Wednesday, October 29, 2008

வலைப்பூ ஆரம்பிக்க மாட்டேன் - சச்சின் பேட்டி


"வாங்க சச்சின்... எங்க இவ்வளவு தூரம்?.... ஆச்சரியமா இருக்குது... மொதல்ல வாழ்துக்களை பிடிங்க 12000 ரன் அடிச்சதுக்கு..."

"அது என்னங்க பெருசு.... இப்ப இது உங்களோட 25வது பதிவுன்னு தெரிஞ்சதும் ஒடோடி வந்தேன்.... இன் ஃபாக்ட் 24வது பதிவு படிச்சதுமே டிக்கட் புக் பண்ணிட்டேன்... நேர்ல வந்து சந்திக்கணும்னு..."

"அய்யோ... ரொம்ப புகழாதீங்க... கூச்சமா இருக்கு.."

"இன்னும் புகழவே ஆரம்பிக்கல...அதுக்குள்ள.... ஏங்க உங்க ப்ளாக்குன்னா எனக்கு உசுரு... தெனமும் நீங்க எழுதறீங்களோ இல்லயோ... நான் எல்லாப் பதிவுகளையும் தெனம் ஒரு வாட்டியாவது படிச்சுட்டுதான் தூங்குவேன்"

"அப்பிடியா.... அமாம்... 12000 ரன் அடிச்சு முடிச்ச பெறகு எப்பிடி இருந்துச்சு?"

"சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சு... இப்ப உங்களுக்கு இருக்கற மாதிரி...."

"அட... மறுபடி புகழறீங்க.... எப்பிடி.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சோ?"

"புகழறதுல என்னங்க கஷ்டம்?"

"அது இல்லீங்க... ரன் அடிக்கறதுக்கு..."

"பின்ன... முதுகு வலி பின்னிடுச்சு... நானாவது ஆஃப்டர் ஆல் 12000 ரன்... நீங்க 25 (கண்ணை முழிச்சு கைய அகல விரிச்சு ஆச்சரியமா பேசறாரு) பதிவு போட்டிங்களே... உங்களுக்கு கஷ்டமா இல்லயா?"

"நமக்கென்ன கஷ்டம்... படிக்கறவங்களுக்குத்தானே.... அத ஏன் கேக்கறீங்க.... ராப்பகலா யோசிச்சு(!!) மூளைய(!!) கசக்கி புழிஞ்சு ஒரு பதிவு போடறதுக்குள்ள நாக்கு தள்ளிடும்.... எனக்கு மொதல்ல பரிச்சயமான பரிசல்காரரை கேட்டுப்பாருங்க.. அப்பத் தெரியும்... அவரெல்லாம் 100க்கு மேல போட்டாச்சு தெரியுமா... "

"அய்யய்யோ... அவ்வளவு கஷ்டமா?"

"எழுதற நம்மள விடுங்க, பின்னூட்டம் போடறவங்களை யோசிச்சுப் பாருங்க.... விஜய் ஆனந்த் மாதிரி சிரிப்பான் போடுறவங்க கீ போர்டுல கோலன், ப்ரேக்கெட் இந்த ரெண்டு கீயும் தேஞ்சு போய் அடிக்கடி கீபோர்டே மாத்த வேண்டி வருது.... ர்ர்ரிப்பீட்டேய்னு கமெண்ட் போடறவங்க மேல பீவாசுவும் ராம்குமாரும் கேஸ் போடப் போறாங்களாம், அப்துல்லா அண்ணனுக்கு ஒவ்வொரு பதிவையும் கண்ணுல வெளக்கெண்ண விட்டுப் படிச்சுட்டு எதாவ்து நுண்ணரசியலக் கண்டுபுடிச்சு சிண்டு முடியறதுக்கு ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கு... பழமைபேசிக்கு மொதல்ல அட்டென்டன்ஸ் போட்டுட்டு அப்பறமா வந்து படிக்க வேண்டியிருக்கு, குடுகுடுப்பையாருக்கு நடுச்சாமம் வரைக்கு வெய்ட் பண்ணணும்... இப்பிடி பலருக்கு பல கஷ்டங்கள்..... பதிவு போடறதும், படிச்சு பின்னூட்டம் போடறதும் சும்மாவா..."

"அம்மாடி..... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..."

"பின்ன... சும்மா உங்களை மாதிரி பேடைக் கட்டுனமா, பேட்டை புடிச்சமா, பங்களாதேஷையும் ஸிம்பாப்வேவையும் போட்டு வெளாசினமாங்கற மாதிரியான சோலியா இது..."

