போன மாசம் நண்பர் அப்துல்லா கூட பேசிக்கிட்டிருக்கும்போது, அவர் மகளை ஒரு குறிப்பிட்ட ஸ்கூல்ல சேத்தறதைப் பட்தி பேச்சு வந்தது. அப்ப அவர் சொன்னாரு "இந்த ஸ்கூல் விஸ்டம் பேஸ்ட், மத்த ஸ்கூல் எல்லாம் நாலெட்ஜ் பேஸ்ட்". அப்ப இருந்து ஒரு யோசனை, அறிவுக்கும், ஞானத்துக்கும் எவ்வளவு இடைவெளி இருக்குன்னு.
அறிவே சக்தி (Knowledge is Power) அப்பிடின்னு படிக்கறோம், பேசறோம், கேக்கறோம். அது சரியா? யோசிச்சுப் பாத்தா இல்லயோன்னு தோணுது. அறிவுங்கறது செய்திகளை (data / information) அடிப்படையாக் கொண்டது. அப்பிடி அறிஞ்ச செய்திய "உபயோக"(apply)ப்படுத்தும்போதுதான் அது ஞானமாகுது. வெறும் விஷாயத்தயோ, செய்தியயோ வெச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? எவ்வளவு வேணும்னாலும், சமைச்சு வெக்கலாம், சாப்பிடலாம். ஆனா எவ்வளவு செரிக்குதுங்கறதுதானே முக்கியம்? சமைச்சு வெச்சு யாருக்கும் குடுக்காத உணவு வீண். செரிக்காத உணவு வெறும் கழிவுதானே?
அறிவுங்கறது 'நிலை ஆற்றல்"னா (potential energy) ஞானம்கறது "இயக்க ஆற்றல்"னு (kinetic energy) சொல்லலாமா? அல்லது அறிவு = ஆற்றல் (energy), ஞானம் = ஒருங்கிணையாற்றல் (synergy) அப்பிடின்னு சொல்லலாமா? ரெண்டாவதுதான் சரின்னு படுது. ஏன்னா, ஒருங்கிணைத்துப் பார்க்கும்போதுதான், நம்ம கிட்ட இருக்கற அறிவை வெச்சு, விரவிக் கிடக்கிற (discrete) செய்திகள்ல இருந்து ஒரு அர்த்தத்தை உண்டாக்கி அதன் மூலமா சில முடிவுகள் (conclusions / judgements) எடுக்க முடியும். படிப்புங்கறது அறிவை ஊட்டறது. வெறும் படிப்ப வெச்சு ஸ்திரமான, சரியான முடிவுகள் எடுக்க முடியுமாங்கறது சந்தேகந்தான். இல்லேன்னா "படிக்காத மேதைகள்"ங்கற சொற்றொடரே புழக்கத்துல இருக்க முடியாது.
ஸ்கூல்ல நல்ல படிக்கிறவன அறிவாளிங்கறாங்க. எப்பவோ எங்கியோ படிச்சது :
சீக்கிரமா கத்துக்கிறது அறிவாற்றல் (intelligence)
கத்துக்கிட்டதை சரியா உபயோகப்படுத்தற கலைதான் ஆற்றல் (ability)
மேல சொன்ன ஆற்றலை வளத்துகறதும், அதுக்கான ஊக்கமும் நம்மள செயல்தகுதி (competence) உடையவரா ஆக்குது
மேல சொன்ன ஊக்கம்ங்கறது ஒரு மனநிலை (atitude)
அந்த மனநிலை இருந்தா ஞானம் தன்னால வரும்
சொல்லவரது என்னன்னா, வாழ்க்கைல வெற்றிக்கு படிப்பு மட்டும் பத்தறதில்ல. கத்துக்கற ஊக்கமும், கத்துக்கிட்டதை உபயோகிக்கிற ஆற்றலும், அதுனால கிடைக்கிற செயல்தகுதியும் ரொம்ப முக்கியமானதா இருக்கு. ஆக, ஞானத்துக்கு அறிவு அடிப்படை. அந்த அறிவு படிப்பு அல்லது அனுபவம் மூலம வரலாம். இதுல படிப்பறிவை விட அனுபவ அறிவுக்கு மதிப்பு கூட. (பட்டு தெரிஞ்சுக்கறதாலதான் அத 'பட்டறிவு'ங்கறாங்களோ?)
சாதாரணமா இந்த மாதிரியெல்லாம் குண்டக்க மண்டக்க எழுதறது படிக்கறவங்கள 3 விதமா பாதிக்கலாம்பாங்க. (convinced, confused or corrupt) இதுல நீங்க ரெண்டாவதா மூணாவதா?
எதுவா இருந்தாலும் கொலசாமி கருப்பராயன் உங்களை காப்பாத்தட்டும்.
நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.......
