வட்டத்துக்குள் பெண்ணா?அல்லது வட்டத்தின் மையம் பெண்ணா?
பெண்ணைச் சுற்றி வட்டமா?அல்லது ஒரு வட்டத்தினுள் தன்னைத்தானே சிறை வைத்தாளா?
பெண் மற்றோரைச் சார்ந்தவளா?அல்லது உலகமே அவளைச் சார்ந்ததா?
பெண்ணின் சிந்தனை வட்டம் பெரியதா?அல்லது உலகம் அவ்வளவு சின்னஞ் சிறியதா?
வட்டத்துக்குள் பெண்ணா?ஒரு வட்டத்துக்குள் பெண்ணை வைப்பது சாத்தியமா?
கூண்டுக் கிளியாய் வைக்க முற்பட்டதில்வெற்றி அவளுக்கா?உயிரற்ற கம்பிகளாய் சூழ்ந்து நின்றதில்தோல்வி மற்றவர்(வை)களுக்கா?
டிஸ்கி : அப்துல்லா ஒரு தொடர் பதிவிற்காக அழைத்ததன் பேரில் மிகவும் யோசித்து (??!!) வடித்த கவிதை. சுமாரா இருந்தா ஒரு ஸ்மைலியாவது போட்டுட்டுப் போங்க. இல்ல திட்றதா இருந்தா இந்த மாதிரி ரிஸ்க் எடுத்து உங்களையும் ஆபத்துல தள்ளிய அப்துல்லாவைத் திட்டுங்க. [அப்துல்லா: நல்லா வேணும்... வாங்கிக் கட்டிக்க :) ]
அப்பறம் இன்னும் 3 பேரைக் கூப்படணுமாமில்ல... நல்லா கவித எழுதறவங்களைக் கூப்படலாமா?
வாங்க பழமைபேசி (எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?)
வாங்க பரிசல் (டைம் இல்லாட்டா, அனந்த்பாலா எப்பயாச்சும் எழுதி வெச்சுருப்பாரு. மஞ்சப் பையைத் தோண்டி ஒண்ணு எடுத்து விடுங்க)
வாங்க வெயிலான் (உங்களை பதிவு போட வெக்க வேற வழி தெரியல)
36 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:
பெண்னை சுற்றும் வட்டமே
பெரு வட்டம்
பெண் என்னை சுற்றாவிட்டால்
வாட்டமே!
வட்டத்துகுள்ளயெல்லாம் பெண்ணை வைக்க முடியாது!
//பெண்ணின் சிந்தனை வட்டம் பெரியதா?அல்லது உலகம் அவ்வளவு சின்னஞ் சிறியதா?//
நல்ல சிந்தனை தலைவா..
nallaa irukkunga.
இந்த படத்தை சைலஜா பதிவிலும் பார்த்தேனே.
:)
நல்லா இருக்கு மகேஷ்.
பெண்களை வட்டத்துக்குள் வைத்ததால்தானோ நம்மை சுற்ற விடுகிறார்கள்.
நல்லா எழுதி இருக்கீங்க... :)
நல்லாத்தான போயிட்டிருந்தது !!
:-))
// நல்லா கவித எழுதறவங்களைக் கூப்படலாமா? //
நானா?
நல்லா கவித எழுதறவனா?
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் 10 பைசாவில் - வோடபோன் :)
நன்றி ஜமால்பாய்... கலக்கிட்டீங்க... உங்களையும் நான் அழைச்சுருக்கணும்.
நன்றி வால்பையன்... அதே அதே !!
நன்றி நர்சிம்...
நன்றி நையாண்டிநைனா...
நன்றி கோவியாரே... ஆமா... சைலஜாதான் இதை ஆரம்பிச்சு வெச்சது.
நன்றி வேலன் அண்ணாச்சி..
நன்றி முத்துலட்சுமி.கயல்விழி..
நன்றி ஸ்ரீதர் ... கரெக்டா கண்டுபுடிச்சுட்டீங்க :)
நன்றி வெயிலான்... உங்க "ஒற்றைமான்" ஒண்ணு போதாதா?
வித்தியாசமான சிந்தனை. ரொம்ப நல்லா இருக்கு !
அன்புடன்
மாசற்ற கொடி
கவிதையா.. டமால்.. (நாந்தான் விழுந்தது. எழுந்திருக்க ரெண்டு மணி நேரமாவது ஆவும்னு நினைக்கிறேன்..)
அப்துலை நாளைக்கு பார்ப்பேன்னு நினைக்கிறேன்.. இருக்குடி அவுருக்கு..
நன்றி மாசற்றகொடி... பொய்தானே சொல்றீங்க :)))
வாங்க ஆதிமூலகிருஷ்ணன்...
பாத்தியளா? ச்சிங்கத்தையே சாச்சுப்புட்டம்ல சாச்சு? எப்பிடி?
அப்பாடி... ஒரு ஆளாவது தெகிரியமா அப்துலை... கவிதையோட பலன் தெளிவாத் தெரியுது :))
அப்துல்லா அண்ணே... என்சாய் :)))))
ஆதிமூலகிருஷ்ணன்.. நீங்க என்னதான் சொன்னாலும் கவிதையை ஒரு கை பாக்காம விடறதில்லை.
