Friday, August 29, 2008

அவனோடெ ராவுகள்

வந்தீங்களா? வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா? ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... "சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்.... ஆனா இந்த புத்தகங்களையெல்லாம் பொதுவாக நான் ராத்திரி வேளைகள்ல படிச்சதுனால அப்பிடி தலைப்பு வெச்சேன். (அப்பாடா... தலைப்புக்கு நியாயம் சொல்லியாச்சு)

நான் ரியாத்ல சில மாசங்கள் வேலை செய்ய போனபோது, அங்க வேற ஒண்ணும் பொழுதுபோக்கு இல்லங்கறதால நாங்க தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்துல இருந்த "ஜரீர் புக் ஷாப்"தான் ஒரே ஆறுதல். அப்ப படிக்கக் கிடைத்த சில புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகம் செஞ்சு வெக்கலாம்னு தோணுச்சு.


The Book of Mirdad : The Strange Story of a Monastery Which Was Once Called the Ark
Author : Mikhail Naimy

இந்த லெபனீய எழுத்தாளருடைய உண்மையான ஒரு அனுபவத்தை ஒட்டி எழுதியதுன்னு சொல்றாரு. பெய்ரூட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு மலையை ஏற முயற்சி செய்யும்போது மேல ஒரு வித்தியாசமான மனிதரை சந்திக்கறாரு. அந்த மனிதர் 'நீ வருவன்னு தெரியும். மீர்தாத் உன்னப் பத்தியும், உன் அடையாளங்களையும் எழுதி வெச்சுருக்கான்' அப்பிடிங்கறாரு. அந்த புத்தகத்தையும் குடுக்கறாரு. அதுதான் "மீர்தாதின் புத்தகம்". இதப் படிக்கும்போது, நம்ம கீதை, வேதாந்தம், குர்-ஆன், விவிலியம் எல்லாம் நினவுக்கு வர்றதை தவிர்க்கவே முடியாது. மீர்தாத் சொல்ற ஒவ்வொரு கருத்தும் அந்த அளவுக்கு நமக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு.

மேல சொன்ன மலை மேல இருக்கற மடத்துக்கு ஒரு நாள் மீர்தாத் வந்து சேர்றாரு. ஆனா அந்த மடத்தோட தலைவரா இருக்கறவருக்கு இந்த வரவு ரசிக்கும்படியா இல்ல. மத்த உறுப்பினர்களோட விருப்பத்துக்காக அனுமதிக்கறாரு. மடத் தலைவருக்கு நிறைய நன்கொடை வாங்கி மடத்தை விரிவு படுத்தணும்கறதுதான் குறிக்கோள். நோவாவின் படகு பற்றி படிச்சுருக்கோம். மிர்தாதும் அப்பிடி மனித குலத்தை இன்னொரு பிரளயத்துல இருந்து மீட்டெடுக்க வந்தவன்னு சித்தரிக்கப் படுறாரு. மடத்துக்கு வந்த நாளிலிருந்து மீர்தாத் மெல்ல அவருடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பிக்கறாரு. தலைவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரா புரிஞ்சுக்கிட்டு மீர்தாத் பக்கம் சாயத் தொடங்கறாங்க. தலைவருக்கு பிடிக்காததுனால பல விதங்கள்ல தொல்லை குடுக்கறாரு. ஆனா அதயெல்லாம் தாண்டி மீர்தாதோட புகழ் பரவ ஆரம்பிக்குது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை எடுத்துக்கிட்டு அதப் பத்தி ஆழமா தர்க்கம் பண்ணி, முகத்துல அறையற மாதிரி உண்மைகள எடுத்துச் சொல்லி, மனிதனுடைய (சுய)உணர்வை (consciousness) விரிவு படுத்தி, கடவுளை "உணரவும்", மனிதன் தன்னுடைய "இரட்டைத் தன்மை" (duality) யிலிருந்து வெளிய வரவும் வழிகளைச் சொல்றாரு.

