முந்தைய பதிவுல இப்பொதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வீட்டுப் பிரச்சனைதான்னு எழுதியிருந்தேன். அதுசரியோட [ இவரே ஒரு முதலீட்டு வங்கியாளர் (investment banker). இவர் எழுதினா இன்னும் விளக்கமாவே எழுதலாம். இருந்தாலும் நாம கொழப்பறத சரியா கொழப்பிரணுமில்ல.. :)) ] பின்னூட்டத்துல இதுவே காரணம் இல்ல.... இது ஒரு காரணிதான்.... பின்னால CDO,CDS மாதிரி பல விஷயங்கள் இருக்குன்னு எழுதியிருந்தாரு. அவுரு சொல்றது 100% சரி. ஆனா நான் முன்னாடியே சொன்னது மாதிரி இந்த சரிவுக்குப் பின்னால பல விதமான முறைப்படுத்தப்படாத நிதி / முதலீடு / காப்பீடு கருவிகள் (unregulated financial / investment / insurance instruments) இருக்கு. அதுல முக்கியமானது, இந்த சரிவுக்கு பெரிய காரணமா இருந்தது, CDS-உம் CDO-உம்.
இது ரெண்டும் என்னன்னு பாக்கறதுக்கு முன்னாடி அவர் எழுப்பின சில கேள்விகளை பாக்கணும். அதாவது அமெரிக்கவால பல நன்மைகள் கிடைச்சுருக்கு, இப்ப மட்டும் ஏன் அவிங்களை இந்தத் திட்டு திட்டணும்னு. வாஸ்தவந்தான். அவிங்க மார்கெட் பெருசா, ஆழமா, அகலமா இருக்கப் போய்த்தான் சுத்தியிருக்கற பதினெட்டுப் பட்டி நாடுகளுக்கும் பெரிய லாபம் கெடச்சுது. காரென்ன, துணியென்ன, சாஃப்ட்வேரென்ன...இன்னும் பல என்னக்களால நாம் எல்லாம் லாபம் பாத்தோம். ஆன இதுலெல்லாம் அடிப்படையா இருந்தது உற்பத்தி. யூகம் கிடையாது. அவன் கேட்டதை செஞ்சு குடுத்தா காசு. இல்லைன்னா கட்டைவெரல சூப்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். இதுகள்ல உருவகப் பொருட்கள் (Derivatives) கிடையாது. அதாவது வேற ஒரு பொருளை பின்னால வெச்சு ஒரு காய்த சர்டிபிகேட் பண்ணி, பின்னால உள்ள பொருளோட மதிப்பப் பொறுத்து இந்த காய்தத்துக்கு ஒரு விலை வெச்சு, வித்து வாங்கின்னு வியாபாரம் பண்ணல. உழைப்ப மூலதனமாப் போட்டு பொருளை உற்பத்தி பண்ணி வித்து பாத்த லாபம்.
ரெண்டாவது நம்ம வரிப்பணத்தைப் பத்தியது. முன்னால நல்லா போய்கிட்டுருந்தபோது நாமளும் அந்த கம்பெனிகளோட பங்குகள்ல முதலீட்டு செஞ்சுருந்தா நமக்கும் லாபம் கெடச்சுருக்கும். அதுனால நட்டம் வரும்போது வரிப்பணத்தை குடுத்தா பொறுத்துக்கணும்கறது. இந்த லாஜிக் படிப் பாத்தா முதலீடு செஞ்சு லாபம் பாத்தவங்கள் பல பேர் இருக்கலாம், ஆனா முதலீடு செய்ய வக்கில்லாம சொற்ப சம்பளம் வாங்கி, வரியையும் ஒழுங்கா கட்டினவங்க பலப்பல பேரு. அவிங்களோட வரிப்பணம்? அவன் ஏன் இந்த நட்டத்துல பங்கெடுத்துக்கணும்?
யூக வியாபாரம்க்கறது பேராசை இல்லாம வேற என்ன? பொருளை கண்ணால கூடப் பாக்காம, அது கருப்பா செவப்பான்னு கூடத் தெரியாம அதோட விலைய ஏத்தி எறக்கி வெளையாடி, உற்பத்தி பண்றவனுக்கு முக்காடு ; வெலையச் சொல்றவனுக்கு லாபம்னு ஒரு நிலையை கொண்டு வரதுக்கு பேரு பேராசை இல்லாம வேற என்ன? இப்பிடி ஒரு நிலையை பண்ணிட்டு இதுதான் மார்க்கெட், இப்பிடி நாலுந்தான் இருக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தா? 5 ருவா பொருள் அனாவசியமா 50 ருவாய்க்கு விக்கறதும், அடக்க விலை 100 ருவப் பொருள் 10 ருவாய்க்கு வித்து மக்கள் தற்கொலை பண்ணிக்கறதும்....இதுதான் மார்கெட்டா? எனக்கு தெரிஞ்ச அளவுல இது பேராசைதான். நட்டம்னு வரும்போது ஏசி ரூமுல உக்காந்துட்டு வேணா எதாவது ஒரு கணக்கச் சொல்லி இது இப்பிடித்தான்னு வெளக்கலாம். நேரடியா பாதிக்கப் படறவன் உணர்வு பூர்வமாத்தான் பிரச்சனைய அணுகுவான்.
