Thursday, October 23, 2008

மொளச்சு வரும்போது...4

பழைய பதிவுகள் ...1 ...2 ...3



ஊர்ல இருக்கற வானரங்களுக்கும் அக்ரஹாரத்துக்கும் இருக்கற பந்தம் அலாதியானது. மார்கழி மாசம் ஆச்சுன்னா எல்லாத்துக்கும் பக்தி எங்கேருந்தோ பீரிக்கிட்டு (நன்றி: வெ.ஆ.மூர்த்தி) வந்துரும். காலங்காத்தால 5 1/2 மணிக்கெல்லாம் ட்ராயர் மேலயே ஒரு வெள்ளத் துண்ட வேட்டி மாதிரி கட்டிக்கிட்டு (அரணாக்கயருக்குள்ள சொருகி வெச்சுக்கணும்... இல்லன்னா நம்ம க்ளாஸ்மேட்டு பொண்ணு வீட்டு வாசல்ல நின்னு அரிசி வாங்கற நேரம் பாத்து அவுந்து மானத்த வாங்கும்) அக்ரஹாரத்து க்ருஷ்ணன் கோயில் மாமா வீட்டுல இருந்து கிளம்பி அப்பிடி மேக்க அக்ரஹாரம் பூரா ஒரு ஊர்வலம். பத்து பேர் பாடிக்கிட்டே போனா பத்து கொரலும் தனித் தனியாக் கேக்கும்.. அவ்வளவு 'ஸின்க்'கா பாடுவாங்க. வீடு வீடா நின்னு கை கால் கழுவி, அரிசி வாங்கி பையில போட்டுக்கிட்டே போய், தளி ரோட்டுல லெஃப்ட். குட்டைப்பிள்ளயார் கோவில் வாசல்ல "கணேச சரணம் ; சரணம் கணேசா"ன்னு ஓங்கி ஒரு கொரல் பாடிட்டு, மறுக்கா லெஃப்ட். கச்சேரி வீதில சப்ஜெயில், கோர்ட்டு, ஜேகப் டாக்டர் வீடு தாண்டி லெஃப்ட். கொஞ்ச தூரம் போனா மறுபடி அக்ரஹாரம். ரைட்ல திரும்பினா அனுமார் கோயில்.

நாமளும் சும்மாவோ இல்ல ஒரு ஜால்ராவத் தட்டிக்கிட்டேவோ போனா, கடைசீல ஒரு 7 மணி வாக்குல அனுமார் கோயிலுக்கு போய் சேரும்போது வெண்பொங்கலோ, சக்கரப் பொங்கலோ, சுண்டலோ சூடா ரெடியா இருக்கும். நமக்கா பொறுமையே இருக்காது. கவுண்டமணி "கெடா எப்ப வெட்டுவாங்க?"ன்னு பொலம்பற மாதிரி, "அனுமாருக்குதான் வெண்ண பூசியாச்சுல்ல?" "அதான் பூஜை முடிஞ்சுதில்ல?"ன்னு பொங்கல் பாத்திரம் இருக்கற டேபிளையே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம். மொதல்லயே பாதாம் எல, வாழை எலன்னு நல்லா பெருசு பெருசா எடுத்து வெச்சுருப்போம். பிரசாதம் குடுக்கறவரு பாத்தரத்து கிட்ட போனவுடனேயெ வானரமெல்லாம் ரெடியாயிரும். ஆனாலும் "இதுக்கு ஒண்ணும் நாங்க ஆலாப் பறக்கல"ங்கற மாதிரி அப்பிடி முஞ்சிய அப்பாவி மாதிரி வெச்சுக்குவோம். கொறவஞ் சாடை கொறத்திக்குத் தெரியாதா? "வாங்கடா...வந்து தொலைங்க"ன்னு அப்பிடியே ஆசை(!)யாக் கூப்புடுவாரு. "நீங்க கூப்டீங்க...அதுனால வரோம்"ங்கற தோரணைல போய் மொதலா நின்னுடுவோம். கையில இருக்கற எல பூராம் பரப்பி போடச் சொல்லி (இதுல என்ன வெக்கம்?!) வாங்கிகிட்டு பின் பக்கமாப் போயி ஒக்காந்து சாப்டுட்டு திரும்பி வந்து, பாத்தரம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சா மறுக்கா நின்னு மறுக்கா திட்டு வாங்கிக்கிட்டே இன்னொடு ரௌண்டு சாப்டுட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு வீட்டுக்குப் போனா, டிஃபன் சாப்ட்டு ஸ்கூலுக்கு கெளம்ப சரியா இருக்கும்.

