முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3
ONE
Author : Richard Bach
"இன்றைக்கு நிகழக்கூடிய ஒரு ஒரு சிறிய மாற்றம், முற்றிலும் மாறுபட்ட நாளையை நமக்கு அளிக்கக்கூடும். கடினமான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆச்சரியகரமான பரிசுகள் காத்திருக்கும். ஆனால் அவை காலத்தினுள் மறைந்திருக்கும். நாம எடுக்கற கவனமற்ற, குருட்டுத்தனமான ஒவ்வொரு முடிவுக்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் ஒரு உத்தரவாதமும் கிடையாது"
புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கா? அப்பிடி இருந்தா அது ரிசர்ட் பாக்-க்கோட தப்பு இல்ல. மொழி பெயர்த்த என்னொட தப்பா இருக்கும்.
இப்ப ஒரு சின்ன கற்பனை. கடந்த காலத்துல இருந்த 'நாமும்' நிகழ் கால 'நாமும்' சந்திச்சா எப்பிடி இருக்கும்? இணயா இருக்கற இரு வேறு உலகங்கள்ல இருக்கற 'நாம' நேருக்கு நேர் பாத்துக்கிட்டா எப்பிடி இருக்கும்? காலத்துக்கு பின்னால நமக்காக என்ன காத்துக்கிட்டிருக்குன்னு 'இப்ப' தெரிஞ்சா, அத நாம எப்பிடி மாத்தவோ, ஏத்துக்கவோ நம்மளை தயார் பண்ணிப்போம்? (ஏண்டா இப்பிடி போட்டு கொழப்பற? இப்ப, அப்பறம்னு.... சரி... சரி... எவ்வளவு நாளைக்குத்தான் கொலை, கொள்ளை, சொத்து தகராறுன்னே படிச்சுக்கிட்டிருக்கறது?) ரிசர்ட் பாக்கும், மனைவி லெஸ்லியும் ஒரு வித்தியாசமான பயணத்துல அவுங்க போகாத பாதையில என்ன கத்துக்கறாங்க, அதுல நம்ம எல்லாருக்கும் பொதுவானதா என்ன இருக்குங்கறதுதான் இந்த புத்தகம். அவங்க போற அந்த பயணத்துல கற்பனையும், பயமுந்தான் உலகத்தை மீட்கவோ (அல்லது அழிக்கவோ) தேவையான கருவிகள். (என்ன... பாய பிறாண்ட ஆரம்பிச்சாச்சா?)
12B படம் பாத்துருப்பீங்களே.... கிட்டத்தட்ட அதுமாதிரியான 'கதை'தான் இதுவும். வாழ்க்கைல நாம எடுக்கற ஒவ்வொரு முடிவும் நம்மையும், நம்ம சுத்தி இருக்கற உலகத்தையும் எப்பிடி மாத்தி அமைக்குதுங்கறதை அலசற மாதிரியான புத்தகம். இன்னிக்கு காலைல பஸ்ல பக்கத்து உக்காந்தவங்களைப் பாத்து சிரிச்சது, பஸ் ஸ்டாண்டுல பப்ளிக் டாய்லட்டுக்குள்ள போறதா வேண்டாமான்னு 5 நிமிஷம் யோசிச்சுட்டு தாங்க முடியாம போகலாம்னு முடிவு பண்ணது, லிஃப்ட் கேட்டது ஒரு காலேஜ் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக வண்டிய நிறுத்தினதுன்னு நம்மளோட ஒவ்வொரு முடிவும் நம்மோட அடுத்த சில விநாடிகளையோ அல்லது மீதி வாழ்க்கையையுமோ பல விதங்கள்ல பாதிக்கலாம். ரொம்பவே ஆச்சரியகரமான அல்லது எதிரிக்குங்கூட வரக்கூடாத விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மாதிரி சமயங்கள்ல வேற மாதிரி முடிவு எடுத்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரிவர்ஸ் கியர் போட்டு அந்த விநாடிக்குப் போயிட்டு, அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தா.... போற வழில அங்க ஒரு முடிவு எடுக்கறோம்.... அது வேற மாதிரி இருந்தா.... இப்பிடி கற்பனை பண்ணிக்கிட்டே போனா? எப்பிடி சுத்தினாலும் மறுபடி எங்க வருவோம் தெரியுமா? என்ன ஒண்ணு தெளிவாத் தெரியும்? இவரோட மொதல் புத்தகம் "ஜொனாதன் லிவிங்ஸ்டன் - ஸீ கல்" ல சொன்ன அதே செய்திதான். அன்பு, மன்னிப்பு, அமைதி. இதுதான் எல்லாத்துக்கும் மருந்து.
