5 அல்லது 6 வயது இருக்கலாம். அப்பா மிலிட்டரியிலிருந்து லீவுல வந்தப்ப உடுமலை கல்பனா தியேட்டர்ல "மேரா நாம் ஜோக்கர்". அதுல "ஜானே கஹாங் கயே வோ தின்..." பாட்டுல ஒரு கோமாளி பொம்மை முன்னால வரும். அது மட்டுந்தான் ஞாபகம் இருக்கு. அது ரொம்ப நீளமான படம். 20 ரீலோ இல்ல மேலயோ. ரெண்டு இன்டெர்வல் உண்டு. ஆனா அப்ப சாப்ட்ட கடல மிட்டாயோட இனிப்பு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம் - சமீபத்துல அப்பாவும் அம்மாவும் சிங்கப்பூர் வந்து 2 மாசம் இருந்தபோது எங்க கூட்டிட்டுப் போறதுன்னு தெரியாமா, பக்கத்துல இருக்கற (பாசிர் ரிஸ் - டௌன்டௌன் ஈஸ்ட்) தியேட்டர்ல பாத்தோம். அது ஒரு ப்ரிவ்யூ தியேட்டர் மாதிரி சின்னதா இருக்கும். கொஞ்சம் பெரிய சைஸ் டி.வில பாக்கற மாதிரி இருக்கும். அவ்வளவா ரசிக்க முடியல. என்ன இருந்தாலும் நம்மூரு மாதிரி "கமல்"னு பேர் போடும்போது கற்பூரம் காட்டறது, ஸ்க்ரீன் மேடை மேல ஏறி டான்ஸ் ஆடறது.... அதெல்லாம் தனிதான்.
தில்லு முல்லு. டி.வி.யில். எவ்வளவு தடவை பாத்தாலும் அலுக்காத படம். ரஜினி கூட இவ்வளவு காமெடி பண்ண முடியுமான்னு பாத்த ஒவ்வொருத்தரும் ஆச்சரியப்பட்ட படம். தேங்காய் நடிப்பும், டயலாக் டெலிவரியும்... ஏ ஒன். ("சட்டைல என்ன படம்?" - "பூனை சார்" - "அதுல என்ன ஒரு பெருமை?")
அதோட ஒரிஜினல் ஹிந்தி "கோல்மால்"ல அமோல் பலேகர், உத்பல் தத் இன்னும் நல்லா பண்ணியிருப்பாங்க.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அக்னி நட்சத்திரம். கதைன்னு பெருசா ஒண்ணும் இல்லாட்டாலும், டெக்னிகலா ரொம்ப வித்தியாசமா இருந்தது. பி.சி.ஸ்ரீராம் லைட்டிங்க்ல வெளயாடியிருப்பாரு. தமிழ் சினிமாவை சட்டுனு ஒரு உயரத்துக்கு கொண்டு போச்சோன்னு நெனச்சு பெருமைப்பட்ட படம்.சினிமா-அரசியலோட பெரும் தாக்கம் எம்.ஜி.ஆர். யானை, ரயில், ஏரோப்ளேனுக்கப்பறம் அது ஒரு தீராத ஆச்சரியம். அவர் மாதிரி ஒரு கெரிஸ்மேடிக் & மெஸ்மரைசிங் தலைவர்...ம்ஹூம்.. நோ சான்ஸ்... மாஸ் சைக்காலஜிக்கு ஒரு சிறந்த ஆராய்ச்சிப் பாடம். அதோட ஒப்பிடும்போது மத்ததெல்லாம் ரொம்ப சின்ன மேட்டரா தெரியுது. (பாபா, விருமாண்டி, தங்கர் பச்சான், குஷ்பூ, காதலில் விழுந்தேன் எல்லாமே)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
"தாக்கிய"ன்னு சொல்ல முடியாது. ஆனா ரொம்ப ரசிச்சு "அட" போட வெச்சது சமீபத்துல வந்த "ஓரம்போ" படம். எடிட்டிங் ரொம்பவே நல்லா இருந்தது. அதே மாதிரி தசாவதாரம் ஆரம்ப காட்சிகள்ல கேமரா....குமுதம் "லைட்ஸ் ஆன்" வினோத்தை தெரியாதவங்களே இருக்க முடியாது. தினமலர் வாரமலர்ல "இதப் படிங்க மொதல்ல" மற்றும் "துணுக்கு மூட்டை" - ஞாயிறு மட்டும் நெட்ல படிச்சுக்கறது. மத்தபடி கல்கில சிவகுமாரோட "இது ராஜபாட்டை அல்ல" ரொம்பவே ரசிச்சு படிச்சு, சிவக்குமார் மேல ஒரு மரியாதைய உண்டாக்கிய தொடர்..
