இன்று "உலக பணியிட பாதுகாப்பு நாள்". உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து பணியிடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஜுன் 2003ல் நடந்த உலக பணியாளர் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தி ஏப்ரல் 28ம் தேதி இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பணியிடத்தில் மாண்டவர்களின் நினைவு நாளாகவும் கூட.
இதை ஒட்டிய முந்தைய பதிவு ......
- பாதுகாப்பான வேலை முறைகள் என்பது ஒரு கலாச்சாரமாகவே மாற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- பணியில், பணியிடத்தில், பணி முறைகளில் என்று எல்லா இடத்திலும் தொழிலாளியின் உயிருக்கு பாதுகாப்பு என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும், இது நிர்வாகத்தின் எல்லா நிலைகளிலும் வேறுபாடு பாராட்டாமல் மதிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகின்றன.
- எந்த ஒரு பணி மற்றும் அதன் செய்முறைகளும் விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையுடன் வடிவமைக்கப்பட வேண்டும்.
- பாதுகாப்பு விஷயத்தில் பொருளாதார சரிவு, உலகமயமாக்கல், பருவநிலை மாற்றம் என்பது போன்ற எந்த ஒரு வெளிக்காரணமும் இடையூறாக இருக்கக் கூடாது
- பாதுகாப்பு விஷயத்தில் எந்த நீக்குப் போக்குக்கும் இடம் கொடுக்கக்கூடாது
!! மனித உயிர் விலைமதிப்பற்றது !!
!! பணியிடங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம் !!
!! பாதுகாப்புடன் பணியாற்றுவோம் !!
!! பாதுகாப்பு என்பதை ஒரு கலாச்சாரமாகப் பேணுவோம் !!
!! பணியிடங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம் !!
!! பாதுகாப்புடன் பணியாற்றுவோம் !!
!! பாதுகாப்பு என்பதை ஒரு கலாச்சாரமாகப் பேணுவோம் !!
இதை ஒட்டிய முந்தைய பதிவு ......
12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
ஆமாணே பாதுகாப்பா இருப்போம்!
நம்மள நம்பி ஒரு குடும்பம் இருக்குதுல்ல!
Absolutely. Organised sectors are much better. A lot needs to be done on the unorganised sectors. For example in Mumbai, I see lot of workers doing painting job in high rise buildings with proper scaffolding, helmets, safety net below and more importantly insurance cover as well.
Please excuse the feedback in English.
please read 'with' as 'without'. changes the whole meaning :)
பணியிடத்தில் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அதைவிட அவசியம்.
எந்த சால்ஜாப்பும் பாதுகாப்பு விசயத்தில் சொல்லக்கூடாது.
நன்றி வால்பையன்...
நன்றி அனுஜன்யா... exactly. My current year recommendation with RLI, which is in its final leg, is more to do with unorganised sector only where the administrative authorities have to chip in.
நன்றி ராகவன் சார்...
ஒரு சிலர் இது பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது
இந்த விஷயத்தில் உங்களுடைய ஈடுபாடு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பணியிடத்தில் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அதைவிட அவசியம்.
எந்த சால்ஜாப்பும் பாதுகாப்பு விசயத்தில் சொல்லக்கூடாது.///
வழிமொழிகிறேன்.
நன்றி அறிவிலி.... சுத்திகரிப்பு ஆலையில் என் அனுபவங்களே இந்த விஷயத்தில் இவ்வளவு ஈடுபாடோடு இருக்க வைத்திருக்கின்றன...
எவ்வளவு குடும்பங்கள்? எத்தனை கண்ணீர்? எத்தனை தடம் மாறிய குழந்தைகள்? அந்த வேதனைகள் சொல்ல முடியாதவை :(
நன்றி நெல்லைத்தமிழ் !!
நன்றி கிரி... ஒரு சிலர் இல்லைங்க... பலர் !!
இதுல ரிலையன்ஸ் நிறுவனத்தோட வரலாறைப் பாத்தா அதிர்ந்து போயிடுவோம் :(
பணியிடத்தில் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அதைவிட அவசியம்.
Post a Comment