Sunday, March 15, 2009

தஸ்விதானியா - சினிமா விமர்சனம்


Dasvidaniya (Hindi)

Vinay Pathak, Rajat Kapoor, Neha Dhupia, Ranvir Shorey


2008 நவம்பர்ல ரிலீஸ் ஆனாலும் நமக்கு இப்பத்தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது. உங்களையும் என்னையும் போல ஒரு பரமசாது ஒருத்தன் இன்னும் 3 மாசத்துல சாகப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? இப்பிடி ஒரு கான்செப்டை அட்டகாசமா சினிமா ஆக்கின டைரக்டர் ஷஷாந்த் ஷாவுக்கு முதல் சபாஷ். கோடி கோடியாக் கொட்டி மசாலாப் படமா அரைச்சுத் தள்ற பாலிவுட் மாவு மில்லுல இருந்து வந்த ஒரு வித்தியாசமான லோ பட்ஜெட் படம்.

நாயகன் அமர் கௌல் 37 வயசு பேச்சிலர். காது கேக்காத அம்மா கூட பாம்பே அவுட்டர்ல ஒரு ஃப்ளாட்ல குடித்தனம். ஒரு மருந்துக் கம்பெனில அக்கௌண்ட்ஸ் மேனேஜர். தினப்படி வேலையெல்லாம் ஒரு To do லிஸ்ட் போட்டு கிரமமா செய்யற ஆளு. ஆட்டோ ட்ரைவர்ல இருந்து ஆபீஸ் மேனேஜர் வரைக்கும் புழு மாதிரி ட்ரீட் பண்ணினாலும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான். (மொதல்லயே சொல்லல? உங்களையும் என்னயும் மாதிரின்னு..) அப்பிடி ஆளுக்கு வயித்துவலின்னு டாக்டர்ட்ட போனா கேன்சர் 2வது ஸ்டேஜ்ங்கறாரு. மிஞ்சிப் போனா ஒரு மூணு மாசம் இருக்கலாம். அவ்வளவுதான்... அப்பிடியே நொறுங்கிப் போய் உக்காந்துடறான்.

அப்பதான் வழக்கம் போல மனசாட்சி எதிர்ல வந்து உக்காந்து "டேய் பன்னாடை.. இந்த மாதிரி அல்ப விஷயத்துக்கெல்லாம் லிஸ்ட் போட்டுக்கிட்டு உக்காராம உருப்படியா வாழ்க்கைல விட்டுப்போன பெரிய காரியங்களை இந்த 3 மாசத்துல செய்து முடிக்கப் பாரு"ன்னு சொல்ல, பாதை கொஞ்சம் திரும்புது. புது கார் வாங்கணும், வெளிநாடு போணும், பாஸுக்கு பாஸா ஆகணும், கிடார் கத்துக்கணும், பேப்பர்ல மொதப் பக்கத்துல ஃபோட்டோ வரணும் அப்பிடின்னு குட்டி ஆசைகளையும் சின்ன வயசு காதல், ஃப்ரெண்ட்ஷிப், வீட்டை விட்டு ஓடிப் போன தம்பியை மறுபடி வீட்டுக்கு கூட்டி வரதுங்கற மாதிரி பெரிய ஆசைகளையும் ஒரு 10 ஐட்டம் லிஸ்ட் போட்டு ஒண்ணொண்ணா முடிக்கிறான். எல்லாத்துலயும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வெச்சுருக்கறது டைரக்டரோட புத்திசாலித்தனம்.

12 வருஷங்களுக்கு பொறகு நண்பனைத் தேடி தாய்லாந்து போனா நண்பனோட மனைவி இவன் ஃப்ரீ ட்ரீட்மெண்ட்டுக்காக வந்துருக்கானோன்னு சந்தேகப்படறாங்க. வெறுத்துப் போய் தெருவுல சுத்தும்போது ஒரு ரஷ்ய விலைமாது வீட்ல போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரதெல்லாம் கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் ஒக்கே. (அப்பறம் 'தஸ்விதானியா'ன்னு பேர் வெச்சுட்டு ரஷ்ய லிங்க் இல்லேன்னா எப்பிடி?) கொஞ்சம் சோகமான படம்னாலும் முழுக்க மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கறது படத்துக்கு பலம். க்ளைமேக்ஸ்? படத்தைப் பாருங்களேன்.