சரி இப்பொ CDO CDSக்கு வருவோம்.
CDO - Collateralized Debt Obligations
இத தமிழ் படுத்த என்னால முடியல. சுருக்கமா சொல்லணும்னா "கடன் ஒப்புதல்களை" ஜாமீனா வெச்சுக்கறது. முன்னால சொன்ன MBS மாதிரிதான். பல அடகுகளை ஒண்ணா சேத்து ஒரு பெரிய சொத்தா பண்ணி, அத பின்னால வெச்சு பாண்டுக (bonds), சர்டிஃபிகேட்டுக, பங்குகன்னு செஞ்சு, ஒவ்வொண்ணுக்கும் ஒரு ரேடிங் (rating) குடுத்து, கடன்களுக்கு பணம் திரும்ப வர வர இந்த காய்தங்களுக்கு (ரேடிங்குக்கு தகுந்த மாதிரி) வருமானமும் வரும், மதிப்பும் கூடும். இந்த மாதிரி காய்தங்கள்ல பல பேங்குகளும், முதலீடு கம்பெனிகளும் எக்கச்சக்கமா முதலீடு பண்ணியிருந்தாங்க. கடன்காரன் வட்டியோ, அசலோ திருப்பித் தரலைன்னா என்ன ஆகும்? அந்த அடகு மூட்டையோட மதிப்பு கண்டிப்பா குறையும். கூடவே இந்த காய்தங்களோட மதிப்பும், அதுல இருந்த வர வருமானமும் குறையும். சரி, அடகுல இருக்கற சொத்துகள வித்து கணக்கத் தீர்க்கலாம்னா, சொத்துகள வாங்க ஆளில்ல. வாங்க ஆளில்லாத அடகை வெச்சுக்கிட்டு என்ன பண்றது? (அத வாங்கிக்கச் சொல்லி வெளம்பரம் குடுத்து இன்னும் செலவு வேணா கூட ஆகும்.) சொத்து மதிப்பு கொறஞ்சுக்கிட்டே போக...நட்டம் ஆரம்பமாகுதா? இதுல இந்த அடகுகள் அசையும் / அசையாச் சொத்துகளா இருக்கலாம். கடன் அட்டைக மூலமா கண்டபடி செலவு பண்றோமே, அந்த மாதிரி நிறைய சில்லறைக் கடன்கள மூட்ட கட்டின (debt consolidation) ஒரு பெரிய கடனா இருக்கலாம். இது மாதிரி எது வேணும்னாலும் இருக்கலாம். எதுவா இருந்தாலும் கடன் வாங்குனவன் திருப்பித் தந்தாத்தான் அதுக்கு மதிப்பு. இல்லேன்னா ஏ...டண்டணக்கா... ஏ....டணக்குணக்கா தான்.
CDS - Credit Default Swaps
இதுக்கும் தமிழ் வார்த்தை தெரியல. இது ஒரு மாதிரியான காப்பீடு (insurance). அதனாலயே இத CDSனு சொல்றத விட இன்சூரன்ஸ்னே சொல்லலாம். இப்ப நாம ஒரு கார் வாங்குனம்னா அதுக்கு இன்சூரன்ஸ் வாங்கறோமில்ல? எதுக்கு? வண்டிக்கு எதாவத் ஆச்சுன்னா கைக்காசு வீணாகாம அத சரி பண்ணிக்கறதுக்கு. அதுக்கு வண்டி மதிப்பப் பொறுத்து ஒரு பிரிமியம் (வண்டி மதிப்போட ஒப்பிட்டா இது ரொம்ப கொஞ்சம்) கட்டறோம். நட்டம் வரலாம்கற எதிர்பார்ப்புல ஒரு பாதுகாப்பு பண்ணிக்கறோம். அதாவது ரிஸ்கை குறைச்சுக்கறோம். டெக்னிகலா சொன்னா, நம்ம ரிஸ்கை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மாத்தி (risk transfer / swap) விட்டுடறோம்.