அக்ரஹாரம் அனுமார் கோவில்ல அடிக்கடி எதாவது காலட்சேபம், கச்சேரின்னு நடந்துக்கிட்டே இருக்கும். கூட்டம்னு ஒண்ணும் பெருசா இருக்காது. 25, 30 பேர் இருந்தாலே அதிகம். "ரெண்டு மாசமா பொண்ணு பாட்டு கத்துண்டு இருக்கா... சரளி வரிசை முடிஞ்சது... கொரல் எழஞ்சு வருது"ன்னு யாராவது அவுங்க வீட்டுப் பொண்ணை மேடையேத்தி விட்ருவாங்க. அது பாவம் கடேசி லைன்ல ஒக்காந்து கண்ணை உருட்டி உருட்டி மெரட்ற அப்பாவப் பாத்துக்கிட்டே எதாவது பாடும். ஸ்ருதி, ராகம், தாளம் இதெல்லாம் பாக்காம இருந்தா, அது பாடற பாட்டு (!!) நல்லா இருக்கும். இல்லேன்னா கேக்கறவங்க படற பாடு இருக்கே....

சரி, விஷயத்துக்கு வரேன். எங்க சித்தப்பாவுக்கு உடுக்கம்பாளையத்துல இருந்து வல்லக்குண்டாபுரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருச்சு. சித்தப்பா, சித்தி ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல்ல வாத்தியாருக. சித்தப்பா பசங்களும் ஹை ஸ்கூல்ல படிக்கிறதால உடுமலைக்கே வீடு மாத்தி வந்துட்டாங்க. அக்ரஹாரத்துலதான் வீடு. அவருக்கு பாட்டுல நல்ல இன்ட்ரஸ்ட். அதுவும் சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுன்னா அப்பிடியே சொல்லு பிசகாம அதே கொரல்ல நல்லா கணீர்னு பாடுவாரு. கண்ணை மூடிக்கிட்டு கேட்டா, சீர்காழி பாடற மாதிரியே இருக்கும். அனுமார் கோவில் கச்சேரிக வேற அவர உசுப்பி விட்ருச்சு. விட்டேனா பார்!னு 'கமிட்டி' ஆளுகளோட சோடி சேந்துகிட்டாரு. அப்பப்ப இவரையும் மேடையேத்தி உட்ருவாங்க. இவுரும் அருமையா சீர்காழி பாட்டா பாடினதுல கூட்டமும் கொஞ்சம் சேர ஆரம்பிச்சுது. 'சீர்காழி எதிரொலி'ன்னு பட்டம் வேற குடுத்தாங்க.

நானும் பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலை தேடி அலைஞ்சுக்கிட்டிருக்குபோது, நெதம் சாயங்காலமானா அவுங்க வீட்டுக்கு போயிர்றது. அண்ணனும் ஒரு மில்லுல ஆடிட்டரா இருந்தாரு. அவுருக்கு செஸ் வெளயாட்டுன்னா உசுரு. 6 மணி போல வந்துட்டார்னா நானும் அவுரும் வாசத் திண்னைல போர்ட வெச்சுக்கிட்டு நேரம் போறது தெரியாம வெளயாடிக்கிட்டுருப்போம். சித்தப்பா உள்ள ஆர்மோனியத்த வெச்சுக்கிட்டு ப்ரேக்டீஸ் பண்ணிகிட்டுருப்பாரு.

ஒருநா அண்ணன் வர லேட்டாயிரும்னு சொல்லிட்டாரு. சித்தப்பா மட்டும் தனியா வழக்கம் போல ப்ரேக்டீஸ்ல இருந்தாரு.

"வாடா.... அம்பி இன்னிக்கு வர லேட்டாகும்... ஒக்காரு... தனன்னன்னன்ன்ன..... காலத்தை உருவாக்கும் காரணனே... "

"எப்ப வருவான்?"

"9 மணி ஆகும்னான். சும்மாத்தானெ இருக்க... அப்பிடி பாட்டு கத்துக்கோயேன்.. வா வா நானே சங்கீதம் சொல்லித் தரேன்..."

