Monday, March 30, 2009

செப்பு மொழிகளும்.... சிந்தனையும்.....நம்ம நண்பன் ஒருத்தன். ஸ்கூல்ல தமிழ்ல எப்பவும் அவந்தான் ஃபஸ்ட். தமிழ் நல்லா வருதுங்கறதால எட்டாவதுல தமிழ் மீடியம் போயிட்டான். நான் இங்லீஷ் மீடியம். நாங்க லீவுல எங்க தாத்தா கிட்ட கொஞ்ச நாள் ஹிந்தி கத்துக்க போனபோது என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவான். அவனுக்கு பயந்தே நானும் அப்பிடி இப்பிடி ஓபியடிச்சுருவேன். ஸ்கூல் படிப்பு முடிஞ்சு பாலிடெக்னிக், காலேஜ்னு வாழ்க்கை வேற மாதிரி போச்சு. பிறகு வேலை தேட ஆரம்பிக்கும்போதுதான் தெரிஞ்சுது நமக்கும் இங்கிலீசுக்கும் நடுவுல ஒரு ஒடஞ்சு போன ராமர் பாலம் கூட இல்லைன்னு.

நம்ம நண்பன் தமிழ் வெறியனாகி தமிழ் முதுகலை முடிச்சு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி டாக்டரேட் வாங்கிட்டாரு. நான் வேலை தேடி நொந்து போய் டெல்லி போனபோதுதான் மற்ற மொழிகளோட அவசியம் தெரிஞ்சது. ஆஹா... இந்தக் காட்டுக்குள்ளயெல்லாம் தாக்குப் பிடிக்கணும்னா இந்த மூக்குல இங்கிலீசும் அந்த மூக்குல ஹிந்தியுமா மூச்சு விட்டாகணும்னு புரிஞ்சுது. கொஞ்சம் வீக்கா இருந்தாலும் பேஸ்மெண்ட்னு ஒண்ணு இருந்துது. அப்பிடியே புடிச்சு பிக்கப் பண்ணி குட்டிக்கரணம் போட்டு ஓரளவுக்கு கத்துக்கிட்டம்னு வைங்க. சொல்ல வந்தது என்னன்னா, நெல்லூர் தாண்டிட்டா அப்பறம் சோடா உப்பு போட்டாக் கூட தமிழ் பருப்பு வேகறது கொஞ்சம் கஷ்டம்.

நம்ம நண்பர் முற்பட்ட வகுப்புங்கறதாலயும், கொஞ்சம் ரோசக்கார ஆளுங்கறதாலயும் வேலை சுலபமா கிடைக்கல... கிடைச்சதயும் கொஞ்ச நாள்லயே எதாவது காரணத்துக்காக வீசியெறிஞ்சுடுவாரு. இன்னிக்கு அவரு எங்க ஊர் உடுமலைலயே சின்னதா ஜவுளி வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்காரு. தமிழ் பேரவை, சங்கம் எல்லாம் நடத்தி அதுல இருந்தவங்க எல்லாம் வெளியூரு வெளிநாடுன்னு போயிட்டாங்க. இப்ப ரொம்ப நொந்து வெந்து மருகறாரு. இப்பிடி வாழ்க்கையை வீணடிச்சுட்டமேன்னு. வீண் அப்பிடின்னு சொல்ல முடியாது. ஆனா பொருளாதாரா ரீதில அவ்வளவு தெம்பா இல்ல. அதுக்காக தமிழ் மட்டும் படிச்சவன் கதியெல்லாம் அதோகதின்னு சொல்ல வரல. என்னமோ இவனுக்கு சரியா அமையல. ஆனா மத்த மொழிகளைக் கத்துக்கிட்டுருந்தா அவனோட எல்லைகள் கொஞ்சம் விரிவடைஞ்சுருக்கும். கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருக்கும். அவனுக்கான பாதைகள் இன்னும் சில திறந்திருக்கும்.