கவிதை எமக்குத் தொழில்...
(அய்யோ.. கைய முறுக்காதீங்க... வலிக்குது)
என் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)
ஒங்க கடன் படிச்சு பின்னூட்டம் போடுவதே (அய்யய்ய.. லேப்டாப்ப ஜன்னல் வழியே வீசிட்டீங்களே.. இனிமே எப்பிடி பதிவு போடப் போறீங்க?)
ஆனாலும் உங்களுக்கு கோவம் ஜாஸ்திதான்...கண்ட்ரோல்..
கோர்த்து விட்டதுக்கு நன்றி!
இது தொடர் பதிவு அல்ல! ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் பதிவு!
ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற பதிவு சங்கிலிப் பதிவு!!
ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைப் பதிவு!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!
வியாக்யானத்துக்கு மன்னிச்சுகிடுங்க! இஃகிஃகி!!
அண்ணே இந்தத் தப்பை நான் இனிமே அடிக்கடி பண்ணலாம் போல இருக்கு. (கவிதை நல்லா இருக்குன்னு எப்பிடி சொன்னேன் பாத்தீங்களா) :)))))
:-))))))))))
//வடித்த கவிதை. சுமாரா இருந்தா ஒரு ஸ்மைலியாவது போட்டுட்டுப் போங்க.//
அடிங்க! கவிதை எழுத சொன்னா, கொஸ்டின் பேப்பர் எழுதிட்டு? லொள்ள பாரு!!!:))
மொத்தமா இம்புட்டு கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி பழக்கம் இல்லை ஆகையால் சாய்சில் விட்டுவிடுகிறேன்
சரி சரி கேள்விக்கு பதில் என்னான்னு சட்டு புட்டுன்னு சொல்லுங்க!!!
நன்றி மணியாரே... இங்கயும் விளக்கமா? ஒரு பதிவை மிஸ் பண்ணிட்டீங்களே :)
நன்றி அப்துல்லா... அய்யய்யோ... ஏற்கெனவே ஆ.மூ.கி. கைய முறிக்கறாரு :))))))
நன்றி ச்சின்னப்பையன்... அப்ப கவிதை ரொம்ப சுமாரா இருக்குதுங்கறீங்க :(
நன்றி குசும்பன்... நீங்க வேற பதிலெல்லாம் கேக்கறீங்களே !! அவ்வ்வ்வ்வ்......
என்ன கலக்கிறீங்க....எழுத்து நடை புல்லரிக்க வைக்கின்றது...:-))
கவிதை சூப்பர்....
(உங்களுக்காக இன்னிக்கு மதியம் ஒண்ணரைக்கு ஒரு வேலை செஞ்சேன். என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்.)
எவ்வளவு கேள்வி கேட்டு இருக்கீங்க
எல்லாமே நல்ல கேள்விகள்
நன்றி டொன் லீ... இதெல்லாம் ரெம்ப ஓவரு... ஆமாம்... :)
நன்றி அறிவிலி.. என்ன ஹெல்ப்? தமிழ்மணத்துல இணைச்சது நீங்களா?
நன்றி நசரேயன்..
நசரேயன்... நமக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும் :))
//நன்றி அறிவிலி.. என்ன ஹெல்ப்? தமிழ்மணத்துல இணைச்சது நீங்களா?//
ஒட்டு போடலாம்னு வந்து தெரியாம "அனுப்பு" பட்டன அமுத்திட்டேன். (சாரி...ஒரு வேளை நேரம் பாத்து இணைக்கலாம்னு இருந்தீங்களோ..)
நன்றி அறிவிலி... நான் டைம் ஷெட்யூல் பண்ணிட்டு பாக்க மறந்துட்டேன். இணைச்சதுக்கு நன்றி.
\\வட்டத்துக்குள் பெண்ணா?ஒரு வட்டத்துக்குள் பெண்ணை வைப்பது சாத்தியமா?
கூண்டுக் கிளியாய் வைக்க முற்பட்டதில்வெற்றி அவளுக்கா?உயிரற்ற கம்பிகளாய் சூழ்ந்து நின்றதில்தோல்வி மற்றவர்(வை)களுக்கா?
\\\\\ அருமை!
மகேஷ் என் கோலத்தையும் போட்டு
இங்கு நல்லதொரு கவிதையையும் அளித்தீர்கள் நன்றி
நீங்க என் பதிவில் இதுபற்றி பின்னூட்டமிட்டதை கவனித்து அதை போஸ்ட் செய்யறபோது எப்படி காணாமல்போனது என்றே தெரியவில்லை.மன்னிக்கவும் மகேஷ்.
பழமைபேசியின் மடலும் இப்படியே மறைந்துவிட்டது.
நன்றி ஷைலஜா....
//ஆவதும் ஆயிலாலே... அழிவதும் ஆயிலாலே...//
ஹி ஹி ஹி
மகேஷ் நிறைய ஆங்கில படம் பார்ப்பீங்க போல ...
மகேஷ்,
சற்றே வித்தியாசமான சிந்தனை!!!
நடப்புலகில் பின்னப்பட்டிருக்கும் பல மாய பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கியது போல் உள்ளது...
மிக்க நன்றி நரேஷ்.....
Post a Comment