திங்கணும், வயித்த ரொப்பணும்னு இருக்கறப்போ, ஜொனாதன் மட்டும் வேற மாதிரி யோசிக்கும். இதுதான் வாழ்க்கையா? இதுக்காகத்தான் நாம பொறந்துருக்கமா? அப்பிடி இருக்கவே முடியாது... நமக்கு பறக்கற சக்தி இருக்கு... அதை நல்லா கத்துக்கணும்... உலகத்துலயே மிகச் சிறந்த, மிக வேகமா, மிகுந்த ஆளுமையோட பறக்க கூடிய கடல் நாரையாகணும்னு தீராத ஆசை. அதுக்காக ஒரு நாளைக்கு பல மணி நேரம் தன்னந் தனியா உயரப் போய் பறந்து பழகும். யோசிச்சு யோசிச்சு பறந்து பறந்து பழகி பழகி 215 கி.மீ. வேகத்துல பறக்கக் கத்துக்குது. ரெக்கய எப்பிடி மடக்கி வெச்சுக்கணும், எப்பொ விரிக்கணும், எவ்வளவு விரிக்கணும்கிறதெல்லாம் நிறய தடவ விழுந்து, அடிபட்டு, உயிரே போற மாதிரியான வலிகள உணர்ந்து, தன்னுடைய எல்லைகள தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா விடா முயற்சியோட பழகி ஓரளவுக்கு தன்னுடைய கனவ நனவாக்குது. ஜொனாதன் இந்த மாதிரி இருக்கறது அதனுடைய அம்மா அப்பவுக்குக் கூட சம்மதமில்ல. அந்த்க் கூட்டத்தோட தல ஜொனாதன பஞ்சாயத்துல நிக்க வெச்சு 'விசாரணை' பண்ணி கூட்டத்தை விட்டு ஒதுக்கி வெச்சுடுது.

ஆனா ஜொனாதன் அதப் பத்தி கவலப்படாம தன்னுடைய பயிற்சிய வேற எடத்துக்குப் போய் தொடருது. ஒரு நாள் அங்க வேற சில கடல் நாரைகள ஜொனாதன விடவும் வேகமா அழகா பறந்துக்கிட்டுருக்கறத பாக்குது. அங்க சல்லிவன்கிற நாரைய சந்திக்குது. அப்பறம்தான் தெரியுது அங்க இருக்கற நாரைகளெல்லாம் ஜொனாதன மாதிரியே பறக்க ஆசைப்பட்டு கூட்டத்துல இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுகன்னு. அங்க ஜொனாதன் ரொம்ப சீக்கிரமாவே இன்னும் நெறய கத்துக்குது.
ஒரு நாள் இப்பிடி பறந்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு மூத்த நாரை 'சியாங்'க சந்திக்குது. சியாங் மணிக்கு 300 கி.மீ வேகத்துல ரொம்ப சுலபமா பறக்கறதயும், கண நேரத்துல பல மைல்கள் தாண்டி போய் வரதயும் பாத்து ஆச்சரியப்பட்டுப் போய் அதுகிட்ட கத்துக்க ஆரம்பிக்குது. இது எப்பிடி சாத்தியம்னு ஜொனாதன் கேக்கறதுக்கு சியாங் சொல்லுது "நினைவோட வேகத்துல எந்த இடத்துக்கு வேணாலும் பறக்கறதுக்கு, மொதல்ல அந்த இடத்துக்கு நாம வந்து சேந்தாச்சுன்னு நம்பணும்". இது புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம். ஆனா நம்பிக்கை ஒரு முக்கியமான சக்தின்னு உணர வெக்குது.