நமக்கும் இதுக்குள்ள ஒரளவுக்கு கர்னாடக சங்கீதம் மேல ஒரு 'இது' இருந்துது. சரி...கேப்பமேன்னு ஒக்காந்துட்டேன்.

"உனக்கு என்ன கட்டை வருதுன்னு பாப்பமா... எங்க...பாடு..சாஆஆஆ"

"சாஆஆஆ"

"பாஆஆஆ"

"பாஆஆஆ"

"சாஆஆஆ"

"சாஆஆஆ"

"ம்ம்ம்ம்...1 1/2 க‌ட்டை... கொர‌ல் ரொம்ப‌ ஒட‌ஞ்சு போச்சு... பாட‌ப் பாட‌ ச‌ரியாயிடும்"

"சிம்பிளா சொல்லித் த‌ரேன்... இப்ப‌ மொத‌ல்ல‌ ம‌ல‌ஹ‌ரி...பாரு...வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு... அப்பிடியே பின்னால‌ வ‌ர‌ணும்... புரிஞ்சுதா?"

"................"

"என்னடா முழிக்கற.... வெள்ளை, கருப்பு, கருப்பு, வெள்ளை வெள்ளை, கருப்பு, கருப்பு... சங்கராபரணம்"

இவ்வளவு ஈஸியா இருக்கு...இதுக்கா சங்கர சாஸ்திரி மூணு மணி நேரப் படத்துல அப்பிடி உசுர விட்டாரு?ன்னு நமக்கு யோசனை.

"இப்ப கருப்பு, கருப்பு....................இது கல்யாணி"

"..........." நல்லவேளயா அண்ணன் அதுக்குள்ள வந்துட்டாரு.

"மாட்னியா? நன்ன வேணும்... அப்பா... ரிட்யர் ஆனப்பறம் கழுத்துல மாட்டிக்க‌றா மாதிரி சின்ன ஆர்மோனியமா வாங்கித் தரேன்.. பீச் தாம்பரம் ரூட்டுக்கு சீசன் பாஸ் வாங்கித் தரேன்... மேல கீழ போய் சீர்காழியே வந்து போதும்கற வரைக்கும் பாடிண்டே இரு"

"போடா..ஞானசூன்யம்.. ஒனக்கென்ன தெரியும்... அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு.. கத்துத்தர நான் இருக்கேன்... பாடிட்டுப் போறான்.. போய் வேலயப் பாரு"

"ஆமாண்டா சீர்காழி எதிரொலிக்கு எசப்பாட்டுன்னு பட்டம் வாங்கிக்கோ... ஒழுங்கா வந்து செஸ் வெளயாடு... பாடறானாம்"

"இல்ல... நெஜமாவே இன்ட்ரஸ்டா இருக்கு... தெனம் ஒரு 1/2 மணி நேரம் கத்துக்கறேனே..."

"பாரு... பத்தே நிமிஷத்துல அவன கட்டிப் போட்டுட்டேன் பாரு.. என் சங்கீதத்தோட மகிமை... அடுத்த ஹனுமத் ஜெயந்திக்கு இவன் பாடறான்.. நானாச்சு... நீ மட்டும் தெனம் வந்துடு"

"ஆகட்டும் சித்தப்பா... இன்னிக்கு இது போதும்.. நாளைலேந்து..."

"பாரு அம்பி... அவனை நீதான் கெடுக்கற... சிம்பிள்.. கருப்பு வெள்ள இத வெச்சே சொல்லித் தந்துடுவேன்"

இப்பிடியே கொஞ்ச நாள் ப்ளாக் & ஒயிட்ல பாடம் (!!) நடந்துது. நமக்கோ கலர் கலரா கனவு. ஹனுமத் ஜெயந்தில பாடறோம், கோவிலுக்கு உள்ள, வெளிய வீடுகள்ல, தெருவுலன்னு 1000 பேர் நாம பாடறத கேக்கறாங்க. நல்லா பாடிட்டுருக்கறப்ப யார் அபஸ்வரமா....டர்ர்ர்ர்ர்ர்.....

"நாசமாப் போச்சு.. ஏண்டா... இப்பிடியா போட்டு அமுக்குவ, துருத்தியே கிழிஞ்சு போச்சு பாரு.. நல்ல ஆர்மோனியம்... இப்ப இத சரி பண்ண பழனிக்கு எடுத்துண்டு போயாகணும்..."