இதே மாதிரி, நாம ஒரு கம்பெனியோட பாண்டுகள்ல ஒரு பெரிய தொகையை முதலீடு செய்யறோம்னு வைங்க. ஆனா நமக்கு கொஞ்சம் பயம்...கம்பெனி ஊத்தி மூடிக்கிட்டா...நம்ம பணம் திரும்ப கிடைக்காட்டா.... (credit default) இப்ப இந்த ரிஸ்கையும் (வண்டி மாதிரியே) ஒரு பிரிமியம் குடுத்து காப்பீடு பண்ணிக்கறது. ஆனா இது கொஞ்சம் வித்தியாசமா, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (வருஷத்துக்கு / மாசத்துக்குஇவ்வளவு, இத்தனை வருஷத்துக்கு / மாசத்துக்கு) பிரிமியம் கட்டறது. இந்த இடைப்பட்ட காலத்துல நாம முதலீடு பண்ணின பாண்டுக்கு எதாவது ஆபத்துன்னா, இன்சூரன்ஸ் கம்பெனி அதுக்கு ஈடு பண்ணும். கூடவே நாம கட்டற பிரிமியம், காலத்துக்கு தகுந்த மாதிரி இன்சூரன்ஸ் கம்பெனி நமக்கு ஒரு ஜாமீன் காமிக்கணும்.
உதாரணத்துக்கு, ஒரு 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு XYZ பாண்டுக்கு வருஷத்துக்கு 1 லட்சம் டாலர்னு 5 வருஷம் கட்டறோம்னா, இன்சூரன்ஸ் கம்பெனியோட ரேடிங் (AAA) ன்னா 5 லட்சம் டாலர் ஜாமீன் (collateral) காமிக்கணும். இப்ப எதோ ஒரு காரணத்துனால இன்சூரன்ஸ் கம்பெனியோட ரேடிங் (BBB) ஆகுதுன்னு வெச்சுக்குவோம். அதாவது ரேடிங் குறையுது. அப்பிடின்னா அந்த கம்பெனியோட நம்பகத்தன்மை குறையுது. ஆனா நாம பாலிசி எடுக்கும்போதே ஒரு ஒப்பந்தம் போட்டிருப்போம். நம்பகத்தன்மை குறைஞ்சா ஜாமீன் அதிகம் பண்ணணும்னு, இப்ப ரேடிங் குறைஞ்சதால, நாம ஜாமீனை 10 லட்சம் காமிக்கணும்னு சொல்றோம். MBS, CDO ப்ரச்னையால இன்சூரன்ஸ் கம்பெனி பண்ணியிருந்த முதலீடுகள்ல நட்டம் வந்ததால ரேடிங் குறைய, ஜாமீன் அதிகம் காட்ட வேண்டி வர..ஒரு சுழல் மாதிரி ஆயிடுது. இதுல இன்னும் சிக்கல் என்னன்னா, இன்சூரன்ஸ் கம்பெனியும் இதே மாதிரி வேற கம்பெனிக / பேங்குக கூட இதே போல பல ஒப்பந்தங்கள் வெச்சுருப்பாங்க. இப்பிடி ஒருத்தர் இன்னொருத்தரோட, அந்த இன்னொருத்தர் வேறொருத்தரோடன்னு மாத்தி மாத்தி CDS பண்ணிப் பண்ணி ஒரு பெரிய வலை மாதிரி பின்னி பிணைஞ்சுருப்பாங்க. AIG, Lehman மாதிரி ஒரு ஆகப் பெரிய கம்பெனிக்கு இந்த மாதிரி அதிக ஜாமீன் காமிக்கற நெருக்கடி வந்து அவுங்க சரிய ஆரம்பிக்கும்போது, கூடவே மத்தவங்களுக்கும் (drag) நெருக்கடி அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமா மொத்தமா சரிவு. கருந்துளை (black hole) ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஒவ்வொண்னா தொடர்ந்து திவால்.
