"லதானந்த்" கடிதம்
அய்யா,
எனக்கு இந்த தமிழ் வலைப்பூ என்பதே வெகு சமீபமாக அறிமுகமானது. உங்கள் கதைகள் ஒன்றிரண்டு விகடனில் படித்திருக்கிறேன். உங்களை வலையில் பார்த்ததில் (படித்ததில்) மகிழ்ச்சி. உங்கள் டாப் ஸ்லிப் பதிவர் சந்திப்பு பற்றி நேற்றுதான் படித்தேன். மிக ஆச்சரியமாக இருந்தது. உங்கள் ஓய்வு நேரத்தை உகந்த முறையில் செலவிடுவதை அறியும்போது அந்த ஆச்சரியம் இரு மடங்கு அதிகமானது.
அதே போல, பரிசலையும் கடந்த 2,3 வாரங்களாகத்தான் வலைப் பழக்கம். அவருடைய "தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி?" பதிவைப் படித்தபோதும், சில நாட்களுக்கு முன் நீங்கள் அவரை "பனியன் தொழில் திருப்தி தருகிறதா?" என்று கேட்டபோதும், அவருடைய இன்ன பிற திறமைகளை அறிய நேர்ந்தபோதும், நீங்கள் இப்போது எழுதியுள்ளது போல எனக்கும் தோன்றியது. ஆனால் மிக அண்மைக் கால பழக்கத்தை வைத்து அதை வெளிப்படையாக என்னால் கூற முடியவில்லை.
ஒரு பின்னூட்டத்தில் உங்களை தந்தை போல் பாவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த இடத்தில் இருந்து நீங்கள் உண்மையான அக்கறையுடன் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கும் தமிழில் பதிவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் பரிசல். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல், வலைப் பதிவு ஒரு obsession ஆக மாறி பின்னர் addiction ஆகக் கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது. இப்போது பரிசல் எடுத்துள்ள முடிவு தற்காலிகமானதாக இருக்கலாம். Knee-jerk விளைவாக இருக்கலாம். அல்லது தெளிந்த முடிவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது நல்லதே.
நன்றிகள் பல.
- மஹேஷ்
@ பரிசல் : இவனெல்லாம் பேச வந்துட்டான் என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு தெரியாதது அல்ல. "அறிந்தோர் அழ அழ சொல்லுவார் ; மற்றோர் சிரிக்க சிரிக்க சொல்லுவார்". தொடர்ந்து எழுதுங்கள். நேரம் கிடக்கும்போது அளவாக நிறைவாக எழுதுங்கள். உங்கள் திறமை பெரியது. உங்கள் நண்பர் வட்டம் மிகப் பெரியது. நன்றிகள் பல.
இதயத்தை திருடாதே
1 day ago
7 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
:( :)
// அறிந்தோர் அழ அழ சொல்லுவார் ; மற்றோர் சிரிக்க சிரிக்க சொல்லுவார்". நேரம் கிடைக்கும்போது அளவாக நிறைவாக எழுதுங்கள். உங்கள் திறமை பெரியது. //
என் எண்ணமும் இதுவே!
மகேஷ்,
நீங்கள் தமிழில் எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி.
//
பணி ஓய்வுக்கு பிறகு உங்கள் நேரத்தை உகந்த முறையில் செலவிடுவதை அறியும்போது
//
யாரப் பாத்து இன்னா வார்த்த சொன்னீங்க... அவரு இன்னும் சர்வீசுல இருக்காரு... தெரியுமா...
நான் பணி ஓய்வு பெற்றதாக யார் சொன்னது? பதவி உயர்வு பெற்றிருக்கிறேனயா!
//எனக்கும் தமிழில் பதிவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் பரிசல்//
இந்த ஒரு வரி போதுமெனக்கு.
இத்தனை நாள் எழுதியதற்கு!
அவ்வப்போது வருவேன்-தமிழை
அள்ளி அள்ளித் தருவேன்!
@ லதானந்த்:
மன்னிக்கவும்....உங்கள் பதிவுகளில் ஏதோ ஒன்றை படிக்கும்போது தவறாக புரிந்து கொண்டு விட்டேன் போல இருக்கிறது. பதிவையும் திருத்தி விட்டேன்.
@ VIKNESHWARAN, வெயிலான் :
நன்றிகள் பல
@ விஜய்கோபால்சாமி :
தவறை சுட்டியதற்கு நன்றி.
Post a Comment