இவரோட எல்லாப் புத்தகங்கள்லயும் (இன்னொரு புத்தகம் Illusions [காட்சிப் பிழைகள்]) 'பறத்தல்'ங்கறது ஒரு முக்கியமான அம்சமா இருக்கு. யோசிச்சுப் பாத்தா, ஒரு வித்தியாசமன கோணத்துல உலகத்தையும், நம்ம சுத்தி நடக்கறதையும், நம்மளை நாமே பாக்கறதுக்கும் பறக்கறதுங்கற உத்திய இவர் கையாளுகிறாருன்னு நெனைக்கத் தோணுது. இந்தப் புத்தகத்தை பொறுத்த வரைக்கும், பல ஐடியாக்களை அங்கங்க விதைச்சிருந்தாலும் சிலதுகள விவரமா தொடர்ந்து விளக்கல. அது ஒரு குறை மாதிரி தெரிஞ்சாலும், படிக்கறவருக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துட்டார்னு வெச்சுக்கலாம். படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தாலும், அங்கங்க போர் அடிக்கற மாதிரியும் தோணுச்சு. சில பக்கங்களை அப்பிடியே வேகமா புரட்டிட்டு போயிட்டேன். ஆனா சில பத்திகள மூணு நாலு தடவ படிச்சாத்தான் புரியற மாதிரி இருந்தது. அது கூட என்னுடைய புரிதல்ல இருந்த குறைபாடா இருக்கலாம். அல்லது நெஜமாவே அது அவருக்கே குழப்பமில்லாம எழுத முடியாம இருக்கலாம். ஏன்னா, வேற ஒரு புத்தகத்துல அவரே சொல்லியிருக்காரு "என்னோட எண்ண ஓட்டங்களுடைய வேகத்துக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை"ன்னு. அது ஒரு பக்கம் இருந்தாலும், இது மாதிரியான வித்தியாசமான, சிக்கலான கற்பனைகளை எழுத்தில் கொண்டு வரதுல சவால்கள் நிறையவே இருக்கு.
நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. முடிஞ்சா உங்க கருத்தை இந்த பதிவுல பின்னூட்டமாவோ அல்லது ஒரு தனி பதிவாகவோ போடுங்க. ஒவ்வொருத்தரோட வாசிப்பனுபவமும் ஒவ்வொரு மாதிரி. என்ன சொல்றீங்க?
சிறு விளக்கம்: நண்பர் பழமைபேசியோட பின்னூட்டத்த படிக்கும்போதும், நண்பர்கள் அப்துல்லா, விஜய் ஆனந்த் - இவங்களோட ச்சாட் பண்ணினபோதும், நான் (அல்லது இந்தப் புத்தகம்) சொல்ல வந்ததை வேற மாதிரியா புரிஞ்சுக்கிட்ட மாதிரி தோணுச்சு. அதுதான் இந்த விளக்கம்.
அதாவது, இதுல 'சம கால' நிகழ்வுகள் எதுவும் இல்ல. வாழ்க்கைல ஒரு கட்டத்துல ஒரு முடிவு எடுத்து முன்னால போறோம். அப்பிடி முன்னால போன பிறகு, அந்த குறிப்பிட்ட கட்டத்துல வேற மாதிரி முடிவு பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும், அதோட தாக்கம் தொடர்ந்து எப்பிடி இருந்திருக்கும்னு கற்பனை பண்றதுதான் ஐடியா. நடந்தத மாத்த முடியாது. ஆனா மாத்தினா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுப் பாக்கறது. அந்த படிப்பினைய எதிர்காலத்துல சில முடிவுகள் எடுக்கும்போது உபயோகப்படுத்திக்கறது. இதுதான் ஐடியா.