சரிவுக்கான மெக்கானிசம் எதுவா இருந்தாலும், மூல காரணம் திருப்பி கட்டாத / கட்ட முடியாத (default / sub-prime) கடன்கள பின்னால வெச்சு புதுசு புதுசா யூக வியாபாரத்துக்கான கருவிகள உண்டாக்கி, அதுகளை வெச்சு சந்தைல வெளயாண்டு குறுகிய காலத்துல நிறைய லாபம் பாத்தாங்க. நாமளும் நேரடியாவோ மறைமுகமாவோ கொஞ்சம் பலன் அடைஞ்சோம். இல்லேன்னு சொல்லல. ஆனா அமெரிக்கா மாதிரி அதுலயே சுத்திக்கிட்டுருக்கல. இந்த விளையாட்டுல ஆபத்து அதிகம்னு தெரிஞ்சும், முறைப்படுத்தப்படாத இன்சூரன்ஸ், அதுவும் பங்குக (Over The Counter - OTC) வாங்கற மாதிரி செஞ்சு, சுலபமா எல்லாரும் வந்து விழுந்து இன்னிக்கு ஆகப் பெரிய சீரழிவு, பொருளாதாரப் பின்னடைவு, மந்த வளர்ச்சி, உற்பத்தி குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சில்லறை வியாபார பாதிப்பு, பணப்புழக்கம் இல்லாதது, வீடுக இல்லாம பார்க்குலயும் தெருவுலயும் குடியிருக்கறதுன்னு ஒரே சமயத்துல பல விதமான பாதிப்புக. தனி மனுசன்ல இருந்து மொத்த உலகமும் திணறிக்கிட்டுருக்கோம். இதுவரைக்கும் உலகம் பாக்காத பெரிய சரிவு. இதுல கத்துக்க வேண்டிய பாடங்கள் நிறைய. கத்துப்போமா?
இப்பவும் நான் எனக்குப் புரிஞ்சதை சிம்பிளா சொல்ல முயற்சி பண்ணினேன். தப்ப இருந்தா தெரிஞ்சவங்க திருத்துங்க. நன்றி.
அப்பிடியே Tamilish ஓட்டு... ஹி ஹி ஹி..
29 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
எனக்கு தலை சுத்துது...
மகேசு.... முயற்சிக்கு நன்றி! ஆனா, கொஞ்சம் பதிவு நீளமாத்தான் போச்சு... ஆனா, விளக்கம் சரி.
ஒருத்தன் கடன் குடுக்குறான், ஒருத்தான் வாங்குறான். இவிங்களுக்கு நடுவுல இருக்குறது கடன் பத்திரம். இது முதல் அடுக்கு யாவாரம்(mortgage).
ஒரு கட்டுல மேல சொன்ன பத்திரங்க, அதுகள கட்டுப் பத்திரம்னு வெச்சிக்குவோம். ஆக, இந்த கட்டுப் பத்திரத்தை அடைமானம் வெக்கிறது ஒருத்தன். அதுக்கு ரொக்கம் குடுக்குறது இனியொருத்தன். இது ரெண்டாவது அடுக்கு யாவாரம்(CDO).
மேற்படி யாவரங்கள்ல வர்ற பாரதூர விளைவுக்கு ஒரு காப்பீடு(CDS).
ஆனா, இது எல்லாமே எப்படி இருக்குன்னா, காவிரியில தண்ணி வரும்போது வெள்ளாமை பண்ணிக் காசு தந்திடலாம்ங்ற நம்பிக்கையோட, ஆயா கடைல கணக்கு வெச்சி சாப்புடுற கதைதான்!
கொஞ்சம் நீளம் அதிகம், அத்தோடு படிக்கும் எனது பொருளாதார அறிவு மிகவும் குறைவு.
supply/demand theory is correct ஆனால் டிமாண்ட் ஏற்படுத்தப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் தான் எனக்கு தெரிந்த எளிமையான காரணம். முதலாளித்துவம் தன்னை விமர்சித்து ஊழல் செய்யும் வழிமுறைகளை அடைத்து சாதாரண மக்களை முன்னேற்றும் என நம்புவோம்.
உங்களுக்கு ஏதாவது மொக்கையாக பதிவு எழுத தோன்றினால் வருங்கால முதல்வரில் எழுதுங்கள்.
@விஜய் ஆன்ந்த் : படிக்கறதுக்கே சுத்துதா? பணம்போட்டவனுக்கு எவ்வளவு சுத்தும்? :))))
@ பழமைபேசி : நன்றிங்க... ஆமாங்க கொஞ்சம் நீளமாத்தன் போச்சு.... சிக்கலை விளக்கறதுக்கு....
@ குடுகுடுப்பை : எனக்கு மட்டும் பொருளாதார அறிவு நிறய்யன்னு நெனச்சீங்களா? அய்யோ... அய்யோ.....
மொக்கதானே...போட்டுருவோம்....
அருமை.. அருமை.. அருமை மஹேஷ்.. ரொம்ப அழகாக, தெளிவா, சிம்பிளா விளக்கிட்டீங்க..
சி.டி.எஸ் ஓட ஒரே பிரச்சினை என்னான்னா, ரிஸ்க் ஸ்வாப் பண்ண சி.டி.எஸ் குடுக்குற ஒருத்தர் அந்த ரிஸ்கை இன்னொருத்தருக்கு அதை விக்கவும் செய்யுறாங்க. அவங்க இன்னொருத்தருக்கு, அவங்க இன்னொருத்தருக்குன்னு ஒரே கடனுக்குனா சி.டி.எஸ் பலபேர் கை மாறி இருக்கும்.
