Monday, April 20, 2009

பணியிடத்தில் பாதுகாப்புபல வருடங்களுக்கு முன்னால் சென்னை எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் (அப்ப MRL இப்ப CPCL) வேலை செய்யும்போது ஒரு ப்ளான்டுக்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரசர்ல ஒரு பிரச்னைன்னு ரிப்பேர் பண்ண நானும் (அப்ப நான் ஒரு அப்ரெண்டிஸ்) ஒரு இஞ்சினீயரும் போனோம். காலை மணி 8:30. முதல்ல உள்ள அடைஞ்சுருக்கற மீதி வாயுவை ட்ரைன் பண்ணணும்னு வால்வைத் திறந்து விட்டுட்டு காத்திருந்தோம். 8:55க்கு டீ ப்ரேக். ஆலை பூரா அங்கங்க காண்டீன்க இருக்கும். சரின்னு டீ, பிஸ்கட் சாப்பிட பக்கத்துல இருந்த கேண்டீனுக்கு போகலாம்னு எழுந்தோம்.

ஒரு பத்தடி தூரம் போயிருப்போம்.... "டொம்"னு பெரிய சத்தம். யாரோ பின்னால இருந்து தள்ளி விட்ட மாதிரி ரெண்டு பேரும் குப்பற விழுந்தோம். என்னடான்னு பின்னால பாத்தா.... ஒரே புகை மண்டலம்..... ஒண்ணுமே தெரியல... அப்பிடியே தவழ்ந்து பக்கத்துல ஒரு செவுத்துக்கு பின்னால போய் நின்னுட்டோம். அன்னிக்குத் தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம். ஹைட்ரஜன் வாயு நிறம், மணம் இல்லாதது. அதனால லீக் ஆனது தெரியல. ஒர்க் பெர்மிட் வாங்கும்போதே பக்கத்துல இருக்கற தண்ணி பைப் திறந்து கம்ப்ரசர் மேல ஸ்ப்ரே பண்ணியிருந்தோம். அப்பிடியும் பக்கத்துல ஒரு இடத்துல நடக்கற வெல்டிங்ல இருந்து வந்த ஸ்பார்க்ல தீ பிடிச்சுடுச்சு. சின்ன விபத்துதான். இழப்பு அதிகமில்லை. இருந்தாலும் நான் டிப்ளமோ படிச்சு முடிச்சு வேலைக்கு சேந்த கொஞ்ச நாள்லயே நடந்தது. அதுவும் ஏப்ரல் மாசம். மறக்கவே முடியாது.

அந்த விபத்துக்கு பிறகு ஆலைல பல பெரிய, சிறிய விபத்துகளை நேர்ல பாத்தேன். நானும் சில சிறிய விபத்துகளை சந்திச்சேன். கூட வேலை செஞ்ச ரெண்டொரு நண்பர்கள் வேலை வேண்டாம்னு போயிட்டாங்க. 15 மாசங்கள் கழிச்சு ஏதேதோ காரணங்கள் சொல்லி (வேறென்ன.... மு.வ... பி.வ தான்) எங்க குரூப்ல 6 பேர் தவிர எங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க. நானும் அதுக்குப் பிறகு மெக்கானிகல் துறையை விட்டு வேறு துறைக்கு மாறிட்டேன்.

எண்ணை சுத்திகரிப்பு ஆலைல, வேலைல பாதுகாப்புக்காக எடுக்கற சில நடவடிக்கைகள் :

 • விபத்து நேர வாய்ப்பில்லாத கருவிகள்
 • ஆபத்து மிகுந்த பணிகளில் தானியங்கி ரோபோக்கள்
 • sensor based தானியங்கி விபத்து அலாரம்கள்
 • சரியான வேலை முறைகள்
 • முறையான பயிற்சிகள்
 • விதிமுறைகளில் தளர்வு, நீக்குப்போக்குக்கு இடம் கொடுக்காமல் இருத்தல்
 • பாதுகாப்பைப் பத்தி மாசம் ஒரு லெக்சர்
 • அங்கங்க பாதுகாப்பை வலியுறுத்தி ஹ்யூமரஸ் போஸ்டர்கள்
 • விபத்தில்லாத நாட்களுக்கு ஊக்கப் பரிசு
 • விபத்துகளை தவிர்க்கறவங்களுக்கு போனஸ்
 • அப்படிப் பட்டவங்களை ரோல் மாடல் ஆக்கி ஒரு மாசத்துக்கு போஸ்டர்
 • அவங்களை வெச்சு மத்தவங்களை மென்டாரிங் பண்றது
 • வேலையிடத்தை சுத்தமா ஆபத்தில்லாத இடமா வெக்கறது
 • மாக் ட்ரில்கள் நடத்தி ஆபத்துக் காலத்துல எப்பிடி நடந்துக்கணும்னு ஒத்திகை பாக்கறது
 • விபத்துகளை எதிர்பார்த்து ஒரு தொகையை ஒதுக்கி வெச்சு, விபத்துகள் நடக்காம அதுல மிச்சமாகிறதை தொழிலாளிகளுக்கு பிரிச்சு குடுக்கறது
 • .................
 • ................
இவ்வளவு பண்ணியும் விபத்துகள் நிகழ்ந்துக்கிட்டேதான் இருக்கு. சில நேரங்கள்ல இயந்திரக் கோளாறுகளால நடந்தாலும் பல நேரங்கள்ல மனிதத் தவறுகள்தான் (human errors) முதன்மையான காரணமா இருக்கு. எவ்வளவு கடினமான விதிமுறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு காரியத்தை செஞ்சு பாக்கற மனித இயல்பு, ஒரு த்ரில் அனுபவிக்கற மனோபாவம், தன் குடும்பம் மற்றும் சக ஊழியர்களின் குடும்பங்கள் பற்றிய அலட்சியம் இதெல்லாம் இருக்கற வரைக்கும் விபத்துகள் நிகழ்வதை 100% தடுக்க முடியாது.