25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
//சொல்லவரது என்னன்னா, வாழ்க்கைல வெற்றிக்கு படிப்பு மட்டும் பத்தறதில்ல. கத்துக்கற ஊக்கமும், கத்துக்கிட்டதை உபயோகிக்கிற ஆற்றலும், அதுனால கிடைக்கிற செயல்தகுதியும் ரொம்ப முக்கியமானதா இருக்கு//
நல்ல கருத்து.. நல்ல பதிவு..
நர்சிம்
//சாதாரணமா இந்த மாதிரியெல்லாம் குண்டக்க மண்டக்க எழுதறது படிக்கறவங்கள 3 விதமா பாதிக்கலாம்பாங்க. (convinced, confused or corrupt) இதுல நீங்க ரெண்டாவதா மூணாவதா?//
Actually I am category 1. I am simply spellbound by this post.
Keep feeding fuel to my brain ;-)
Cheers,
Ram.
துக்ளக் மகேஸ்( தாமதமாக இணைத்ததை பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினக்கிறேன்.. உங்களின் தற்போதைய பதிவை படித்தவுடன் உங்களின் நினைவுகளின் நல்ல மலர்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் பெயர் மகேஸ்..)
ஒன்னுமில்ல.. சினிமா மலரும் நினைவுகள் பதிவின் தொடர்ச்சியில் உங்கள் பெயரையும் இணைத்திருக்கிறேன்.. மலரும் நினைவு பதிவை எதிர்பார்த்து
நர்சிம்
:-)))...
I'm convinced!!!
நல்லதொரு பதிவு மகேஷ் சார்!!!
@ நர்சிம் : வருகைஇகு நன்றி.... அழைப்புக்கு நன்றி.... விரைவில் பதிய முயற்சிக்கிறேன்
@ ராம் : என்னய்யா... ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்?
@ விஜய் ஆனந்த் : அட.... நெஜமா புரிஞ்சுருச்சா? அப்ப தெளிவா எழுத ஆரம்பிச்சுட்டேன்னு சொல்லுங்க... நன்றி..
@ பரிசல் : நன்றி க்ருஷ்ணா..
சரியான தகவலை, எங்க, எப்படி, யாரால, எப்ப செஞ்சா, அது தகுந்த பலனைத் தரும்னு தெரிஞ்சி செயல்படுற சூட்சுமந்தான் ஞானம். தகவல் தெரிஞ்சு இருக்குறவன் அறிவாளி. சூட்சுமம் மட்டுமே தெரிஞ்சு இருக்குறவன் திறமைசாலி. ரெண்டுங் கொண்டவன் ஞானி. சரியான படத்தை போட்டு இருக்கீங்க.
ஞானிக்கு திறமையும் அறிவும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்து வெளிப்படனும்.
முதல்ல ஞானி! இரண்டாவது திறமைசாலி!! மூனாவதுதான் அறிவாளி!!!
விசயந் தெரியாம, வெற்றி பெரும் நபர்கள் திறமைசாலிகள். பொது அறிவு இருந்தாப் போதும் அவிங்களுக்கு!
அதான் வாத்தியார் வெச்சி வித்தை பழகு! சூட்சுமம் தெரிஞ்சுக்கனுமே
நல்ல பதிவு!
@ பழமைபேசி : வாங்க... என்னடா பிலடெல்பியா பயணம்னாரே.. வருவாரோ மாட்டாரோன்னு நெனச்சேன்.... "சூட்சுமம்"ங்கற வார்த்தை ஞாபகத்துக்கு வராம திண்டாடுனேன்.... நன்றி !!
பெறுவது அறிவு...அறிந்து உணர்வது ஞானம். ஞானம் பிறந்தால் தெளிவு பிறக்கும். அதைத் தொடர்வது நம்பிக்கை....இறை நம்பிக்கை. நமது வாழ்க்கையை மூன்று பகுதியாகப் பிரித்தால், அதில் முதல் பகுதி அறிவைப் பெறுவதிலும், இரண்டாவது அந்த அறிவினால் ஞானத்தை பெறுவதிலும், மூன்றாவது பகுதியில் அந்த ஞானத்தை விநியோகிப்பதிலும் கழிய வேண்டும். நாமெல்லாம் அதை செய்கிறோமா? அல்லது செய்வதற்கு முயற்ச்சிக்கிறோமா? அதுக்கெல்லாம் ஞானம் வேணும், ஞானம் வேணும், ஞானம் வேணுண்டோய்.!!!
அண்ணா.... உங்க விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு....
ஆமா, ஞானம் எங்க கிடைக்கும்? சொல்லுங்க மகேசு அய்யா...
(Knowledge is Power) என்பதை அறிவே சக்தி என்று மொழி பெயர்ப்பது சரியா
wisdom என்பது இரு சக்கர வாகனம்.
knowledge என்பது கல்நெய்.