இன்னிக்கு அமெரிக்கன் மார்கெட்ல இருக்குற மொத்த சி.டி.எஸ்.களோட ஃபேஸ் வேல்யூ மட்டுமே மொத்தம் 52 ட்ரில்லியன் டாலர் இருக்கும்னு கால்குலேட் பண்ணியிருக்காங்க.. ஆனா மொத்த கடன் (டெப்ட்) என்னவோ 6 ட்ரில்லியன் டாலர்தான். அவ்ளோ சூதாட்டம் நடந்திருக்கு. (அமெரிக்கா அரசாங்கத்தோட மொத்த பட்ஜெட் வருமானமே 3 டிரில்லியன் டாலர்தான்..) :(
@ வெண்பூ :
ரொம்ப நன்றிங்க.... கரெக்டுங்க.... இந்த மறு மறு மறு மறு.....விற்பனைனாலதான் 10 ருவா மதிப்பு சொத்து 100 ருவாயா ஆகி .... அய்யய்யொ நெனச்சே பாக்க முடியலங்க...
//யூக வியாபாரம்க்கறது பேராசை இல்லாம வேற என்ன? பொருளை கண்ணால கூடப் பாக்காம, அது கருப்பா செவப்பான்னு கூடத் தெரியாம அதோட விலைய ஏத்தி எறக்கி வெளையாடி, உற்பத்தி பண்றவனுக்கு முக்காடு ; வெலையச் சொல்றவனுக்கு லாபம்னு ஒரு நிலையை கொண்டு வரதுக்கு பேரு பேராசை இல்லாம வேற என்ன? இப்பிடி ஒரு நிலையை பண்ணிட்டு இதுதான் மார்க்கெட், இப்பிடி நாலுந்தான் இருக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தா? 5 ருவா பொருள் அனாவசியமா 50 ருவாய்க்கு விக்கறதும், அடக்க விலை 100 ருவப் பொருள் 10 ருவாய்க்கு வித்து மக்கள் தற்கொலை பண்ணிக்கறதும்....இதுதான் மார்கெட்டா? எனக்கு தெரிஞ்ச அளவுல இது பேராசைதான். நட்டம்னு வரும்போது ஏசி ரூமுல உக்காந்துட்டு வேணா எதாவது ஒரு கணக்கச் சொல்லி இது இப்பிடித்தான்னு வெளக்கலாம். நேரடியா பாதிக்கப் படறவன் உணர்வு பூர்வமாத்தான் பிரச்சனைய அணுகுவான்.//
மிகவும் சரி. பேராசைக்கு அளவில்லை.
நல்ல பதிவு. நன்றி.
வாங்க வெற்றிமகள்.... வருகைக்கு நன்றி
அய்யா, எல்லாம் சரி..! முதல் பதிவுல கொஞ்சம் புரிஞ்சுது...இப்ப சுத்தம்...அநேகமா ஒரு ரெண்டு மூணு தடவை படிச்சா புரியும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்...இது எதுனால ஆரம்பிச்சது? இந்த பேராசை இப்பத்தான் புடிச்சதா? முதல்ல இருந்த மக்களுக்கு இது இல்லாம் இருந்ததா? இதனோட அடிப்படை என்ன? உலகப் புகழ் பெற்ற வணிகப் பள்ளிகளில் எல்லாம் எப்படி அடுத்தவனை குழப்பணும்னுதான் சொல்லிக் குடுக்கறாங்களா? இந்த மாதிரி நிலைமைக்கு இந்தப் பள்ளிகள்தான் காரணமா? அப்படி இல்லை என்றால்...இந்தப் பள்ளிகளில் படித்த நூற்றுக்கணக்கான அறிவு ஜீவிகள் என்னதான் செய்து கொண்டு இருந்தார்கள்...? இதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா? அல்லது அவர்களும் உடந்தையா? லெமான் பிரதர்சின் சீஃப் ரிச்சர்ட் ஃபுல்ட்...ஒரு கம்பெனியை மோசமாக நடத்தியதற்காக அவருக்கு ஒரு மணி நேர சம்பளம் $17000! ஒண்ணுமே புரியலை உலகத்திலே...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது !!!
மகேஷ்,
பதிவை, நேத்தே படிச்சிட்டேன். நீங்க இதை கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாலேயே எழுதி இருந்தா, எங்கள்ளுக்கெல்லாம் எவ்ளோ சுலபமா புரிஞ்சிருக்கும். இதைஎல்லாம் புரிஞ்சிக்க பட்ட பாடு இன்னும் நினைவில இருக்கு. இப்பயும் LKG தான்:-((((((.
Chitravini கேக்கறதுதான் என்னோட சந்தேகமும்.
