ஸ்விஸ் நாடாளுமன்றம் - வெளிய செஸ் விளையாட்டு
ஜெனீவா தொடர்பான எனது பிற இடுகைகள்:
ஜெனீவா !!
ஜெனீவா. போன ஞாயித்துக்கிழமை. எப்பாடு பட்டாவது சீக்கிரம் எந்திரிச்சு எங்கயாவது போய் ஒரு ஃபோட்டோ செஷன் போட்டுடணும்னு தீர்மானித்தோட தூங்கியுங் கூட காலைல எழுந்திருக்கும்போது மணி 8. இதுல வேற பகல் நேரத்தை மிச்சம் பண்றோம்னு அதிகாலை 2 மணிக்கு 3 மணின்னு கடிகாரத்தை திருப்பி வெக்கச் சொன்னது மறந்து போச்சு. ஹோட்டல் ரூம் ஜன்னல் வழியாப் பாத்தா மழை இப்பவோ அப்பவோன்னு வர மாதிரியே இருந்துது. "இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்"ன்னு நினைச்சுக்கிட்டு பெர்ன் (Berne) வரை போய் வரலாம்னு முடிவு பண்ணினேன். அப்பிடி இப்பிடி கிளம்பும்போது மணி 9:30 ஆயிடுச்சு. 10:15 ட்ரெய்னைப் புடிச்சு 12 மணிக்கு போய்ச் சேந்தேன்.
பெர்ன் ஸ்விஸ்ஸோட தலைநகரம். தம்மாத்தூண்டு ஊரு. மொத்த ஊரையும் நடந்தே சுத்தி வந்துடலாம். யுனெஸ்கோ இதை Heritage Cityன்னு சொல்லி பாதுகாக்குது. ரொம்ப அழகான ஊர். "ஆர்" நதி ஒரு பெரிய "U" மாதிரி வளைஞ்சு ஓடுது. நதியோட "U" டெல்டால பெர்ன். ஸ்விஸ் பாராளுமன்றம் இங்கதான் இருக்கு. மொத்தமா மூணே மூணு தெரு. குறுக்க இணைப்புச் சாலைகள். இதுல நிமிஷத்துக்கு ஒரு ட்ராம். அட்டகாசம் தாங்கலை. சாலைகள்ள அங்கங்க செயற்கை நீறூற்றுக. நல்ல கலை நயமிக்க சிலைகளோட.
: : : : : பிரதான சாலைக்கு நடுவுல Zytglogge பெரிய்ய்ய்ய்ய சிக்கலான 24 மணி நேர கடிகார கோபுரம். மணி நிமிஷம் மட்டுமில்லாம சூரியன், சந்திரன் இருக்கும் திசை, மாசம், நாள், 12 ராசிகள்ல சூரியனும் சந்திரனும் இருக்கற ராசி, தேய்பிறையா வளர்பிறையா... எல்லாம் காமிக்குது. இவ்வளவு சிக்கலான இயந்திர கடிகாரத்தை 12வது நூற்றாண்டுலயே செஞ்சு அது இன்னும் ஓடிக்கிட்டும் இருக்கறது ஆச்சரியமா இருக்கு.
: : : : : ஒரு 3 மணி நேரம் ஊரெல்லாம் சுத்தி முடிச்சுட்டு முக்கியமான இடத்துக்கு போனேன். நம்ம ஐன்ஸ்டைன் ம்யூசியம். இயற்பியல் / வானவியல் ஆர்வலர்களோட கடவுள் ஐன்ஸ்டைன். பிறப்பால யூதர். மேல்படிப்புக்காக ஸுரிக் வந்து அப்பறம் பெர்ன்ல செட்டில் ஆயிட்டாரு. பெர்ன்லதான் உலகப் புகழ் பெற்ற "சார்பியல் தத்துவம் (Theory of Relativity)" வெளியிட்டாரு.
ஒளி துகள்களால் ஆனதுன்னு சொல்லி ஃபோட்டானை அறிமுகப்படுத்திய பிறகு க்வாண்டம் இயற்பியல் பிறந்தது. சார்பியல் தத்துவத்தை எல்லாம் விளக்கறதுக்கு எனக்கு அறிவு கம்மி. அது ரொம்பவே ஒரு சிக்கலான தியரி. சுருக்கமா சொன்னா ஒளியின் வேகம் மாறவே மாறாதது. அதுக்கு பதிலா காலம், தூரம் (time & distance) இது ரெண்டும் கூட குறைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். ஒளிவேகத்துல பிரயாணம் பண்ணினா தூரம் அதிகமாக அதிகமாக காலம் குறையும். ஆனா அதுவே பூமி மட்டத்துல நேர் எதிர். நாம அதிகம் பயணம் பண்ணினா அதிக நேரம் ஆகும்.