அப்படித்தானே
வெறும் கல்நெயை வைத்து அடுத்த ஊர் போக முடியாது
கல்நெய் இல்லாத இரு சக்கர வாகனத்தால் பலம் இல்லை
நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்குறத வச்செல்லாம் பதிவு போடுறாங்க. நமக்குதான் என்ன எழுதுரதுன்னு ஓன்னும் புரியமாட்டேங்குது...கொடுமடா சாமி
:)))))))))))))))))))))
அண்ணன் ரவியின் (chitravini) கருத்துடன் மாறுபடுகிறேன். தெளிவு பிறந்தா இறை நம்பிக்கை வரும்னு சொல்ல முடியாது. நாத்திகனா இருந்தா? அதனால பொதுவா "பகுத்தறிவு" (rationalised thinking) வளரும்னு வேணும்னா சொல்லலாம். என்ன சொல்றீங்க?
@ பழமைபேசி : ஞானந்தானே? கொஞ்சம் பொறுங்க... காலைல கடை திறந்ததும் வாங்கித் தாரேன். அது வரைக்கும் நல்ல புள்ளயா படிங்க பாக்கலாம்.
@ புருனோ : நீங்க சொல்றது ரொம்ப சரி... நன்றி
@ அப்துல்லா : நீங் ஒரு கிரியாஊக்கி(catalyst)ண்ணே.... சும்மா தூண்டி உடுவீங்க...
ஒண்ணுமே புரியல மகேஷ்.. அறிவுன்றீங்க, ஞானம்கறீங்க.. எல்லாமே எனக்கு சம்பந்தபடாத மேட்டரா இருக்கு :))))
வாங வெண்பூ... இதெல்லாம் ரொம்ப ஓவரு... எங்களுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சு எழுதறோம்னு நம்பிட்டீங்களா? ரொம்ப நல்லவரா இருக்கீங்களே !!!
//Mahesh said...
அண்ணன் ரவியின் (chitravini) கருத்துடன் மாறுபடுகிறேன். தெளிவு பிறந்தா இறை நம்பிக்கை வரும்னு சொல்ல முடியாது. நாத்திகனா இருந்தா? அதனால பொதுவா "பகுத்தறிவு" (rationalised thinking) வளரும்னு வேணும்னா சொல்லலாம். என்ன சொல்றீங்க?
//
ஆத்திகத்துக்கு அப்படின்னா, நாத்திகத்துக்கு இப்படி...ஆனா, சொல்ல வர்றது எல்லாம் ஒன்னுதான்.... பகுத்தறிவுங்ற சொல்லுக்கே தமிழ்நாட்டுல பொருள் மாறிப் போச்சு... காரணம், இறைவன் இல்லைன்னு சொல்லுறதுதான் பகுத்தறிவுன்னு சனங்க நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க... சனங்க பகுத்தறிவ, பகுத்தறிவா நினைக்குற அப்ப, நாங்களும் மாத்தி சொல்லுவம்ல?
படிப்பறிவும், பட்டறிவும் சேர்ந்து பகுத்தறிவை வளர்க்கும், வளர்க்கணும். இங்க "பகுத்தறிவு" ங்கறது ஆத்திகன் நாத்திகன் எல்லாருக்கும் பொது.
பகுத்தறிவுங்கறது நாத்திகனுக்கு மட்டும் சொந்தமில்ல... ஞானம்கறது ஆத்திகனுக்கு மட்டும் சொந்தமில்ல.
//பகுத்தறிவுங்கறது நாத்திகனுக்கு மட்டும் சொந்தமில்ல...
//
இந்த இடத்துல நம்ம மனசைத் தொடுறாரு நம்ப மகேசு.... அருமை!
நல்லா இருக்கு, நண்பர் ஒருவன் சொல்வான் knowledge is corrupted.
அது உண்மையோ என்று பல சமயம் தோன்றுகிறது.
நல்லா இருக்கு, நண்பர் ஒருவன் சொல்வான் knowledge is corrupted.
அது உண்மையோ என்று பல சமயம் தோன்றுகிறது.
@ வருங்கால முதல்வர் :
வாங்க வருகைக்கு நன்றி... (எத்தனை வருங்கால முதல்வர்கடா சாமி... இனிமே 5 வருசமெல்லாம் கிடையாது... 5 மணி நேரந்தான்...)
:))))))))))
@ குடுகுடுப்பை :
என்னாதிது? ரிபீட்டு போட்டுக்கிட்டு .... ம்ம்ம்ம் :))))))
ரெண்டுமே நாந்தான். அது ஒரு பதிவுக்காக உண்டு பண்ண பிளாக். இதை ஒரு குழுமமாக நடத்தலாம் என் ஆவல் உள்ளது.பார்ப்போம்
Good Post
Post a Comment