'உழைப்பு. அதுக்கேத்த ஊதியம் / பலன். இதை மட்டுமே நம்பற/தெரிஞ்ச எளிய மக்களுக்கு, 'உலகப் பொருளாதாரம், அதனோட சரிவு' தங்களையும் பாதிக்கும்னு
எப்படித் தெரியும்? இதப் பத்தியே நேத்தெல்லாம் நெனச்சிட்டிருந்தேன்.
வெண்பூ, நீங்க சொல்றது ரொம்ப சரிங்க. மில்லியன் எல்லாம் போய், இப்ப ட்ரில்லியன் . நானும் முன்ன இதெல்லாம் ஒன்னும் புரியாம, "எங்க போச்சு இந்த பணமெல்லாம்?" அப்படின்னு ரொம்ப அப்பாவியா ரங்கமணிய கேட்டேன். கூலா, 'அதெல்லாம் evaporate ஆகி போயே போயிருச்சி' அப்படின்னு சொல்லிட்டாரு. :-)))))))))))
சித்ரா mano
@chitravini:
பிஸினஸ் ஸ்கூல்கள்ல இப்பிடியெல்லாம் குழப்ப சொல்லி குடுக்கலைன்னுதான் நினைக்கிறேன். ஆனா அங்க படிச்சுட்டு வரவங்க தங்களை அடையாளம் காட்டிகறதுக்காக இப்பிடி புதுசு புதுசா instruments. உருவாக்கி சந்தைல விடறாங்க. மார்கெட் போகற வேகத்துல அதோட சாதக பாதகமெல்லாம் long-termக்கு அலசிப் பாக்க யாருக்கும் நேரம் இல்ல. அதோட இப்பிடி ஒரு instrument / process குத்தம் சொல்றவன் 10 பேரு இருந்தா, ஆஹ ஓஹோன்னு சொல்ல 10000 பேரு இருக்காங்க. அதுவுமில்லாம இந்த மாதிரி சிக்கலான வியாபாரங்கள் எல்லாம் சமீபத்துலதான் வந்தது. Performance காமிக்கணும்கற ஆசையில எல்லாரும் இத ரொம்பவே சிக்கல் பண்ணிட்டாங்க. இதுதான் திசை, இப்பிடித்தான் போகணும்னு சுனாமி மாதிரி போய்கிட்டே இருந்தாங்க. வாரென் பஃபெட் மாதிரி நிறுவனங்கள் ஏன் விழலன்னு யோசிச்சுப் பாத்தீங்களா?
வாங்க சித்ரா மனோ... லட்சம்...அதிக பட்சம் கோடின்னு பேசிட்டுருந்த நம்மளையெல்லாம் பில்லியன் ட்ரில்லியன்ன்னு பேச வெச்சுட்டாங்க பாருங்க... லாலு ப்ரசாத் 900 கோடி ஊழல் பண்ணபோது என்னடா கோடியெல்லாம் சாதாரணமாப் போச்சென்னு நினச்சேன். :))
ஈசியாப் புரியறமாதிரி எழுதியிருகீங்க மகேஷ்.
//ஆனா, இது எல்லாமே எப்படி இருக்குன்னா, காவிரியில தண்ணி வரும்போது வெள்ளாமை பண்ணிக் காசு தந்திடலாம்ங்ற நம்பிக்கையோட, ஆயா கடைல கணக்கு வெச்சி சாப்புடுற கதைதான்!//
இதுதான் உண்மை.
எக்னாமிக்ஸ் வாத்தியார் நெடுஞ்செழியன் பாடம் நடத்துன மாதிரி இருக்கு.
இன்னொரு தடவ நெதானமா படிச்சாத்தான் புரியும்னு நினைக்கிறேன்.
அப்படி ஒரு வேளை புரிஞ்சதுன்னா பின்னூட்டம் போடறேன் :)
@ வெயிலான்:
//எக்னாமிக்ஸ் வாத்தியார் நெடுஞ்செழியன் பாடம் நடத்துன மாதிரி இருக்கு.//
ஹி ஹி அவ்வளவு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவ இருக்கு? :))))))))))))))
//இன்னொரு தடவ நெதானமா படிச்சாத்தான் புரியும்னு நினைக்கிறேன்.//
இன்னொரு தடவையா? கிழிஞ்சுது க்ருஷ்ணகிரி... தெச்சுதாம் தர்மபுரி....
உன்னோட பேரு கோடிஸ்வரன்........ சரி.... உனக்கு லோன் எவ்வளவு வேணும் அய்யா 5 லட்சம்..... குடுத்துருங்க கோடிஸ்வரன் பேரு இருக்குல(யூக வியாபாரம்க்கறது) கண்டிப்பா லோன் திருப்பி கட்டிடுவரு
................