போன தலைமுறைல தாய்மொழி மட்டுமே தெரிஞ்சவங்க ஒண்ணும் குறைஞ்சு போயிடல. ஆனா இப்ப உள்ள போட்டி மிகுந்த உலகத்துல, பொருளாதாரத்துல நம்மள உயர்த்திக்க போராட வேண்டிய கட்டாயத்துல இருக்கும்போது இன்னொரு மொழி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. இதை மறுக்க முடியுமா? இன்னொண்ணு. மத்த மொழிகளைக் கத்துக்கும்போது நம்ம தாய்மொழியோட வளமையும் பெருமையும் இன்னும் நல்லா புரியும்.

மேல சொன்ன நண்பனோட நிலை பானைல ஒரு சோறுதான். உங்க வட்டத்துலயே இது மாதிரி பல பேருக இருக்கலாம். மொழிப்பற்று அவசியந்தான். நம்ம மொழியை காப்பாத்தி, சீர்படுத்தி, மேலும் வளப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு போற கடமை எல்லாருக்கும் இருக்கு. ஒவ்வொரு மொழியும் தாய் மாதிரிதான். அதுனாலதானே அதை "தாய்" மொழிங்கறோம். எங்க அம்மாதான் நல்ல அம்மா மத்த அம்மாக்கள் எல்லாம் மோசம்னு சொல்லிட முடியுமா? அதே மாதிரிதான் நான் மொழியைப் பாக்கறேன். இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் விடுத்துப் பாத்தாக் கூட மொழிங்கறது ஒரு கருவி. மனிதர்களை இணைக்கற கயிறு. அதோட அந்த மக்களோட கலாச்சாரத்தை உள்ளடக்கி இருக்கற கருவூலம். அதைப் பேசற மக்களோட இயல்புகள், உணர்வுகள், எண்ணம் எல்லாம் அதுல பொதிஞ்சு இருக்கு. அது ஒரு முழுமையான கட்டமைப்பு.

ஒரு மொழியைக் கத்துக்கறது இன்னொரு மனிதனா இருக்கறதுக்கு சமம்னு காந்தி சொன்னது அதனாலதான். வேலை கிடைக்கறது, பொருளாதார உயர்வு இதெல்லாம் உபரிப் பயன்கள்தான். மனிதனுக்கு நடக்க கால்கள் இருக்கு. ஆனா தன் கூட்டை விட்டு வெளிய வந்து பறக்கணும்னா அதுக்கு ரெக்கைகள் மொழிகள்தான். நடந்து கடக்கற நேரம் மற்றும் பிரயத்தனத்தையும் பறக்கறதுல செலவழிச்சா எவ்வளவு தூரம் போகலாம்? என் சொந்த அனுபவத்துல, இன்னொரு மொழியைக் கத்துகறதுல இருக்கற பயன்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அது ஒரு தனி சுகம், ஜாலி, மகிழ்ச்சி. இன்னிக்கு இணையத்தோட புண்ணியத்துல உலகம் ஒரு கிராமம்கற அளவுக்கு சுருங்கியாச்சு. அந்த கிராமத்துக்குள்ள நாம ஒரு கூண்டுக்கிளியா இருக்கறது மடத்தனமோன்னு எனக்குத் தோணுது.

என்னுடைய அப்பாவுக்கு கிட்டத்தட்ட 10 இந்திய மொழிகளும், ஒவ்வொண்ணுலயும் 2,3 வட்டார வழக்குகளும் தெரியும். அவரோட நண்பர்கள் பலர் வியாபார விஷயமா வெளி மாநிலங்களுக்கு போகும்போது மொழிக்காகவே அவரையும் கூட்டிக்கிட்டுப் போவாங்க. அவரோட இன்ஸ்பிரேஷனோ என்னவோ நானும் பல இந்திய மொழிகளையும், சில வெளிநாட்டு மொழிகளையும் எழுத, படிக்க, பேசக் கத்துக்கிட்டேன். சிலதுல சர்டிஃபிகேட்களும் வாங்கினேன். சிலது ஜாலிக்காக படிச்சாலும் சரியான இடத்துல அதனுடைய உபயோகம் கணகூடாத் தெரியும்போது பிரமிப்பா இருக்கு. அது அனுபவப்பட்டவங்களுக்கு நல்லாவே புரியும். கிணத்துத்தவளையா இருக்கறதுலயும் ஒரு சுகம் இருந்தாலும், இந்த சுகத்தோட ஒப்பிடும்போது அது ரொம்ப சாதாரணமாத் தெரியுது.