அத்தோட நம்ம சங்கீதப் பாடமும் டர்ர்ர்ர்ர்ர்ர்... சரி...இனிமே சமுதாயத்தை சோதிக்க வேண்டாம்... கேக்கறதோட நிறுத்திக்குவோம்னு...

சங்கீதத்துக்கு "மங்களம்...சுப மங்களம்"
(மொளைப்போம்...)

35 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

இப்ப போய்ட்டு, மறுபடியும் வர்றேன்.

குடுகுடுப்பை said...

எனக்குள் இசை ஆர்வம் கானமல் போய்விட்டது. பதிவு கொஞ்சம் நீளம், இரண்டு பகுதியா போட்டிருக்கலாம்.

ஜோசப் பால்ராஜ் said...

//கையில இருக்கற எல பூராம் பரப்பி போடச் சொல்லி (இதுல என்ன வெக்கம்?!) வாங்கிகிட்டு பின் பக்கமாப் போயி ஒக்காந்து சாப்டுட்டு திரும்பி வந்து, பாத்தரம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சா மறுக்கா நின்னு மறுக்கா திட்டு வாங்கிக்கிட்டே இன்னொடு ரௌண்டு சாப்டுட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு வீட்டுக்குப் போனா, டிஃபன் சாப்ட்டு ஸ்கூலுக்கு கெளம்ப சரியா இருக்கும்.//

இம்புட்டையும் சாப்பிட்டுட்டு அப்றம் வீட்ல வேற டிபனா? நன்னா இருக்கே, அப்றம் பள்ளிக்கூடத்துல எப்படி தூக்கம் தானே?

நானும் இசை மேல உள்ள ஆர்வத்துல ஒரு கீ போர்ட் வாங்குனேன். இன்னைக்கு கூட எடுத்து நல்லா துடைச்சு உள்ள வைச்சுட்டேன்.

Mahesh said...

@ பழமைபேசி :

சீக்கிரம் திரும்பி வாங்க...

@ வருங்கால முதல்வர் :

ரொம்ப நீளம்னு சொல்லமுடியாது... ஆனா நீளந்தான் :))))

@ ஜோசஃப் :

வாங்க...ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு அப்பறம் வரீங்க... புது வேலைல செட்டில் ஆயிட்டு நிதானமா வரீங்க... வாழ்த்துக்கள் !!!

கோயில் பொங்கலெல்லாம் சும்மா சிறு பசிக்கு.... வீட்டு டிஃபன் தான் மெயின் கோர்ஸ்.. ஹி ஹி

விஜய் ஆனந்த் said...

:-)))...

வெண்பூ said...

அருமை மஹேஷ்.. சின்ன வயசுல நாம செஞ்ச பல விசயங்கள இப்ப நெனச்சி பாத்தா அடக்க முடியாத சிரிப்பு வர்றது இயற்கை.. நல்லா சிரிக்க வெச்சிட்டீங்க..

Anonymous said...

//இவ்வளவு ஈஸியா இருக்கு...இதுக்கா சங்கர சாஸ்திரி மூணு மணி நேரப் படத்துல அப்பிடி உசுர விட்டாரு?ன்னு நமக்கு யோசனை.//

நல்லாத்தாம் ரோசிக்கிறீங்கப்பூ

Mahesh said...

@ வெண்பூ :

நன்றி...நன்றி..நன்றி :)))))))))

@ வடகரை வேலன் :

நன்றி...நன்றி..நன்றி :)))))))))

பழமைபேசி said...

//உடுக்கம்பாளையத்துல//

லெட்சுமாபுரம், குண்டலப்பட்டி, அப்புறம் உடுக்கம்பாளையம்.

அங்கனைக்குள்ளதானே, ஓடியாடி, நீச்சல் அடிச்சு, பெரிய KR தோட்டத்துல மாங்கா திருடி.... நம்ம வாழ்க்கையே ஜனரஞ்சகமாப் போச்சு...

உடுக்கம்பாளையம் மேவறக் காட்டைத் தாண்டிப்போனா, எரிசினம் பட்டி சுகந்தி திரைப்பட அரங்கு. அதத் தாண்டிப் போனா, சாவக்கட்டு மைதானம்.
தை நோம்பிக்கு மறுநாள் நாங்க அங்கதான்.... இப்படி நிறைய...

