Monday, April 13, 2009

பெஞ்சமின் பட்டன் - சினிமா விமர்சனம்


The Curious Case of Benjamin Button (2008)
Bradd Pitt, Cate Blanchetகொஞ்ச மாசமா நம்ம லிஸ்ட்ல நிலுவைல இருந்த படம். இப்பப் பாக்கலாம் அப்பறம் பாக்கலாம்னு ஒரு வழியா பாக்க சந்தர்ப்பம் அமைஞ்சுது. '20கள்ல அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதின ஒரு சிறுகதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். முழுக்கற்பனை. இயல்பு வாழ்க்கைல நடக்க சாத்தியமே இல்லாத ஒரு சம்பவத்தை கற்பனை பண்ணி "இப்பிடி நடந்தா எப்படி இருக்கும்?" டைப் கதை.


உலகப் போர் முடிஞ்சு உலகமே அதைக் கொண்டாடற சமயத்துல ஒரு குழந்தை பிறக்குது. பிரசவத்துல தாய் மரணம். அப்பாவுக்கு குழந்தையப் பாக்கவே பிடிக்கல. பிறக்கும்போதே ஒரு 80 வயசுக்குண்டான கிழத்தோற்றம். தோல் சுருங்கி, கண்ல புரையோடி, காது கேக்காம, எலும்பெல்லாம் வலு இல்லாம....... வேறென்ன பண்ணுவான் பணக்காரத் தகப்பன்? குழந்தையை ஒரு காப்பகத்துல விட்டுட்டு ஓடிடறான். 'தெய்வ மகன்' படம் ஞாபகம் வந்துது. ஆனா கதை அது இல்ல.


குழந்தையோட வளர்ச்சி வினோதமா, காலத்தை எதிர்த்து, முடிவுல தொடங்கி, தொடக்கத்துல முடியுது. (அது_சரி : விசு... விசு...) 80 வயசு தாத்தாவா இருந்தவன்(ர்?) கொஞ்சம் கொஞ்சமா இளமையாகி கடைசில.... கடைசில... ஒரு கைகுழந்தையா வளர்ந்து (!!) கண்ணை மூடறான். சிக்கலான ப்ளாட். ஆனா இதுக்கு திரைக்கதை எழுதுனவங்க பாக்கியராஜ் கிட்ட அசிஸ்டெண்டா இருந்துருப்பாங்க போல. நீரோட்டம் மாதிரி க்ளீனா இருக்கு. கதையை ஆரம்பிச்சு, பெஞ்சமினோட பொண்ணை (அவதான் அவன் பொண்ணுன்னு தெரியாமயே) வெச்சே ஒரு டைரியைப் படிக்க வெச்சு, கடைசிப் பகுதியை பெஞ்சமினோட மனைவி வழியா சொல்ல வெச்சு... ரொம்ப மெனக்கெட்டுருக்காங்க.


படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி அது பல கை மாறி, கடைசியா எடுத்து முடிச்சு வெளி வர 20 வருஷம் ஆயிருக்கு. ஒருவகைல பாத்தா டிலே ஆனது நல்லதுதான் போல. இல்லாட்டி டெக்னாலஜி உதவியோட மேக்கப் எல்லாம் இவ்வளவு தத்ரூபமா இருந்துருக்குமாங்கறது சந்தேகந்தான். ப்ராட் பிட் நல்ல நடிப்பு. Fall of the Legend பாத்ததுல இருந்தே எனக்கு ப்ராட் பிட்டை ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துலயும் அவனும் காதலியும் காலப்பாதைல எதிர் எதிர் திசைல பயணம் பண்ணி நடுவுல கிட்டத்தட்ட சம வயசுல கல்யாணம் பண்ணி, பெண் குழந்தை பிறக்குது. அதே எதிர் ஓட்டத்துல தன் மகளுக்கு தான் தகப்பனா இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணி குடும்பத்துக்கு வேணுங்கற ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு வீட்டை விட்டு வெளியேறரது, உண்மையான அப்பாவை சந்திக்கறது, வளர்ப்பு அம்மா கிட்ட பாசம்னு ப்ராட் பிட் அமைதியா அனுபவிச்சு நடிச்சுருக்காரு. பாலே டேன்சரா வர கேட் ப்ளான்ஷெவும் அதுக்கு ஈடு குடுத்து நல்ல நடிப்பு. பல இடங்கள்ல வசனங்கள் ஷார்ப்.