இந்த புத்தகத்தை படிச்சப்பறம் மீர்தாத் ஒரு புனைவுங்கற மாதிரி கூட தோணும். ஏன்னா, எழுதின மிக்கயில் நைமி ரொம்பவுமே கலீல் கிப்ரானின் எழுத்துக்களால பாதிக்கப்பட்டது தெளிவா தெரியுது. கவிதை மாதிரியான நடை. பொறுக்கி எடுத்த மிதமான, மென்மையான வார்த்தைகளைப் படிக்கும்போதே, அதை மீர்தாத் நம்ம முன்னாடி உக்காந்து மென்மையா சொல்ற மாதிரியான உணர்வைக் குடுக்குது. புத்தகத்துல உள்ள கருத்துக்களோட நமக்கு உடன்பாடு இருக்கோ, இல்லயோ, ரொம்பவே ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ரத்துக்காகவாவது கட்டாயம் படிக்கணும். எனக்கு இதுவரை வேறெந்தப் புத்தகத்தையும் படிக்கும்போதும் கிடைச்சதில்ல. கீதையத் தவிர, கீதைய புத்தகம்னு நெனச்சா. ஒரு உதாரணத்துக்கு கூட புத்தகத்துல இருந்து சில வரிகள எடுத்து போடலாம்னா, என்னோட புரிதல முன் நிறுத்த இஷ்டமில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அதனோட அர்த்தம் புரியலாம். அதுதான் சரியும் கூட. மூலம் லெபனீய மொழியில் இருந்தாலும், ஆங்கில பதிப்புதான் ரொம்ப பாப்புலர். தமிழ் பதிப்பும் இருக்கு. ஆனா, நான் படிக்கல. வாய்ப்பு கிடைச்சா படிங்க. இந்த புத்தகத்தை படிச்சவங்களை எதாவது ஒரு விதத்துல கண்டிப்பா பாதிக்கும்.
டிஸ்கி 1: நான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. இத ஒரு புத்தகம்ங்கற அளவுல மட்டுமே பார்த்தேன். ஆனா, அதுல அடஞ்ச ஒரு பாஸிடிவ்வான பாதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும்னு ஒரு ஆசை. அவ்வளவே. புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.

டிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல.

23 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

இரத்தினா தொலைக்காட்சில விமர்சனம் செய்யுற மாதிரியே இருக்கு எழுத்து நடை. இயல்பா, நடைவேகம் குறையாமப் போகுது.... எவன் சொன்னது தமிழுக்கு எதிர்காலம் இல்லைனு.....?! நெறைய மகேசுக புறப்பட்டுட்டாங்க அப்பு.....

Mahesh said...

@ பழமைபேசி:

அட... பதிலுக்கு பதிலா.. பதிவ பப்ளிஷ் பண்ணி 5 நிமிஷம் கூட ஆகல... அதுக்குள்ள மறுமொழி... ரொம்ப நன்றி !!

பழமைபேசி said...

ரெண்டு தடவை படிச்சு பாத்தாச்சு.... மறுபடியும் படிப்பேன்..... இயல்பா எதைச் செஞ்சாலும் அழகு தான்....

Mahesh said...

@ பழமைபேசி:

கண்ணுல தண்ணி கட்டுது....

உருப்புடாதது_அணிமா said...

//// Mahesh said...

@ பழமைபேசி:

கண்ணுல தண்ணி கட்டுது....///

கட்டுதா ??
அப்படியே ஒரு அணை போட்டு தேக்கிடுங்களேன்..
பாசனத்துக்கு பயன்படும்..

Mahesh said...

@ உருப்புடாதது அணிமா : அணக்கட்டு காண்ட்ரைட்டு உங்களுக்கேதான்... அது கிடக்கட்டும்... பதிவோட டிஸ்கி2 க்கு உங்க கருத்து என்ன?

பரிசல்காரன் said...

//எவன் சொன்னது தமிழுக்கு எதிர்காலம் இல்லைனு.....?! நெறைய மகேசுக புறப்பட்டுட்டாங்க அப்பு.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

பரிசல்காரன் said...

//ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல//

கீங்க...

உருப்புடாதது_அணிமா said...

///டிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல. //

க்கீங்க ...........
:-))

உருப்புடாதது_அணிமா said...

ஆஹா.. பரிசல்காரர் முந்திக்கிட்டாரே..
அதனால அவருடைய கருத்தை நானும் வழிமொழிகிறேன்

Mahesh said...

நன்றி பரிசல்... மங்களூர் சிவா திருப்பூர் வந்திருக்காரா?

நன்றி அணிமா - உருப்புடாதது உருப்புடாததுன்னு அடிக்கடி எழுத என்னமோ மாதிரி இருக்கு :))

Mahesh said...