Mahesh said...

@ பழமைபேசி :

உங்களை இந்த பதிவு கொஞ்சம் கெளறி விடும்னு எதிர்பார்த்தேன். உடுக்கம்பாளயத்தப் பத்தி, சாவக்கட்டு பத்தியெல்லாம் பின்னால எழுதுவேன்....

Anonymous said...

சித்தப்பாவின் அந்நியோன்னியமும், குழந்தைத்தனமும் மிக அருமையாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று நம் குழந்தைகள் இதை அனுபவிப்பார்களா என்று தெரியவில்லை! பத்து வருடங்களுக்கு பிறகு...நம் குழந்தைகள் 'மொளச்சு வரும்போது" என்று பதிவு செய்யும் போது...எதைப் பற்றி பதிவு செய்வார்கள்?....cartoon network, pogo....பார்த்ததைப் பற்றியா அல்லது எப்படி யாரைப் பற்றியுமே தெரியாமல் நாட்கள் கழிந்தன என்பதைப் பற்றியா?...whatever, it would be interesting to understand the way we lived for our children...though it will be late by then, but better late than never.!.....

இருந்தாலும் ரொம்பத்தான் குசும்பு! முதல் நாள் சாயங்காலமே கோவிலுக்கு சென்று நாளை என்ன பிரசாதம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு, யாருக்குமே சொல்லாமல் மறைத்து, அப்படியே யாராவதுகேட்டாலும்...ஒண்ணும் பிரமாதம் இல்லை...சும்மா வெறும் பாயசம்தான்...என்று சொல்லிவிட்டு...மறுநாள் எல்லாவற்றையும் தானே ஒரு கட்டு கட்டுவதை மறைத்து விட்டார் மகேஷ். பரவாயில்லை...மன்னிப்போம்...மறப்போம்!

ஒரு வேளை சங்கர சாஸ்த்ரிகள்...சித்தப்பாவின் கருப்பு, வெள்ளை பாட முறையைக் கேட்டு இருந்தால்...சங்கராபரணத்தில் நடித்தே இருக்க மாட்டார்...என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

புதுகை.அப்துல்லா said...

(அரணாக்கயருக்குள்ள சொருகி வெச்சுக்கணும்... இல்லன்னா நம்ம க்ளாஸ்மேட்டு பொண்ணு வீட்டு வாசல்ல நின்னு அரிசி வாங்கற நேரம் பாத்து அவுந்து மானத்த வாங்கும்)

//

அஃறினை வரைக்கும் உங்க மேல காண்டா இருந்துருக்கு...அம்புட்டு நல்லவரா இருந்துருக்கீங்க :)

புதுகை.அப்துல்லா said...

பத்து பேர் பாடிக்கிட்டே போனா பத்து கொரலும் தனித் தனியாக் கேக்கும்.. அவ்வளவு 'ஸின்க்'கா பாடுவாங்க.
//

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குரல் உண்டு அந்தக் காலத்திலேயே கவிஞர்.அப்துல்லா சொல்லிருக்காரு :))

புதுகை.அப்துல்லா said...

வீடு வீடா நின்னு கை கால் கழுவி, அரிசி வாங்கி பையில போட்டுக்கிட்டே போய், தளி ரோட்டுல லெஃப்ட். குட்டைப்பிள்ளயார் கோவில் வாசல்ல "கணேச சரணம் ; சரணம் கணேசா"ன்னு ஓங்கி ஒரு கொரல் பாடிட்டு, மறுக்கா லெஃப்ட். கச்சேரி வீதில சப்ஜெயில், கோர்ட்டு, ஜேகப் டாக்டர் வீடு தாண்டி லெஃப்ட். கொஞ்ச தூரம் போனா மறுபடி அக்ரஹாரம். ரைட்ல திரும்பினா அனுமார் கோயில்.
//

அண்ணா ஊர்ல கொஞ்சநாள் எதுவும் டிராபிக் போலிஸா வேலை பார்த்தீங்களாண்ணா???

புதுகை.அப்துல்லா said...

நாமளும் சும்மாவோ இல்ல ஒரு ஜால்ராவத் தட்டிக்கிட்டேவோ போனா,
/

அந்த எக்ஸ்பீரியன்ஸ் இப்போ அபீசுல மேலதிகாரிகிட்ட யூஸ் ஆகுதான்னா???

