Friday, April 10, 2009

மொளச்சு வரும்போது.... 6

முந்தைய இடுகைகள் ...1 ...2 ...3 ...4 ...5


அஞ்சாம் வகுப்பு வரைக்கும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா அது சிராஜ். க்ளாஸ்லயே அவந்தான் ஒசரமா இருப்பான். நான் அப்ப குள்ள புஸ்கா. ஒரு பாதுகாப்புக்காகவே அவனோடயே சுத்திக்கிட்டுருப்பேன். அவனுக்கு படிப்பு அவ்வளவா ஏறல. பாஸ் பண்றதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலையே இருக்காது. அவனைப் பாஸ் பண்ண வெக்கறதுக்குள்ள வாத்தியார் பாடுதான் திண்டாட்டமாப் போயிடும். சுகுணா டீச்சர், மல்லிகா டீச்சர், பங்கஜம் டீச்சர் இவுங்க மூணு பேரும் அவனை எப்பிடியாவது பாஸ் பண்ண வெச்சுடணும்னு அவனுக்குன்னு தனியா க்ளாஸ் போட்டெல்லாம் முசுவா வேலை பாத்தாங்க. அப்பிடி இப்பிடி தாக்காட்டி அவனை 6ம் வகுப்புக்கு ஹைஸ்கூலுக்கு தள்ளி விட்டுட்டா கொஞ்சம் மூச்சு விட்டுக்கலாம்னு பாத்தாங்க. ம்ம்ம்... நம்மாளு இதுக்கெல்லாம் அசருவானா? ஸ்டூல், குதர, ஏணி, லிஃப்ட்... எது வெச்சாலும் அவன் மண்டைக்கு மட்டும் ஒண்ணும் ஏறல. "நீங்க ரெண்டு பேருந்தான் ஈயும் பீயுமாச்செ... நீயாச்சும் அவனுக்கு சொல்லிக் குடுத்து உங்கூட ஐஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயேன்" னாங்க.


சரின்னு லாஜிஸ்டிக்ஸ் எல்லாம் முடிவாச்சு. அதாவது சாயங்காலம் பள்ளியோடம் விட்டதும் நான் அவங்கூட அவன் வீட்டுக்குப் போய் கூடவே படிக்கணும், சொல்லிக் குடுக்கணும். நல்ல முகூர்த்த நாளாப் பாத்து ஆரம்பிச்சோம். அவன் வீடு ரயில்வே கேட்டுக்குப் பக்கத்துல. இன்னும் ஒரு 300 மீட்டர் தள்ளி ரயில்வே ஸ்டேசன். அதுக்கு பக்கத்து வீடு உடுமலைல ரொம்ப ஃபேமஸான ஒரு பேக்கரிக்காரங்க வீடு. பின்னாலயே பன்,ரஸ்க் எல்லாம் பண்றது வாசனை மூக்கத் தொளைக்கும். சிராஜ் வீட்டுக்குள்ளயே ஒரு சின்ன தோட்டம். ரெண்டு ஆடு வேற வளத்துக்கிட்டுருந்தாங்க. இப்பிடி ஒரு இடத்துல படிக்கத் தோணுமா? மொத நாள் மட்டும் கொஞ்ச நேரம் படிச்சோம்னு பேர் பண்ணினோம். அதுக்குள்ளயே அவுங்க அம்மா என்னென்னவோ இனிப்பு காரம்னு திங்கக் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. அடுத்த நாள்ல இருந்து சிராஜ் அவன் வேலையை காமிக்க ஆரம்பிச்சான்.