இப்ப, மேல சொன்ன உதாரணத்துல, பஸ்ல பக்கத்துல உக்காந்திருக்கறவரப் பாத்து சிரிக்கலாம், பேசலாம்னு முடிவு பண்றோம். ஒண்ணு, அவரும் ஒரு சக பதிவரா இருக்கலாம், நல்ல பெரிய பதவில (அப்துல்லா அண்ணன் மாதிரி), மோகனப்ரியா மாதிரி இன்னொரு ஹரிப்ரியாவுக்கு கேரம் விளையாட்டுல முன்னேற உதவி செய்யலாம். அது ஒரு உலகம். அல்லது அந்தாளு ஒரு தப்பிச்சு ஓடி வந்த கைதியா இருந்தா, பின்னால ஒடி வந்து புடிச்ச போலீசு (சும்மா ஒரு கற்பனைதான் ஹி..ஹி) நமக்கும் சேத்து லாடம் கட்டலாம். வாழ்க்கையே மாறிப்போகும். இது வேறு உலகம். ஆனா அந்த குறிப்பிட்ட கட்டத்துல இருந்து காலக்கணக்குப்படி பாத்தா ரெண்டும் "இணையா" இருக்கற உலகங்கள். இந்த "கால இணை"யத்தான் வேற வேற உலகங்களா கற்பனை பண்ணிக்கிறது. ஒண்ணு நாம ஒரிஜினலா முடிவெடுத்த நிஜ உலகம். இன்னொன்று வேற முடிவு எடுத்திருந்தான்னு யோசிச்சு பாக்கற "இணை"யான கற்பனை உலகம். (என்னது...பாய சுத்தமா பிறாண்டி சேமியா உப்புமான்னு நெனச்சு சாப்ட்டு முடிச்சாச்சா??)
இது ஒரு அடிப்படையான, சுலபமான உதாரணம். அப்பறம் உங்க கற்பனை.
40 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
ஒன்றுக்கு மேற்ப்பட்ட இழைகள்(multiple threads) சமகாலத்தில் இழையோடுகிற காட்சி, செய்கையை விவரணப் படுத்துவது என்பது இலகுவான காரியம் இல்லைதான். மென்பொருளாகட்டும்(concurrency with multiple threads), திரைப் படமாகாட்டும்(12B), நாவல் ஆகட்டும் அது ஒரு சவால்தான்!
ஆனால் நேர்த்தியாக இழையோட்டி, கதிர்களைச் செலுத்திப் புரிந்து கொள்ள வைத்து விடுகிற பட்சத்தில், அது வெகு சுவராசியமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லைதான்!!
இங்க இந்த புத்தகம் கிடைக்குமான்னு தெரியல!! தேடிப்பாக்குறேன்.
அப்புறம் ரொம்ப சிரமப்பட்டு மிகவும் உழைத்து ஓரு காரியத்தை நிறைவேற்ற முயற்சசி செய்து தோல்வி அடைவோம். ஆனால் எதுவுமே செய்யாமல் சில நேரங்களில் பெரிய வெற்றி நம்மைத் தேடி வரும். எப்படின்னு யோசித்ததுண்டா நீங்க? :))
நான் நெனச்சு எழுதினதப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்கங்கறத நல்லா நெனச்சு இங்க எழுதுங்க.... அதப் பத்தி நான் என்ன நெனக்கிறேன்கறத... சரி சரி வேலயப் பாருங்க...
ஹி ஹி.. முன்னாடி போட்ட பின்னூட்டம் சும்மா டெஸ்டிங்...
/////புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கா? ///////
சப் டைட்டில் இல்லாம ரஷ்ய மொழி படம் பாக்குற மாதிரியே இருக்கு
அப்பிடி இருந்தா அது ரிசர்ட் பாக்-க்கோட தப்பு இல்ல. மொழி பெயர்த்த என்னொட தப்பா இருக்கும்.
/////
அது எப்படி உங்க தப்பா இருக்கும்.. இது அவுரோட ரிசர்ட் பாக்-க்கோட தப்பா தான் இருக்கும்..
எங்கள் மொழி பெயர்ப்பாளர் , எங்கள் அண்ணன், மகேசு வாழ்க..
மன்னிச்சுக்கோங்க.. நீங்க பாட்டுக்கு நல்ல நல்ல புத்தகத்தை பத்தி விமர்சனம் எழுதி இருக்குற பதிவுல என்னோட வேலைய காட்டிட்டேன்..( இனி வால சுருட்டி வெச்சுக்குறேன்...) மன்னிச்சுகோங்க மக்களே
இந்த புத்தகம் எங்க கிடைக்கும்???