இப்பிடி சியாங் கிட்ட நெறய கத்துக்கும்போது சியாங் சொல்ற மாதிரி அன்புதான் எல்லத்தையும் விட பெரியது, நெறய கத்துக்க கத்துக்க, மனமுதிர்ச்சி கிடச்சு, எல்லாத்தயும் விட அன்பு மேலோங்கி நிக்கும்னு புரிஞ்சுக்குது. ஒரு நாள் தன்னோட கூட்டத்துக்கு திரும்பி போய் தன்னுடைய அனுபவத்தையெல்லம் பகிர்ந்துக்கணும், மத்த நாரைகளுக்கும் இப்பிடி உயர வேகமா பறக்கறதையும், அன்போட வலிமையையும் புரிய வெக்கணும்னு தோணுது, சியாங்க் கிட்டயும், சல்லிவன் கிட்டயும் சொல்லீட்டு திரும்புது. ஆனா மத்த நாரைக ஜொனாதன கூட்டத்துல சேத்திக்காம மறுபடி வெரட்டி விட்டுடுதுக. ஆனாலும் ஜொனாதன் கவலப் படாம பறக்கறதுல ஆர்வமிருக்கற ஒரு சில நாரைகள கூட்டிக்கிட்டு போய் தான் கத்துக்கிட்டத எல்லாம் பொறுமயா சொல்லிக் குடுக்குது. வெறுமனே சாப்பிட்டு உயிர் வாழரத விட ஒரு ரெக்கயோட இந்த முனயிலிருந்து மறு ரெக்கயோட அந்த முன வரைக்கும் வெறும் உடம்பு இல்ல, எண்ணங்கள். ஒரு நாரைக்கு இருக்கிற அளவில்லாத சுதந்திரம் பறக்கறது. அத முழுமையா அதனுடைய எல்லை வரைக்கும் கத்துகணும். முடிவுல நம்முடைய திறமைகள் அளவற்றதுன்னு தெரிஞ்சு அதுல ஒரு புரிதல் வரும்போது அளவில்லாத அன்பும் மன்னிக்கிற தன்மையும், இயற்கையோட இணையில்லாத சக்திக்கு முன்னாடி நாம ஒண்ணுமேயில்லங்கற விழிப்புணர்வும் வரும்கிறது ஜொனாதனோட செய்தி. ஜொனாதன் அடுத்த பயணத்த தொடங்குது.

இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க. நம்ம வாழ்க்கைல வரப்போற சல்லிவன் யாரு? சியாங் யாரு? நாம அவங்கள சந்திச்சுட்டோமா இல்ல இனிமேத்தானா? கத்துக்க நாம தயாரா? மத்தவங்களுக்கு கத்துக் குடுக்கவும் தயாரா? நாம போக வேண்டிய எடத்துக்கு போய் சேந்தாச்சுன்னு நம்மால தீர்மானமா நெனைக்க முடியுமா? எவ்வளவு கேள்விக.

இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போனா 1 மணி நேரத்துல படிச்சு முடிச்சுரலாம். ஆனா சொல்லியிருக்கற செய்தி.......? அத புரிஞ்சுக்க ஒரு சென்மம் போதாது.

புத்தகத்தோட வரி வடிவத்த மட்டும் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க. படிச்சுட்டு முடிஞ்சா இதுல ஒரு பின்னூட்டம் போடுங்க.

17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

அப்படிப் போடுங்க..... ரொம்ப நல்லா இருக்கு.... நான் கதைய படிச்சுட்டு மறுபடியும் உங்க உரையோடைய மறுபடியும் படிக்கணும். நல்ல முயற்சி.... இந்த மாதிரி புத்தகங்கள் திரைப்படமா வரணும். எத்தினி நாளைக்குத் தான் கம்பு, அருவா பாக்குறது?

படிக்கும் போதே தெம்பு கூடுது பாருங்க....

பழமைபேசி said...

ஜொனாதன் சொல்லுறான், "கண்களால் பார்க்காதே! அது மட்டுமே நிரந்தரம் இல்லை. உன் அகக்கண்களால் பார். உன்னால் முடியும்! you'll see the way to fly!!" . நல்ல அறிமுகவோடை!

அப்ப அப்ப, இந்த மாதிரி குடுத்துகினே இருங்க. யாரங்க? மகேசு அண்ணனுக்கு போடு ஒரு சபாசு!"

Syam said...