மொதல்ல ஆட்டைத் தொரத்திப் புடிச்சு பால் கறந்து குடிப்போம். பச்சைப் பால் லேசா வெதுவெதுன்னு எளஞ்சூட்ல இருக்கும். சும்மா ஒரு கால் டம்ளர்தான் கறப்பான். அதுக்குள்ளயே நாலு ஒதை வாங்குவோம். அப்பறம் பேக்கரி வீட்டுக்குள்ள எட்டிக் குதிச்சு கிச்சனுக்குள்ள போவோம். ரொட்டி பண்றவரு அவனுக்கு ஃப்ரெண்டு. ஆளுக்கு இம்புட்டு ரொட்டி மாவு குடுப்பாரு. சவ சன்னு இனிப்பா இருக்கும். ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கரண்டியை அடுப்புக்குள்ள விட்டு தட்டு தட்டா வெளிய எடுத்து வெப்பாரு. ஆறாறு பன்னு ஒரு தட்டுக்கு. அதெல்லாம் கண்ணாடிக் காய்தம் சுத்தி வெக்கறது, பெட்டில அடுக்க்றது, நடுவுல நாங்க ரெண்டு உள்ள தள்றதுன்னு இப்பிடியே பொழுது போயிரும். பன்னா சாப்ட்டுட்டு வயிறு புர்..புர்..ன்னு பொறுமிக்கிட்டே இருக்கும். அஞ்சே முக்காலுக்கு பழனி-பொள்ளாச்சி பாசஞ்சர் ட்ரெய்ன் வரும். கேட்டு போட்டதும் ரெண்டு பேரு ஒடிப் போய் தண்டவாளத்துல கொட்டியிருக்கற ஜல்லிக்கல்லெல்லாம் எடுத்து வரிசையா தண்டவாளத்து மேல வெச்சுருவோம். ரயில் மேல ஏறி எல்லாம் பொடிப் பொடியா ஆயிரும். கேட் கீப்பர் ஜாகீர் மாமா தினமும் எங்களை வெரட்டுவாரு. கல்லு மேல ஏறி ரயில் கவுந்துதுன்னா ரெண்டு பேரும் ஜெயிலுக்குப் போகணும்னு அவர் மெரட்டுனதுல கொஞ்சம் பயந்துதான் போனோம்.

அப்பறம் அதை விட்டுட்டு ரயில் வரதுக்கு முன்னாடி ஸ்டேசனுக்கு போய் நின்னுக்குவோம். கேங்மேன் செல்வராஜ் கூட டவர் மேல ஏறிப் போய் அவர் லைன் மாத்தறதெல்லாம் வேடிக்கை பாப்போம். டவர் மேல இருந்து தூரத்துல் ரயில் லைன் மாறறது, கைகாட்டி எறங்கறது எல்லாம் பாக்க பாக்க ஆசையா இருக்கும். டவர்ல இருக்கற லீவர்கள்ல இருந்து கம்பிக கட்டி தண்டவாளத்தை ஒட்டி சின்ன சின்ன உருளைக வழியா போய் எங்கியோ தூரத்துல இருக்கற கைகாட்டி படக்குனு எறங்கறதெல்லாம் ஆச்சரியமா இருக்கும். மாசம் ஒருக்கா எல்லா உருளைகளுக்கும் கிரீஸ் வெப்பாங்க. நாங்களும் ஒத்தாசை பண்றோம்னு போய் கிரீஸ் டப்பாவை கவுத்த பிறகு "கண்ணுகளா... இனிமே இக்கட்ட வந்தீங்க... வெரலை ஒடிச்சுப் போடுவேன்"ன்னு பாசமா சொன்ன பிறகு அதுவும் போச்சு. ஆறு மணியாச்சுன்னா கேட்டு, கைகாட்டி இதுகள்ல இருக்கற வெளக்குக்கெல்லாம் மண்ணெண்ணை ஊத்தி திரியைத் தூண்டி ஏத்தி வெக்க ஜாகீர் மாமா போவாரு. அவர் கூட கொஞ்ச நாள்.

