Monday, March 23, 2009

சிரியானா - சினிமா விமர்சனம்

Syriana (2005)

George Clooney, Matt Damon


"ஆவதும் ஆயிலாலே... அழிவதும் ஆயிலாலே... " இதுதான் படத்தோட தீம். மொதல்லியே சொல்லிடணும். படத்தை முதல் தடவை பாத்தபோது ஒண்ணுமே புரியல. பிறகு கொஞ்சம் யோசிச்சுட்டு சம்பவங்களை மனசுக்குள்ள கோர்த்துட்டு ரெண்டாவது தடவை பாத்ததும்தான் ஓரளவுக்குப் புரிஞ்சுது.

பெட்ரோலிய அரசியல், ஆயில் இண்டஸ்ட்ரி மேல சில சக்திகளோட இன்ஃப்ளூயன்ஸ், சட்ட, சமுதாய, தனிப்பட்ட ரீதியில அதனுடைய விளைவுகளை சந்திக்கற சிலரையும் பற்றிய கதை.

இரான்ல சில ஏவுகணைகள் திடீர்னு திருடு போகுது ; அமெரிக்காவுல பெரிய ஆயில் கம்பெனி கொன்னெக்ஸ் போய் கில்லீன்கற ஒரு சின்ன ஆயில் கம்பெனியோட சேரறாங்க ; கசகஸ்தான்ல ஒரு எண்ணைகிணறுல ஆயில் எடுக்கற உரிமை சீனாவுக்கு போகுது ; இந்த காண்ட்ராக்ட் விவகாரத்துல எதாவது லஞ்சம் விளையாண்டுருக்குமான்னு விசாரிக்க ஒரு வக்கீல் ; ஒரு நடமாட முடியாத சௌதி எமிர் குடும்பத்துல அண்ணன் தம்பிகளுக்குள்ள அடுத்த எமிர் யாருங்கற தகராறு ; ஸ்விஸ்ல இருக்கற ஒரு எனர்ஜி அனலிஸ்ட்டோட பையன் நீச்சல் குளத்துல ஷாக் அடிச்சு செத்துப் போறான் ; எமிரோட மூத்த பையனை கொலை செய்ய ஆள் புடிக்க ஒரு CIA ஏஜண்டை அனுப்பறாங்க ; பாகிஸ்தான்ல இருந்து வர பல வேலையாட்களுக்கு வேலை போய் சில அடிப்படைவாதிகளோட சேந்து தற்கொலைப் படைகள் அமையுது - எதாவது புரியுதா? தலை சுத்துது இல்ல?

சௌதி எமிரோட இளைய பையனை அமெரிக்கா பணத்தாலயே சாத்தி பொம்மையாக்கிடறாங்க. மூத்தவனோ ஹார்வர்டுல படிச்சு தன் நாட்டு எண்ணை வளத்தை நல்ல முறைல பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும்னு துடிக்கறாரு. நடுவுல பையன் செத்துப் போனதை மூலதனமா வெச்சு அந்த எனர்ஜி அனலிஸ்ட் (மேட் டேமன்) எமிரோட மூத்த பையனுக்கு ஆலோசகரா சேந்து தம்பி கிட்ட இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சில இறங்கறாங்க. இது நடந்தா அமெரிக்காவுக்கு ஒத்துக்காதுன்னு மூத்த பையனை தீத்துக்கட்ட அமெரிக்கா திட்டம் போடுது. முடிஞ்சுதா?

காண்ட்ராக்ட் கை மாறுனதுல லஞ்சம் இருக்குன்னு கண்டு புடிச்சு அதுக்கு ஒரு பலியாடு தேடுது நீதித்துறை. CIA ஏஜண்ட் (ஜியார்ஜ் க்ளூனி) லெபனான் போய் ஹிஸ்போலா தீவிரவாதிக கிட்ட டீல் போடும்போது சாயம் வெளுத்துப் பொற அமெரிக்கா அவரையே மாட்டி விட்டுடறாங்க. அவரு உடனே கோவமாகி படுகொலை செய்யப்பட இருக்கற எமிரோட மூத்த பையனைக் காப்பாத்த முயற்சி எடுக்கறாரு. காப்பாத்துனாரா?

வேலை போன பாகிஸ்தான் கூலியாளுக வேற வழியில்லாம தற்கொலைப் படைல சேந்து கொன்னெக்ஸ்-கில்லீன் கம்பெனியோட முதல் எண்ணைக் கப்பல் வெளிய போகும்போது அதை தகர்க்க திட்டம் போடறாங்க. பண்ணாங்களா?

பையனுடைய இறப்பைக் கூட வியாபாரம் ஆக்குன கணவனை விட்டு மனைவி பிரிஞ்சு போயிடறா. அவங்க ஒண்ணு சேந்தாங்களா?

எல்லாத்துக்கும் பதில் வேணும்னா படத்தை பாருங்க.

இந்த ஒரு டாக்குமென்டரி மாதிரியான இடியாப்ப படத்தை கட்டிங் ஒட்டிங் பண்ண எடிட்டர் நிஜமாவே பெரிய ஆளுதான். பெரிய சவாலா இருந்துருக்கும். படத்துல காட்சிக்கு காட்சி வேற வேற நாடுக. கசகஸ்தான், இரான், ஸ்பெயின், ஸ்விஸ், துபாய், அமெரிக்கா, லெபனான், பாகிஸ்தான்....