நான் சுத்திகரிப்பு ஆலையை விட்டு வெளியே வேறு வேலைக்கு போய் விட்டாலும் MRLல பார்த்த விபத்துகளையும் அதோட பாதிப்புகளையும் மறக்க முடியலை. அதுக்காகவே சென்னை அடையாறில் உள்ள "மண்டல தொழிலாளர் பயிலகம்" (Regional Labour Institute) மூலமா சில யோசனைகளை சமர்ப்பிச்சு, அதுல சில பரிந்துரைகள் இந்தியாவில் உள்ள பல சுத்திகரிப்பு ஆலைகள்ல ஒரு வழிமுறையா (process) ஆக்கப்பட்டதுல மனசுல ஓரமா ஒரு சின்ன பெருமையுடன் கூடிய மகிழ்ச்சி. இந்த வருஷமும் ஒரு பரிந்துரை கடைசி கட்டப் பரிசீலனைல இருக்கு. MRLல என்னோட வேலை பாத்த மற்ற நண்பர்களின் உதவியோட இது சாத்தியமாகி இருக்கு.

ஏப்ரல் 28 "பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நாள்". Day for Safety & Health at Work. உலக தொழிலாளர் அமைப்பு (ILO) வருஷா வருஷம் ஒரு தீம் எடுத்துக்கிட்டு எல்லா பணியிடங்கள்லயும் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்கறாங்க. தொழிலாளர்களிடையே அதுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவங்களை மனதளவில் தயார் பண்ணவும் பயிற்சி அளிக்கறாங்க. கடந்த 10 வருஷத்துல விபத்துகள் எவ்வளவோ குறைஞ்சுடுச்சு. எப்பிடியோ விபத்துகள் குறைஞ்சு, உற்பத்தி அதிகமாகி விலைகள் குறைஞ்சா எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்.

பணியிடத்துல பாதுகாப்புங்கறது ஒவ்வொரு தொழிலாளியின் உரிமை. கடமையும் கூட.


கார்ட்டூன்களுக்கு நன்றி : கார்ட்டூன்ஸ்டாக்.காம்


22 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

குசும்பன் said...

அருமை! பல வேலைகள் பார்த்து இருப்பீங்க போல!

//வேறென்ன.... மு.வ... பி.வ தான்//

புரியலை!

narsim said...

//பணியிடத்துல பாதுகாப்புங்கறது ஒவ்வொரு தொழிலாளியின் உரிமை. கடமையும் கூட.//

May 1ந் தேதி பதிவு.. கலக்கல்

கிரி said...

//அப்ப நான் ஒரு அப்ரெண்டிஸ்/

அட! அப்ரெண்டிஸ்களா னு தான் கூப்பிடுவாங்களா :-))) (வடிவேல் மாதிரி)

//அதுவும் ஏப்ரல் மாசம். மறக்கவே முடியாது//

படிக்கிற எனக்கே பீதி ஆகுது உங்களுக்கு சொல்ல தேவையில்ல

அறிவிலி said...

மிக நல்ல இடுகை.

//எவ்வளவு கடினமான விதிமுறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு காரியத்தை செஞ்சு பாக்கற மனித இயல்பு//

இது உண்மை.நான் பார்த்தவரை "இத்தன வருஷமா செய்யறேன், எனக்கு ஒண்ணும் ஆவாது" அப்படிங்கற Complacency விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமா இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான பதிவு.

நீங்கள் சொல்வது போல், பல விபத்துக்களுக்கு காரணம், மனித தவறுகள் தான்.