பரவால்லயே.... நாம எழுதரது கூட புரியுது போல இருக்கே.... ஆனா எனக்கென்னமோ ஒரு புத்தக அறிமுகத்துக்கு முக்கியமா வேண்டிய ஏதோ ஒண்ணு விடுபட்டு போன மாதிரியே இருக்கு.... பாப்போம்... அடுத்த புத்தகத்தைப் பத்தி கொஞ்சம் பெட்டரா சொல்லுவோம்...

தாமிரா said...

//வந்தீங்களா? வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா? ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... "சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்// எலிகளை பொறி வெச்சு புடிக்கிறா மாதிரி புடிச்சுட்டீங்க.. நல்ல காரணத்திற்காக என்பதால் மன்னிக்கலாம்..

Mahesh said...

வாங்க தாமிரா அண்ணே.... நம்ம கடைப் பக்கமும் வந்ததுக்கு நன்றி... டைம் கிடைக்கறபோது வந்து போய்க்கிட்டுருங்க

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே ரெண்டு நாளா ஊர்ல இருந்தேன். நெட்டு, மொபைல்லு, வீட்டு ஃபோனு இந்தக் கருமம் எல்லாத்தையும் விட்டுபுட்டு பொண்டாடி பிள்ளைகளோட...அதான் சொஞ்சம் டிலே..ஓ.கே.

//
நான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. //

எங்க திணிச்சீங்க? எனக்கு மீண்டும் மீண்டும் படித்தும் புரியவில்லை!!!!

Mahesh said...

அப்பாடா... அப்துல்லா அண்னன் வந்துட்டாரு... எங்க மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்...
அந்த டிஸ்கி1 எதுக்குன்னா, இந்த புத்தகத்தை சில பேர் படிச்சுருக்கலாம்... சொல்லப்பட்ட கருத்துக்கள் ஏதாவது ஒரு மதம் சார்ந்ததா அவங்களுக்கு தோணியிருக்கலாம்... அது ஒரு மாதிரி கத்தி மேல நடக்கற மாதிரியான் புத்தகம்... படிச்சா புரியும்... எழுதறதுக்கு முன்னாலயே ரொம்ப யோசிச்சுட்டுதான் மேம்போக்கா எழுதினேன்... நான் சொன்ன மாதிரி full justification பண்ணவே இல்ல...

Dubukku said...

நல்ல எழுதறீங்க மகேஷ் ...நல்ல நடையில் சுவாரசியமா இருக்கு. புஸ்தக அறிமுகத்துக்கு நன்றி.
மொளச்சு வரும்போது சூப்பர். மண் மணம் கமழ அருமையா இருக்கு...தொடர்ந்து எழுதுங்க...

தலைப்பு - லெவல் காட்டுறீங்க :)))

Mahesh said...

ஹய்ய்யோ .... டுபுக்கண்ணன் நம்ம பக்கமும் வந்துட்டாருடோய்... ரொம்ப நன்றி டுபுக்கு !!!

ஜோசப் பால்ராஜ் said...

நல்லா இருக்கும் மகேஷ். நீங்க படிச்ச நல்ல புத்தகங்களப் பத்தி எழுதுங்க. (ரொம்ப நல்ல புத்தகங்கள் வைச்சுருந்தீங்கன்னா, எனக்கு மட்டும் குடுங்க, படிச்சுட்டு, பத்திரமா நானே வைச்சுக்கிறேன்.)

Mahesh said...

@ ஜோசப் :

ரொம்ப நல்லன்னா ??? முப்பது நாட்களில் மலாய் பாஷையா ? அட... இப்பொ எதுக்கு முறைக்கிறீங்க?

VIKNESHWARAN said...

அருமை... அருமை...

RAHAWAJ said...

ரொம்ப அழகான விளக்கம் இந்த புத்தகத்தைப்பற்றி, 5 முறைக்கு மேல் ஆங்கிலத்திலும், தமிழிலும் படித்தேன். படித்தவர்களை ஒரு விதத்தில் மாற்றத்தை உண்டாக்கும்(புரிதல் மிக மிக அவசியம்)என்பது உண்மை

RAHAWAJ said...

இந்த புத்தகம் தமிழில் இருக்கு, கண்ணதாசன் பதிப்பகம் விலை 123 ரூபாய் ஒன்லி