//யூக வியாபாரம்க்கறது பேராசை இல்லாம வேற என்ன? பொருளை கண்ணால கூடப் பாக்காம, அது கருப்பா செவப்பான்னு கூடத் தெரியாம அதோட விலைய ஏத்தி எறக்கி வெளையாடி, உற்பத்தி பண்றவனுக்கு முக்காடு ; வெலையச் சொல்றவனுக்கு லாபம்னு ஒரு நிலையை கொண்டு வரதுக்கு பேரு பேராசை இல்லாம வேற என்ன? இப்பிடி ஒரு நிலையை பண்ணிட்டு இதுதான் மார்க்கெட், இப்பிடி நாலுந்தான் இருக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தா? 5 ருவா பொருள் அனாவசியமா 50 ருவாய்க்கு விக்கறதும், அடக்க விலை 100 ருவப் பொருள் 10 ருவாய்க்கு வித்து மக்கள் தற்கொலை பண்ணிக்கறதும்....இதுதான் மார்கெட்டா? எனக்கு தெரிஞ்ச அளவுல இது பேராசைதான். நட்டம்னு வரும்போது ஏசி ரூமுல உக்காந்துட்டு வேணா எதாவது ஒரு கணக்கச் சொல்லி இது இப்பிடித்தான்னு வெளக்கலாம். நேரடியா பாதிக்கப் படறவன் உணர்வு பூர்வமாத்தான் பிரச்சனைய அணுகுவான்.//
மிகவும் சரி. பேராசைக்கு அளவில்லை.
நல்ல பதிவு. நன்றி.
//
முந்தைய பதிவுல இப்பொதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வீட்டுப் பிரச்சனைதான்னு எழுதியிருந்தேன். அதுசரியோட [ இவரே ஒரு முதலீட்டு வங்கியாளர் (investment banker). இவர் எழுதினா இன்னும் விளக்கமாவே எழுதலாம். இருந்தாலும் நாம கொழப்பறத சரியா கொழப்பிரணுமில்ல.. :)) ] பின்னூட்டத்துல இதுவே காரணம் இல்ல.... இது ஒரு காரணிதான்....
//
மகேஷ் அண்ணா,
உங்கள் எல்லாக் கேள்விக்கும், சரியோ தவறோ என்னிடம் சில பதில்கள் உள்ளன..
அதை இங்கு பின்னூட்டமிட்டால், உங்கள் பதிவை விட மிக நீளமாகும் அபாயம் உண்டு.. அதனால, தனி பதிவா போட்டுறவா??
CDO, CDஸ் இதெல்லாம் பத்தி எழுதறது ரொம்ப கஷ்டம்..ஆனா, நீங்க ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..
தல...எங்கயோ போயிட்டீங்க.....அருமை
இந்த நெருக்கடியின் முதல் பலி.....ஒரு இந்தியக்குடும்பம்....
http://www.latimes.com/news/local/la-me-porterranch7-2008oct07,0,7425239.story
வாங்க மதுரைநண்பன்... நன்றி
@ அதுசரி :
வாங்க. தயவு செய்து நீங்க ஒரு பதிவாவே போடுங்க. நான் ஒரு IT கன்சல்டன்ட். எனக்கு தெரிஞ்ச விதத்துல, நான் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ப்ரச்னைய அணுகி எழுதியிருக்கேன். நான் எழுதுனதோ, என் அணுகுமுறையோ தவறா இருக்கலாம். உங்களை மாதிரி இதுலயே இருக்கறவங்க எழுதினா ரொம்ப சரியா இருக்கும். இதோட மறுபக்கத்தையும் தெரிஞ்சுகிட்டு, ப்ரச்னையா சரியான கோணத்துல பார்க்க வாய்ப்பும் கிடைக்கும். எழுதுங்க.... உங்க நட்பு கிடைத்தற்கு நனறி.
அணிலன்.... எங்க போய்ட்டிங்க இவ்வளவு நாளா? பதிவுகளும் போடல, பின்னூட்ட்மும் போட்டல... லீவுல இந்தியாவா?
என் முதுகை நான் பார்த்துட்டேனே....
@ பரிசல் :
இன்னோரு பதிவு போட்டுடறேன்... மறுபடி தலை திரும்பிடும் :)))))))))))
@ அதுசரி :
வாங்க. தயவு செய்து நீங்க ஒரு பதிவாவே போடுங்க. நான் ஒரு IT கன்சல்டன்ட். எனக்கு தெரிஞ்ச விதத்துல, நான் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ப்ரச்னைய அணுகி எழுதியிருக்கேன். நான் எழுதுனதோ, என் அணுகுமுறையோ தவறா இருக்கலாம். உங்களை மாதிரி இதுலயே இருக்கறவங்க எழுதினா ரொம்ப சரியா இருக்கும். இதோட மறுபக்கத்தையும் தெரிஞ்சுகிட்டு, ப்ரச்னையா சரியான கோணத்துல பார்க்க வாய்ப்பும் கிடைக்கும். எழுதுங்க.... உங்க நட்பு கிடைத்தற்கு நனறி.
