Tuesday, March 3, 2009

மெகாத் தொடர்களும் மகா டைரக்டர்களும்


இந்த மெகாத்தொடர் எடுக்கற டைரடக்கருக எல்லாம் ஒரே அகடமில பயிற்சி எடுத்தவங்க போல. நம்மூர்லதான் எல்லா மொழிகள்லயும் மெகாத்தொடர், நெடுந்தொடர்னெல்லாம் மொக்கை போட்டு மெகாத் தொந்தரவு குடுக்கறாங்களோன்னு பாத்தா, இப்ப சிங்கப்பூர்ல லோக்கல் சேனல் "வசந்தம்"லயும் ஆரம்பிச்சுட்டாங்க. TRP பிச்சுக்கிட்டு போகுது.

அட... இதுவாவது சகவாச தோஷம்னு தலைல அடிச்சுக்கிட்டா, மலாய், சீன சேனல்கள்லயும் கன ஜோராப் போகுது மெகா மகாத்தொடருக. இங்கிலீஷ் சப்-டைட்டிலோட. சாம்பிளுக்கு கொஞ்சம் பாருங்களேன்.

ஒரு சீனத் தொடர். மக தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணவனை கொன்னுடறா. அவளுக்கு நல்லது பண்றதா நினைச்சு அம்மாவும், தாத்தாவும் போலீஸ்ல சொல்லிடறாங்க. போலீஸ் வந்து பொண்ணை கைது பண்ணுது. இந்த மூணு லைன முக்கா மணி நேரமா காட்றாங்க. பொண்ணு மூஞ்சி, அம்மா மூஞ்சி, தாத்தா மூஞ்சி... எல்லார் கண்ணுலயும் ஒரு சொட்டு கண்ணீர். இப்படி ஒரு 10 நிமிஷம். மயான அமைதி. விசும்பற சத்தம் மட்டும்தான். நடுவுல நடுவுல போலீஸ் கார் ரோட்டுல வர க்ளிப்பிங். நிஜமா ஸ்டேஷன்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் ஆகுது. கைது பண்ணிட்டு போம்போது ஒவ்வொரு மாடிப்படியிலயும், திருப்பத்துலயும் பொண்ணு அம்மாவை திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போகுது. முக்கா மணி நேரத்துல ஒரே டயலாக் " யூ ஆர் அரெஸ்டெட்". அவ்வளவுதான்.

இன்னொரு மலாய் தொடர்ல குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் பரிசும் வாழ்த்து அட்டையும் வாங்க அம்மாவும் பையனும் கடைக்குப் போறாங்க. லேண்ட்மார்க் மாதிரி ஒரு பெரிய கடைல ஒவ்வொரு கார்டா, ஒவ்வொரு பொம்மையா திருப்பி திருப்பிப் பாத்து ரெண்டு கார்டும் ஒரு பொம்மையும் வாங்கிக்கிட்டு வெளிய வராங்க. ஒரே டயலாக் "மொத்தம் எவ்வளவு ஆச்சு?".

ஒரு சின்ன விடுமுறைல இந்தோனேஷிய தீவு "பின்டான்" போயிருந்தபோது ஹோட்டல்ல பொழுது போகாம டி.வி.ல ஒரு பஹாசா மெகாத் தொடர். மனைவிக்கு உடம்பு சரியில்லன்னு போன் வருது. வெளியூர்ல இருக்கற கணவன் உடனே ஆபீசை விட்டு வந்து பஸ் புடிச்சு, போட் புடிச்சு, ரிக்சா புடிச்சு, நடந்து.... வீட்டுக்குப் போறான். ஒரே டயலாக் "சீக்கிரம் ஏறு".

உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும், எந்த மொழில பாத்தாலும் மெகாத்தொடர்னா ஒரே ஃபார்முலாதான் போல. எப்பிடித்தான் ஒரே மாதிரி யோசிக்கிறாங்களோ? எல்லாரும் ஒரே கடைல அரிசி வாங்கி அதே சௌபாக்யா டில்டிங் கிரைண்டர்ல போட்டு மாத்தி மாத்தி அரைப்பாங்க போல.

நம்ம தூர்தர்ஷன்ல முன்னல்லாம் ஞாயிறு மதியம் ஹிந்தி தவிர்த்த வேற எதாவது ஒரு மொழிப் படம் போடுவாங்க. 90% அடாசுப் படமா இருக்கும். ஒரு முறை ஒரு அவார்டு வாங்குன மலயாளப் படத்தை போட்டாங்க. "எலிப்பத்தாயம்"னு நினைக்கிறேன். மணிரத்னம் படத்தை விட கம்மி டயலாக். படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான். எனக்கென்னமோ இந்தப மாதிரி படத்தை எடுத்த ஆளுங்கதான் இந்த மெகாத்தொடர்களுக்கெல்லாம் எள்ளுத்தாத்தான்னு தோணுது. (சும்மா டமாசுக்குதான் இந்த ஒப்புமை. சினிமாவை சீரிசா எடுத்துக்கிறவங்க கோச்சுக்காதீங்க.)