தாய் மொழியைப் போற்றணும். காக்கணும். தப்பே இல்லை. அது நம்ம கடமை. ஆனா மத்த மொழியைப் பேசக் கூடாது, கத்துக்கக் கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்னு புரியல. இதெல்லாம் ஒரு தனிமனித உரிமை. நாம எப்பிடி அதுல கட்டுப்பாடுகளைத் திணிக்க முடியும்னு புரியல.

இன்னிக்கி ஜெனிவா உள்ளூர் செய்தித்தாள்ல ஒரு செய்தி. ஸ்விஸ்ல இருக்கற "வெர்பியர்"ங்கற மாகாணத்துல "ஃப்ரென்ச் மட்டும்தான் பேசுவோம்"னு இயக்கம் ஆரம்பிச்சு அதுக்கு அரசாங்கமும் ஊக்கம் குடுக்குதாம். எனக்கு சிரிப்புதான் வந்தது. மேலை நாடு மேலை நாடுங்கறோம். அவங்களும் இந்தக் காலத்துல இவ்வளவு குறுகிய மனப்போக்கோட இருக்காங்களேன்னு. இந்த செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்.

தாய் மொழியைப் பெருமைப் படுத்துவோம். மற்ற மொழிகளை கத்துக்க முடியாட்டாலும், சிறுமைப் படுத்தாமல் இருப்போம். அடுத்த மொழியை இழிவு படுத்துவது நண்பனோட தாயை இழிவு படுத்தறதுக்கு சமம்.படிங்க... சிரிங்க.... கார்ட்டூனுக்கு நன்றி : கார்ட்டூன்ஸ்டாக்.காம்

29 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வெண்பூ said...

அழகா சொல்லியிருக்கீங்க மஹேஷ்.. ஹிந்தி தெரியாம நார்த்ல ஓட்டுறது ரொம்ப கஷ்டம்.. தமிழ் புடிக்கும்ன்றதுக்காக மத்த மொழிகளை ஒதுக்கணும்னு அவசியம் இல்லை, சரியா சொன்னீங்க..

நட்புடன் ஜமால் said...

மொழிகள் பல தெரிந்தால் தான் நல்லது

ஆனால் சரியாக தெரிந்து வைத்திருக்கனும்.

நல்ல பதிவு மஹேஷ் ...

எம்.எம்.அப்துல்லா said...

வெரிகுட்...வெரிகுட்
:)

Mahesh said...

நன்றி வெண்பூ.... இப்பல்லாம் ஃபஷ்டா வந்துடறீங்க... பதிவு போடறதுல கொஞ்சம் சுணங்கிட்டீங்களே? எழுதுங்கண்ணே...

நன்றி ஜமால் பாய்... நீங்க சொல்றதும் சரி... மொழியை சரியாக் கத்துக்கணும்..

நன்றி அப்துல்லா.... வெரிகுட் :)

narsim said...

தேவையான அருமையான பதிவு மகேஷ்..

ஒரு சிலர் தெளிவா எல்லா பாஷையிலும் கெட்ட வார்த்தைகளை தெரிஞ்சு வச்சுக்குவாங்க..

வெண்பூவின் கருத்தே.

’டொன்’ லீ said...

உண்மைதான் மகேஷ்...மொழிகள் தெரிந்திருப்பது நமக்கு தான் நல்லது..அதுக்காக நாம் நம் தாய்மொழியை இழக்க வேண்டியதில்லை

Mahesh said...

நன்றி நர்சிம்..... ஹா ஹா...

நன்றி டொன்லீ.....

ச்சின்னப் பையன் said...

மொழிகள் பல தெரிந்தால் தான் நல்லது...

ஸ்ரீதர் said...

nalla pathivu.

அறிவிலி said...

உண்மை மகேஷ். என் தலைவிதி டிப்ளமோ முடித்தவுடன் 18 வயதில் வட இந்தியா முழுவததும் அலைய வேண்டிய வேலை கிடைத்தது.

சுத்தமாக மொழி தெரியாமல் நான் பட்ட பாடு சொல்லி மாளாது. மொழி கற்றுக்கொள்வதற்காகவே வாரம் 2 சினிமா பார்த்ததுண்டு.இது நிச்சயமாக தாய் மொழி புறக்கணிப்பு அல்ல.