7.தமிழ்ச்சினிமா இசை?
சரஸ்வதி வாத்ய கோஷ்டி, குமார், வெங்கடேஷ், சுதர்ஸனம், குன்னக்குடி, எம்.எஸ்.வி-ராமமூர்த்தி, எம்.எஸ்.வி, ராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், டி.ராஜேந்தர், பாக்யராஜ், ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், ராஜபுத்திரர்கள், டி.இமான், விஜய் ஆண்டனி, ஜோஷ்வா ஸ்ரீதர், தேவி ஸ்ரீப்ரசாத், ஜேம்ஸ் வசந்தன்....... இன்னும் விடுபட்டுப்போன எல்லாரும். மனதை வருடுகிற மாதிரி யார் இசை அமைச்சாலும் அதை அனுபவிக்க தவறுவதே இல்லை.மும்பை மற்றும் புனேல கொஞ்ச நாள் இருந்தபோது சேனல்-வி ஷஷாங்க் கோஷோட தம்பி ம்ருகாங்கா கோஷ் கூட பழக்கம் இருந்தது. மொழி புரியாட்டாலும் ரெண்டு பேரும் மராட்டி, ஒரியா, போஜ்புரி, பஞ்சாபி, ஃப்ரென்ச், இத்தாலி, ஸ்பானிஷ்னு நிறைய படங்கள் பாத்திருக்கோம். சிலது ரொம்ப சப்பையா இருந்தாலும் சில படங்கள் ரொம்ப நெகிழ வெச்சுரும். குறிப்பா இரான் / இராக்கிய படங்கள். "ஒன் லைன்" கதைய 1 1/2 மணி நேர படமா எடுக்கறத இவங்க கிட்டதான் கத்துக்கணும்.
ரொம்பவே பாதிச்ச படம் "சலாம் பாம்பே". போன வாரம் சிங்கப்பூர் லோக்கல் சேனல்ல "ரேபிட் ப்ரூஃப் ஃபென்ஸ்"னு ஒரு ஆஸ்திரேலிய படம் பாத்தேன். அந்த மூணு சிறுமிகளும் இன்னும் கண்ணுல இருக்காங்க.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ் சினிமா கூட நேரடியவோ மறைமுகமாவோ ஒரு தொடர்பும் கிடையாது. பொழச்சாங்க. இதுவே ஒரு பெரிய உதவிதானே?
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
19 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
நல்லா கொசுவத்தி சுத்தியிருக்கீங்க.. இன்ட்ரெஸ்டாத்தான் இருக்கு..
//தமிழ் சினிமா கூட நேரடியவோ மறைமுகமாவோ ஒரு தொடர்பும் கிடையாது. பொழச்சாங்க. இதுவே ஒரு பெரிய உதவிதானே?//
ரசித்து சிரித்தேன்..
என்னை கோத்துவிடுற மூணாவது ஆள் நீங்க.. சீக்கிரம் இந்த வாரமே போட்டுடலாம்..
ஏங்க, கொக்கி ஒருத்தருக்கு போட்டாப் பத்தாதா? இருக்குற மீனெல்லாத்துக்கும் நீங்களே கொக்கி போட்டாச்சு..... நான் என்ன செய்ய?
இந்த காப்பீட்டு முகவர் மாதிரி ஆள் புடிச்சுக் குடுங்கன்னு போகவா? இருங்க, எங்க ஆத்தாவைப் போயிக் கூட்டியாறேன்.....