"அதென்னமோ வாஸ்தவந்தான்...."

"உங்களுக்காவது பேப்பர் காரங்களும் டி.விக்காரங்களும் வெளம்பரம் பண்ணுவாங்க... ஆனா நாங்க... பதிவு போட்டா மட்டும் போதுமா... தமிழ்மணத்துல இணைச்சு, தமிலிஷ்ல இணைச்சு, ஓட்டு போடுங்கன்னு மெரட்டி.. (கெஞ்சி..) அதெல்லாம் பெரிய வேலைங்க....."

"பிஹைண்ட் தி ஸ்க்ரீன்ஸ் இவ்வளவு இருக்கா....."

"எப்பிடியோ அடிச்சு புடிச்சு நானும் 25 பதிவு போட்டுட்டேன்... நேர்ல வந்து வாழ்த்தினதுக்கு நன்றி..."

"ரொம்ப நன்றிங்க... நான் கூட ப்ளாக் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்... ஆனா இப்பத் தோணுது இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள 13000 அடிக்கறது ஈசியா இருக்கும் போல இருக்கே..."

"ஆமாம்... நீங்க அதுல கான்சன்ட்ரேட் பண்ணுங்க... வாழ்த்துக்கள்"

அப்பாடா... ஒரு ஆளை ப்ளாக் ஆரம்பிக்க விடாம தொரத்தரதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆயிருது... இப்பவே கண்ணக் கட்டுதே...

மக்களே... என்னயும் மதிச்சு, நம்ம பதிவுகளையும் படிச்சு, அதுக்கு பின்னூட்டமும் போட்டு நாட்டுக்கு பெரும் தொண்டாற்றும் உங்களுக்கெல்லாம் எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல. அடிக்கடி வாங்க... பாராட்டோ, திட்டோ பதிஞ்சுட்டுப் போங்க.

நல்லாயிருங்க மக்களே... நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாயிருங்க....

நன்றி....நன்றி.....நன்றி....நன்றி....நன்றி.....நன்றி....நன்றி.....நன்றி...

14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ராம்ஜி said...

நல்ல நடை துக்ளக்...

என்ன ஒவரா நீங்களே புகழ்ந்துகிட்டது போதுமா??

ராம்ஜி

விஜய் ஆனந்த் said...

:-)))...

25-வது பதிவுக்கும், விரைவில் ரிலீசாகப்போகின்ற 100, 500, 1000-வது பதிவுகளுக்கும் வாழ்த்தோ வாழ்த்துக்கள்!!!!

விஜய் ஆனந்த் said...

:-(((...

இது கேப்புல பூந்து என்ன க்கெடா வெ்ட்னதுக்கு....

வெண்பூ said...

கலக்கலான வெள்ளிவிழா பதிவு...

வாழ்த்துக்கள் 25ம் பதிவுக்கு..

சச்சினை உள்ளவிட்டு காமெடி பட்டைய கிளப்பிட்டீங்க.. அதுலயும் கஷ்டப்பட்டு 100 லைன்ல ஒரு பதிவு போட்டா, நோகாம ஒரு ஸ்மைலி மட்டும் போடும் விஜய் ஆனந்தை சைடில ஒரு குத்து விட்டதுக்கு ஒரு எக்ஸ்ட்ரா ஜே....

புதுகை.அப்துல்லா said...

ஏங்க உங்க ப்ளாக்குன்னா எனக்கு உசுரு... தெனமும் நீங்க எழுதறீங்களோ இல்லயோ... நான் எல்லாப் பதிவுகளையும் தெனம் ஒரு வாட்டியாவது படிச்சுட்டுதான் தூங்குவேன்"
//

அடடே சச்சின் அண்னனும் நம்பள மாதிரிதானா?? :)

ச்சின்னப் பையன் said...

// புதுகை.அப்துல்லா said...
ஏங்க உங்க ப்ளாக்குன்னா எனக்கு உசுரு... தெனமும் நீங்க எழுதறீங்களோ இல்லயோ... நான் எல்லாப் பதிவுகளையும் தெனம் ஒரு வாட்டியாவது படிச்சுட்டுதான் தூங்குவேன்"
//

அடடே சச்சின் அண்னனும் நம்பள மாதிரிதானா?? :)
//

அடேடே, சச்சினும், அப்துல்லா அண்ணனும் என்னை மாதிரிதானா????!!!!

வாழ்த்துக்கள் 25ம் பதிவுக்கு..