இலக்கியங்களை ரசித்து படிக்க தாய்மொழியே சாலச் சிறந்தது என்பது என் கருத்து...

அறிவிலி said...

ஆ... மறந்துட்டேன்...

அந்த கார்ட்டூன் செம மேட்ச்...
:-))))))))))))))

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்...

நன்றி ஸ்ரீதர்.....

நன்றி அறிவிலி.... ஆஹா... நீங்களும் டிப்ளமோவா? நம்ம கச்சி :)

Anonymous said...

பைக் ஒட்டக் கற்றுக் கொள்வது போல, காரோஅட்டக் கற்றுக் கொள்வதுபோலத்தான் இன்ன்னொருமொழியக் கத்துக் கொள்வதும். அது எப்படித் தாய்மொழிக்கு இழுக்காகும்?

குடுகுடுப்பை said...

சரியான அனுகுமுறை, ஐரோப்பாவில் மொழி வெறி,ஆங்கிலம் விழ்ங்கிவிட கூடாதென்ற பயம்.இல்லையென்றால் ஐரோப்பா ஒரே நாடாக கூட இருக்கலாம்.

இந்தியாவில் வட இந்திய அரசியல்படி இந்தியை புகுத்துதல் மூலம் மற்றவைகளை அழித்தல். உம் விரைவில் பஞ்சாபி உட்பட பல மொழிகளுக்கு சங்கு ஊதப்படும்.இந்தி திணிப்பு எதிர்ப்பினால் தமிழை ஆங்கிலம் விழுங்கும்.தமிழ்மொழி அழிவு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

அவரவர் தாய்மொழியோடு பிற மொழிகள் கற்றல் நல்லது.

எனக்கு தெரிந்து உறவினர் ஒருவர் தன் பெண்ணுக்கு தமிழ் தெரியாது என்று பெருமைப்படுவர்.

மொழிகள் அழிவதும், புதியன பிறப்பதும் தடுக்க முடியாது.

ஆயில்யன் said...

//போன தலைமுறைல தாய்மொழி மட்டுமே தெரிஞ்சவங்க ஒண்ணும் குறைஞ்சு போயிடல. ஆனா இப்ப உள்ள போட்டி மிகுந்த உலகத்துல, பொருளாதாரத்துல நம்மள உயர்த்திக்க போராட வேண்டிய கட்டாயத்துல இருக்கும்போது இன்னொரு மொழி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. இதை மறுக்க முடியுமா? இன்னொண்ணு. மத்த மொழிகளைக் கத்துக்கும்போது நம்ம தாய்மொழியோட வளமையும் பெருமையும் இன்னும் நல்லா புரியும்//

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க பாஸ் ! :)

Mahesh said...

நன்றி வேலன் அண்ணாச்சி... நல்லா சொன்னீங்க,..

நன்றி கு.கு..... அது மெல்லத்தான் சாகும்.... அதுக்குள்ள காப்பாத்திடலாம்...

நன்றி ஆயில்யன்.....

நசரேயன் said...

ம்ம்.. சொல்லுறீங்க கேட்டுகிறேன்

அது சரி said...

நல்ல விஷயம்...

வால்பையன் said...

//நெல்லூர் தாண்டிட்டா அப்பறம் சோடா உப்பு போட்டாக் கூட தமிழ் பருப்பு வேகறது கொஞ்சம் கஷ்டம்.//

அப்படியா!
சிங்கப்பூர், மலேசியாவுல நல்லா வேகுதாமே!

Mahesh said...

நன்றி நசரேயன்...

நன்றி அதுசரி....

நன்றி வால்... சிங்கப்பூர் மலேஷியா மொரிஷியஸ் இங்கெல்லாம் வேகும்... ஆனா வேலைக்கு ஆகாது...

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன திடீர்னு இப்பிடியொரு பதிவு..

நல்ல கருத்துகள்.! (நான் ஏற்கனவே இந்த சப்ஜெக்ட்ல கொஞ்சம் .. இல்ல ரொம்பவே வீக்குங்கள்ளா.. கடுப்புல படிச்சிக்கிட்டே வரும் போது உங்க அப்பாவுக்கு 10 மொழிகள்.. அவ்வ்வ்வ்.. டமால்.!)