இந்த தத்துவத்தை ஒரு சாதாரண பந்தோட இயக்கத்தை வெச்சு ஒரு ஒலி-ஒளி படமா விளக்கியிருந்தது மூணு நாலு தடவை பாத்ததும் எனக்கே புரிஞ்சுடுச்சு. அப்பறம், ஈர்ப்பு விசையால ஒளி வளையும்னு கண்டுபுடிச்சு, அதை ஒரு சூரிய கிரகணத்தன்னிக்கு நிருப்பிச்சுருக்காரு. அந்த அடிப்படைல மெர்குரி கிரகத்தோட precession (இதுக்கு தமிழ் என்னங்க?) 100 வருஷத்துல 42.98 ஆர்க்செகண்ட் (1/360 பாகை) மாறுபடுதுன்னு கணக்கு போட்டு சொன்னாராம். நரி வலம் போனாலும் இடம் போனாலும் நம்மளைக் கடிக்காமப் போனா சரின்னு இருக்கற என்னை மாதிரி ஆளுக்கு இதோட முக்கியத்துவமோ விளைவோ புரியல. எல்லாத்தையும் விட பருப்பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பை (e=mc2) கண்டுபுடிச்சு வெளியிட்டது பெர்ன்லதான்.
காலமும் தூரமும் பார்வையாளனோட இருப்பைப் பொறுத்து மாறுபடும்னு சொன்னதை எதிர்த்தவங்க எத்தனையோ பேர். ஆனாலும் அதை மறுக்க முடியாம அதுதான் இன்னிய க்வாண்டம் இயற்பியலோட அடிப்படையா இருக்கு. காலப்பரவல் (Time Dilation), தூரக்குறைவு (Distance Contraction) இது ரெண்டும் கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா அறிவியல் உலகத்தையே புரட்டிப் போட்ட தத்துவங்கள்.
அவரோட பிறப்பு, படிப்பு, வாழ்க்கை எல்லாம் விளக்கமா இருக்கு ம்யூசியத்துல. பல காதல்கள், மனைவிகள், காணாமப் போன முதல் பெண்குழந்தை உட்பட. சின்ன வயசுல தலைவர் என்ன அழகா ஹேண்ட்சமா இருக்காரு. பொண்ணுக சுத்தி சுத்தி வந்துருக்கும்.
வாயப் பொளந்துக்கிட்டு ம்யூசியத்துல மட்டுமே சுத்தமா 4 மணி நேரம் செலவழிச்சேன். என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறினதுல ரொம்ப சந்தோஷத்தோட திரும்ப பார்லிமெண்ட் பக்கம் வந்து கொஞ்சம் ஃபோட்டோக்கள் எடுத்துட்டு மறுபடி ட்ரெய்ன் புடிச்சு 10 மணி சுமாருக்கு ஜெனீவா திரும்பினேன். மறக்க முடியாத நாள்.
வால் : எந்தக்காலத்துலயோ யாரொ ஒரு ஆளு இந்த ஊர்ல ஒரு கரடிய கொன்னுட்டாராம். அதுனாலயே இந்த ஊருக்கு பேரு "பெர்ன்" (ஜெர்மன்ல கரடின்னு அர்த்தம் வர மாதிரி) ஊருக்குள்ள எங்க பாத்தாலும் கரடி சிலை, படம், பொம்மை........ ஊர் நடுவுல ஒரு பெரிய குழி வெட்டி சின்னச் சின்ன குகைக, மரமெல்லாம் வெச்சு ரெண்டு கரடிகளையும் விட்டுருக்காங்க. அது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்.