புதுகை.அப்துல்லா said...

கொறவஞ் சாடை கொறத்திக்குத் தெரியாதா? "வாங்கடா...வந்து தொலைங்க"ன்னு அப்பிடியே ஆசை(!)யாக் கூப்புடுவாரு.

//

க்கும்..அவரு மட்டும் ஒழுங்கோ???அவரும் அந்தக் காலத்துல உண்டக்கட்டிக்கு நின்னவருதான...

புதுகை.அப்துல்லா said...

பின் பக்கமாப் போயி ஒக்காந்து சாப்டுட்டு திரும்பி வந்து, பாத்தரம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சா மறுக்கா நின்னு மறுக்கா திட்டு வாங்கிக்கிட்டே இன்னொடு ரௌண்டு சாப்டுட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு வீட்டுக்குப் போனா, டிஃபன் சாப்ட்டு ஸ்கூலுக்கு கெளம்ப சரியா இருக்கும்

//

வீட்லயாவது யாரும் சாப்பிட மிச்சம் வச்சீகளாப்பா???

புதுகை.அப்துல்லா said...

"ரெண்டு மாசமா பொண்ணு பாட்டு கத்துண்டு இருக்கா... சரளி வரிசை முடிஞ்சது... கொரல் எழஞ்சு வருது"ன்னு யாராவது அவுங்க வீட்டுப் பொண்ணை மேடையேத்தி விட்ருவாங்க.

//

நானும் பார்த்துட்டேன்...முக்காவாசி பொம்பளப் புள்ளைக சரளி வரிசையோட நிறுத்திப் போடுங்க. அதுக்கப்புறம் ஜன்ட வரிசை, கீர்த்தனை இதெல்லாம் இருக்கதே ரொம்ப புள்ளைகளுக்கு தெரியாது..

புதுகை.அப்துல்லா said...

ஸ்ருதி, ராகம், தாளம் இதெல்லாம் பாக்காம இருந்தா, அது பாடற பாட்டு (!!) நல்லா இருக்கும்.

//

எது ஒழுங்கா இருக்கும்??? பாட்டா, புள்ளையா? மனசுல இருக்கத சும்மா மறைக்காம சொல்லுங்க??? :))))

புதுகை.அப்துல்லா said...

அதுவும் சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுன்னா அப்பிடியே சொல்லு பிசகாம அதே கொரல்ல நல்லா கணீர்னு பாடுவாரு. கண்ணை மூடிக்கிட்டு கேட்டா, சீர்காழி பாடற மாதிரியே இருக்கும்.

//

அண்ணே சாந்தோமில நம்ப வீட்டுக்கு வந்தீகள்ள.... நம்ப வீட்டுக்கு பின்னாடி வீடுதான்ணே சீர்காழி வீடு.

புதுகை.அப்துல்லா said...

சாஆஆஆ"

"சாஆஆஆ"

"ம்ம்ம்ம்...1 1/2 க‌ட்டை... கொர‌ல் ரொம்ப‌ ஒட‌ஞ்சு போச்சு... பாட‌ப் பாட‌ ச‌ரியாயிடும்"
//

சாதாரணமா ஒரு மனுசன் பேசுறதே ஒன்னரை கட்டைதான். அவருகிட்ட சும்மா சாஆஆஆ ன்னு பேசுனத பாடுனேன்னு பில்டப்ப குடுக்குறீகளேஏஏஏஏஏஏஏஏ...

புதுகை.அப்துல்லா said...

இவ்வளவு ஈஸியா இருக்கு...இதுக்கா சங்கர சாஸ்திரி மூணு மணி நேரப் படத்துல அப்பிடி உசுர விட்டாரு?ன்னு நமக்கு யோசனை.
//

ஹா..ஹா...ஹா...குறும்புண்ணே உங்களுக்கு..

புதுகை.அப்துல்லா said...

மாட்னியா? நன்ன வேணும்... அப்பா... ரிட்யர் ஆனப்பறம் கழுத்துல மாட்டிக்க‌றா மாதிரி சின்ன ஆர்மோனியமா வாங்கித் தரேன்.. பீச் தாம்பரம் ரூட்டுக்கு சீசன் பாஸ் வாங்கித் தரேன்... மேல கீழ போய் சீர்காழியே வந்து போதும்கற வரைக்கும் பாடிண்டே இரு"
//

சீர்காழி வந்து போதுங்க மாட்டாரு! மறுபடி போய் சேந்துருவாரு :)))))

புதுகை.அப்துல்லா said...