அருமையான விமர்சனம்...
எப்படி இந்த மாதிரி புத்தககங்கள் படிகின்றீர்கள் ??
அருமை
( நானும் நல்ல மாதிரி பின்னூட்டம் போடுவேன்)
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது??
இந்த பதிவுக்கும் கலாய்க்க தான் தோனுது..
நான் என்ன பண்ணட்டும் ??
நீங்களே சொல்லுங்க..
கலாய்க்கலாமா ?
1 varushathukum mela pettila paduthu thoongudhu indha novel.. padikanumnu aarvam kuduthuteenga
கடும் பணிகளுக்கு இடையே வந்து தாராளமாக அள்ளி வழங்கும் மலைக்கோட்டையார் அணிமா வாழ்க!
வாங்க அப்துல்லா... விடுமுறையெல்லாம் முடிஞ்சு இப்பத்தான் வரீங்க...
@ அணிமா :
நீங்க எவ்வளோ நல்லவரு வல்லவரு... இங்க நீங்க கலாய்க்கலாம்... ஈயப் பாத்தரத்துக்கு கலாய் பூசலாம்... கல கலப்பா இருக்கலாம்... நீங்க ஜமாய்ங்க !!!
@ யாத்ரீகன் :
வருகைக்கு நன்றி... புத்தகத்தை தட்டி எழுப்பி ஒரு மூச்சு படிச்சுருங்க. படிச்சுட்டு நீங்களும் ஒரு பதிவு போடுங்க.
புத்தகம் படிக்கும் ஆசையை தூண்டுகிறீர்கள்.
வாங்க குடுகுடுப்பை ... அப்பிடி நான் உங்களைப் படிக்கத் தூண்டினா அதுதான் எனக்கு வெற்றி.. நல்ல காலம் பொறக்குது...
@ வெண்பூ :
வருகைக்கும் செய்திக்கும் நன்றி...
தொடர்ந்து உங்களை எழுதவைக்கணும்ன்னுதான் இந்த வார நட்சத்திரமாப் போட்டேன். ஏன்னா, டெய்லி வர்றவங்களுக்கு நீங்க விருந்து வெச்சே ஆகணும்ல...!
தேங்க்யூ சார்!
///Mahesh said...
@ அணிமா :
நீங்க எவ்வளோ நல்லவரு வல்லவரு...
///////
கொஞ்சம் சௌண்டா சொல்லுப்பா.. எல்லோருக்கும் கேக்கல..
///Mahesh said...
@ அணிமா :
ஈயப் பாத்தரத்துக்கு கலாய் பூசலாம்... கல கலப்பா இருக்கலாம்... நீங்க ஜமாய்ங்க !!!///
என்னுடைய தொழிலை பகிரங்கமா சொன்னதற்கு கடும் கண்டனங்கள்...
இதை நான் சும்மா விட மாட்டேன்..
கதைல ஒரு இழைதானா அப்ப? 12Bன்னு சொன்னீங்களே.... அது ஈரிழைக் கதை ஆச்சே?! ஓ, அந்தப் படத்தை கற்பனைக்கு உதாரணமா சொன்னீங்களா?
@ அணிமா :
தப்பு நடந்து போச்சு... இனிமே யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்...
@ பழமைபேசி : 12B ஈரிழைக் கதைதான்... இதுலயும் பல இழைகள் உண்டு. ஆனாலும் "சம காலம்"னு சொல்ல முடியாது. retrospective அப்பிடின்னு வேணா சொல்லலாம்.
இதுல இருந்தே தெரியுது, ஏன் பன்னிழை செயலூட்டு மென்பொருள் படைப்பாளிக்கு ஊதியம் கூடன்னு.... :-)
இந்த மாதிரி சிக்கலான விபரங்களை இனியும் கொண்டு வாங்க... நாமும் நாலு விசயம் தெரிஞ்சிக்கலாம்.
@ பழமைபேசி :
உங்களுக்கு தெரியாததயா சொல்லிட்டேன்? நீங்கள்லாம் பன்னிழை செயலூட்டு மென்பொருள் கட்டுமானமே (mutithread processing software architecture) பண்றவங்க... ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் நெம்ப சாஸ்தி...