Anonymous said...

மகேஷ் அண்ணே,

வாழ்த்துக்கள், 25- வது பதிவுக்கும், இனி வரப் போற பதிவுகளுக்கும்.

சச்சின் நெசமாலுமே இப்படி சொன்னாரு போலன்னு நெனைச்சு படிக்க ஆரம்பிச்சேன்:-) நல்லவேளை முத ரெண்டு வரிக்கு அப்பறம் உஷாராயிட்டேன். நல்லா சிரிக்க வச்சிட்டிங்க. இந்த மாதிரி கஷ்ட்டப்பட வேணாமுன்னுதான், நெறைய பேர் படிக்கிறதோட நிறுத்திர்றாங்க போல. :-)

//உங்களுக்காவது பேப்பர் காரங்களும் டி.விக்காரங்களும் வெளம்பரம் பண்ணுவாங்க... //

கோடி கோடியா பணமும் குடுப்பாங்கன்னு சொல்லாம விட்டத வன்மையா கண்டிக்கிறேன்:-)

// பதிவுகளையும் படிச்சு, அதுக்கு பின்னூட்டமும் போட்டு நாட்டுக்கு பெரும் தொண்டாற்றும் உங்களுக்கெல்லாம் எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல.//

படிக்கிறவங்களையும், அவிங்க கஷ்ட்டத்தையும் மதிச்சு நன்றி சொன்ன உங்களுக்கும் நன்றி.

உங்க பதிவுகள் எல்லாமே படிச்சிருந்தாலும், உடனே நினைவுக்கு வரது, ' நானே நானா, வெள்ளிங்கிரி, அவனோட ராவுகள், அமெரிக்க(உலக) சரிவு' இதெல்லாம்.

சித்ரா மனோ

பழமைபேசி said...

வணக்கம்! வாழ்த்துக்கள்!! வடம் புடிச்சா மாதிரி, போய்கிட்டே இருங்க....

Mahesh said...

@ ராம்ஜி : மொத வருகை.... நன்றி

@ விஜய் ஆனந்த் : நன்றி.... நான் சுத்த சைவம்ங்க... கெடா எல்லாம் வெட்டத் தெரியாது... :))))))))))))

@ வெண்பூ : நன்றிங்க... ஆனா விஜய் ஆனந்த் நெம்ப நல்லவரு...

@ அப்துல்லா : நன்றி...

@ ச்சின்னப்பையன் : நன்றி பெரியண்ணே...

@ மனோ சித்ரா : நன்றி... சீகரம் எழுத ஆரம்பிங்க

@ பழமைபேசி : நன்றி ..நீங்கள்லாம் 150 அடிச்சுட்டு அமைதியா போய்ட்டே இருக்கீங்க... நெற கொடம் தளும்பாதும்பாங்க...

chitravini said...

சச்சினை விடுங்க....ஆனந்த் இப்பத்தான் ஃபோன் பண்ணி சொன்னாரு, "அய்யோ, 25ம் பதிவை படிக்கறதுக்கு லேட் ஆயிடுச்சே..! மகேஷ் தப்பா நினைக்காம இருக்கணும்"...அப்படின்னு பொலம்பறார். நாந்தான்...மகேஷ் ரொம்ப நல்லவரு, வல்லவரு...நீங்க கவலைப்படாதீங்கன்னு சொல்லி வச்சிருக்கேன். (அப்பாடி...இந்தப் பதிவுல நம்ம தலை தப்பிச்சுது...அண்ணணா இருக்கறதுலயும் ஒரு லாபந்தான்). வாழ்த்துக்கள்...இணையம் என்னும் பரப்பில் உமது பதிவுகள்...கல்வெட்டுக்களாய் நிற்க்கட்டும்!

Anonymous said...

குவார்ட்டர் அடிச்சதுக்கு (25 பதிவுகளைத் தான் சொல்றேன்) வாழ்த்துகள். நீங்க இட்லிவடைக்கு சொந்தமோ/தெரிஞ்சவரோ? அவர்(ங்க)தான் 5 வருடம் முடிச்சதுக்கு நெறய பேரை கூப்பிட்டு கும்மியடிக்க வச்சாரு(ங்க). அதான் மைல்டா ஒரு டவுட்டு.

மோகன்.

Mahesh said...

வாங்க மோகன்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துக்கள் மகேஷ்...
அப்படியே 100, 200, 500 அடிச்சி ஆடுங்க...

Mahesh said...

வாங்க அணிமா... நன்றி