Tuesday, March 3, 2009

பிங்க் பேந்தர் 2 - சினிமா விமர்சனம்

ஜனவரில இருந்தே விளம்பரமா போட்டுத் தாக்கி ரொம்ப எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட படம். ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா ஒண்ணும் இல்லங்கறது ஏமாத்தம். பிங்க் பேந்தர் விசிறிகள் எல்லாம் "இவ்வளவுதானா?"ங்கற மாதிரி "இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா?"ங்கறாங்க. அதெல்லாம் ஒருபுற ம்இருந்தாலும் 90 நிமிஷம் சிரிப்பு கேரண்டி.

ஸ்டீவ் மார்டினோட ஃப்ரென்ச் ஆக்ஸன்ட் கலந்த பேச்சும், கொணஷ்டைகளும், கார்ட்டூன்ல் வர பிங்க் பேந்தர் பண்ற அத்தனை சேட்டைகளையும் இவர் பண்றதைப் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. பலே திருடன் "டொர்னேடோ" உலகத்துல பல நாடுகள்ல இருக்கற ம்யூசியங்கள்ல இருந்து பல அரிய பொக்கிஷங்களை ஆட்டையப் போடறான். ஃப்ரான்சோட பிங்க் பேந்தர் வைரமும் அம்பேல். ஆளைப் புடிக்க பல நாடுகளோட போலீஸ்களை கொண்ட "ட்ரீம் டீம்" அமைக்கறாங்க. அதுல நம்மாளு ஃப்ரென்ச் இன்ஸ்பெக்டர் ஜாக் க்ளூசோவும். டீம்ல அவனும் இருக்கணும்னு சொன்னதும் கமிஷனர் டாய்லெட்டுக்குள்ள போய் செவுத்துல முட்டிக்கிறார் பாருங்க, நாம சிரிச்சு முடிக்கறதுக்குள்ள நாலு டயலாக் போச்சு.

நம்மாளும் அசிஸ்டென்ட் ஜீன் ரெனொவும் அடிக்கற கூத்துக சரி ரகளை. எல்லாம் ஸ்லாப்ஸ்டிக் ரகம்தான். குறிப்பா சொல்லணும்னா வைன் குடிக்கிறேன் பேர்வழின்னு ஒரு ரெஸ்டாரண்டயே கொளுத்தறது, அதை சரி பண்ணி ரீ-ஒபெனிங் அன்னிக்கு மறுபடியும் கொளுத்தறது, பிஹேவியர் கௌன்சலர் கிட்ட பண்ற ரகளை, ரோம்ல டொர்னேடொ இருக்கற வீட்டுல போய் "துப்பறியறேன் பெருமாளே"ன்னு செக்யூரிடி கேமரா முன்னாலயே போய் நிக்கறது எல்லாம் தியேட்டர்ல சுத்தி இருக்கறவங்க சிரிக்கற சத்தத்துல டயலாக்கே கேக்காது.

படத்துல ஒரு சின்ன ஆச்சரியம் ஐஸ்வர்யா ராய். இந்தியாவுல இருந்த வந்த டிடெக்டிவ்னு சொல்லிட்டு கடைசில பாத்தா அவர்தான் வில்லியாம். ஐஸ்வர்யாவோட மொத்த டயலாக்கையும் ஒரு சிங்கிள் பார்ட் SMSல அனுப்பிச்சுடலாம். அந்த ரோலுக்கு ஐஸ்வர்யா ராய் தேவையான்னு கேக்காதீங்க. படம் வித்தாகணுமே.

நடுவுல நம்மாளுக்கும் டிடெக்டிவ் நிகோலுக்கும் ஒரு லவ் வேற. அதுல குறுக்க ஆண்டி கார்சியா. ஒரு கட்டத்துல கேஸ் சால்வ் ஆயிடுச்சு, பேக்கப்னு சொல்லும்போது மறுபடியும் நம்மாளால ஒரு திடீர் திருப்பம். அப்பறம் நிஜமா கேஸ் முடிஞ்சு எல்லாம் சுபம்.

எல்லாம் பெருந்தலைகளாப் போட்டு இருந்தாலும் ஸ்டீவ்தான் மார்க் அள்றாரு. பின்னணி இசையெல்லாம் நாம கேட்டு கேட்டு பழகின ஒரிஜினல் பிங்க் பேந்தர் ட்யூன்கதான். ஆனாலும் DTSல கேக்கும்போது அட்டகாசமா இருக்கு. 90 நிமிஷம் போனதே தெரியல. சில டயலாக்கெல்லாம் அத்துமீறி இருக்கறதால PG சர்டிபிகேட் குடுத்து சில எதிர்மறை விமர்சனங்களையும் கிளப்பியிருக்கு. இங்கிலீஷ் படத்துல இதெல்லாம் சகஜந்தானே.... மொத்தத்துல நல்ல பொழுதுபோக்கு.

Pink Panther கொஞ்சம் Stink Panther-ஆ இருந்தாலும் Zing Panther !!

17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

யாத்ரீகன் said...