ஐ.... 25
ரிச்சர்ட் பாக்...ஒரு சிறந்த கற்பனை வளம் மிக்க எழுத்தாளர். அவருடைய எல்லா புத்தகங்களும் மிக அருமையானவை. அவரும் ஒரு விமானி என்பதால்...அவருடைய புத்தகங்களில் அந்த தாக்கம் நிறைய இருக்கும். நிகழ் கால எழுத்தாளர்களில் இவர் இக்கால நிகழ்வுகளுக்கு அப்பாற் சென்று சிந்தித்து அதை இணைத்து எழுதக்கூடிய திறன் பெற்றவர். அதனால்தான் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு அர்த்தம் தோன்றும். அதுதான் அவருடைய பலம். Jonathan Living Stone Seagull enjoys iconic status in Air Force. ஒரு விமானி என்பதால் விமானிகளுக்கு நடுவே இவர் புத்தகங்கள் மிக பிரபலம். மகேஷ் சொன்ன மாதிரி 'முடிவை' மாத்தி அமைத்தால் எப்படி இருக்கும் ...என்பதற்கு RUN என்ற அருமையான சினிமாவை பார்க்கவும். முடிவு என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பம். அந்த ஆரம்பத்தின் ஆச்சரியத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும் என்றால்....எடுத்த முடிவை பற்றி கவலைப்படாமல்.....மேலே பயணைத்தை தொடர வேண்டும். ஆனால்...பயணக் களைப்பின் போது...மெதுவாக நாம் எடுத்த முடிவை பற்றி யோசித்தால்...ஆஹா...களைப்பு போன இடம் தெரியாது.
ஆங்.... என்னடா இன்னொரு படம் பேரு ஞாபகத்துக்கு வரலயேன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அண்ண சொன்ன மாதிரி அது RUN இல்ல. RUN LOLA RUN ங்கற படம் அது. இந்த ஐடியாவ அருமையா விளக்கற படம்.
அண்ணன் எழுத்து நடை பாருங்க.... விட்டுக் கெளப்புராரு... எப்ப அண்ணே கடைத் திறப்பு? சீக்கிரமாத் திறங்க....
கரெக்ட்....னானும் எழுதும் போது நினைத்தேன்...என்னவோ தப்பு பண்றோம் என்று. நன்றி மகேஷ்...திருத்தினதற்கு...புதுகை அப்துல்லா கேட்டிருந்தார் ஒரு கேள்வி...வெற்றி சில சமயம் முயற்சி எதுவுமில்லாமலே கிட்டுகிறது என்று...எனக்கென்னவோ அது எப்பொழுதோ செய்த முயற்சியின் பலன் என்றே தோன்றுகிறது. என்ன...அந்த முயற்சியைப் பற்றி நாம் மறந்து விட்டோம்...அவ்வளவுதான்...இது ஒரு நல்ல மனத்தின் அடையாளம்.
பழமைபேசி ....ரொம்ப நன்றி. கடை திறப்பதற்கு...சரக்கு வேணும். அது இல்லாமல் கடை திறந்து என்ன பிரயோஜனம்? மகேஷ் நிறைய சரக்கு வைத்து இருக்கிறார். குடும்பத்தில் ஒருவர் கடை வைத்தால் போதாதா?
//
குடும்பத்தில் ஒருவர் கடை வைத்தால் போதாதா?
//
அண்ணே தனியாக் கடைங்றது அல்லண்ணே! ஒரே கடைல, நீங்க ஒரு பக்கம் காய்கறி, மகேசு ஒரு பக்கம் தானிய யாவாரம்.....
அவுரு புத்தகங்களைப் பத்தி.... நீங்க, உங்க பாணியில வேறொண்னு.... பல பொருளுக புழக்கத்துக்கு வரும் பாருங்க... எங்களுக்கும் பிரயோசனமா இருக்கும் பாருங்க....
மகேஷ்,
நானும் வாழ்கையில எடுத்த முக்கிய முடிவுகளை பத்தி அப்பப்ப யோசிக்கிறதுண்டு. வேற முடிவு எடுத்திருந்தா, என்னாகியிருக்குமுன்னு. ஆனா ஒரு கட்டத்துக்கு மேலே யோசிக்க முடியாது.