ஆதிமூலகிருஷ்ணன் said...

இருந்தாலும்.. பப்பு வேகாது, வேலைக்காவாது போன்ற சொற்பதங்களை தவிர்க்கலாம். கொஞ்சம் நெருடுகிறது..

(காலையில்தான் ஒரு முக்கிய விழாவில் 'நீராரும் கடலுடுத்த..' பாடல் கேட்டு புல்லரித்திருந்தேன்)

Swarnarekha said...

தமிழ் மொழியை வளர்க்கணும்னா அதுக்கு கண்டிப்பா பிற மொழிகள் தெரிஞ்சுக்கணும்.....

நல்ல பதிவு....

அதை காட்டிலும்... 'செய்யறதுக்கு வேலையில்லன்னா வரக்கூடிய பிரச்சினைகள்' ன்னு 'ச்சின்னப் பையன்' போட்ட postல உங்க பின்னூட்டம் அருமையோ அருமை...

Mahesh said...

நன்றி ஆதி.... உங்க கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது..

நன்றி Swarnarekha....

harmys said...

hai mahesh..
i like it

Anonymous said...

உன் பார்வை என் மீது பட்டதும்
என் இதயம் குருதியில் கீதம் கலந்து
என் ஆன்மாவில் இனிய அதிர்வைஎய்தி என் இதயத்தின் நான்கு தடுப்புகளும் அழகிய வனமாய் மாறி இனிய தாலாட்டை தேகேம்மேங்கும் இதமாய் வருடி ,
என் மூக்கின் வழியே நான் விடும் மூச்சுகாற்றில் இசை வந்த அதிசயம்
முதன்முதலில் உணர்ந்தேன்.
என் இதயமெங்கும் அழகிய பூந்தோட்டமாக்கிய உன்னை ,
என்னுடன் வாழ
என் இதயத்தில் உனக்கோர்
வாழுமிடம் அமைத்தேன் .

Anonymous said...

VANAKKAM MAHESH..HAPPENED TO COME ACROSS YOUR BLOG TODAY. VERY GOOD POST..
SRINI
SHARJAH

கிரி said...

//நெல்லூர் தாண்டிட்டா அப்பறம் சோடா உப்பு போட்டாக் கூட தமிழ் பருப்பு வேகறது கொஞ்சம் கஷ்டம்//

ஆங்கிலம் தெரிந்தால் கூட பேச மாட்டாங்க :-(

//மத்த மொழிகளைக் கத்துக்கிட்டுருந்தா அவனோட எல்லைகள் கொஞ்சம் விரிவடைஞ்சுருக்கும். கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருக்கும். அவனுக்கான பாதைகள் இன்னும் சில திறந்திருக்கும்//

தாறுமாறா வழிமொழிகிறேன்

தாய் மொழி பற்று அவசியம் தான் அதற்காக மற்ற மொழிகளை நாம் புறக்கணித்தால் நமக்கு தான் நஷ்டம். எனக்கு ஹிந்தி கற்று கொள்ளவேண்டும் என்று ரொம்ப ஆசை, ஆனால் இன்னும் அது நிறைவேறவில்லை.

பல மொழிகளை கற்று கொள்ள ஆசை, ஆனால் அதற்குண்டான முயற்சிகளை தான் எடுப்பதில்லை நான் :-(

மகேஷ் நல்ல பதிவு..நன்கு விரிவாக எழுதி இருக்கிறீர்கள்.

ச.செந்தில்வேலன் said...

மகேஷ்,

நல்ல பதிவு. உங்கள் நண்பருக்கு நேர்ந்தது மிகவும் துன்பகரமானது. மொழிகள் பற்றிய உங்கள் பார்வை எனக்கும் ஓரளவு உள்ளது தான். பல மொழிகளைக் கற்கும் அதே நேரத்தில், தாய்மொழியையும் நாம் போற்றுகிறோமா என்பதை யோசிப்பது நல்லது.

நீங்க உடுமலைல எங்க? நானும் உங்கூரு தானுங்கோவ்..