பழமைபேசி said...

பணியிடத்துல பாதுகாப்புங்கறது ஒவ்வொரு தொழிலாளியின் உரிமை. கடமையும் கூட! நீங்க தடித்த எழுத்துல போடலை, அதான் நான் போட்டு பார்த்தேன்... எல்லாம் நம்பூரு லொள்ளுதான்.... இஃகிஃகி!!

அறிவே தெய்வம் said...

இந்த பார்வை போதும் வாழ்வில் முன்னேற..

வாழ்த்துக்கள்..

Mahesh said...

நன்றி குசும்பன்... அத ஏன் கேக்கறீங்க? :))) மு.வ பி.வ புரியலயா? அந்த 'வருண' தேவனுக்கே வெளிச்சம் !! :)))

நன்றி நர்சிம்.....

நன்றி கிரி... அதே அப்பரசண்டிதான் :))

நன்றி அறிவிலி....

நன்றி மணியாரே...

நன்றி ராகவன் சார்...

நன்றி அறிவேதெய்வம்...

ஸ்வாமி ஓம்கார் said...

என்றும் எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை அனைத்து இன்பங்களையும் வழங்க வேண்டுகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ச்சின்னப் பையன் said...

//ஹைட்ரஜன் வாயு நிறம், மணம் இல்லாதது. //

ப்ரூக் பாண்ட் 3 ரோசஸ்குதான் நிறம், மணம், குணம் இதெல்லாம் இருக்கும்.

ச்சின்னப் பையன் said...

அருமையான பதிவுண்ணே...

ஆதிமூலகிருஷ்ணன் said...

பெரிய்ய ஆளுண்ணே நீங்க.. செம்ம பதிவு, நாங்களும் இந்த மாதிரி குட்டிகுட்டி வேலைகள் கம்பெனிக்குள்ளயே பண்ணிக்குவோம். தத்ரூபமான மாக் ட்ரில்கள் நடத்தியிருக்கிறோம்..

நரேஷ் said...

மகேஷ்,

தமிழில் பல விதமான பதிவுகள் வந்தாலும், இது போன்ற துறை சார்ந்த பதிவுகள் அதிகம் வருவதில்லை

இந்நிலையில், உங்கள் பதிவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!!!

இதே போன்று தொடர வாழ்த்துக்கள்!!!

பரிசல்காரன் said...

நரேஷை வழிமொழிகிறேன்.

ப்ளாக்ல என்ன எழுதிட்டிருக்கீங்கன்னு கேட்டா சொல்றதுக்க்காக சில முக்கிய பதிவுகளை வெச்சுக்குவோம்லயா.. அது மாதிரி இது(வும்) உங்களுக்கு சிறந்த ஒரு பதிவு.

பர்த்டே பார்ட்டி உண்டா?

வாழ்த்துகள்!

இராகவன் நைஜிரியா said...

அன்பு நண்பர் மகேஷுக்கு

பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா நலமும், வளமும் ஆண்டவன் உங்களுக்கு அருளுவாராக.

Xavier said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகேஷ்.

Mahesh said...

மீண்டும் நன்றி ராகவன் சார்....

நன்றி ஆதி....(உங்க இடத்துல இதுக்கெல்லாம் ஸ்கோப் அதிகம்...)

நன்றி நரேஷ்...

நன்றி பரிசல்....

நன்றி ஸ்வாமி ஓம்கார்....

நன்றி Xavier....

நன்றி சத்யா (எ) ச்சின்னப்பையன்... (த்ரீ ரோசஸா... அமெரிக்காவுல கிடைக்குதா?)

வால்பையன் said...

பிறந்தநாள் அன்னைக்கு இப்படி ஒரு பதிவு போடுறத பார்த்தா

உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும் போல

:)

Mahesh said...

நன்றி வால்பையன்... பிறந்த நாள் அன்னிக்காவது ஒரு உருப்படியான பதிவு போடிவோம்னுதான்... ஹி ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

ஆஜர் :)

SK said...

மகேஷ்,

பணி இடங்கள் மட்டும் இல்லாம வீடு, பணம் செய்யற இடம் இது போல எல்லா இடங்களிலும் எப்படி பாதுகாப்ப இருக்கணும், என்ன என்ன முன்னெச்சரிக்கையா இருக்கணும்னு ஒரு பதிவு போடுங்க முடிஞ்சா.

எல்லாருக்கும் ரொம்ப உதவியா இருக்கும். உங்க அனுபவம் ரொம்பவே கை கொடுக்கும்.

marimuthu said...

நானும் ஒரு சுரங்க தொழிலாளி !
உங்கள் பதிவை படித்தேன் ! அருமை!