ஹனுமத் ஜெயந்தில பாடறோம், கோவிலுக்கு உள்ள, வெளிய வீடுகள்ல, தெருவுலன்னு 1000 பேர் நாம பாடறத கேக்கறாங்க. நல்லா பாடிட்டுருக்கறப்ப யார் அபஸ்வரமா....டர்ர்ர்ர்ர்ர்.....
//

நல்லவேளை கத்துகிட்டு பாட போய்ருந்தீங்கனா இந்த டர்ர்ர்ர்ர்ர் ஆடியன்ஸ் கிட்ட இருந்து வந்து இருக்கும். :))))))))))))))))

புதுகை.அப்துல்லா said...

அத்தோட நம்ம சங்கீதப் பாடமும் டர்ர்ர்ர்ர்ர்ர்... சரி...இனிமே சமுதாயத்தை சோதிக்க வேண்டாம்... கேக்கறதோட நிறுத்திக்குவோம்னு...
//

எங்க நிறுத்துனீக???? அதான் பிளாக் எழுத வந்துட்டீகளே :)))))))))))

புதுகை.அப்துல்லா said...

அண்ணே மனம் திறந்து சொல்கிறேன் கொங்கு வட்டார வழக்கில் கட்டுரை வரைய இன்றைய தேதியில் உங்கள விட்டா வலையுலகில் யாரும் இல்லை.
இரசித்து சிரித்து படித்து மகிழ்ந்தேன்.
:)

Mahesh said...

அப்துல்லா அண்ணே.... அய்யோ இப்பிடி வரிக்கு வரி பின்னூட்டம் போட்டுருக்கீங்க... ரொம்ப நன்றிண்ணே....

Mahesh said...

அப்துல்லா அண்ணே....

கொங்கு வழக்குல எழுத லதானந்த், பழமைபேசி இவிகள்லாந்தா மொதொ.... நானெல்லாம் சும்மா....

Mahesh said...

அப்துல்லா கூட சங்கீதம் கத்துக்கிட்டீங்க போல இருக்கு... கட்டை, ஜண்ட வரிசைன்னு பின்றீங்க. ஆனா கரெக்டா அந்த subtle humor ‍ஐ நோட் பண்ணியிருக்கீங்க. நன்றி,

பழமைபேசி said...

//
Mahesh said...
அப்துல்லா அண்ணே....

கொங்கு வழக்குல எழுத லதானந்த், பழமைபேசி இவிகள்லாந்தா மொதொ.... நானெல்லாம் சும்மா....
//

தன்னடக்கம்? இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்க முடியாது இராசா! மொளப்பாரி தொடர்ந்து வரணுமைய்யா....

புதுகை.அப்துல்லா said...

அப்துல்லா கூட சங்கீதம் கத்துக்கிட்டீங்க போல இருக்கு...

//

கேள்வி ஞானம்ணே. கத்துகவெல்லாம் இல்ல. உங்க சித்தப்பா சென்னையில இருந்தா சொல்லுங்க... :))))))

புதுகை.அப்துல்லா said...

கட்டுரை வரைய
//

மீண்டும் மீண்டும் சொல்சிறேன்.. கட்டுரை வரைய உங்களை விட்டால் ஆள் இல்லை

Mahesh said...

@ அப்துல்லா :

அட...நீங்களும் நம்மள மாதிரி கேள்விஞானம்(!!) கேஸா... அப்பறம் அந்த கட்டுர வரயர மேட்டர்... ஏதோ நுண்ணரசியல் மாதிரி இருக்கே :))))))

புதுகை.அப்துல்லா said...

அப்பறம் அந்த கட்டுர வரயர மேட்டர்... ஏதோ நுண்ணரசியல் மாதிரி இருக்கே :))))))
//

அண்ணே எம்புட்டு அப்பாவி புள்ளயா பிளாக்குகுள்ள வந்தீங்க????? இப்ப ரொம்ப தேறிட்டீங்க :))))))

Mahesh said...

@ அப்துல்லா :

எல்லாம் குருசாமி அப்துல்லா போட்ட பிச்சைதான்.. :))))))))))))))))