இப்பிடி வெளையாட்டாவே பொழுது போக்குனமே தவிர மொத நாள் மட்டும் படிச்சதுதான்.அப்பறம் படிக்கவே இல்லை. சிராஜ் வீட்டுலயும் இதைப் பெருசா கண்டுக்கலை. நல்ல பெரிய வசதியான குடும்பம். கடைசில அந்த வருசம் அவன் ஃபெயில் ஆயிட்டான். எனக்குத்தான் ரொம்ப வருத்தமா இருந்துது. வெளயாட்டுத் தோழனை இனிமே அடிக்கடி பாக்க முடியாதுன்னு. அதுக்கு ஏத்த மாதிரி ஹைஸ்கூல்ல ஷிஃப்ட் முறை. காத்தால 6:45 ல இருந்து 1 மணி வரைக்கும்தான் ஸ்கூல். வகுப்பறை பத்தாக்குறையால அப்படி ஒரு ஏற்பாடு. கொஞ்ச நாள்லயே சிராஜோட குடும்பம் பள்ளபட்டிக்கு போயிடுச்சு. பஸ்ஸ்டாண்டுல அவுங்க ஈரோடு பஸ்ல ஏறும்போது ரொம்ப சங்கடமா இருந்துது. சிராஜ் எங்கூட பேசவே இல்ல. அவனோட அம்மாவும் அப்பாவுந்தான் பேசினாங்க. அதுக்கப்பறம் இன்னிக்கு வரைக்கும் அவனை சந்திக்கவே இல்லை. எங்க இருக்கான், என்ன பண்றான் எதுவும் தெரியல.எப்பவும் எதைப்பத்தியும் கவலை இல்லாம வேடிக்கையும் துள்ளலுமா துறுதுறுன்னு இருக்கற அவன் முகம் கடைசியா பஸ்ல ஏறும்போது வாடி இருந்தது மட்டும் ஃபோட்டொ புடிச்ச மாதிரி பச்சக்னு இன்னும் மனசுக்குள்ள இருக்கு. எப்பா சிராஜ்... நீ எங்கடா இருக்க?


எல்லாரும் பழைய தொடர்பு விட்டுப் போன நண்பர்களுக்கு கடுதாசி போட்டுக்கிட்டுருக்காங்க.... இந்த இடுகையை சிராஜ் படிச்சு மறுபடி அவனை சந்திக்க முடிஞ்சா எம்புட்டு நல்லா இருக்கும்?


சிராஜுக்குப் பிறகு 6ல இருந்து 10 வரைக்கும் ஜிகிரி தோஸ்தா இருந்த கிஷோரைப் பத்தி..... அப்பறமா.... இன்னொரு நாளைக்கு....

21 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நட்புடன் ஜமால் said...

\\அஞ்சாம் வகுப்பு வரைக்கும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா அது சிராஜ். க்ளாஸ்லயே அவந்தான் ஒசரமா இருப்பான். நான் அப்ப குள்ள புஸ்கா. ஒரு பாதுகாப்புக்காகவே அவனோடயே சுத்திக்கிட்டுருப்பேன். அவனுக்கு படிப்பு அவ்வளவா ஏறல\\

ஆளும் வளரனும் - இப்படி ஏதோ சொல்லுவாங்களே

எம்.எம்.அப்துல்லா said...

//அஞ்சாம் வகுப்பு வரைக்கும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா அது சிராஜ்.

//

யாருமே பழக பயப்படுற அளவுக்கு அவ்வளவு மோசமான ஆளாவா இருந்தீங்க??

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரு பாதுகாப்புக்காகவே அவனோடயே சுத்திக்கிட்டுருப்பேன். //

அப்ப அவ்வளவு படுத்தியிருக்கீங்க...பல எதிரிகள் உருவாகுற அளவுக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

//நல்ல முகூர்த்த நாளாப் பாத்து ஆரம்பிச்சோம். //

ஏண்ணே, கல்யாணமா பண்ணிக்க போனீங்க. சட்டுபுட்டுன்னு ஆரமிச்சுருக்க வேண்டியதுதான??

எம்.எம்.அப்துல்லா said...

//அதுக்கு பக்கத்து வீடு உடுமலைல ரொம்ப ஃபேமஸான ஒரு பேக்கரிக்காரங்க வீடு. //

ஏன் லாஜிஸ்டிக்க அங்க போட்டீங்கன்னு புருஞ்சு போச்சு :)

எம்.எம்.அப்துல்லா said...

//ரெண்டு ஆடு வேற வளத்துக்கிட்டுருந்தாங்க. //

ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா...