>
வேலைப்பளு அதிகமா இருந்ததால கடைய 1 வாரமா திறக்க முடியல. (திறந்திருந்தா மட்டும் கூட்டம் அலைமோதுதாக்கும்??? ) இனிமே இப்பிடித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ப்ராஜெக்ட் முடிவை நெருங்கிக்கிட்டுருக்கு. முடிஞ்சபோது எழுதறேன். (நீயெல்லாம் அடிக்கடி எழுதலைன்னு யார் அழுதா?? எதுக்கு இந்த பில்டப்பெல்லாம் ?ம்ம்ம்...?? )
நான் எடுத்ததுல எனக்குப் புடிச்ச ஃபோட்டோ ஹி.. ஹி..பெர்ன் ஸ்விஸ்ஸோட தலைநகரம். தம்மாத்தூண்டு ஊரு. மொத்த ஊரையும் நடந்தே சுத்தி வந்துடலாம். யுனெஸ்கோ இதை Heritage Cityன்னு சொல்லி பாதுகாக்குது. ரொம்ப அழகான ஊர். "ஆர்" நதி ஒரு பெரிய "U" மாதிரி வளைஞ்சு ஓடுது. நதியோட "U" டெல்டால பெர்ன். ஸ்விஸ் பாராளுமன்றம் இங்கதான் இருக்கு. மொத்தமா மூணே மூணு தெரு. குறுக்க இணைப்புச் சாலைகள். இதுல நிமிஷத்துக்கு ஒரு ட்ராம். அட்டகாசம் தாங்கலை. சாலைகள்ள அங்கங்க செயற்கை நீறூற்றுக. நல்ல கலை நயமிக்க சிலைகளோட.
: : : : : பிரதான சாலைக்கு நடுவுல Zytglogge பெரிய்ய்ய்ய்ய சிக்கலான 24 மணி நேர கடிகார கோபுரம். மணி நிமிஷம் மட்டுமில்லாம சூரியன், சந்திரன் இருக்கும் திசை, மாசம், நாள், 12 ராசிகள்ல சூரியனும் சந்திரனும் இருக்கற ராசி, தேய்பிறையா வளர்பிறையா... எல்லாம் காமிக்குது. இவ்வளவு சிக்கலான இயந்திர கடிகாரத்தை 12வது நூற்றாண்டுலயே செஞ்சு அது இன்னும் ஓடிக்கிட்டும் இருக்கறது ஆச்சரியமா இருக்கு.
: : : : : ஒரு 3 மணி நேரம் ஊரெல்லாம் சுத்தி முடிச்சுட்டு முக்கியமான இடத்துக்கு போனேன். நம்ம ஐன்ஸ்டைன் ம்யூசியம். இயற்பியல் / வானவியல் ஆர்வலர்களோட கடவுள் ஐன்ஸ்டைன். பிறப்பால யூதர். மேல்படிப்புக்காக ஸுரிக் வந்து அப்பறம் பெர்ன்ல செட்டில் ஆயிட்டாரு. பெர்ன்லதான் உலகப் புகழ் பெற்ற "சார்பியல் தத்துவம் (Theory of Relativity)" வெளியிட்டாரு.
ஒளி துகள்களால் ஆனதுன்னு சொல்லி ஃபோட்டானை அறிமுகப்படுத்திய பிறகு க்வாண்டம் இயற்பியல் பிறந்தது. சார்பியல் தத்துவத்தை எல்லாம் விளக்கறதுக்கு எனக்கு அறிவு கம்மி. அது ரொம்பவே ஒரு சிக்கலான தியரி. சுருக்கமா சொன்னா ஒளியின் வேகம் மாறவே மாறாதது. அதுக்கு பதிலா காலம், தூரம் (time & distance) இது ரெண்டும் கூட குறைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். ஒளிவேகத்துல பிரயாணம் பண்ணினா தூரம் அதிகமாக அதிகமாக காலம் குறையும். ஆனா அதுவே பூமி மட்டத்துல நேர் எதிர். நாம அதிகம் பயணம் பண்ணினா அதிக நேரம் ஆகும்.
இந்த தத்துவத்தை ஒரு சாதாரண பந்தோட இயக்கத்தை வெச்சு ஒரு ஒலி-ஒளி படமா விளக்கியிருந்தது மூணு நாலு தடவை பாத்ததும் எனக்கே புரிஞ்சுடுச்சு. அப்பறம், ஈர்ப்பு விசையால ஒளி வளையும்னு கண்டுபுடிச்சு, அதை ஒரு சூரிய கிரகணத்தன்னிக்கு நிருப்பிச்சுருக்காரு. அந்த அடிப்படைல மெர்குரி கிரகத்தோட precession (இதுக்கு தமிழ் என்னங்க?) 100 வருஷத்துல 42.98 ஆர்க்செகண்ட் (1/360 பாகை) மாறுபடுதுன்னு கணக்கு போட்டு சொன்னாராம். நரி வலம் போனாலும் இடம் போனாலும் நம்மளைக் கடிக்காமப் போனா சரின்னு இருக்கற என்னை மாதிரி ஆளுக்கு இதோட முக்கியத்துவமோ விளைவோ புரியல. எல்லாத்தையும் விட பருப்பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பை (e=mc2) கண்டுபுடிச்சு வெளியிட்டது பெர்ன்லதான்.
