Thursday, March 26, 2009

(அலுமினியப்) பறவைப் பார்வை

சிங்கப்பூர்ல இருந்து ஸுரிக் 13 மணி நேரப் பிரயாணம். சிங்கப்பூர்ல நள்ளிரவு ஃப்ளைட் ஏறினா ஸ்விஸ் டைம் காலைல 7:30க்கு ஸுரிக் வந்து சேரலாம். போன 4 முறையும் இந்த ப்ளைட்தான்ங்கறதால ஏறினதும் நல்லா சீட்டை விரிச்சு படுக்கையைப் போட்டு தூங்கிடுவேன். ஆனா இந்த முறை ஒரு சேஞ்சுக்கு மதிய ஃப்ளைட் பிடிச்சேன். நல்ல வெளிச்சமும் இருந்துது. வானமும் க்ளியரா இருந்துது. திடீர்னு ஒரு யோசனை. போற வழியெல்லாம் படம் புடிச்சு ஒரு Photo Feature பண்ணலாமேன்னு. "என்ன... தூங்க முடியாது.. அவ்வளவுதானே... ரெண்டு மூணு படம் பாத்தாப் போச்சு"ன்னு நினைச்சுக்கிட்டேன்.

ரெண்டு மணிக்கு புறப்பட வேண்டியது ரெண்டே முக்காலுக்குதான் புறப்பட்டது. ஸ்விஸ் டைம் ராத்திரி 8:30 க்கு போய் சேந்தாத்தான் 9:45க்கு ஜெனீவாவுக்கு கடைசி ட்ரெய்னைப் புடிக்கலாம். இது லேட்டாச்சுன்னா ஸுரிக்ல ஃப்ரெண்டு வீட்டுல தங்கிட்டு காலைல கிளம்பலாம்னு உடனே ஒரு மாற்று ப்ளான் யோசிச்சு வெச்சு அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ஆனா பைலட் வெரட்டு வெரட்டுனு வெரட்டி கரெக்டா டாண்ணு 8:30க்கு ஸுரிக்ல எறக்கிட்டாரு. போய் டிக்கட் வாங்கிட்டு ஒரு காப்பியும் குடிச்சுட்டு போற அளவுக்கு டைம் இருந்துது. சரி பறந்த வழியைப் பாப்போமா? (டபிள் லேயர் கண்ணாடி ஜன்னல வழியா எடுத்ததால கொஞ்சம் குவாலிட்டி குறைஞ்சு போச்சு. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ) படங்கள் மேல க்ளிக் பண்ணி பெருசாக்கிப் பாக்கலாம்.

டேக் ஆஃப் வரிசைல நம்ம ப்ளேன் 4வதா வெயிட்டிங். முன்னால நம்ம ஏர் இந்தியா மும்பைக்கு போக ரெடியா இருந்துது.

டேக் ஆஃப் ஆனதும் சிங்கப்பூர் வ்யூ


கொஞ்ச நேரத்துலயே மலேஷியா
அப்பறம் அந்தமான் நிகோபார் தீவுகள்


இந்தியா - போபாலுக்கு வடக்க ஏதோ ஒரு இடம்... சரியாத் தெரியல.. ஆனா பக்கத்துல இருக்கற நதி "பார்வதி நதி"


ஆஹா... நம்ம பாகிஸ்தானுக்குள்ள நுழையறோம்... ஹிந்துகுஷ் மலைத்தொடரோட ஒரு பகுதியும், இஸ்லாமாபாத் நோக்கிப் போற சாலையும்இப்ப ஆப்கானிஸ்தானுக்குள்ள போறோம்....
அடுத்தது துர்க்மெனிஸ்தான்.... க்ளைமேட் அப்பிடியே மாறுது... மலையெல்லாம் பனி கொட்டிக் கிடக்குது...
அப்பறம் கொஞ்சமே கொஞ்ச நேரம் இரான் மேல...


இதுக்குள்ள லேசா இருட்டிடுச்சு. ஒரே மேக மூட்டம் வேற. ஒண்ணுமே தெரியல கண்ணுக்கு. அப்பறம் காஸ்பியன் கடலைக் கடந்து, உக்ரைன், ஸ்லொவாகியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, ஜெர்மனி கடந்து ஸ்விட்சர்லாந்துல நுழைஞ்சு ஒரு வழியா ஸுரிக் வந்து இறங்கியாச்சு. பயங்கர மழையும் குளிரும். கீழ போய் லக்கேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு ஏர்போர்டுக்கு கீழயே இருக்கற ஸ்டேஷனுக்கு போய்ட்டேன். ஜெனீவாவுக்கு டிக்கெட் வாங்கிட்டு 9:45க்கு ரயில் ஏறினா காலை 1:15க்கு ஜெனிவா. ஸ்டேஷனுக்கு நேர் எதிர்லயே ஹோட்டல். போய் படுக்கைல விழுந்ததுதான் தெரியும். மறுபடி காலை 8:30க்குதான் முழிச்சேன்.