ரொம்ப போட்டுக் குழப்பாம தெளிவா எடுத்திருந்தாலும் கேரக்டர்க கொஞ்சம் அதிகந்தான். படத்தோட முடிவுல ஒரு மோண்டாஜ்ல எல்லாக் கேரக்டர்களையும் காட்டி ஒரு சின்ன செய்தி (கார்டு போடாம) சொல்றாங்க.


இந்தப் படத்தை பாத்து முடிச்சதும், நம்ம ஸ்வாமி ஓம்கார் அவரோட அகோரிகள் பத்தின இடுகைகள்ல இதே மாதிரி ஒரு வினோத நிகழ்வைப் பத்தி எழுதியிருந்தது ஞாபகம் வந்துது. அதுலயே அந்த வினோத வழக்கோட சுட்டியும் குடுத்திருந்தார். அந்த இடுகைக்கான சுட்டியும், வழக்கைப் பற்றிய சுட்டியும் கீழே :


http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html


http://en.wikipedia.org/wiki/Bhawal_case

15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஸ்ரீதர் said...

என்ன அதிசயம்!!!நான்தான் முதல் பின்னூட்டம்.

ஸ்ரீதர் said...

படம் பாத்தாச்சு.நல்ல விமர்சனம்.

Senthil said...

i am going to watch
thanks

அறிவிலி said...

படம் பாக்கற ஆசைய தூண்டிட்டீங்க.
பாத்துட்டு திரும்ப வரேன்.

பழமைபேசி said...

அண்ணா, அலுமினியப் பறவை சவாரிக்கு நேரமாச்சு, சாயுங்காலம் படிக்கிறேன்.

’டொன்’ லீ said...

ஒஸ்காரை தவற விட்ட படம்....:-(

Mahesh said...

நன்றி ஸ்ரீதர்....

நன்றி Senthil...

நன்றி அறிவிலி....

நன்றி மணியாரே...

நன்றி டொன் லீ....

பழமைபேசி said...

அண்ணே, அந்த சுட்டிகளுக்கு நன்றிங்க!!!

கிரி said...

//இதுக்கு திரைக்கதை எழுதுனவங்க பாக்கியராஜ் கிட்ட அசிஸ்டெண்டா இருந்துருப்பாங்க போல//

உண்மையாகவே பாக்கியராஜ் படம் திரைகதை தெளிவா இருக்கும்..ரொம்ப சிம்பிள்

//எடுத்து முடிச்சு வெளி வர 20 வருஷம் ஆயிருக்கு.//

அடேங்கப்பா!

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதுக்கெல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்கமாட்டீங்கதானே..

கண்டிப்பா படிப்பேன்.. நம்புங்க.. இன்னொரு நாள் மொத்தமா.!

tamil cinema said...

ஆங்கில படங்களை பார்க்கும் எண்ணத்தை தூண்டி விடுகின்றன உங்கள் பதிவுகள்.
ஒருமுறை வந்தால் மீண்டும் வரத்தூண்டும் புக்மார்க் திரட்டி

nellaitamil

MayVee said...

aNTHA book peyar enathu???
kadhai pathithal nalla irukkum pol irukku

Mahesh said...

நன்றி கிரி....

நன்றி ஆதி....

நன்றி நெல்லைதமிழ்...

நன்றி mayvee.... the book is in the same name...

ஸ்வாமி ஓம்கார் said...

சினிமா விமர்சனம் எழுதும் பொழுது என்னை பத்தி யோசிச்சிருக்கீங்க பாருங்க. :)

எதுக்கும் டாக்டரை பாருங்க :)
வித்தியாசமான கதைதான் போல.

யோகியின் சுயசரிதை புத்தகம் படிச்சதுண்டா? அதில் இரண்டாம் உலகப்போர் பற்றி ஒரு கருத்து இருக்கும் தெரியுமா?

குசும்பன் said...

// ப்ராட் ”பிட்” நல்ல நடிப்பு.//

அப்ப பார்த்துடவேண்டியதுதான்:)))


//குழந்தையோட வளர்ச்சி வினோதமா, காலத்தை எதிர்த்து, முடிவுல தொடங்கி, தொடக்கத்துல முடியுது. //

பின்நவீனத்துவபடமா?