நான் பாட்டுக்கு சிவனே தானே இருந்தேன்..
என்னை எதுக்கு இப்படி ஏடா கூடமா மாடி விட்டுறிக்கீங்க/..
இதுக்கு தான் பெரியவங்க சொல்லுவாங்க, பெர்சுகளோட சகவாசம் வைச்சுக்க கூடாதுன்னு..( இப்போ பாருங்க அவஸ்தபடுறேன் )
நல்ல மலரும் நினைவுகள்..
நன்றாக இருந்தது
மறுக்கா சொல்றேன்...
என்னை இப்படி மாட்டி வைச்சுட்டீங்களே ?
இது நியாயமா? தர்மமா?? அடுக்குமா??
இருங்க உங்களுக்கு பில்லி சூனியம் வைச்சா தான் சரி படுவீங்க ...
நல்லா இருங்க.. நல்லாவே இருங்க...
அழைத்தமைக்கு நன்றி ( நற நற.. பல்லை கடித்து கொண்டு )
அழைத்தமைக்கு நன்றி,சினிமா பத்தின நம்ம அறிவு ரொம்ப அதிகம்.நான் யாரயாவதும் ஆள் வெச்சுதான் எழுதனும்
@ பழமைபேசி :
//இருங்க, எங்க ஆத்தாவைப் போயிக் கூட்டியாறேன்.....//
:D :D :D
@ உருப்புடாதது_அணிமா :
அடடா சும்மா இருக்கறவர சொறிஞ்சு விட்டுட்டேனா? :))))))
@ குடுகுடுப்பை :
ஃபிலிம் ந்யூஸ் ஆனந்தன் சாரை வேணும்னா கேட்டுப்பாருங்களேன் ... :) :))
சினிமா பதிவு போட்டுட்டேன், உங்க பேச்ச முதல்ல கேட்டது நாந்தான்.
// என்ன இருந்தாலும் நம்மூரு மாதிரி "கமல்"னு பேர் போடும்போது கற்பூரம் காட்டறது, ஸ்க்ரீன் மேடை மேல ஏறி டான்ஸ் ஆடறது.... அதெல்லாம் தனிதான் //
:-)))...
//ஒரு தொடர்பும் கிடையாது. பொழச்சாங்க. இதுவே ஒரு பெரிய உதவிதானே?//
இது ஜூப்பரு!
ஆமா, வெண்பூவை எத்தனை பேருதான் கூப்புடுவீங்க.
என்னைக் கூப்புடாதீங்கோஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு அவரு ஒரு பதிவே போடலாம் போல!
ரொம்ப நல்லா மலரவிட்டீங்க தல நினைவுகளை..
ஆம்.. எம்ஜியார்.. ஒரு ஆச்சர்யமான சகாப்தம்..
பதிவுக்கு நன்றி..
நர்சிம்
நன்றி நர்சிம்....
சமீபத்துல அப்பாவும் அம்மாவும் சிங்கப்பூர் வந்து 2 மாசம் இருந்தபோது எங்க கூட்டிட்டுப் போறதுன்னு தெரியாமா,
//
என்னாது சிங்கையில எங்க போறதுன்னு தெரியலயா? அண்ணன் கிரி அவர்களை அசிங்கப்படுத்திட்டீங்களே!!!
:)))))))))
@ அப்துல்லா :
என்ன... இப்பல்லாம் ரொம்பவே நுண்ணரசியல ரசிக்கிறீங்க.... உங்களுக்கு "சிண்டு சின்ராசு" அல்லது "நுண்ணரசியல் நூர் முகமது" அப்படின்னு எதாவ்து பட்டம் வேணுமா? :)))
போட்டுட்டேன்..
நானும்... சினிமா பதிவு
தப்பா இருந்த மன்னிச்சுக்கோங்க
அழைப்புக்கு மிக்க நன்றி. விடுமுறையில் இருந்தேன் இன்று தான் வந்தேன். கூடிய சீக்கிரம் இந்த தொடர் பதிவை போட்டுவிடுகிறேன். நன்றி.
Post a Comment