//அப்புறம் ரொம்ப சிரமப்பட்டு மிகவும் உழைத்து ஓரு காரியத்தை நிறைவேற்ற முயற்சசி செய்து தோல்வி அடைவோம். ஆனால் எதுவுமே செய்யாமல் சில நேரங்களில் பெரிய வெற்றி நம்மைத் தேடி வரும். எப்படின்னு யோசித்ததுண்டா நீங்க//
அப்துல்லா, இதுக்கு பதில் தெரிஞ்சா, எனக்கும் சொல்லுங்கப்பு.
எனக்கென்னவோ அது எப்பொழுதோ செய்த முயற்சியின் பலன் என்றே தோன்றுகிறது. என்ன...அந்த முயற்சியைப் பற்றி நாம் மறந்து விட்டோம்...
//
சித்திரவேணி அண்ணே சத்தியமா இதுதாண்ணே நான் நினைத்தது. என் மனதினுள் புகுந்து விடை கண்டுபிடித்ததைப் போல இருந்தது உங்க பதிலைப் படிக்கும் போது...
அப்துல்லா அண்ணே... அவுரு சித்ரவேணி இல்ல... அவுருதான் நம்ம காஷ்மீர் அண்ணாத்த....பேரு ரவி. பல சமயம் எங்க எண்ணங்கள் ஒண்ணா இருக்கறதுண்டு... பலப்பல சமயங்கள்ல வேறமாதிரியா இருக்கறதுண்டு. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்... :)))))))))))))))))))))))))
@ புதுகை அப்துல்லா: நன்றி...விடை தெரியாத கேள்வி இல்லை...கேள்வி இல்லாமல் விடை இல்லை. உங்கள் நல்ல கேள்வி மூலம் ஒரு விடை கிடைத்தமைக்கு, நாங்கள் எல்லோரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
@ பழமைபேசி: உங்கள் எண்ணத்திற்கு என் வந்தனங்கள். யோசிப்போம். தடைபடாத வலை இணைப்பு முதல் அத்தியாவசியத் தேவை. அதற்கு இங்கு எப்பொழுது பிராப்தம் என்று தெரியவில்லை! மகேஷ் சொன்ன மாதிரி...எண்ண ஓட்டம் ஒன்றாக இருக்கும் பொழுது....வேறு எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. நான் இருக்கட்டும்...உங்கள் பதிவுகள் எங்கே? அந்தத் தளம் அகப்பட மாட்டேன் என்கிறதே??
அண்ணா! வணக்கங்க!! இதுதானுங்க நம்ப பக்கம்.... http://maniyinpakkam.blogspot.com
//
பலப்பல சமயங்கள்ல வேறமாதிரியா இருக்கறதுண்டு. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்... :)))))))))))))))))))))))))
//
எங்க வீட்ல மூணு பையங்க....நான்தான் கடைசி.... இருந்தாலும் சுத்தமாப் புரியலை!
அப்படீன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.
@ பழமைபேசி: உங்கள் பதிவுத்தளம் கண்டேன்...படித்தேன்....உளம் மகிழ்ந்தேன். உங்கள் நடையும்...சீரான வழக்குப் பதிவும்...என்னை மறக்க வைத்தன. நான் சூலூரில் 2 வருடம் இருந்தேன். மறக்க முடியாத நாட்கள். அதைப்பற்றி பின்னர் பேசுவோம். அந்த நாட்களை நினைவு படுத்தியதற்கு நன்றி. உங்கள் பதிவில் பின்னோட்டம் எப்படி எழுதுவது? அதில் தமிழ் எழுதி இல்லையே?..அதனால்தான்...இந்த பதிவில் எழுதுகிறேன். மன்னிக்கவும்.
//
chitravini said...
@ பழமைபேசி: உங்கள் பதிவுத்தளம் கண்டேன்...படித்தேன்....உளம் மகிழ்ந்தேன்.
//
நன்றிங்க அண்ணா! அதுல நம்ப மகேசுக்கும் பங்கு இருக்கு. கொஞ்ச நஞ்ச பிழையா?! நிறைய திருத்தியும் எசப் பாட்டு பாடியும் ஒரு ஊக்கம்.... நன்றிங்க அண்ணா!
Post a Comment