இவ்வளவு பேசறியே... இந்த பாடாவதிகளையெல்லாம் உக்காந்து பாத்துட்டு பெருசா பதிவு போட வந்துட்டியான்னு கேக்கலாம். நச்னு கேளுங்க. நறுக்குன்னு கேளுங்க. நம்ம மலாய் நண்பர் ஒருத்தரு இது மாதிரியெல்லாம் தொடர் வருதுன்னு ரொம்ப அலுத்துக்கிட்டாரு. நான் என்னமோ மெகாத்தொடர்லாம் நம்ம "கலாச்சார" சின்னங்கள்னு பெருமையா இருந்தபோது அவர் சொன்னது மடார்னு தலைல அடிச்ச மாதிரி இருந்துது. அப்பறம் அவர் கிட்டயே கேட்டு , என்னதான் ஆயிடும் ; ரெண்டு எபிசோட் பாத்துதான் வைப்போமேன்னு பாத்தேன். அப்ப கீழ வெச்ச ரிமோட்டை அதுக்கப்பறம் எடுக்கல. நாலு சாரிடான் சாப்பிட வேண்டியதாப் போச்சு. இப்பல்லாம் எதோ நம்ம ரேஞ்சுக்கு கார்டூன் நெட்வொர்க், டிஸ்னி சேனல், அனிமல் ப்ளானெட்னு பாத்து கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டு போயிடறது.

என்னதான் சொன்னாலும் இந்த டைரடக்கர்களோட "திறமை"யையும், யூனிட் ஆளுகளோட பொறுமையையும் பாராட்டியே தீரணும். 30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும். உள்ள இருக்கற அந்த இத்துனூண்டு "க்ரே மேட்டரை" எவ்வளவு கசக்கி புழிஞ்சு, மல்லாக்கவோ குப்பறவோ படுத்து, பொரண்டு யோசிக்கிறாங்க !!!!

23 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Anonymous said...

ஐயோ, ஐயோ,
கேட்க, கேட்க சிரிப்பா இருக்கு.

வால்பையன் said...

//படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான். //

சம்பளம் தரலைன்னு சண்ட போட்டுருக்கும்!

Karthikeyan G said...

மிக நல்லா இருக்கு உங்க உலகளாவிய சீரியல் ஆராய்ச்சி. தொடரட்டும் உங்கள் சீரிய பணி. :)

டைட்டில் சாங் & குரூப் டான்ஸ் மட்டும் தமிழ் சீரியல்களின் uniqueness என நினைக்கிறேன்.

பழமைபேசி said...

நெடிய தொடர்களும் இராட்சத இயக்குனர்களும் அலசல் நெம்ப நல்லா இருக்கு... அங்க கூதலுங்களா??

குடுகுடுப்பை said...

மணிரத்னம் படத்தை விட கம்மி டயலாக். படத்துலயே பெரிய டயலாக் ஒரு நாய் மூணு நிமிஷம் ஊளையிடறதுதான்.//

இது சூப்பரு.

நான் தொலைக்காட்சியே பாக்கிறதில்லை
அப்பப்போ சிஎன்என்ல சொல்ற செய்திகள் மாதிரி மட்டும் பாக்குறது.

இராகவன் நைஜிரியா said...

இங்கு ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும்தான் கிடைக்கின்றது.

அதுல ஒரு சீரியல இரண்டு நாள் பார்த்தேன். இன்னும் ஒரு நாள் பார்த்து இருந்தேன், டிவிய போட்டு உடைச்சிருப்பேன்.

இந்த மாதிரி சீரியல் எல்லாம் எப்படித்தான் பார்க்கின்றார்கள், அதைப் பற்றி சீரியசாக விவாதம் செய்கின்றார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமான விசயம்.

எம்.எம்.அப்துல்லா said...

// Mahesh said...
சோழன் இமயத்துல இருந்து கல் எடுத்துட்டு வந்தான்... நீங்க துபாய்ல இருந்தா? பெரிய ஆளுங்க நீங்க....

//

கண்ணகி கோயில் கட்டுறதுக்காக கனகவிஜயனின் தலையில் கல்லை எடுத்து வந்தவன் சேரன்னு நினைவு..

நசரேயன் said...