>> 90 நிமிஷம் சிரிப்பு கேரண்டி <<
நீங்க NakenGun மற்றும் பழைய பிங்க் பேந்தர் பார்க்கலையா.. இது சரியான கடியால இருந்துச்சு.. :-(

>> சுத்தி இருக்கறவங்க சிரிக்கற சத்தத்துல <<

இங்க தியேட்டர்ல நிசப்தம்..

ஸ்டீவ்மார்ட்டின் தன்னைப்போலவே பண்ணியிருக்கலாம் பழைய பிங்க் பேந்தர் மாதிரியே பண்ணப்போய் கொஞ்சம் கடியா இருக்கு..

Mahesh said...

@ யாத்ரீகன் : நீங்க சொல்றது சரி. பார்ட் 1 இதவிட அட்டகாசமா இருந்துது. என்னிக்கு சீக்வெல் படங்கள் முதல் படம் மாதிரி இருந்துருக்கு? ரெண்டாவதுன்னு வந்தாலே சப்பையாத்தான் வருது. ஆனாலும் பார்ட் 2 ஒக்கே. இது மாதிரி படத்துலயெல்லாம் ரொம்ப எதிர்பார்க்கக்கூடாது :)))))))

வால்பையன் said...

முதல் பாகத்தில் ஸ்டீவ் மார்டின்
”ஹம்பர்க்கர்” என்று சொல்ல முயற்சி செய்வார்.
வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி அது.
இப்படத்தையும் பார்த்துவிடுவேன்.

Suresh said...

வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

சி தயாளன் said...

அப்படியா...அப்ப ஐஸ் அழகான வில்லியா...?:-)

Thamira said...

சூப்பர்.. என் லிஸ்ட்ல இருக்குற படம்.. (ஐஸுக்காக இல்லை, எனக்கு இந்த மாதிரி அல்லது அனிமேஷன் படங்கள்னா ரொம்ப இஷ்டம். என்னோட ஃபேவரிட்.. 'மடகாஸ்கர்')

Mahesh said...

நன்றி வால்ப்பையன்... நீங்களும் நம்ம கச்சிதானா...

நன்றி Suresh....

நன்றி தாமிரா.... அட நீங்களும் நம்ம கச்சி :)

நன்றி டொன்லீ... ஆமாமா... அழகான வில்லிதான் :)

சின்னப் பையன் said...

நான் இன்னும் பாக்கலே... பாக்கறேன்...

அது சரி(18185106603874041862) said...

//
ஜனவரில இருந்தே விளம்பரமா போட்டுத் தாக்கி ரொம்ப எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட படம். ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா ஒண்ணும் இல்லங்கறது ஏமாத்தம். பிங்க் பேந்தர் விசிறிகள் எல்லாம் "இவ்வளவுதானா?"ங்கற மாதிரி "இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா?"ங்கறாங்க.
//

படிச்ச எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க...படம் ரொம்ப மொக்கையா இருக்கும் போலருக்கே....என்ன இருந்தாலும் பீட்டர் செல்லர்ஸ் மாதிரி வரலையா?

பாவம் ஐஸ்வர்யா....அவங்க ஹாலிவுட்ல ட்ரை பண்ற எல்லாம் ஃப்ளாப் ஆயிடுது!

Mahesh said...

பாருங்க சின்னப்பையன்... உங்களுக்கு புடிக்கும்..

நன்றி அதுசரி... என்னா ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணோம்? ஆணியெல்லாம் கடப்பாரை ஆயிடுச்சா? :) ஐஸ்வர்ய பருப்பெல்லாம் இந்திலதான் வேகும் போல..

பழமைபேசி said...

அண்ணே, நான் இன்னும் படிக்கலை... ஊர்ல இருந்து தங்கமணியோட அம்மா வந்து இருக்காங்க இப்பத்தான்...மறுபடியும் வர்றேன்...நீங்க எப்ப ஊருக்கு??

மதிபாலா said...

If you compare the 1st part , the second part is not so good.

but 2nd part also not bad. But i think aishwarya rai was not suitable for the character.

The whole dream team has nothing to do. the one and only man who brings the film into lime light is steve martin. just for his innocence face we can watch the whole film , eventhough it has lot of craps.. !!!!!

The Scene I loved is the buring resto in rome. so good wine throwing.

Mahesh said...

@ பழமைபேசி : ஓ.... அதான் இப்பல்லாம் தெனம் ரெண்டு பதிவு வருதா :)))))))))))))) இந்தா இன்னிக்கு கெளம்பிட்டே இருக்கேன்... தொலைபேசுறேன்....

@ மதிபாலா : அதேதான்... :))

narsim said...

நன்றி தலைவா.. நல்ல அறிமுகம்..

//Pink Panther கொஞ்சம் Stink Panther-ஆ இருந்தாலும் Zing Panther !!//

கலக்கல்

Mahesh said...

நன்றி நர்சிம்....

குடுகுடுப்பை said...

பாத்துருவோம்.

பழமைபேசி said...

சுவராசியமா இருக்கு, படிச்சிட்டேன்... இந்த வாரக் கடைசில முயற்சி செய்யணும்!