காலமும் தூரமும் பார்வையாளனோட இருப்பைப் பொறுத்து மாறுபடும்னு சொன்னதை எதிர்த்தவங்க எத்தனையோ பேர். ஆனாலும் அதை மறுக்க முடியாம அதுதான் இன்னிய க்வாண்டம் இயற்பியலோட அடிப்படையா இருக்கு. காலப்பரவல் (Time Dilation), தூரக்குறைவு (Distance Contraction) இது ரெண்டும் கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா அறிவியல் உலகத்தையே புரட்டிப் போட்ட தத்துவங்கள்.
அவரோட பிறப்பு, படிப்பு, வாழ்க்கை எல்லாம் விளக்கமா இருக்கு ம்யூசியத்துல. பல காதல்கள், மனைவிகள், காணாமப் போன முதல் பெண்குழந்தை உட்பட. சின்ன வயசுல தலைவர் என்ன அழகா ஹேண்ட்சமா இருக்காரு. பொண்ணுக சுத்தி சுத்தி வந்துருக்கும்.
வாயப் பொளந்துக்கிட்டு ம்யூசியத்துல மட்டுமே சுத்தமா 4 மணி நேரம் செலவழிச்சேன். என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறினதுல ரொம்ப சந்தோஷத்தோட திரும்ப பார்லிமெண்ட் பக்கம் வந்து கொஞ்சம் ஃபோட்டோக்கள் எடுத்துட்டு மறுபடி ட்ரெய்ன் புடிச்சு 10 மணி சுமாருக்கு ஜெனீவா திரும்பினேன். மறக்க முடியாத நாள்.
வால் : எந்தக்காலத்துலயோ யாரொ ஒரு ஆளு இந்த ஊர்ல ஒரு கரடிய கொன்னுட்டாராம். அதுனாலயே இந்த ஊருக்கு பேரு "பெர்ன்" (ஜெர்மன்ல கரடின்னு அர்த்தம் வர மாதிரி) ஊருக்குள்ள எங்க பாத்தாலும் கரடி சிலை, படம், பொம்மை........ ஊர் நடுவுல ஒரு பெரிய குழி வெட்டி சின்னச் சின்ன குகைக, மரமெல்லாம் வெச்சு ரெண்டு கரடிகளையும் விட்டுருக்காங்க. அது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்.
>
வேலைப்பளு அதிகமா இருந்ததால கடைய 1 வாரமா திறக்க முடியல. (திறந்திருந்தா மட்டும் கூட்டம் அலைமோதுதாக்கும்??? ) இனிமே இப்பிடித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ப்ராஜெக்ட் முடிவை நெருங்கிக்கிட்டுருக்கு. முடிஞ்சபோது எழுதறேன். (நீயெல்லாம் அடிக்கடி எழுதலைன்னு யார் அழுதா?? எதுக்கு இந்த பில்டப்பெல்லாம் ?ம்ம்ம்...?? )
ஜெனீவா தொடர்பான எனது பிற இடுகைகள்:
ஜெனீவா !!
6 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
ம்ம்.. நடக்கட்டும் .. விளக்கம் நல்லா இருக்கு
அண்ணே மகேஷ் அண்ணே... இது மீள் பதிவாண்ணே... முன்னமே படிச்ச மாதிரி இருக்கண்ணே...
/
ஊர் நடுவுல ஒரு பெரிய குழி வெட்டி சின்னச் சின்ன குகைக, மரமெல்லாம் வெச்சு ரெண்டு கரடிகளையும் விட்டுருக்காங்க. அது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்.
/
டூரிஸ்ட்டுங்களை அதுக்குள்ள (கரடிங்ககிட்ட) அனுப்பிடுவாங்களோ??
:))
உங்க பயண அனுபவங்களை நீங்க தொகுக்கலாம் மகேஷ்ஜி. நல்லா வரும்.
வால்’ல நீங்க சொன்ன கரடி மேட்டரை நம்மூரோட பொருத்திப் பார்த்தேன்.
ஊரு பூரா மனுஷ சிலைகள்தான் வைக்கணும்!
நம்மூர்ல காந்தியக் கொன்னோம், இந்திராவைக் கொன்னோம், ராஜீவைக் கொன்னோம் அதுனால அவங்க சிலைகளோ!!!
(ச்ச்ச்ச்சே!)
வாவ்...அழகான இடத்தை பற்றி அழகான கட்டுரை. படங்களும் வழமை போல் அழகு.
அங்க ஒரே மப்பும் மந்தாரமுமா..(மழை..?). இஞ்ச ஒஸ்லோவில நல்ல வெயில்....:-)
Post a Comment