"படம் பயங்கர குழப்பமா இருக்கு. ஃபாலோ பண்ணவே முடியல"ன்னு பரவலான நெகடிவ் பப்ளிசிடி இருந்தாலும், அமெரிக்காவுக்கும் சைனாவுக்கு இடைல இருந்த ஒரு இலைமறை காய்மறையான டீலை படம் நல்லா நக்கலடிச்சுருக்குன்னும் பல விமர்சனங்கள்.

க்ளூனிக்கு ஒரு ஆஸ்கார் வேற கிடைச்சுது. போர்ன் ஐடென்டிடில பாத்த ஆக்சன் ஹீரோ மேட் டேமன் இதுல பாந்தமா அடக்கி வாசிச்சுருக்காரு. படத்துல வரிகளுக்கு நடுவுல படிக்க வேண்டியது நிறைய இருக்கு. நிறைய சப் டெக்ஸ்ட். நிறைய சர்ரொகேஷன். கண்டிப்பா பாத்தே ஆக வேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆஃப் பீட் படங்களை விரும்பறவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.


18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

நட்புடன் ஜமால் said...

நானும் ஸீரியஸ்ன்னு படிச்சிட்டேன்

பாலா said...

சமயம் கிடைக்கும்போதெல்லாம் நான் பார்க்கும் படம்.

நல்லா எழுதியிருக்கீங்க தல. லிங்க் கொடுத்திருக்கேன். :-)

Joe said...
This comment has been removed by the author.
Joe said...

சில வாரங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

ஜார்ஜ் க்ளூனி-ஐ எமிரின் ஆட்கள் சித்திரவதை செய்யும் காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

அமெரிக்காவின் தகிடுதத்தங்களை வெளியே கொண்டு வர முயன்ற பல நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

Mahesh said...

நன்றி ஜமால்பாய்....

நன்றி ஹாலிவுட் பாலா... லிங்க் இல்லயே? :(

நன்றி Joe...

பழமைபேசி said...

...on the run to run way....

சி தயாளன் said...

உண்மைதான் மகேஷ்...உடனடியாக பார்க்கும் போது புரிவது கடினம் என்றாலும்...வல்லரசுகளின் வாலாட்டங்களை புட்டு வைத்த படம்...

Mahesh said...

ஓடுங்க மணீயாரே... ஓடுங்க...

நன்றி டொன் லீ.... ஆமாங்க.. கரெக்டு.

சின்னப் பையன் said...

கிடைச்சா பாக்குறேன்...

Mahesh said...

கிடைச்சா.... பாக்கறீங்களா? உங்கூர்ல கிடைக்காததா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எங்கிருந்துப்பா புடிக்கிறீங்க இப்படி படமெல்லாம்,எங்கூர்ல இந்த மாதிரி படமெல்லாம் வருதான்னே தெரியல,(வந்தாலும் நான் பாக்க மாட்டேன் ,அது வேற விஷயம்).

அது சரி(18185106603874041862) said...

உங்க விமர்சனம் ஆர்வத்தை தூண்டறதுனால டி.வி.டி.ல படம் பார்த்துட்டு சொல்றேன்...

மேட் டேமன் நல்ல நடிகர்...அவரோட The Talented Mr.Ripley பார்த்திட்டீங்களா?? ரொம்ப நல்ல படம்..இன்ட்ரஸ்டிங்கா போகும்...அப்படியே The Departed கூட...

Mahesh said...

நன்றி அதுசரி.... நீங்க சொல்ற ரெண்டு படமும் இன்னும் பாக்கல... லிஸ்ட்ல இருக்கு... சீக்கிரம் பாத்துடறேன்.

நன்றி ஸ்ரீதர்...எல்லா ஊர்லயும் கிடைக்குதுங்க. லேண்ட்மார்க் மாதிரி புக் கடைகள்ல கிடைக்குது.

வால்பையன் said...

இந்த இடியாப்பம் ஆங்கிலத்துல பார்த்தா நான் பொடியாப்பம் ஆகிறுவேன்.
தமிழ்ல டப் பண்ணி வந்தா பார்க்கலாம்

கிரி said...

//ஆவதும் ஆயிலாலே... அழிவதும் ஆயிலாலே...//

ஹி ஹி ஹி

மகேஷ் நிறைய ஆங்கில படம் பார்ப்பீங்க போல ...

sarathy said...

என்னோட பொருமைய சோதிச்சீட்டிங்க....

Mahesh said...

வாங்க வால்பையன்... இடியாப்பம்... பொடியாப்பம்... நல்ல ரைமிங்..:)

நன்றி கிரி... ஹி ஹி ஹி ஆமுங்க...

நன்றி sarathy... அவ்வ்வ்வ்..அப்பிடியா?

பாலா said...

// நன்றி ஹாலிவுட் பாலா... லிங்க் இல்லயே? :( //

லிங்க் இருக்குங்களே!!!

http://hollywoodbala.blogspot.com/

’இவங்களையும் படிங்க மச்சி’-ன்னு ரைட் சைட்ல இருக்கு பாருங்க. :)