T.V க்கு T.V வாசப்படி..

ச்சின்னப் பையன் said...

//எல்லாரும் ஒரே கடைல அரிசி வாங்கி அதே சௌபாக்யா டில்டிங் கிரைண்டர்ல போட்டு மாத்தி மாத்தி அரைப்பாங்க போல.
//

:-)))))))))))))

ச்சின்னப் பையன் said...

//இவ்வளவு பேசறியே... இந்த பாடாவதிகளையெல்லாம் உக்காந்து பாத்துட்டு பெருசா பதிவு போட வந்துட்டியான்னு கேக்கலாம்//

மாட்டேனே.. கேக்க மாட்டேனே...

ஒழுங்கா பாக்கி இருக்கற எல்லா தொடரையும் பாத்துட்டு வாரா வாரம் எங்களுக்கு அப்டேட் பண்ணிடுங்க...

ஹிஹி....

Anonymous said...

ஏன் சண் டீவி எடுக்கிறது?

Mahesh said...

நன்றி அனானி....

நன்றி வால்பையன்... இருக்கும்..இருக்கும் !!

நன்றி Karthikeyan G... நான் ஆட்டைய விட்டு பிச்சுக்கிட்டேன்.. நம்மால ஆகாது :)

Mahesh said...

நன்றி பழமைபேசி... ஆமாங்க... பனியும் பெய்யுது... மழையும் அடிக்குது :(

நன்றி குடுகுடுப்பை... என்னங்க ஆச்சு உடுக்கை சர்வீசுக்கு குடுத்துருந்தீங்களா? :)

நன்றி நசரெயன்...

Mahesh said...

நன்றி ராகவன்ஜி... அங்கியுமா? இந்த காங்கோ தீவிரவாதிங்க, சொமாலியா கொள்ளைக்காரனுக இவனுகளையெல்லாம் பாக்க வைங்களேன்... திருந்தராங்களா பாப்போம் :)))

Mahesh said...

நன்றி அப்துல்லா... நமக்கு சேரன் சோழன் எல்லாம் ஒண்ணுதாண்ணே... அப்பாடா ஹிஸ்டரி தெரியாதுன்னு சொல்லாம தப்பிச்சாச்சு :))))

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்.... நீங்க கேக்க மாட்டீங்கன்னு தெரியும்... வாரா வாரம் அப்டேட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

Mahesh said...

நன்றி Pukalini...

Mahesh said...

நன்றி Pukalini...

narsim said...

//என்னதான் சொன்னாலும் இந்த டைரடக்கர்களோட "திறமை"யையும், யூனிட் ஆளுகளோட பொறுமையையும் பாராட்டியே தீரணும். 30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும்//

நல்ல ஆதங்கம் தல.. மெகாத்தொடரா??? நெடுந்தொடர்ப்பா அதுக்கு பேரு..

ஜோசப் பால்ராஜ் said...

நானே விஜய் டிவியில வந்துகிட்டு இருந்த மதுரை சீரியலு முடிஞ்சுருச்சேன்னு கவலையா இருக்கேன், இதுல நீங்க வேற இப்டியெல்லாம் பதிவெழுதி என்னைய ரென்சன் பண்ணாதீங்க.

Mahesh said...

நன்றி நர்சிம்.... மெகவோ, மகாவோ, நெடுமோ... தலைவலி நிச்சயம்...

நன்றி ஜோசஃப்... இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்பிடி... மதுரை போனா சீக்கிரமே ஒரு சிதம்பரம் வந்துடும்... ஒண்ணும் கவலைப்படாதீங்க ...

ஸ்ரீதர் said...

மெகா சீரியல்கள் அனைத்துமே அபத்தம்தான்.இதுல கொடும என்னன்னா கரெக்டா அந்த டயத்துலதான் நமக்கு பசிக்கும் ,சோறு போட வரமாட்டாங்க?எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிணனோ,டிவி வாங்கினேன்.இதை தடை செய்தால் தேவலாம்.ஒரே ஒரு ஆறுதல் அங்கயும் அப்படி இருக்குன்றது.நாம தனி ஆளு இல்லை.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
புலம்பலுக்கு மன்னிக்கவும்.

தாமிரா said...

30 நிமிஷம் பாக்கற நமக்கே இப்பிடி இருந்தா அதை நாள் முழுக்க எடுக்கற அவங்களுக்கு எப்பிடி இருக்கும்.// உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம்ங்க..

நான் என்னமோ மெகாத்தொடர்லாம் நம்ம "கலாச்சார" சின்னங்கள்னு பெருமையா இருந்தபோது // நானும் அப்பிடித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன் பாஸ்..