வினய் பாடக் இது மாதிரி ரோலுக்கு பெர்ஃபெக்ட் ஃபிட். 2 வருஷம் முன்னால வந்த Bheja Fry டீம்ல பாதி பேர் இந்தப் படத்துலயும். ரஜத் கபூர் வழக்கம் போல அலட்டல் இல்லாத அமைதியான் நடிப்பு. ஆபீஸ் மேனேஜர் சௌரப் ஷுக்லா (ஹே ராம்ல கமல் ஃப்ரெண்டா வருவாரே அந்த குண்டு நடிகர்) கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல். நேஹா துபியாவும் கெஸ்ட் ரோல் மாதிரிதான். ஆனா நல்லா பண்ணியிருக்காங்க. அந்த விலைமாது கேரக்டருக்கு ஒரு ரஷ்யப் பொண்ணையே நடிக்க வெச்சுருக்காங்க.

படத்துல ஹைலைட் அந்த 3 பாட்டுகளும். புது ம்யூசிக் டைரக்டர் கைலாஷ் கேர். அவரே பாடல்கள் எழுதி பாடவும் செஞ்சுருக்காரு. ஆனா முதல் படம் மாதிரியே இல்ல. மூணுமே மெலடி ஜோனெர். ரொம்ப நாளைக்கப்பறம் இது மாதிரி இதமான பாட்டுகள் பாலிவுட்ல இருந்து. லிரிக்ஸ் அட்டகாசம். சேம்பிள்க்கு....

"zindagi naa mil ajnabi ban ke
bandagi shaamil har dua ban ke "

'தஸ்விதானியா'ன்னா ரஷ்யன்ல (do svisdanya) 'குட்பை'ன்னு அர்த்தமாம். அதுல ஒரு சின்ன pun சேத்து '10 வேலைகள்'னு வரமாதிரி டைட்டில். குடும்பத்தோட பாக்க வேண்டிய படம். பாருங்க... இது மாதிரி கூட மசாலத்தனங்கள் இல்லாம இந்தி சினிமாவுல பண்றாங்கங்கறதுக்காகவாவது பாக்கணும்.

17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பழமைபேசி said...

வழக்காமான தொய்வில்லா நடை...

//பண்றாங்கங்கறத்துக்காகவாவது //

நெம்ப செரமப்பட்டு எழுதுனீங்க போல இருக்கே? இஃகிஃகி! ஒரு ”த்” கூடிப் போச்சு அப்பிடியிருந்தும்... இஃகிஃகி!!

இராகவன் நைஜிரியா said...

ஒரு அருமையான படம் பார்த்து அதை பகிர்ந்து கொள்வது என்பது மனதுக்கு சந்தோஷம் தரும் விசயம். அதை மிக அருமையா செய்து இருக்கீங்க.


வாழ்த்துக்கள்.

யாத்ரீகன் said...

Indian Bucketlist :-) .. anyhow added to my toview list :-) ..nandri

நட்புடன் ஜமால் said...

அண்ணன் சொன்னது போல்

நல்ல விதமா பகிர்ந்து உள்ளீர்கள்

சின்னப் பையன் said...

அண்ணன்கள் சொன்னது போல் - நல்ல விமர்சனம்.

:-)

Adult said...

Unmayale padatha paartha mathiri oru feeling ... kattayam thirrutu vcd'la yavathu padatha paakanum Mahesh..

Mahesh said...

நன்றி மணியாரே.... திருத்திட்டேன்...

நன்றி ராகவன் ஜி,,,

Mahesh said...

நன்றி யாத்ரீகன்...
நன்றி ஜமால்பாய்...
நன்றி Adult...
நன்றி ச்சின்னப்பையன்....

நர்சிம் said...

//ஒரு பரமசாது ஒருத்தன் இன்னும் 3 மாசத்துல சாகப் போறோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? //

நம்ம ம’ரணம்’ கதை மாதிரி இருக்கே தல..

//(அப்பறம் 'தஸ்விதானியா'ன்னு பேர் வெச்சுட்டு ரஷ்ய லிங்க் இல்லேன்னா எப்பிடி?) //

நல்லா சொல்லி இருக்கீங்க மகேஷ்..

நல் அறிமுகம்..

நர்சிம்

பாபு said...

நல்ல படம்ன்னு சொன்னா பார்த்துடவேண்டியதுதான்

பரிசல்காரன் said...

டி வி டி ஆர்டர் செஞ்சாச்சு!

Mahesh said...

நன்றி நர்சிம்....
நன்றி பாபு...
நன்றி பரிசல்....

சி தயாளன் said...

அப்படியா...கேள்விப்பட்டிருக்கிறேன்..பார்க்க முயல்கிறேன்..:-)

பாலா said...

பக்கெட் லிஸ்ட்.!

எட்வின் said...

அருமையாக விமர்சித்திருக்குறீர்கள் படம் போன வாரம் தான் பார்த்தேன். அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Mahesh said...

நன்றி டொன் லீ..

நன்றி ஹாலிவுட் பாலா..

நன்றி எட்வின்...

வால்பையன் said...

கதையும்
கதை சொன்ன விதமும் அருமை!