கேள்வியும் நானே பதிலும் நானே..

எதுக்கு இந்த மாதிரி தலைப்பு?

அடே இசுக்கு அதுனால தான இந்த பதிவ படிச்ச....
------------

நல்லா இருங்க ராசா...ரொம்ப நல்லா இருக்கு...

புதுகை.அப்துல்லா said...

முன்பே படித்து இருக்கிறேன். ஆனால் அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று எனக்கு இதுநாள் வரை தோன்றாமல் போய்ருச்சே :(

பரிசல்காரன் said...

//இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போனா 1 மணி நேரத்துல படிச்சு முடிச்சுரலாம். ஆனா சொல்லியிருக்கற செய்தி.......? அத புரிஞ்சுக்க ஒரு சென்மம் போதாது//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!

நிறைய புத்தகங்கள் இப்படித்தான்.

ஒவ்வொரு முறையும், புது வாசிப்பனுபவத்தைத் தரும்!

Mahesh said...

@ பழமைபேசி :

நொம்ப நன்றி !! புத்தகத்த படிச்சுட்டு இன்னொரு க்வோட் (இதுக்கு தமிழ் என்ன?) காமிச்சதுக்கு இன்னொரு நன்றி !!

Mahesh said...

@ syam :

ஏன் அப்பிடி தலைப்பு வெச்சேன்னு போன பதிவுல சொல்லியிருக்கேன்.... வருகைக்கு நன்றி !! முடிஞ்சபோது வந்து போங்க... உங்க மாதிரி ஆளுகளோட ஊக்கம் வேணும்..

narsim said...

//இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க//

உண்மை மகேஷ்

பழமைபேசி said...

//க்வோட் (இதுக்கு தமிழ் என்ன?)//

மேற்கோள்

பழமைபேசி said...

// narsim said...
//இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க//

உண்மை மகேஷ்
//

உண்மை மகேஷ்

Mahesh said...

@ narsim :

வருகைக்கு நன்றி.... நேரம் கிடைக்கும்போது வந்து எட்டிப் பாருங்க...

Mahesh said...

@ பழமைபேசி :

க்வோட்-டுக்கு மேற்கோள்ங்கறது கூட மறந்து போச்சு பாருங்க. இதுக்காகவாவது அடிக்கடி தமிழ்ல பேசி, எழுதி பண்ணணும்கறது.

பழமைபேசி said...

//Mahesh said...
@ பழமைபேசி :

க்வோட்-டுக்கு மேற்கோள்ங்கறது கூட மறந்து போச்சு பாருங்க. இதுக்காகவாவது அடிக்கடி தமிழ்ல பேசி, எழுதி பண்ணணும்கறது.
//

சரியாச் சொன்னீங்க... அப்படி ஆரம்பிச்சுத்தான் நம்ம பொழப்பு ஒரு மாதிரியாப் போய்ட்டு இருக்கு.... ஆனா, நல்லதுதான். மன நிறைவா இருக்கு.

கிரி said...

மகேஷ் நான் கூட என்னடா கதை இதுன்னு படித்தா..சூப்பர்

நல்லா இருக்கு

Mahesh said...

@ கிரி :

வாங்க... படிச்சீங்களா புத்தகத்தை... நல்ல அனுபவமா இருந்துருக்குமே... நன்றி..

Mahesh said...

@ அப்துல்லா :

நீங்க இன்னொரு வாட்டி நீங்க புரிஞ்சுக்கிட்ட மாதிரி அறிமுகம் பண்ணுங்கண்ணே.... ஒவ்வொருத்தரும் எப்பிடி ஒரு புத்தகத்தை பாக்கறாங்க, படிக்கிறாங்க, புரிஞ்சுக்கறாங்க, அறிமுகம் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு...

Mahesh said...

@ பரிசல் :

இந்த மாதிரி வித்தியாசமான அனுபவத்தை தருகிற இன்னொரு புத்தகத்தை எஙளுக்கு அறிமுகம் செய்யுங்களேன் ப்ளீஸ்...