அப்பறம் என்ன? அடுத்த 15 நாளைக்கு வழக்கம் போல ஆபீஸ், ரூம், ஆபீஸ், ரூம்தான்.

நம்ம பரிசல் சொன்ன மாதிரி எனக்கும் மேகங்களை ரொம்பப் பிடிக்கும். அங்கங்க மேகங்களைப் படம் புடிச்சு வெச்சேன். "பயணங்கள் முடிவதில்லை" படத்துல வர "முகிலினங்கள் அலைகிறதே... முகவரிகள் தொலைந்தனவோ?" பாட்டு ஞாபகம் வருதா?

விமானத்துல ஒரு சேனல்ல விமானத்தோட பறக்கும் பாதை (Flight Path), பறந்த தூரம், போக வேண்டிய தூரம், பறக்கற உயரம் எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கும். சிங்கப்பூர் - ஸுரிக் பயணம் கிட்டத்தட்ட பூமிய 1/4 பங்கு சுத்தற மாதிரி.பாகிஸ்தான் மேல பறக்கும்போது கொஞ்சம் பாதை மாறி வடக்க போய் மறுபடி மேற்க பறந்தது. பைலட் ரவுண்ட்ஸ் வரும்போது கேட்டதுக்கு அவர் சொன்னார் பாருங்க பதில்... .. 'பக்'னு இருந்துது. தெற்கு ஆப்கானிஸ்தான் மேல பறக்கறது அவ்வளவு சேஃப்டி இல்லன்னு எல்லா விமானங்களும் மத்திய ஆப்கானிஸ்தான் மேலதான் பறக்கணுமாம். இந்த சின்ன மாற்றத்துனாலதான் 13 மணி நேரம் ஆகுதாம். இல்லைன்னா ஒர் மணி நேரம் குறையுமாம்.


சரிங்க... ரொம்ப போரடிச்சுட்டேன்னு நினைக்கிறேன். இத்தோட முடிச்சுக்கறேன். கடைசியா... நம்ம விமானத்துக்கு கீழ இன்னோரு விமானம் பறந்துது. அதையும் ஒரு க்ளிக்.....26 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வெண்பூ said...

நல்ல தீம் மஹேஷ்.. நல்லா தொகுத்திருக்கீங்க.. பாராட்டுகள்.

Anonymous said...

nice.

துளசி கோபால் said...

நல்லா இருக்கு மகேஷ்.

இன்ஃப்ளைட் எண்டர்டெய்ன்மெண்ட்லே போடும் தமிழ்ப் படங்களுக்கு ஃப்ளைட் பாத் எவ்வளவோ தேவலை.

பரவாயில்லை படங்கள் எல்லாம். மேகத்துக்குமேலே போகும்போது தேவர்கள் நடமாட்டம் உங்களுகாவது தெரிஞ்சதா?

எம்.எம்.அப்துல்லா said...

//மேகத்துக்குமேலே போகும்போது தேவர்கள் நடமாட்டம் உங்களுகாவது தெரிஞ்சதா?

//

துளசி அம்மா, பிளைட்ல மகேஷ் நடந்துக்கிட்டுதான் இருந்தாராம். எல்லாரும் பார்த்திருக்காங்க :)

ஜோதிபாரதி said...

அருமை மகேஷ்!

அறிவிலி said...

கிட்டத்தட்ட நாங்களும் பறந்தா மாதிரியே இருக்கு....

Mahesh said...

நன்றி வெண்பூ...

நன்றி அனானி...

நன்றி துளசி அம்மா... உங்க சிங்கை சந்திப்பு அன்னிக்குதான் நான் சிங்க வந்து இருந்தேன்... அதனால் உங்கள சந்திக்க முடியல...

நன்றி அப்துல்லா....

நன்றி ஜோதிபாரதி..

நன்றி அறிவிலி....

எம்.எம்.அப்துல்லா said...

//நன்றி துளசி அம்மா... உங்க சிங்கை சந்திப்பு அன்னிக்குதான் நான் சிங்க வந்து இருந்தேன்... அதனால் உங்கள சந்திக்க முடியல...
/

அண்ணே அது எப்பிடிண்ணே சிங்கையில எப்ப பதிவர் சந்திப்பு நடந்தாலும் எங்கயாச்சும் ஓடிப்போய்றீங்க???

Mahesh said...