எம்.எம்.அப்துல்லா said...

//இப்பிடி ஒரு இடத்துல படிக்கத் தோணுமா?

//

இப்பிடியெல்லாம் இருக்கும்னு தெருஞ்சுக்கிட்டே படிக்க போய்ட்டு இப்ப நல்லபுள்ள மாதிரி பேச்சப்பாரு :)

எம்.எம்.அப்துல்லா said...

//சும்மா ஒரு கால் டம்ளர்தான் கறப்பான். அதுக்குள்ளயே நாலு ஒதை வாங்குவோம்.

//

நல்ல ஆடு. வாழ்க :))

எம்.எம்.அப்துல்லா said...

//சும்மா ஒரு கால் டம்ளர்தான் கறப்பான். அதுக்குள்ளயே நாலு ஒதை வாங்குவோம்.

//

நல்ல ஆடு. வாழ்க :))

எம்.எம்.அப்துல்லா said...

//ரொட்டி பண்றவரு அவனுக்கு ஃப்ரெண்டு. //

உண்மையச் சொல்லுங்க. நம்பளும் எப்பிடியாவது அவருக்கு ஃபிரண்டாயிரனும்னுதான அங்க படிக்கவே போனீங்க???

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கரண்டியை அடுப்புக்குள்ள விட்டு தட்டு தட்டா வெளிய எடுத்து வெப்பாரு. //

நானாயிருந்தா படிக்காம அப்படி ஊர் சுத்துனதுக்கு அந்த கரண்டியாலே சூடு வச்சுவுட்டுருப்பேன்.

எம்.எம்.அப்துல்லா said...

ச்சேய்...என்னடா பொழப்பு இது...நிம்மதியா பின்னூட்டம் கூட போட முடியல. எம்.டி கூப்புடுறாராம்...அப்புறமா வர்றேன்.

thevanmayam said...

அஞ்சாம் வகுப்பு வரைக்கும் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுனா அது சிராஜ். க்ளாஸ்லயே அவந்தான் ஒசரமா இருப்பான். நான் அப்ப குள்ள புஸ்கா. ஒரு பாதுகாப்புக்காகவே அவனோடயே சுத்திக்கிட்டுருப்பேன். அவனுக்கு படிப்பு அவ்வளவா ஏறல\/
அவனுக்கு மட்டுமா! இல்லை!

’டொன்’ லீ said...

:-)

பழமைபேசி said...

இஃகிஃகி!

அறிவிலி said...

இப்பதாங்க ஒரு ரவுண்ட் இந்த சீரிஸ்
ஃபுல்லா படிச்சுட்டு வந்தேன்.
நல்லா இருக்குங்க.

Mahesh said...

நன்றி ஜமால்பாய்.... கரெக்டுங்க... அதுதான் எனக்கு வளராமப் போச்சுன்னு நினைக்கிறேன் :)))))))

நன்றி டொன்லீ...

நன்றி பழமைபேசியாரே,,, சிரிச்சே மழுப்புங்க :))))

நன்றி அறிவிலி... நல்லா இருந்தா சரி..

வாங்க அப்துல்லா அண்ணே... இப்பந்தான் நீங்க ஃபார்முக்கு வந்துருக்கீங்க :)))))))))

பழமைபேசி said...

//நன்றி பழமைபேசியாரே,,, சிரிச்சே மழுப்புங்க :))))//

அண்ணே, அப்பிடியெல்லாம் இல்லை. நல்லா வந்திருக்கு இடுகை, இரசிச்சேன்... ஆமா, ஊர்க்கு வந்து சேர்ந்தாச்சா?

ஸ்ரீதர் said...

எல்லாத்தையும் படிச்சபோது எனக்கும் ஸ்கூல் ஞாபகம் வந்திட்டுது.அருமை.

Mahesh said...

நன்றி மணியாரே...

நன்றி ஸ்ரீதர்....

எம்.எம்.அப்துல்லா said...

இங்க போய் பாருங்க

http://mmabdulla.blogspot.com/2009/04/blog-post_20.html


:)))