//
@ அதுசரி :
வாங்க. தயவு செய்து நீங்க ஒரு பதிவாவே போடுங்க. நான் ஒரு IT கன்சல்டன்ட். எனக்கு தெரிஞ்ச விதத்துல, நான் புரிஞ்சுக்கிட்ட மாதிரி ப்ரச்னைய அணுகி எழுதியிருக்கேன். நான் எழுதுனதோ, என் அணுகுமுறையோ தவறா இருக்கலாம். உங்களை மாதிரி இதுலயே இருக்கறவங்க எழுதினா ரொம்ப சரியா இருக்கும். இதோட மறுபக்கத்தையும் தெரிஞ்சுகிட்டு, ப்ரச்னையா சரியான கோணத்துல பார்க்க வாய்ப்பும் கிடைக்கும். எழுதுங்க.... உங்க நட்பு கிடைத்தற்கு நனறி.
//
உங்க நட்பு கிடைத்ததற்கு நன்றி? Its my pleasure mate!
சீக்கிரமா எழுதறேன்.. இன்னிக்கு எல்லாரும் எங்களை குற்றவாளி கூண்டுல ஏத்திட்டாலும், எங்க சைடுன்னு ஒண்ணு இருக்கு..அதனால மிக விரைவில்!
அண்ணே! நீங்க இந்த பதிவப் போட்ட அன்றே படித்து விட்டேன். நான் போட நினைத்த பின்னூட்டம் சற்றே பெரியது என்பதால் நேரம் கிடைக்கும் போது வந்து போடுவோம் என்று போய் விட்டேன். எங்க ஆளக்காணோம்னு தேடுவீங்கங்குறதால இப்பதிக்கி அட்டெண்டென்ஸ் மட்டும் போட்டுக்குறேன் :)
@ அப்துல்லா :
அதானே பாத்தேன்... என்னடா அண்ணன் படிக்கலயா... இல்ல படிச்சுட்டு பரிசல் மாதிரி முதுகப் பாத்துக்கிட்டு இருக்காரான்னு ஒரே ஓசனை... பெருசோ சிறுசோ, பின்னூட்டமோ, பதில் பதிவோ சீக்கரம் போடுங்க..
இதுல முக்கியமான ஒரு கூட்டணிய சொல்லாம விட்டீங்க. FIRE - Financial Institutions, Insurance & Real Estate. நல்லா வைச்சாய்ங்க பேரு, ஃப்யருன்னு, இப்ப நல்லா பத்திக்கிட்டு எரியுதுல்ல.
நான் வீடு கட்டி விக்கிறேன், நீ வாங்குறவனுக்கு எல்லாம் கடன கொடு, கொடுத்த கடன எல்லாம் சிடிஸ் ல இன்சூர் பன்னிடலாம்னு ஒரு குரூப்பாத்தான் கிளம்புனாய்ங்க. சைக்கிளையோ சொந்தமா வாங்க முடியாதவனுக்கு எல்லாம் சான்ட்ரோ குடுத்தாக் கூடப் பரவாயில்லை, இவிங்க ரோல்ஸ்ராய்ஸ் குடுத்தா என்ன செய்ய முடியும்?
நம்ம ஊர்லயும் சில தனியார் வங்கிகள் கடன் தருவதற்கு தனியார் முகவர்களை நியமிச்சு தகுதியப் பார்க்காம வாரி வழங்குறாய்ங்க. இந்த தனியார் முகவர்கள் தங்களோட இலக்கை அடைவதற்காக போலியான சான்றிதழ்களையெல்லாம் வைச்சு கடன வாங்கிக் கொடுத்துருவாங்க. ஆனா நம்ம ஊரு வங்கியெல்லாம் சாம, பேத, தான, தண்ட முறைகளில் எல்லா வழியிலும் வசூல் செய்யிறதுனால தப்பிச்சுடுறாய்ங்க. நம்ம ஊர்லயும் அமெரிக்கா மாதிரி தனிமனித உரிமைகளை கடுமையாக்கி அரசாங்கம் செயல்பட்டா , நம்ம ஊர்ல மொத அடி ஐசிஐசிக்கு தான்.
மிக அருமையா எழுதியிருக்கீங்க மகேஷ் அண்ணா.
Post a Comment