/// எம்.எம்.அப்துல்லா said...
//நன்றி துளசி அம்மா... உங்க சிங்கை சந்திப்பு அன்னிக்குதான் நான் சிங்க வந்து இருந்தேன்... அதனால் உங்கள சந்திக்க முடியல...
/

அண்ணே அது எப்பிடிண்ணே சிங்கையில எப்ப பதிவர் சந்திப்பு நடந்தாலும் எங்கயாச்சும் ஓடிப்போய்றீங்க???

//

அது எப்படிண்ணே நான் எங்கயாவது ஓடிப் போகும்போதே பதிவர் சந்திப்பு நடக்குது? அவ்வ்வ்வ்வ்வ்......

Mahesh said...

// எம்.எம்.அப்துல்லா said...
//மேகத்துக்குமேலே போகும்போது தேவர்கள் நடமாட்டம் உங்களுகாவது தெரிஞ்சதா?

//

துளசி அம்மா, பிளைட்ல மகேஷ் நடந்துக்கிட்டுதான் இருந்தாராம். எல்லாரும் பார்த்திருக்காங்க :)

//

அண்ணே... அசுரங்களும் அங்ஙனதேன் சுத்திக்கிட்டுருப்பாங்களாம்ணே... அப்பிடியாண்ணே?

ஸ்ரீதர் said...

good..

பழமைபேசி said...

இந்துகுசு சொன்னீங்களே, அங்க வேற யாருனா நடமாடுறதப் பார்த்தீங்களா அண்ணே?

Mahesh said...

மணியாரே... அட ஆமாங்க... தலப்ப கட்டிக்கிட்டு தாடி வெச்சுக்கிட்டு ... அது அவரா?

ச்சின்னப் பையன் said...

படங்களும் பதிவும் அருமையோ அருமை.

நீண்டதூர விமானத்துலே தூங்காமே எங்களுக்கு நல்ல படங்களைக் கொடுத்த அண்ணன் மகேஷ் வாழ்க!!

’டொன்’ லீ said...

superb...:-)

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்... என்னது வாழ்க கோஷம்?

நன்றி டொன்லீ....

ஜோசப் பால்ராஜ் said...

படங்கள் எல்லாம் மிக அருமைங்ணா.
ரொம்ப நல்லா சுவையா எழுதியிருக்கீங்க.
ஆனா என்னைய கூட்டிட்டுப் போங்கன்னு சொன்னா கேட்குறீங்களா?

Mahesh said...

நன்றி ஜோசஃப்... எனக்கும் கூட்டிக்கிட்டு போகணும்னுதான் ஆசை... பாளாப் போன விசா... அது கிடைக்கறது சிரமமா இருக்கே :(

harmys said...

nice post!
whenever you fly you could feel something like world is one we only make border lines etc.,

those who were watching this pictures just imagine if there is no border between countries how would be the world.

வடுவூர் குமார் said...

மேலிருந்து அந்த மலைகளை பார்க்கும் போது,வயசான முகத்தில் விழும் கோடு போல் இருக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜூப்பர்ணே.. நான் சைக்கிள்லில் பெருங்குடி டூ தாம்பரம் போகும் போது எடுத்த போட்டோஸ் இருக்குது, போட்டிறலாமா..

Mahesh said...

நன்றி harmys.... அட நல்ல சிந்தனை !!

நன்றி வடுவூர்குமார்..

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்... என்னண்ணே... இன்னுமா அந்த போட்டொவெல்லாம் போடல? நீங்க எப்பவுமே ஸ்லோதான்.. :(

புதுகை.அப்துல்லா said...

//அண்ணே... அசுரங்களும் அங்ஙனதேன் சுத்திக்கிட்டுருப்பாங்களாம்ணே... அப்பிடியாண்ணே?
//

ஹா...ஹா..ஹா.. இரசித்துச் சிரித்தேன் :)

வால்பையன் said...

விமானத்தில் போட்டோ எடுக்க முடியுமா?
ரெளத்ரனுக்கு அந்த ஐடியாவும் சேர்த்து கொடுத்துருக்கலாமே!

குடுகுடுப்பை said...

super one...

கிரி said...

மகேஷ் ரொம்ப நல்லா இருந்தது..

விமானம் டேக் ஃஆப் ஆனா நானும் ஃஆப் ஆகிடுவேன் :-))))

ஆமா இத்தனை இடம் எப்படி தெரிந்து வைத்தீங்க.. ஆச்சர்யமா இருக்கு.. முன்னாடி டிஸ்ப்ளே ல இடம் பற்றிய தகவல் வந்ததா!

நானும் இந்த மாதிரி படம் எடுக்கணும் என்று நினைக்கிறேன் ஆனா இதுவரை எடுத்ததில்லை ;-)