Saturday, March 7, 2009

காற்றின் வலி



காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
காற்று போன வழியே
அவனும் போனான்...


காற்றை உணர முடியும்...
காற்றுக்கு உணர்வுகள் உண்டா?
காற்றுக்கு எண்ணங்கள் உண்டா?
காற்றுக்கு உறவுகள் உண்டா?
உறவுகள் உண்டென்றால் பூரண சுதந்திரம் சாத்தியமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


கனவில் காற்றைப் போல மிதந்தான்
காற்றுக்கு கனவுகள் உண்டா?
காற்றுக்கு காதல் உண்டா?
காற்று மரணத்தை அறியுமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


காற்றடைத்த பலூனை குழந்தைகளுக்குப் பிடிக்கும்
காற்றுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?
காற்று வழியை மறக்குமா?
காற்றுக்கு வலி இருக்குமா?


காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?
அவன் காற்றைத் தேடிப் போனான்....


ஒவ்வொரு உயிரிலும் கலந்த காற்று
அவன் உயிரிலும் கலக்க
அவனைத் தேடிப் போனது...


காற்றைப் போலவே சுதந்திரமாய் இருக்க முடியுமா?

26 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

அருமையா வந்திருக்கு....

உசுருலயும்
உயிரிலும்

இதுல எதுனா ஒன்னு? இஃகிஃகி!!

Mahesh said...

வணக்கம்ணே... திருத்துனதுக்கு நன்றி..

நசரேயன் said...

எனக்கு வெறும் காத்துதான் வருது

Mahesh said...

வாங்க நசரேயன்... உங்களுக்கு காத்து வரணும்னுதான் நான் கெளம்பீட்டேன்.
:))))))))))))))

அது சரி(18185106603874041862) said...

//
காற்றை உணர முடியும்...
காற்றுக்கு உணர்வுகள் உண்டா?
காற்றுக்கு எண்ணங்கள் உண்டா?
காற்றுக்கு உறவுகள் உண்டா?
உறவுகள் உண்டென்றால் பூரண சுதந்திரம் சாத்தியமா?
//

காற்றுக்கு உணர்வுகள் உண்டா??

நிஜமாவே சூப்பர் கேள்வி!!!

உறவுகள் உண்டென்றால் பூரண சுதந்திரம் சாத்தியமா?

உறவுன்னா...லின்க் தான? லின்க்னா, இன்னொரு பொருளோட விலங்கு மாட்றது தான?? உறவு என்றாலே சுதந்திரம் இல்லாமல் போகிறது...ஒரு நுகத்தடியில் மாட்டப்பட்ட மாடுகள்....எந்த மாட்டுக்கு சுதந்திரம் அதிகம்??

அது சரி(18185106603874041862) said...

என்னோட இன்னொரு பின்னூட்டத்தில நீங்க கேட்ருக்கதுனால...நான் ரொம்ப நாளா யாரையாவது கேக்கணும்னு நினைச்ச கேள்வி...

நிறைய பதிவுல ஆணி, ஆணி புடுங்கறதுன்னு படிச்சிருக்கேன்...ஆணின்னா என்ன அர்த்தம்?? மொக்கையா பதிவு எழுதறதா??

Mahesh said...

நன்றி அதுசரி....

நீங்க அவ்வளவு பச்சப்புள்ளயா? ஆணின்னா வேலைன்னு அர்த்தம். வடிவேலு ப்ரண்ட்ஸ் படத்துல ஆணி புடுங்க சொன்னதுல இருந்து வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\காற்றுக்கு வலி இருக்குமா?\\

உங்களின் கவிதையை படித்தவுடன் எனக்குள்ளும் எழுந்த கேள்வி

நட்புடன் ஜமால் said...

அது சரி

ஆணி

முரளிகண்ணன் said...

அருமையா வந்திருக்கு கவிதை

சி தயாளன் said...

அருமை :-)

Mahesh said...

நன்றி ஜமால்பாய்...

நன்றி முரளிகண்ணன்...

நன்றி டொன்லீ....

அறிவிலி said...

நல்லா இருக்குங்க...எனக்கும் கவிதைக்கும் தூரம் அதிகம்னாலும், ஊர் பாசம்னு ஒண்ணு இருக்கு இல்ல.

Mahesh said...

வாங்க அறிவிலி அண்ணே... காதைக் குடுங்க சொல்றேன்... கவிதைக்கும் எனக்கும் இன்னங் கூட அதிக தூரம்... என்னவோ நானும் "கிற்க்கித் தள்ளு"னேன்.

Mahesh said...

@ அறிவிலி : இந்த மாதிரி கவிதையெல்லாம் எழுதலைன்னா நம்மளையெல்லாம் முன்பழமைவாதி ஆக்கிடுவாங்க....

போங்க...போய் சீக்கிரம் ஒரு கவிதை வரைங்க.. அதான்.. கிறுக்கித்தள்ளுங்க :)

குடுகுடுப்பை said...

காத்து இங்கே கவிதையானது.
கவிதை புயலாக வந்தாலும்,தென்றலாக வந்தாலும் உடுக்கை அடிப்பவனுக்கு புரிவதில்லை.

பழமைபேசி said...

//கவிதையெல்லாம் எழுதலைன்னா நம்மளையெல்லாம் முன்பழமைவாதி ஆக்கிடுவாங்க.... //

ஓ, இப்பிடியெல்லாம் வேற இருக்கா?

பரிசல்காரன் said...

நன்றாக வந்துள்ளது. நீங்கள் அதிகம் கவிதை எழுதுவதில்லை எனினும், சமீபமாய் ஏதாவது கருப்பொருள் கிடைப்பின் அதை கவிதை வடிவில் மனதில் அசைபோடுகிறீர்கள்.

சரியா?

Mahesh said...

நன்றி கு.கு.... என்னாது கவுஜ பிரியலயா?

நன்றி பழமைபேசி... அதேதாங்க :)

நன்றி பரிசல்.... கரெக்டுங்க... எதாவது முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணுமில்ல?

narsim said...

//காற்றடைத்த பலூனை குழந்தைகளுக்குப் பிடிக்கும்
காற்றுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?
காற்று வழியை மறக்குமா?
காற்றுக்கு வலி இருக்குமா?
//

மகேஷ்.. என்னாச்சு.. கவிதைல்ல பின்றீங்களே..

Mahesh said...

நன்றி நர்சிம்....

Thamira said...

கொஞ்சம் பிஸியா இருந்ததுனால் சீக்கிரம் வரமுடியாம போச்சிது.. ஜாரிங்க.. இப்ப யோசிக்கிறேன்.. இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா அடுத்த பதிவப்போட்டிருப்பாரே.. மிஸ் பண்ணிட்டமேன்னு..ஹிஹி..

சின்னப் பையன் said...

காற்றைப் போலவே
சுதந்திரமாய் இருக்க முடியுமா?

Mahesh said...

நன்றி தாமிரா...

நன்றி ச்சின்னப்பையன்... அதானே? முடியுமா?

Mahesh said...

ஐ மீ தெ 25 !!

எம்.எம்.அப்துல்லா said...

புலவரே உங்கள் கவிதைத் திறன் கண்டு மெச்சி உங்களுக்கு ஒரு பரிசு அளித்துள்ளோம். என் பதிவில் வந்து அதைப் பெற்றுக் கொள்ளவும்.

(மாட்னியாடி..ம்மவனே)